என் மலர்
அமெரிக்கா
- இவர் மீது அடுக்கடுக்கான பாலியல் புகார்கள் எழுந்தன.
- 5 பெண்கள் தனித்தனியாக அவர் மீது வழக்கு தொடர்ந்தனர்.
நியூயார்க்
ஆஸ்கார் விருதை வென்ற பிரபல ஹாலிவுட் இயக்குனர் பால் ஹாகிஸ் (வயது 69). கனடாவில் பிறந்தவரான இவர் திரைக்கதை எழுத்தாளர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முக திறமைகளை கொண்டவர் ஆவார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவர் மீது அடுக்கடுக்கான பாலியல் புகார்கள் எழுந்தன. இதில் பால் ஹாகிஸ் தன்னை கற்பழித்ததாக 5 பெண்கள் தனித்தனியாக அவர் மீது வழக்கு தொடர்ந்தனர். இதுதொடர்பான வழக்குகள் அமெரிக்க கோர்ட்டுகளில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கடந்த 2013-ம் ஆண்டு பால் ஹாகிஸ் அவரது வீட்டில் வைத்து தன்னை கற்பழித்ததாக ஹாலே பிரெஸ்ட் என்கிற பெண் கடந்த 2017-ம் ஆண்டு தொடர்ந்த வழக்கில் நியூயார்க் நகர கோர்ட்டு நேற்று தீர்ப்பு வழங்கியது.
வழக்கை விசாரித்த நீதிபதி, பால் ஹாகிஸ் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதாக அறிவித்தார். தொடர்ந்து, ஹாலே பிரெஸ்ட்டை கற்பழித்த குற்றத்துக்காக அவருக்கு பால் ஹாகிஸ் 7.5 மில்லியன் டாலர் (சுமார் ரூ.60 கோடி) இழப்பீடு வழங்க வேண்டுமென தீர்ப்பளித்தார்.
எனினும் தன் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளை தொடர்ந்து மறுத்து வரும் பால் ஹாகிஸ் இந்த தீர்ப்பு மிகவும் ஏமாற்றம் அளிப்பதாகவும், தனக்கு ஏற்பட்டுள்ள களங்கத்தை போக்க தனது சட்டக்குழு உதவியுடன் தொடர்ந்து போராடுவேன் என கூறியுள்ளார்.
- தைவான் பிரச்சினை தொடர்பாக சீனா, அமெரிக்கா இடையே பதற்றம் நீடித்து வருகிறது.
- 3வது முறையாக சீன அதிபரான பிறகு ஜி ஜின்பிங்கை, ஜோ பைடன் சந்திக்க உள்ளார்.
வாஷிங்டன்:
இந்தோனேசியாவின் பாலியில் வரும் 14ந்தேதி ஜி20 உச்சிமாநாடு நடைபெற உள்ளது. 2 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சீன அதிபர் ஜி ஜின்பிங் உள்பட அந்த அமைப்பில் இடம் பெற்றுள்ள நாடுகளின் தலைவர்கள் கலந்துகொள்கின்றனர்.
இந்நிலையில் இந்த மாநாட்டிற்கு இடையே சீன அதிபர் ஜி ஜின்பிங்கை, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்த உள்ளதாக வெள்ளை மாளிகை தகவல்கள் தெரிவித்துள்ளன. தைவான் பிரச்சினை தொடர்பாக சீனா அமெரிக்கா இடையே பதற்றமான சூழல் நிலவுகிறது.
இந்த நிலையில் 3வது முறையாக சீன அதிபரான பின்பு, ஜி ஜின்பிங்கை, ஜோ பைடன் சந்திக்க உள்ளார். அப்போது இரு தலைவர்கள் இடையே தகவல் தொடர்புகளை மேலும் வலுப்படுத்துவது மற்றும் இரு நாடுகளிடையேயான உறவுகள் குறித்தும் விவாதிக்கப்படும் என வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரீன் ஜீன்-பியர் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.
- துப்பாக்கியில் குண்டு இருந்ததா என்பது குறித்து தகவல் இல்லை.
