என் மலர்
அமெரிக்கா
- எல்வோரா மாகாணத்தில் பலர் இடிபாடுகளில் சிக்கி உள்ளனர்.
- சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டாலும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.
குயிடோ:
தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
அந்நாட்டின் 2-வது பெரிய நகரான குயாகு விலுங் தெற்கே 80 கிலோ மீட்டர் பசிபிக் கடற்கரையை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் உண்டானது. இது ரிக்டர் அளவில் 6.8 புள்ளிகளாக பதிவானது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு தெரிவித்துள்ளது. பெரு நாட்டின் எல்லைக்கு அருகே உள்ள ஈக்வடாரில் பலோ நகரில் நிலநடுக்கம் ஏற்பட்டது. சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின.
இதனால் அதிர்ச்சி அடைந்த மக்கள் அலறி அடித்தபடி வெளியே ஓடி வந்தனர். நில நடுக்கத்தால் ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இதில் இடிபாடுகளில் பலர் சிக்கி கொண்டனர். மீட்புபடையினர் விரைந்து சென்று இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த நிலநடுக்கம் பெரு நாட்டிலும் உணரப்பட்டது. அங்கும் வீடுகள் இடிந்து விழுந்தன. நிலநடுக்கத்தால் ஈக்வடாரில் 13 பேர் பலியானார்கள். பெருவில் ஒருவர் உயிரிழந்தார். 126 பேர் காயம் அடைந்துள்ளனர்.
ஈக்வடாரில் கடலோர மாகாணமான எல்வோராவில் 12 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. பெருவில், ஈக்வடார் எல்லையில் உள்ள டும்பேஸ் பகுதியில் இடிந்து விழுந்ததில் சிறுமி உயிரிழந்தாள்.
எல்வோரா மாகாணத்தில் பலர் இடிபாடுகளில் சிக்கி உள்ளனர். அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் சாலையோரம் நிறுத்தப் பட்டிருந்த ஏராளமான வாகனங்கள் சேதமடைந்தன.
சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டாலும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. நிலநடுக்கத்தால் குயிட்டோ, மனாபி, மந்தா, குயென்சு, மச்சாலா உள்ளிட்ட நகரங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
- டிரம்ப் சமூக வலைத்தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
- டிரம்பை கைது செய்து குற்றம்சாட்டுவதற்கான வாய்ப்பு உள்ளது.
நியூயார்க் :
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் (வயது 76) சமூக வலைத்தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் அவர், "நியூயார்க் மன்ஹாட்டன் அரசு வக்கீல் அலுவலகத்தில் இருந்து வெளியான சட்ட விரோத தகவல் கசிவுகள், அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கான குடியரசு கட்சியின் முன்னணி வேட்பாளராக உள்ள முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் வரும் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்படுவார் என தெரிவிக்கின்றன" என்று கூறி உள்ளார்.
இதை எதிர்த்து போராடுமாறு தனது ஆதரவாளர்களை டிரம்ப் கேட்டுக்கொண்டுள்ளார்.
டிரம்பை கைது செய்து குற்றம்சாட்டுவதற்கான வாய்ப்பு உள்ளதால் அங்கு சட்ட அமலாக்கல் அதிகாரிகள் பாதுகாப்பு ஏற்பாடுகளை வலுப்படுத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
- இண்டியன்வெல்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டியில் சபலென்கா, ரிபாகினா இறுதிக்கு முன்னேறினர்.
- நேற்று நடந்த அரையிறுதியில் நம்பர் 1 வீராங்கனை இகா ஸ்வியாடெக் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
வாஷிங்டன்:
இண்டியன்வெல்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி சுற்று ஆட்டங்கள் நேற்று நடைபெற்றது.
முதல் ஆட்டத்தில் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக், கஜகஸ்தானின் எலினா ரிபாகினாவை சந்தித்தார். இந்த ஆட்டத்தில் 6-2, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வென்ற ரிபாகினா இறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு அரையிறுதியில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா, கிரீஸ் வீராங்கனை மரியா சக்காரியுடன் மோதினார்.
