என் மலர்tooltip icon

    அமெரிக்கா

    • உலகின் மிக முக்கியம் வாய்ந்த வெளிநாட்டு கட்சி பா.ஜ.க.
    • ஆனால் குறைவாகவே அது புரிந்து கொள்ளப்பட்டு உள்ளது என வால் ஸ்டிரீட் ஜர்னல் தெரிவித்துள்ளது.

    வாஷிங்டன்:

    உலக அளவில் அதிக முக்கியத்துவம் வாய்ந்த வெளிநாட்டு கட்சி பா.ஜ.க. என வால் ஸ்டிரீட் ஜர்னல் என்ற அமெரிக்கப் பத்திரிகையில் வால்டர் ரஸ்செல் மீட் என்பவர் எழுதிய கட்டுரை தெரிவிக்கின்றது. இக்கட்டுரையில் அவர் கூறியுள்ளதாவது:

    இந்தியாவில் ஆளுங்கட்சியாக உள்ள பா.ஜ.க. அமெரிக்காவின் தேசிய நலன்களின்படி பார்க்கும்போது, உலக அளவில் மிக முக்கியம் வாய்ந்த கட்சியாக உள்ளது. எனினும், அக்கட்சி குறைவாகவே புரிந்து கொள்ளப்பட்டுள்ளது.

    2014 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் தொடர் வெற்றி பெற்ற பா.ஜ.க. அடுத்து 2024-ம் ஆண்டு தேர்தலிலும் வெற்றியை திரும்ப பெறும் முனைப்பில் உள்ளது.

    ஒரு முன்னணி பொருளாதார சக்தி படைத்த நாடாக இந்தியா வெளிப்பட்டு வருவதுடன், இந்தோ - பசிபிக் பிராந்திய பகுதியில் அமெரிக்காவின் செயல் திட்டத்திற்கு உறுதுணையாக ஜப்பானுடன் சேர்ந்து பணியாற்றி வருகிறது. வளர்ந்து வரும் சீனாவின் ஆற்றலை சமன்படுத்தும் வகையிலான அமெரிக்காவின் முயற்சிகளுக்கு, பா.ஜ.க.வின் உதவியின்றி செயல்படுவது பலன் தராது.

    பா.ஜ.க. சரியாக புரிந்து கொள்ளப்படவில்லை. ஏனெனில், இந்தியர்கள் அல்லாத பலரும் அரசியல் மற்றும் கலாசாரத்தில் வளர்ந்து வரும் அதன் வரலாறு பற்றி அறிந்திருக்கவில்லை. முஸ்லிம் சகோதரர்களைப் போன்று, பா.ஜ.க.வானது நவீனத்துவத்தின் முக்கிய விஷயங்களை தழுவியபோதிலும் கூட, மேற்கத்திய தாராளவாத விஷயங்கள் மற்றும் முன்னுரிமைகளை புறந்தள்ளுகிறது.

    சீன கம்யூனிஸ்டு கட்சியைப் போன்று 100 கோடிக்கும் மேற்பட்ட மக்களைக் கொண்ட நாட்டை வழிநடத்திச் சென்று உலகளாவிய சூப்பர் ஆற்றல் கொண்ட நாடாவதற்கு பா.ஜ.க. நம்பிக்கை கொண்டுள்ளது.

    இஸ்ரேலின் லிகுட் கட்சியைப் போன்று, பாரம்பரிய மதிப்புகளுடன் கூடிய, வர்த்தக சந்தைக்கு ஆதரவான பொருளாதார நிலைப்பாட்டை அடிப்படையிலேயே பா.ஜ.க. இணைந்து செயல்படுத்தி வருகிறது. ஆனால், அமெரிக்க நிபுணர்கள், அதிலும் இடதுசாரி தாராளவாத எண்ணம் கொண்டவர்கள் பிரதமர் மோடியின் இந்தியாவை, டென்மார்க்கை போல் ஏன் நீங்கள் இல்லை? என கேட்கிறார்கள்.