- கைத்துப்பாக்கியை எடுத்து செல்ல முறையாக விதிமுறைகளை பின்பற்றவில்லை என்று கூறப்படுகிறது.
அமெரிக்கா புளோரிடா மாகாணத்தில் உள்ள விமான நிலையத்தில் பயணி ஒருவரிடம் இருந்து துப்பாக்கி கண்டெடுக்கப்பட்டது. அமெரிக்க விமானத்தில் பயணம் செய்ய இருந்த பயணியிடம் அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது கோழிக்கறியில் துப்பாக்கி ஒன்று பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த துப்பாக்கியில் குண்டு இருந்ததா என்பது குறித்து தகவல் இல்லை. இருப்பினும், சம்பந்தப்பட்ட கைத்துப்பாக்கியை எடுத்து செல்ல முறையாக விதிமுறைகளை பின்பற்றவில்லை என்று கூறப்படுகிறது.
- பிரதிநிதிகள் சபை தேர்தலில் மிசிகன் தொகுதியில் தொழில் அதிபர் ஸ்ரீதனேதர் வெற்றி பெற்றார்.
- மேரி லேண்ட் மாகாணத்தின் துணை நிலை கவர்னராக இந்தியா வம்சாவளியை சேர்ந்த அருணா மில்லா முதல் முறையாக வெற்றி பெற்றார்.
அமெரிக்க பாராளுமன்ற இடைக்கால தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 5 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.
பிரதிநிதிகள் சபை தேர்தலில் மிசிகன் தொகுதியில் தொழில் அதிபர் ஸ்ரீதனேதர் வெற்றி பெற்றார். இல்லினாய்சில் ராஜா கிருஷ்ண மூர்த்தி, சிலிகான் வேலியில் ரோகன்னா, வாஷிங்டனில் பிரமீளா ஜெயபால், கலிபோர்னியாவில் அமி பெரரா ஆகியோர் வெற்றி பெற்றனர்.
இதில் ரோகன்னா, ராஜா கிருஷ்ணமூர்த்தி, பிரமீளா ஜெயபால் ஆகியோர் தொடர்ந்து 4-வது முறையாக அதே தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். பிரமீளா ஜெயபால் சென்னையில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேரி லேண்ட் மாகாணத்தின் துணை நிலை கவர்னராக இந்தியா வம்சாவளியை சேர்ந்த அருணா மில்லா முதல் முறையாக வெற்றி பெற்றார்.
- சுத்தமாக பளிச்சென்று இருந்த கண்ணாடி ஜன்னலை திறந்தவெளி என நினைத்துள்ளான் திருடன்
- அவனது வயது 17 என்பதால அவனைப்பற்றிய விவரங்களை காவல்துறை வெளியிடவில்லை.
அமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலம் பெல்லீவ் நகரில் உள்ளது லூயிஸ் உய்ட்டன் ஸ்டோர். இங்கு விதவிதமான ஹேண்ட்பேக்குகள், டிராலி பேக் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. சம்பவத்தன்று இங்கு ஹேண்ட்பேக் வாங்குவது போன்று வந்த ஒரு இளைஞன் திடீரென விலை உயர்ந்த ஹேண்ட்பேக்குகளை திருடிக்கொண்டு ஓட்டம் பிடித்தான்.
அப்போது சுத்தமாக பளிச்சென்று இருந்த கண்ணாடி ஜன்னலை திறந்தவெளி என நினைத்த அந்த இளைஞன், வெளியே குதித்து தப்புவதற்காக அந்த பகுதியை நோக்கி வேகமாக ஓடினான். ஆனால் கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த ஜன்னல் கண்ணாடியில் மோதி கீழே விழுந்தான். உடனடியாக அவனை காவலாளி பிடித்து போலீசில் ஒப்படைத்தார். அவனது வயது 17 என்பதால அவனைப்பற்றிய விவரங்களை காவல்துறை வெளியிடவில்லை.
திருடன் ஜன்னல் கண்ணாடி மீது மோதி விழும்போது பதிவு செய்யப்பட்ட வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
- எலான் மஸ்க் தனது டெஸ்லா நிறுவன பங்குகளில் சுமார் 3.95 பில்லியன் டாலர் மதிப்பிலான பங்குகள் விற்பனை.
