என் மலர்tooltip icon

    உலகம்

    அமெரிக்க பாராளுமன்ற பிரதிநிதிகள் சபை தேர்தல்  - குடியரசு கட்சிக்கு எலான் மஸ்க் ஆதரவு
    X

    எலான் மஸ்க்

    அமெரிக்க பாராளுமன்ற பிரதிநிதிகள் சபை தேர்தல் - குடியரசு கட்சிக்கு எலான் மஸ்க் ஆதரவு

    • அமெரிக்க பாராளுமன்றத்தின் பிரதிநிதிகள் அவைக்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது.
    • இந்தத் தேர்தலில் 5 அமெரிக்க வாழ் இந்தியர்களும் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    வாஷிங்டன்:

    அமெரிக்க பாராளுமன்ற பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் சபை என இரண்டு சபைகளில் 2 ஆண்டுக்கு ஒருமுறை தேர்தல் நடக்கும்.

    இதற்கிடையே, பாராளுமன்ற பிரதிநிதிகள் சபைக்கான தேர்தல் இன்று நடக்கிறது. இதற்கான பிரசாரத்தில் அதிபர் ஜோ பைடன் ஈடுபட்டுள்ளார்.

    இந்நிலையில், சமீபத்தில் டுவிட்டர் நிறுவனத்தை விலைக்கு வாங்கியவரான எலான் மஸ்க் கூறுகையில், நடக்க உள்ள பிரதிநிதிகள் சபைக்கான தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர்களை அமெரிக்க வாக்காளர்கள் ஆதரித்து வெற்றி பெறச் செய்யவேண்டும் என தெரிவித்துள்ளார்.

    அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பொறுப்பேற்று 2 ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில், இத்தேர்தல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    மேலும், இந்தத் தேர்தலில் 5 அமெரிக்க வாழ் இந்தியர்களும் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×