    எனினும், இந்தியா ஒரு சிக்கல் நிறைந்த பகுதி. அதில் வேறு சில விஷயங்களும் உள்ளன. கிறிஸ்தவர்கள் அதிகம் வாழும் இந்தியாவின் வடகிழக்கில் பா.ஜ.க.வின் சமீபத்திய, குறிப்பிடத்தக்க அரசியல் வெற்றிகளை கவனத்தில் கொள்ள வேண்டும். 20 கோடி மக்கள் தொகை கொண்ட உத்தர பிரதேசத்தில் பா.ஜ.க. அரசு, ஷியா பிரிவு முஸ்லிம்களின் வலிமையான ஆதரவைப் பெற்று திகழ்கிறது.

    சாதி வேற்றுமைக்கு எதிராகப் போராடுவதற்கான முயற்சிகளில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரின் பங்கு முக்கியம் வாய்ந்தது. பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மூத்த தலைவர்களுடனான எனது தீவிர, தொடர் சந்திப்புக்கு பின்னர், அவர்களது சில விமர்சனங்களுக்கு பின்பு, அமெரிக்கர்கள் மற்றும் மேற்கத்திய நாட்டினர் பொதுவாக, ஒரு சிக்கலான மற்றும் சக்திவாய்ந்த இயக்கம் பற்றி புரிந்துகொள்ள முன்வர வேண்டும் என என்னை நானே சமரசப்படுத்தி கொண்டேன் என தெரிவித்துள்ளார்.

    • ஆய்வில் கோவிட் நோயால் பாதிக்கப்பட்ட அன்னி என்ற 28 வயது பெண்ணுக்கு நரம்பியல் கோளாறு கண்டறியப்பட்டது.
    • தொற்றால் பாதிக்கப்பட்டு 2 மாதங்கள் கடந்த பிறகும் அவருக்கு தனது நெருங்கிய குடும்ப உறுப்பினர்களை கூட அடையாளம் காண முடியவில்லை.

    கொரோனா தொற்று ஏற்பட்டு சில வாரங்களில் பெரும்பாலானோர் குணமடைந்து விடுகின்றனர். ஆனால் சிலருக்கு 4 முதல் 12 வாரங்கள் வரை அல்லது அதற்கு பிறகும் கூட நோயின் அறிகுறிகள் நீடிக்கும். இவற்றை 'நீண்ட (லாங்) கோவிட்' என அழைக்கின்றனர்.

    இதுபோன்ற நீண்ட கோவிட் பாதிப்புகள் சிலருக்கு முகம் குருட்டு தன்மை (புரோசோ பக்னோசியா) என்ற நரம்பியல் கோளாறை ஏற்படுத்தலாம் என ஆய்வில் தெரியவந்துள்ளது.

    இதனால் முகங்களை அடையாளம் காண இயலாமல் போகலாம். இது தொடர்பாக அமெரிக்காவில் உள்ள டார்ட்மவுத் கல்லூரியை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் அடங்கிய குழுவினர் ஒரு ஆய்வை நடத்தினர்.

    இதில் நீண்ட கோவிட் நோயால் பாதிக்கப்பட்ட 54 பேரிடம் கருத்துக்கள் பெறப்பட்டன. அதில் பெரும்பாலானவர்கள் தங்களுக்கு நரம்பியல் கோளாறு பிரச்சினை இருப்பதாக கூறினர்.

    ஆய்வில் கோவிட் நோயால் பாதிக்கப்பட்ட அன்னி என்ற 28 வயது பெண்ணுக்கு நரம்பியல் கோளாறு கண்டறியப்பட்டது. அவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவதற்கு முன்பு அவருக்கு முகங்களை அடையாளம் காண்பதில் எந்த பிரச்சினையும் இல்லை.

    ஆனால் தொற்றால் பாதிக்கப்பட்டு 2 மாதங்கள் கடந்த பிறகும் அவருக்கு தனது நெருங்கிய குடும்ப உறுப்பினர்களை கூட அடையாளம் காண முடியவில்லை என்று கூறினார்.

    கார்டேக்ஸ் இதழில் வெளியிடப்பட்டுள்ள ஆய்வில் சில தனி நபர்கள் நீண்ட கோவிட் காரணமாக சிரமங்களை உருவாக்கலாம் என்று பரிந்துரைத்துள்ளனர்.