இதில் 6-2, 6-3 என்ற நேர் செட் கணக்கில் சபலென்கா வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் சபலென்கா, ரிபாகினாவுடன் மோத உள்ளார்.
- ரஷியா அதிபர் விளாடிமிர் புதினுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை உக்ரைன் தெரிவித்து வருகிறது.
- புதினின் கைது வாரண்ட் உத்தரவுக்கு உலக தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து ஓராண்டை கடந்துள்ளது. ரஷியா அதிபர் விளாடிமிர் புதினுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை உக்ரைன் தெரிவித்து வருகிறது.
குறிப்பாக உக்ரைன் நாட்டு குழந்தைகளை ரஷிய அதிபர் புதின் சட்டவிரோதமாக நாடு கடத்தியதாக புதிய புகார்கள் எழுந்தன.
இந்த புகார் குறித்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் விசாரணை நடத்தியது.
இந்நிலையில், போர்க் குற்றத்தைப் புரிந்ததாக கூறி ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுக்கு கைது வாரண்ட் பிறப்பித்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
புதினின் கைது வாரண்ட் உத்தரவுக்கு உலக தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், புதினுக்கு எதிரான கைது பிடிவாரண்ட் நியாயமானது தான் என்று கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பைடன் கூறுகையில், " உக்ரேனிய குழந்தைகளை நாடு கடத்தியதற்காக போர்க்குற்றம் செய்ததாக ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது நியாயமானது.
இந்த நடவடிக்கை மிகவும் வலுவான கருத்தை உருவாக்குகிறது" என்று குறிப்பிட்டார்.
- டொனால்டு டிரம்பின் பேஸ்புக், யூடியூப் கணக்கு 2 ஆண்டாக முடக்கப்பட்டிருந்தது.
- முடக்கப்பட்ட டிரம்பின் பேஸ்புக், யூடியூப் பக்கங்கள் இன்று செயல்பாட்டிற்கு வந்துள்ளன.
வாஷிங்டன்:
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப். இவர் 2017 முதல் 2021 ஆண்டு வரை அமெரிக்காவின் அதிபராக செயல்பட்டு வந்தார். 2021-ம் ஆண்டில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் தோல்வியடைந்து ஜோ பைடன் அமெரிக்க அதிபராக வெற்றிபெற்றார்.
தனது தோல்வியை ஏற்க மறுத்த டொனால்டு டிரம்ப் தனது ஆதரவாளர்களிடம் வன்முறையைத் தூண்டும் வகையில் பேசினார். இதை அவர் தனது பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் நேரடியாக ஒளிபரப்பினார். அவரது பேச்சையடுத்து ஜனவரி 6-ம் தேதி டொனால்டு டிரம்பின் ஆதரவாளர்கள் அமெரிக்க பாராளுமன்றத்திற்குள் புகுந்து வன்முறையில் ஈடுபட்டனர்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து வன்முறையை தூண்டியதாக டொனால்டு டிரம்பின் பேஸ்புக், யூடியூப் பக்கங்கள் முடக்கப்பட்டன.
இந்நிலையில், 2 ஆண்டாக முடக்கப்பட்ட டொனால்டு டிரம்பின் பேஸ்புக், யூடியூப் பக்கங்கள் இன்று செயல்பாட்டிற்கு வந்துள்ளன.
சமூக வலைதள பக்கங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ள நிலையில் டொனால்டு டிரம்ப் தனது பேஸ்புக், யூடியூப் பக்கங்களில் 'நான் திரும்ப வந்துவிட்டேன்' என பதிவிட்டு வீடியோ ஒன்றை இணைத்துள்ளார்.
வரும் 2024-ம் ஆண்டு அமெரிக்க தேர்தலில் டொனால்டு டிரம்ப் மீண்டும் போட்டியிட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
- இண்டியன்வெல்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டியில் கார்லோஸ் அல்காரஸ் அரையிறுதிக்கு முன்னேறினார்.
- இன்று நடைபெறும் அரையிறுதியில் அல்காரஸ், இத்தாலி வீரர் சின்னரை சந்திக்கிறார்.
வாஷிங்டன்:
இண்டியன்வெல்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்று ஆட்டங்கள் நேற்று நடைபெற்றது.