- பங்கு விற்பனை குறித்த தகவலை அமெரிக்க பங்கு பரிவர்த்தனை மையம் தெரிவித்தது.
உலக பணக்காரர்களில் ஒருவர் எலான் மஸ்க். டெஸ்லா நிறுவனத்தின் உரிமையாளரான இவர், சமீபத்தில் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கினார். அதன் பொறுப்பை ஏற்று கொண்டதும் டுவிட்டர் நிறுவனத்தில் பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்தார்.
முக்கிய நிர்வாகிகளை நீக்கியதோடு, வாடிக்கையாளர்களின் கணக்குகளை சரிபார்க்கும் புளூ டிக் பயன்பாட்டிற்கு மாதம் 8 டாலர் கட்டணம் வசூலிக்கவும் உத்தரவிட்டார்.
இந்த நிலையில் எலான் மஸ்க் தனது டெஸ்லா நிறுவன பங்குகளில் சுமார் 3.95 பில்லியன் டாலர் மதிப்பிலான 19.5 மில்லியன் பங்குகளை விற்பனை செய்தார்.
இது இந்திய மதிப்பில் சுமார் ரூ.3.22 லட்சம் கோடியாகும். இந்த பங்கு விற்பனை குறித்த தகவலை அமெரிக்க பங்கு பரிவர்த்தனை மையம் தெரிவித்தது.
- அமெரிக்க பாராளுமன்றத்தின் பிரதிநிதிகள் அவைக்கான தேர்தல் நடைபெற்று வருகிறது.
- இந்தத் தேர்தலில் 5 அமெரிக்க வாழ் இந்தியர்களும் போட்டியிடுகின்றனர்.
வாஷிங்டன்:
அமெரிக்க பாராளுமன்றம் பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் சபை என இரண்டு அவைகளைக் கொண்டது. இந்த இரு அவைகளுக்கான தேர்தல் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும். அமெரிக்க அதிபரின் நான்கு ஆண்டுகள் பதவிக்காலத்திற்கு மத்தியில் இந்த தேர்தல்கள் நடைபெறுவதால், இது இடைக்கால தேர்தல் என அழைக்கப்படுகிறது.
பிரதிநிதிகள் சபையில் மொத்தமுள்ள 435 இடங்களில் பெரும்பாலான இடங்கள் ஏதாவது ஒரு கட்சிக்கு சாதகமாக இருக்கும் நிலையில், 30 இடங்களில் மட்டுமே கடும் போட்டி நிலவுகிறது.
பென்சில்வேனியா, கலிஃபோர்னியா, ஓஹியோ மற்றும் வட கரோலினா ஆகிய மாநிலங்களில் உள்ள நகரங்களைச் சுற்றியுள்ள புறநகர் பகுதிகள் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருக்கும்.
இதற்கான பிரசாரத்தில் அதிபர் ஜோ பைடன் ஈடுபட்டார். மேலும், இந்தத் தேர்தலில் 5 அமெரிக்க வாழ் இந்தியர்களும் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில், இடைக்கால தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் வாக்கு மையங்களில் வாக்களித்து வருகின்றனர்.
இடைக்கால தேர்தல் முடிவுகள் என்பது அதிபர் எவ்வாறு செயல்படுகிறார் என்பதற்காக மக்கள் தரும் இடைக்கால தீர்ப்பாக இருக்கும்.
அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பொறுப்பேற்று 2 ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில், இத்தேர்தல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
- 2024ம் ஆண்டு நடக்கும் அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட உள்ளதாக தகவல்.
- டுவிட்டரில் மீண்டும் இணைவது தொடர்பாக அறிவிப்பு வெளியிட வாய்ப்பு.
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் ஓகியோ மாகாணத்தில் தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர், 'வருகிற 15-ம் தேதி புளோரிடாவில் உள்ள மார்-ஏ-லகோ பண்ணை வீட்டில் வைத்து மிகப்பெரிய அறிவிப்பு ஒன்றை வெளியிடப் போகிறேன்' என்றார்.