    • ஆபாச நடிகை ஸ்டோர்மி டேனியல்ஸ் பேசாமல் இருக்க 1.30 லட்சம் அமெரிக்க டாலர்கள் வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
    • பிரசார நிதியில் இருந்து சட்டவிரோதமாக வழங்கப்பட்டதாக டிரம்ப் மீது வழக்கு தொடரப்பட்டது.

    அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் வருகிற அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடுவதாக அறிவித்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

    கடந்த 2016ம் ஆண்டு அதிபர் தேர்தல் நடந்தபோது, டிரம்ப் குறித்து பிரபல ஆபாச பட நடிகை ஸ்டோர்மி டேனியல்ஸ் தகவல் ஒன்றை தெரிவித்தார்.

    தன்னுடன் டிரம்ப் நெருங்கிய உறவில் இருந்தார் என்று தெரிவித்தார். ஆனால், இதை டிரம்ப் திட்டவட்டமாக மறுத்தார்.

    தேர்தலின்போது இந்த தகவல் வெளியானதால் அதுபற்றி ஸ்டோர்மி டேனியல்ஸ் பேசாமல் இருக்க 1.30 லட்சம் அமெரிக்க டாலர்கள் வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    இந்த பணம், பிரசார நிதியில் இருந்து சட்டவிரோதமாக வழங்கப்பட்டதாக டிரம்ப் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் நடிகைக்கு பணம் கொடுத்ததாக கூறப்படும் வழக்கில் தான் வருகிற 21ம் தேதி கைது செய்யப்பட உள்ளதாக டிரம்ப் அறிவித்தார்.

    மன்ஹாட்டன் மாவட்ட வக்கீல் அலுவலகத்தில் இருந்து கசிந்த ரகசிய ஆவணங்களை மேற்கொள் காட்டி, தனது ட்ருத் சமூக வலைதளத்தில் கூறும்போது, "முன்னணி குடியரசு கட்சி வேட்பாளர் மற்றும் அமெரிக்க முன்னாள் அதிபர் வருகிற 21-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) கைது செய்யப்படுவார். போராட்டத்திற்கு தயாராகுங்கள் என்று கூறியுள்ளார். கைது நடவடிக்கை எடுக்கப்பட்டால் குற்றவியல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள டிரம்ப் சரணடைவார் என்று அவரது வக்கீல் தெரிவித்தார்.

    இந்நிலையில், இந்த வழக்கில் டிரம்ப் இன்று கைது செய்யப்பட அதிகளவில் வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    • இந்திய தூதரகம் தாக்கப்பட்டதற்கு அமெரிக்க வெளியுறவுத்துறை கண்டனம் தெரிவித்துள்ளது.
    • பிரிட்டனில் உள்ள இந்திய தூதரகத்தின் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் நேற்று தாக்குதல் நடத்தினர்.

    வாஷிங்டன்:

    இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பிரிவினைவாத தலைவரான அம்ரித்பால் சிங் கடந்த இரு தினங்களுக்கு முன் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால், வாகனத்தில் துரத்திச் சென்றபோது அவர் தப்பிவிட்டதாகவும், அவரை தீவிரமாக தேடி வருவதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அவர் மீதான நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து காலிஸ்தான் ஆதரவாளர்கள் இதுபோன்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இதற்கிடையே, அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் உள்ள இந்திய தூதரகம் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தி உள்ளனர். தூதரகத்தின் கதவு, ஜன்னல்களை அடித்து நொறுக்கி சூறையாடினர். அம்ரித்பாலை விடுதலை செய்ய வேண்டும் என கட்டிடத்தின் வெளிப்புறச் சுவரில் பெயிண்டால் எழுதி உள்ளனர். தூதரகத்தை ஒரு கும்பல் தாக்கும்போது பதிவு செய்யப்பட்ட வீடியோக்கள் வெளியாகி உள்ளன.

    இந்நிலையில், இந்திய தூதரகம் தாக்கப்பட்டதற்கு அமெரிக்க வெளியுறவுத்துறை கண்டனம் தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் கூறுகையில், இந்திய துணைத் தூதரகம் மீதான தாக்குதலையும், அமெரிக்காவிற்குள் உள்ள தூதரக அலுவலகங்கள் மீதான தாக்குதலையும் அமெரிக்கா கண்டிக்கிறது. தூதரகத்தில் பணிபுரியும் அதிகாரிகளை பாதுகாப்போம் என உறுதியளிக்கிறோம் என தெரிவித்துள்ளார்.