முதல் ஆட்டத்தில் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ், கனடா வீரர் அகர் அலிசமெவை சந்தித்தார். இந்த ஆட்டத்தில் 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வென்ற அல்காராஸ் அரையிறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு காலிறுதியில் இத்தாலி வீரர் ஜானிக் சின்னர், அமெரிக்காவின் டெய்லர் பிரிட்சுடன் மோதினார். முதல் செட்டை 6-4 என சின்னர் கைப்பற்றினார். அடுத்த செட்டை 6-4 என பிரிட்ஸ் வென்றார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டை 6-4 என்ற கணக்கில் சின்னர் கைப்பற்றினார்.
இதன்மூலம் 6-4, 4-6, 6-4 என்ற செட் கணக்கில் சின்னர் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார். இன்று நடைபெறும் அரையிறுதியில் அல்காரஸ், சின்னருடன் மோத உள்ளார்.
- நித்தியானந்தா உருவாக்கியதாக சொல்லப்படும் கைலாசா நாடு எங்கு இருக்கிறது என்பது தெளிவாக தெரியவில்லை.
- கைலாசா தொடர்பான சர்ச்சைகளை அறிந்தவுடன் சமீபத்தில் நேவார்க் நகரம் ஒப்பந்தத்தை ரத்து செய்தது.
நியூயார்க்:
கைலாசா என்ற தனி நாட்டை உருவாக்கியுள்ளதாக அறிவித்த சாமியார் நித்தியானந்தா, இது இந்துக்களுக்கான நாடாக இருக்கும் என்று தெரிவித்தார். அத்துடன் தனது நாட்டிற்கென தனி கொடி, நாணயம் உள்ளிட்டவற்றையும் வெளியிட்டு உலகின் கவனத்தை ஈர்த்தார். சர்வதேச அளவில் இது பேசுபொருளாக ஆனபோதிலும், நித்தியானந்தா உருவாக்கியதாக சொல்லப்படும் கைலாசா நாடு எங்கு இருக்கிறது என்பது தெளிவாக தெரியவில்லை.
இந்த சூழ்நிலையில், சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்காவின் நேவார்க் நகரம் கைலாசா நாட்டுடன் சிஸ்டர் சிட்டி ஒப்பந்தம் மேற்கொண்டிருந்தது. இது கைலாசாவுக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம் என்றே நித்தியானந்தாவின் ஆதரவாளர்கள் கூறி வந்தனர். ஆனால் கைலாசா தொடர்பான சர்ச்சைகளை அறிந்தவுடன் அந்த ஒப்பந்தத்தை நேவார்க் நகரம் சமீபத்தில் ரத்து செய்துவிட்டது.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் நித்தியானந்தாவின் யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் கைலாசா, 30க்கும் மேற்பட்ட அமெரிக்க நகரங்களுடன் கலாச்சார பிணைப்பை ஏற்படுத்தும் சிஸ்டர் சிட்டி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
போலி தேசமான கைலாசாவுடன் ரிச்மண்ட், விர்ஜீனியா முதல் டேடன், ஓஹியோ, பியுனா பார்க், புளோரிடா உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட நகரங்கள் கலாச்சார கூட்டாண்மை ஒப்பந்தம் செய்திருப்பதாக ஃபாக்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. போலி சாமியாரான நித்தியானந்தா ஏமாற்றிய நகரங்களை கண்டுபிடித்து வருகிறோம் என்றும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- அத்தை, மாமா மற்றும் 4 வயது குழந்தையையும் கொலை செய்துள்ளார்.
- ஆண்டர்சனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த நபர் லாரன்ஸ் பால் ஆண்டர்சன் (44). இவர் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு போதைப் பொருள் வழக்கில் கைதாகி 20 ஆண்டு சிறைத்தண்டனை பெற்றார். ஆனால், ஆண்டர்சன் மூன்று ஆண்டு தண்டனை அனுபவித்த நிலையில், முன்கூட்டியே விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில், விடுதலையாகி வந்த சில நாட்களிலேயே ஆண்டர்சன் ஓக்லஹோமா மாகாணத்தில் பெண்ணின் இதயத்தை வெட்டி எடுத்து கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆண்டர்சன், ஆண்ட்ரியா பிளாங்கன்ஷிப் என்ற பெண்ணின் இதயத்தை வெட்டிக் எடுத்து தனது அத்தை மற்றும் மாமாவின் வீட்டிற்கு எடுத்துச் சென்று உருளைக்கிழங்குடன் சமைத்து அவர்களுக்கு பரிமாறியுள்ளார்.