2024ம் ஆண்டு நடக்கும் அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட உள்ளதாக டிரம்ப் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அல்லது டுவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியுள்ள நிலையில் அதில் மீண்டும் இணைவது தொடர்பாக அறிவிப்பு வெளியிடுவார் என்றும் கூறப்படுகிறது.
- ஜெர்மனி அதிபர் ஓலப் ஸ்கால்ஸ் சமீபத்தில் சீனா சென்று அந்நாட்டு அதிபர் ஜின்பிங்கை நேரில் சந்தித்தார்.
- 3 ஆண்டுகளில் சீனாவுக்கு பயணம் செய்த ஜி7 நாடுகளின் முதல் தலைவர் என்ற வகையில் இந்த சந்திப்பு அமைந்தது.
வாஷிங்டன்:
ஜெர்மனி அதிபர் ஓலப் ஸ்கால்ஸ் சமீபத்தில் சீனாவுக்குச் சென்று அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங்கை நேரில் சந்தித்துப் பேசினார். 3 ஆண்டுகளில் சீனாவுக்கு பயணம் செய்த ஜி7 நாடுகளின் முதல் தலைவர் என்ற வகையில் இந்த சந்திப்பு அமைந்தது.
அதன்பிறகு அதிபர் ஜி ஜின்பிங்குடன் நடந்த சந்திப்பின்போது ரஷியாவின் அணு ஆயுத மிரட்டல்களுக்கு இரு நாட்டு தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர். ரஷியா போரை நிறுத்த சீனா வலியுறுத்த வேண்டும் என ஜெர்மனி அதிபர் ஓலப் ஸ்கால்ஸ் ஜின்பிங்கிடம் கேட்டுக்கொண்டார்.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் ஜெர்மனி அதிபர் ஓலப் ஸ்கால்ஸ் இருவரும் தொலைபேசி மூலம் பேசினார்கள். அப்போது சீன பயணம், ரஷிய விவகாரம் போன்றவை பற்றி அதிபர் ஜோ பைடனிடம் ஓலப் பகிர்ந்து கொண்டார்.
இதுதொடர்பாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ரஷியாவின் படையெடுப்புக்கு எதிராக உக்ரைனுக்கு தொடர்ந்து ஆதரவு அளிப்பது என்ற உறுதியுடன் இருக்கிறோம்.
உக்ரைன் நாடு தன்னை தற்காத்துக் கொள்வதற்கு ஏற்ப பொருளாதாரம், மனித நேயம் மற்றும் பாதுகாப்பு சார்ந்த ஆதரவு ஆகியவற்றை அளிப்பதில் உறுதியுடன் இருக்கிறோம் என தெரிவித்துள்ளது.
மேலும், ரஷியாவின் சமீபத்திய அணு ஆயுத மிரட்டல்கள் பொறுப்பற்ற தன்மை என இரு தலைவர்களும் பேசும்போது ஒப்புக் கொண்டுள்ளனர். விதிகளின்படி சர்வதேச நடைமுறை, மனித உரிமைகள் மற்றும் முறையான வர்த்தக நடைமுறைகள் ஆகிய வற்றை தொடர்ந்து பின்பற்றுவதில் பொறுப்புடன் செயலாற்றுவதற்கான பகிர்தலையும் இரு நாட்டு தலைவர்களும் உறுதி செய்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- அமெரிக்க பாராளுமன்றத்தின் பிரதிநிதிகள் அவைக்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது.
- இந்தத் தேர்தலில் 5 அமெரிக்க வாழ் இந்தியர்களும் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வாஷிங்டன்:
அமெரிக்க பாராளுமன்ற பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் சபை என இரண்டு சபைகளில் 2 ஆண்டுக்கு ஒருமுறை தேர்தல் நடக்கும்.