    ஏற்கனவே, பிரிட்டனில் உள்ள இந்திய தூதரகத்தின் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் சிலர் கற்கள் வீசி தாக்குதல் நடத்தினர். ஒரு சிலர் தேசியக் கொடியை கீழே இறக்கி அவமதிப்பு செய்ததற்கு இந்தியா கண்டனம் தெரிவித்தது.

    • அமேசான் நிறுவனம் 9 ஆயிரம் ஊழியர்களை ஆட்குறைப்பு செய்ய உள்ளது.
    • இந்த அறிவிப்பு அமேசான் நிறுவன ஊழியர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.

    வாஷிங்டன்:

    கொரோனா தொற்று பரவலுக்கு பிறகு ஏற்பட்டுள்ள பொருளாதார சூழல் காரணமாக டுவிட்டர், மெட்டா நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களின் ஊழியர்களில் பெரும்பாலானவர்களை கடந்த ஆண்டு 2-ம் பாதியில் பணி நீக்கம் செய்தது.

    இதையடுத்து, அமெரிக்காவை தலைமையகமாகக் கொண்ட அமேசான் நிறுவனமும் கடந்த ஜனவரி மாதம் 18 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்திருந்தது.

    இந்நிலையில், அமேசான் நிறுவனம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் அடுத்த வாரம் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளது. இதுதொடர்பாக ஓரிரு நாட்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும். இவற்றில் பெரும்பாலான ஊழியர்கள் விளம்பரப்பிரிவு மற்றும் இதர பிரிவுகளில் பணியாற்றுபவர்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன....

    இந்த அறிவிப்பு அமேசான் நிறுவன ஊழியர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.

    • மசோதாவில் கையெழுத்திட்டதையடுத்து கவர்னரை குழந்தைகள் கட்டிப்பிடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
    • மாநிலத்தின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்கு செய்யும் சிறந்த முதலீடுகளில் ஒன்று என கவர்னர் டிம் வால்ஸ் கூறினார்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் மின்னசோட்டா மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர்களின் பசியைப் போக்க, காலை மற்றும் மதியம் என இரு வேளைகளிலும் இலவசமாக உணவு வழங்கும் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. அந்த மசோதாவுக்கு கவர்னர் டிம் வால்ஸ் ஒப்புதல் வழங்கினார். மசோதாவில் கையெழுத்திட்டதையடுத்து குழந்தைகள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். கவர்னரை கட்டிப்பிடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    இந்த திட்டத்திற்கு கவர்னர் ஒப்புதல் அளித்து சட்டமானதையடுத்து, சட்டமன்ற உறுப்பினர்கள், மாணவர்கள் மற்றும் வழக்கறிஞர்களுடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

    மாணவர்களுக்கு இலவசமாக காலை உணவு மற்றும் மதிய உணவை வழங்குவது, மாணவர்கள் மற்றும் மாநிலத்தின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்கு நாம் செய்யும் சிறந்த முதலீடுகளில் ஒன்று என கவர்னர் டிம் வால்ஸ் கூறினார். இந்த மசோதா மின்னசோட்டா மாநிலத்தை குழந்தைகள் சிறப்பாக வளர்வதற்கு சிறந்த மாநிலமாக மாற்றுவதற்கான முக்கிய நடவடிக்கை என்றும் அவர் குறிப்பிட்டார்.

    • ஆஸ்திரேலிய பாராளுமன்றம் முன்பு காலிஸ்தான் ஆதரவாளர்கள் திரண்டு போராட்டம் நடத்தினர்.
    • அம்ரித்பால் சிங்கை என்கவுண்டரில் சுட்டுக்கொல்ல திட்டமிட்டிருப்பதாக அவரது வழக்கறிஞர் குற்றம்சாட்டி உள்ளார்.