பின்னர், அத்தை, மாமா மற்றும் 4 வயது குழந்தையையும் கொலை செய்துள்ளார். இந்த சம்பவத்தை தொடர்ந்து ஆண்டர்சனை போலீசார் கைது செய்து வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில், ஆண்டர்சனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- இண்டியன்வெல்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டியில் டேனில் மெத்வதேவ் அரையிறுதிக்கு முன்னேறினார்.
- நாளை நடைபெறும் அரையிறுதியில் மெத்வதேவ் அமெரிக்காவின் பிரான்சிஸ் டியாபோவை சந்திக்கிறார்.
வாஷிங்டன்:
இண்டியன்வெல்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 7-வது இடத்தில் இருக்கும் ரஷிய வீரர் டேனில் மெத்வதேவ், ஸ்பெயின் வீரர் டேவிடோவிச்
போகினாவை சந்தித்தார்.
இந்த ஆட்டத்தின் முதல் செட்டை மெத்வதேவ் 6-3 என எளிதில் கைப்பற்றினார். தொடர்ந்து சிறப்பாக ஆடிய மெத்வதேவ் 7-5 என இரண்டாவது செட்டையும் கைப்பற்றினார்.
இதன்மூலம் 6-3, 7-5 என்ற நேர் செட் கணக்கில் வென்ற மெத்வதேவ் அரையிறுதிக்கு முன்னேறினார். சர்வதேச போட்டியில் அவர் தொடர்ச்சியாக பெற்ற 18-வது வெற்றி இதுவாகும்.
நாளை நடைபெறும் அரையிறுதியில் மெத்வதேவ் அமெரிக்காவின் பிரான்சிஸ் டியாபோவை சந்திக்கிறார்.
- மெக்மோகன் கோட்டை சர்வதேச எல்லையாக அங்கீகரித்துள்ளது.
- அசல் எல்லை கோட்டு பகுதியை தன்னிச்சையாக மாற்ற முயற்சிக்கும் சீனாவின் செயலை வன்மையாக கண்டிக்கிறோம்.
வாஷிங்டன் :
அமெரிக்க செனட் சபையில் செனட் உறுப்பினர்கள் பில் ஹேகர்டி, ஜெப் மெர்க்லி ஆகியோர் இருதரப்பு தீர்மானம் ஒன்றை தாக்கல் செய்தனர்.
அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
இந்தோ-பசிபிக் பிராந்தியத்துக்கு சீனா தொடர்ந்து அச்சுறுத்தல் விடுத்து வரும் நிலையில், அந்த பிராந்தியத்தில் உள்ள நாடுகளுக்கு, குறிப்பாக இந்தியாவுக்கு தோளோடு தோள் நிற்க வேண்டியது அமெரிக்காவின் கடமை ஆகும்.
இந்த இருதரப்பு தீர்மானம், இந்திய மாநிலமான அருணாசலபிரதேசத்தை இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்று அங்கீகரிக்கிறது.
அசல் எல்லை கோட்டு பகுதியை தன்னிச்சையாக மாற்ற முயற்சிக்கும் சீனாவின் செயலை வன்மையாக கண்டிக்கிறோம். அமெரிக்க-இந்திய உறவு மேலும் வலுப்படுத்தப்படும்.
மேலும், மெக்மோகன் கோட்டை சீனாவுக்கும், அருணாசலபிரதேசத்துக்கும் இடையிலான சர்வதேச எல்லையாக அங்கீகரிக்கிறோம்.