இதற்கிடையே, பாராளுமன்ற பிரதிநிதிகள் சபைக்கான தேர்தல் இன்று நடக்கிறது. இதற்கான பிரசாரத்தில் அதிபர் ஜோ பைடன் ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில், சமீபத்தில் டுவிட்டர் நிறுவனத்தை விலைக்கு வாங்கியவரான எலான் மஸ்க் கூறுகையில், நடக்க உள்ள பிரதிநிதிகள் சபைக்கான தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர்களை அமெரிக்க வாக்காளர்கள் ஆதரித்து வெற்றி பெறச் செய்யவேண்டும் என தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பொறுப்பேற்று 2 ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில், இத்தேர்தல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், இந்தத் தேர்தலில் 5 அமெரிக்க வாழ் இந்தியர்களும் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- கென்சிங்டன் பகுதியில் ஒரு மதுபான விடுதிக்கு வெளியே துப்பாக்கி சூடு நடந்தது.
- துப்பாக்கி சூட்டுக்கான காரணம் குறித்து போலீசார் எதுவும் தெரிவிக்கவில்லை.
அமெரிக்காவின் பிலடெலிபியாவில் உள்ள கென்சிங்டன் பகுதியில் ஒரு மதுபான விடுதிக்கு வெளியே துப்பாக்கி சூடு நடந்தது.
இதில் 12 பேர் படுகாயம் அடைந்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் காயம் அடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
துப்பாக்கி சூட்டுக்கான காரணம் குறித்து போலீசார் எதுவும் தெரிவிக்கவில்லை. மேலும் காயம் அடைந்தவர்கள் நிலைமை குறித்தும் தெரிவிக்கவில்லை.
- அமெரிக்காவில் 8-ந்தேதி பாராளுமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது.
- இவர்களில் 4 பேர் ஏற்கனவே பாராளுமன்ற உறுப்பினர்களாக உள்ளனர்.
வாஷிங்டன்
அமெரிக்காவில் வருகிற 8-ந் தேதி பாராளுமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. கீழ்சபையான பிரதிநிதிகள் சபையில் மொத்தம் உள்ள 435 இடங்களுக்கும், மேல்சபையான செனட் சபையில் உள்ள 100 இடங்களில் 35 இடங்களுக்கும் தேர்தல் நடக்கும்.
இந்த நிலையில் இந்த தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த பிரபல அரசியல் தலைவர்கள் 5 பேர் போட்டியிடுவதாக தகவல்கள் வெளியாகின. இவர்களில் 4 பேர் ஏற்கனவே பாராளுமன்ற உறுப்பினர்களாக இருக்கும் நிலையில், தங்களின் பதவியை தக்கவைக்க மீண்டும் தேர்தலில் களம் இறங்கியுள்ளனர்.
அவர்கள் அமி பெரா, ராஜா கிருஷ்ணமூர்த்தி, ரோ கண்ணா மற்றும் பிரமிளா ஜெயபால் ஆவர். இவர்கள் 4 பேரும் ஆளும் ஜனநாயக கட்சியை சேர்ந்தவர்கள். 57 வயதான அமி பெரா பிரதிநிதிகள் சபைக்கு 6-வது முறையாகவும், ரோ கண்ணா (46), ராஜா கிருஷ்ணமூர்த்தி (49) மற்றும் பிரமிளா ஜெயபால் (57) 4-வது முறையாகவும் போட்டியிடுகின்றனர். இவர்களில் பிரமிளா ஜெயபால் சென்னையில் பிறந்தவர் என்பதும், பிரதிநிதிகள் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மற்றும் ஒரே இந்திய வம்சாவளி பெண் ஆவார்.
இவர்கள் 4 பேரையும் தவிர்த்து மிச்சிகன் மாகாண சட்டமன்ற உறுப்பினராக இருந்து வரும் இந்திய வம்சாவளியை சேர்ந்த தொழிலதிபர் ஸ்ரீ தானேதர் முதல் முறையாக பிரதிநிதிகள் சபைக்கு போட்டியிடுகிறார். இவரும் ஆளும் ஜனநாயக கட்சியின் வேட்பாளராகவே களம் இறங்கியுள்ளார். இவர் வெற்றி பெறும் பட்சத்தில் அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்கும் 5-வது இந்தியராக இருப்பார்.