    புதுடெல்லி:

    காலிஸ்தான் ஆதவாளர்கள் சமீப காலமாக வன்முறையை கட்டவிழ்த்து விட்டுள்ளனர். வெளிநாடுகளில் உள்ள இந்து கோவில்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. இப்போது காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் அம்ரித்பால் சிங் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீதான நடவடிக்கையை கண்டித்து போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

    சமீபத்தில் பிரிட்டனில் உள்ள இந்திய தூதரகத்தின் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் சிலர் கற்கள் வீசி தாக்குதல் நடத்தினர். ஒரு சிலர் தேசியக் கொடியை கீழே இறக்கி அவமதிப்பு செய்துள்ளனர். இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது.

    இந்நிலையில், அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் உள்ள இந்திய தூதரகம் மீதும் காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தி உள்ளனர். தூதரகத்தின் கதவு, ஜன்னல்களை அடித்து நொறுக்கி சூறையாடினர். அம்ரித்பாலை விடுதலை செய்ய வேண்டும் என கட்டிடத்தின் வெளிப்புறச் சுவரில் பெயிண்டால் எழுதி உள்ளனர். தூதரகத்தை ஒரு கும்பல் தாக்கும்போது பதிவு செய்யப்பட்ட வீடியோக்கள் வெளியாகி உள்ளன. முன்னதாக ஆஸ்திரேலிய பாராளுமன்றம் முன்பு காலிஸ்தான் ஆதரவாளர்கள் திரண்டு போராட்டம் நடத்தினர்.

    இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பிரிவினைவாத தலைவரான அம்ரித்பால் சிங் கடந்த இரு தினங்களுக்கு முன் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால், வாகனத்தில் துரத்தி சென்றபோது அவர் தப்பிவிட்டதாகவும், அவரை தீவிரமாக தேடி வருவதாகவும் காவல்துறை தரப்பில் பின்னர் தெரிவிக்கப்பட்டது. அவர் மீதான நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து காலிஸ்தான் ஆதரவாளர்கள் இதுபோன்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    தப்பி ஓடிய அம்ரித்பால் சிங்கை பஞ்சாப் போலீசார் கைது செய்துவிட்டதாகவும், அவரை என்கவுண்டரில் சுட்டுக்கொல்ல திட்டமிட்டிருப்பதாகவும் அவரது வழக்கறிஞர் இமான் சிங் காரா குற்றம்சாட்டி உள்ளார். அம்ரிம் பால் சிங்கின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

    • இண்டியன்வெல்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டியின் இறுதிப்போட்டி இன்று நடந்தது.
    • இதில் மெத்வதேவை வீழ்த்திய அல்காரஸ் சாம்பியன் பட்டம் வென்றார்.

    வாஷிங்டன்:

    இண்டியன்வெல்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் உலக தரவரிசையில் 6-வது இடத்தில் இருக்கும் ரஷிய வீரர் டேனில் மெத்வதேவ், ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரசுடன் மோதினார்.

    இந்தப் போட்டியில் அல்காரஸ் அதிரடியாக ஆடினார். இதனால் 6-3, 6-2 என்ற நேர் செட் கணக்கில் மெத்வதேவை எளிதில் வீழ்த்தி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றினார்.

    • இண்டியன்வெல்ஸ் சர்வதேச டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டி நடந்தது.
    • இதில் ரிபாகினா சபலென்காவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.

    வாஷிங்டன்:

    இண்டியன்வெல்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. இதில் கஜகஸ்தானின் எலினா ரிபாகினா, பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்காவை சந்தித்தார்.

    இதில் 7-6, 6-4 என்ற செட் கணக்கில் ரிபாகினா வென்று சாம்பியன் பட்டம் வென்றார்.

    • இண்டியன்வெல்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது.
    • இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் போபண்ணா ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.

    வாஷிங்டன்:

    இண்டியன்வெல்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியாவின் ரோகன் போபண்ணா-ஆஸ்திரேலியாவின் எப்டன் ஜோடி, நெதர்லாந்தின் வெஸ்லே- பிரிட்டனின் நியல் ஜோடியுடன் மோதியது.

    இதில் போபண்ணா ஜோடி 6-3 என முதல் செட்டை கைப்பற்றியது. இரண்டாவது செட்டை 2-6 என இழந்தது. வெற்றியாளரை நிர்ணயைக்கும் மூன்றாவது செட்டை 10-8 என்ற செட் கணக்கில் வென்று கோப்பையை கைப்பற்றியது.