தற்போதைய எல்லைப்பகுதி நிலவரத்தை மாற்ற படைபலத்தை பயன்படுத்துவது, கிராமங்களை உருவாக்குவது, அருணாசலபிரதேச கிராமங்களுக்கு மாண்டரின் மொழி பெயரை பயன்படுத்தி வரைபடம் வெளியிடுவது ஆகிய சீனாவின் செயல்பாடுகளை கண்டிக்கிறோம்.
சீனாவின் அத்துமீறல்களுக்கு எதிராக தன்னை பாதுகாத்துக் கொள்ள இந்தியா எடுத்து வரும் நடவடிக்கைகளை பாராட்டுகிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த தீர்மானம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
- அமெரிக்காவின் தென்பகுதியான அலபாமா மாகாணம் பர்மிங்காம் நகரில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது.
- போலீசார் அந்த அடுக்கு மாடி குடியிருப்புக்கு சென்று விசாரணை நடத்தினர்.
வாஷிங்டன்:
அமெரிக்காவின் தென்பகுதியான அலபாமா மாகாணம் பர்மிங்காம் நகரில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. நேற்று முன்தினம் அங்குள்ள ஒரு வீட்டுக்கு மர்ம நபர்கள் சென்றனர். அப்போது திடீரென அந்த வீட்டில் இருந்து துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது. இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் சென்று பார்த்தனர். அப்போது அங்கு பெண் உள்பட 2 பேர் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தது தெரியவந்தது.
இதுகுறித்து தகவலறிந்த போலீசார் அந்த அடுக்கு மாடி குடியிருப்புக்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக 2 பேரை சந்தேகத்தின்பேரில் போலீசார் கைது செய்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர். ஆனால் எதற்காக கொன்றனர் என்பது தெரியவில்லை. மேலும் இதற்கு முன்பு பர்மிங்காம் அருகே ராக்லாண்டில் 2 பேரை துப்பாக்கியால் சுட்டு கொன்ற சம்பவத்திலும் இவர்களுக்கு தொடர்பு உள்ளதாக போலீசார் சந்தேகிக்கின்றனர். எனவே அவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.
- துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் கூட்டத்தில் அதிபர் ஜோ பைடன் கலந்து கொண்டார்.
- அதிபயங்கர ஆயுதங்கள், துப்பாக்கிகள், தோட்டாக்களைத் தடை செய்வதில் உறுதியாக உள்ளதாக தெரிவித்தார்.
வாஷிங்டன்:
அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் தீவிரமடைந்துள்ள நிலையில், துப்பாக்கியை தவறாக பயன்படுத்துவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. அவ்வகையில், சமீபத்தில் துப்பாக்கிச் சூடு நடந்த லாஸ் ஏஞ்சல்ஸ் புறநகர்ப் பகுதிக்கு சென்ற போது, துப்பாக்கி வாங்குவோரின் பின்னணி குறித்த விசாரணைகள் மற்றும் சோதனைகளை விரைவுபடுத்தும் புதிய நிர்வாக உத்தரவில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கையெழுத்திட்டார்.
அத்துடன், துப்பாக்கி சூடு நடந்த மான்டேரி பார்க் சென்று, இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் கூட்டத்தில் அதிபர் ஜோ பைடன் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், அதிபயங்கர ஆயுதங்கள் மற்றும் துப்பாக்கிகள், தோட்டாக்களைத் தடை செய்வதில் தான் உறுதியாக உள்ளதாக தெரிவித்தார்.
பைடன் அறிவித்துள்ள புதிய நடவடிக்கைகளின் மூலம், இனி பலகட்ட விசாரணைகளுக்குப் பிறகே துப்பாக்கிகள் விநியோகிக்கப்படும். துப்பாக்கியை ஒருவர் வாங்கும் முன்பு, அவர் குற்றவாளியா அல்லது வேறு ஏதேனும் பிரச்சினை செய்பவரா என்பதை பார்த்த உடன் கண்டுபிடித்து விடலாம் எனவும் பைடன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான தடை சட்டத்திற்கு பைடன் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையிலும், பாராளுமன்றத்தில் குடியரசுக் கட்சியினரின் ஆதரவில்லாததால் சட்டம் இயற்றுவதில் சிக்கல் உள்ளது.






