என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Minnesota"

    • ஜனநாயக கட்சியின் சட்டசபை உறுப்பினர் மெலிசா ஹார்ட்மேன் மற்றும் அவரது கணவர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
    • இதுபோன்ற கொடூரமான வன்முறையை பொறுத்துக் கொள்ள முடியாது என அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் மின்னசோட்டா சட்டசபை உறுப்பினர்கள் இருவர் தங்கள் வீடுகளில் குறிவைத்து தாக்கப்பட்டுள்ளனர்.

    போலீஸ் வேடமணிந்து வந்த மர்ம நபர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதில் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த சட்டசபை உறுப்பினர் மெலிசா ஹார்ட்மேன் மற்றும் அவரது கணவர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

    மற்றொரு சட்டசபை உறுப்பினர் ஜான் ஹாப்மேன் படுகாயம் அடைந்தார். இவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுதொடர்பாக, கவர்னர் டிம்.வால்ஸ் கூறுகையில், மின்னசோட்டாவில் நடந்த அரசியல் வன்முறைகளுக்கு எதிராக நிற்கவேண்டும். தாக்குதல் நடத்தியவர்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

    இதுகுறித்து அமெரிக்க புலனாய்வு அமைப்பான எப். பி. ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். சட்டசபை உறுப்பினர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

    இந்நிலையில், மின்னசோட்டாவில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் கொடூரமானது என கண்டனம் தெரிவித்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இதுபோன்ற கொடூரமான வன்முறையை பொறுத்துக் கொள்ள முடியாது என கூறினார்.

    • மசோதாவில் கையெழுத்திட்டதையடுத்து கவர்னரை குழந்தைகள் கட்டிப்பிடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
    • மாநிலத்தின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்கு செய்யும் சிறந்த முதலீடுகளில் ஒன்று என கவர்னர் டிம் வால்ஸ் கூறினார்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் மின்னசோட்டா மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர்களின் பசியைப் போக்க, காலை மற்றும் மதியம் என இரு வேளைகளிலும் இலவசமாக உணவு வழங்கும் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. அந்த மசோதாவுக்கு கவர்னர் டிம் வால்ஸ் ஒப்புதல் வழங்கினார். மசோதாவில் கையெழுத்திட்டதையடுத்து குழந்தைகள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். கவர்னரை கட்டிப்பிடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    இந்த திட்டத்திற்கு கவர்னர் ஒப்புதல் அளித்து சட்டமானதையடுத்து, சட்டமன்ற உறுப்பினர்கள், மாணவர்கள் மற்றும் வழக்கறிஞர்களுடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

    மாணவர்களுக்கு இலவசமாக காலை உணவு மற்றும் மதிய உணவை வழங்குவது, மாணவர்கள் மற்றும் மாநிலத்தின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்கு நாம் செய்யும் சிறந்த முதலீடுகளில் ஒன்று என கவர்னர் டிம் வால்ஸ் கூறினார். இந்த மசோதா மின்னசோட்டா மாநிலத்தை குழந்தைகள் சிறப்பாக வளர்வதற்கு சிறந்த மாநிலமாக மாற்றுவதற்கான முக்கிய நடவடிக்கை என்றும் அவர் குறிப்பிட்டார்.

    ×