    இதன்மூலம் ஏடிபி மாஸ்டர்ஸ் 1000 அந்தஸ்து பெற்ற தொடரில் கோப்பை வென்ற மூத்த வீரர் என்ற சாதனையை போபண்ணா படைத்துள்ளார்.

    • இண்டியன்வெல்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது.
    • இண்டியன்வெல்ஸ் டென்னிஸ் போட்டியில் மெத்வதேவ், அல்காரஸ் இறுதிக்கு முன்னேறினர்.

    வாஷிங்டன்:

    இண்டியன்வெல்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற அரையிறுதி போட்டியில் உலக தரவரிசையில் 6-வது இடத்தில் இருக்கும் ரஷிய வீரர் டேனில் மெத்வதேவ், அமெரிக்க வீரர் பிரான்சிஸ் தியாஃபோவுடன் மோதினார்.

    இந்தப் போட்டியில் மெத்வதேவ் 7-5, 7-6 என்ற செட் கணக்கில் பிரான்சிஸை வீழ்த்தி வெற்றி பெற்றார். இதன்மூலம் அவர் முதல் முறையாக இண்டியன்வெல்ஸ் தொடரின் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார்.

    மற்றொரு அரையிறுதிப் போட்டியில் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ், இத்தாலியின் ஜானிக் சின்னருடன் மோதினார்.

    இதில் அல்காரஸ் 7-6, 6-3 என்ற செட் கணக்கில் வென்று இறுதிக்கு முன்னேறினார்.

    நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் மெத்வதேவ், அல்காரஸ் ஆகியோர் மோதுகின்றனர்.

    • பிரசாரநிதியில் இருந்து சட்டவிரோதமாக வழங்கப்பட்டதாக டிரம்ப் மீது வழக்கு தொடரப்பட்டது.
    • கைது நடவடிக்கை எடுக்கப்பட்டால் குற்றவியல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள டிரம்ப் சரணடைவார் என்று அவரது வக்கீல் தெரிவித்தார்.

    வாஷிங்டன்:

    அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப். குடியரசு கட்சியை சேர்ந்த அவர், வருகிற அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடுவதாக அறிவித்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

    கடந்த 2016-ம் ஆண்டு அதிபர் தேர்தல் நடந்தபோது, டிரம்ப் குறித்து பிரபல ஆபாச பட நடிகை ஸ்டோர்மி டேனியல்ஸ் தகவல் ஒன்றை தெரிவித்தார். தன்னுடன் டிரம்ப் நெருங்கிய உறவில் இருந்தார் என்று தெரிவித்தார்.

    இதை டிரம்ப் திட்டவட்டமாக மறுத்தார். தேர்தலின்போது இந்த தகவல் வெளியானதால் அதுபற்றி ஸ்டோர்மி டேனியல்ஸ் பேசாமல் இருக்க 1.30 லட்சம் அமெரிக்க டாலர்கள் வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    இந்த பணம், பிரசாரநிதியில் இருந்து சட்டவிரோதமாக வழங்கப்பட்டதாக டிரம்ப் மீது வழக்கு தொடரப்பட்டது.

    இந்நிலையில் நடிகைக்கு பணம் கொடுத்ததாக கூறப்படும் வழக்கில் தான் வருகிற 21-ந்தேதி கைது செய்யப்பட உள்ளதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். மன்ஹாட்டன் மாவட்ட வக்கீல் அலுவலகத்தில் இருந்து கசிந்த ரகசிய ஆவணங்களை மேற்கொள் காட்டி டிரம்ப், தனது ட்ருத் சமூக வலைதளத்தில் கூறும்போது, முன்னணி குடியரசு கட்சி வேட்பாளர் மற்றும் அமெரிக்க முன்னாள் அதிபர் வருகிற 21-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) கைது செய்யப்படுவார். போராட்டத்திற்கு தயாராகுங்கள் என்று கூறியுள்ளார்.

    கைது நடவடிக்கை எடுக்கப்பட்டால் குற்றவியல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள டிரம்ப் சரணடைவார் என்று அவரது வக்கீல் தெரிவித்தார்.

    ×