என் மலர்tooltip icon

    உலகம்

    பெண்ணின் இதயத்தை வெட்டி எடுத்து குடும்பத்திற்கு சமைத்து கொடுத்த அமெரிக்க நபர்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    பெண்ணின் இதயத்தை வெட்டி எடுத்து குடும்பத்திற்கு சமைத்து கொடுத்த அமெரிக்க நபர்

    • அத்தை, மாமா மற்றும் 4 வயது குழந்தையையும் கொலை செய்துள்ளார்.
    • ஆண்டர்சனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    அமெரிக்காவை சேர்ந்த நபர் லாரன்ஸ் பால் ஆண்டர்சன் (44). இவர் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு போதைப் பொருள் வழக்கில் கைதாகி 20 ஆண்டு சிறைத்தண்டனை பெற்றார். ஆனால், ஆண்டர்சன் மூன்று ஆண்டு தண்டனை அனுபவித்த நிலையில், முன்கூட்டியே விடுவிக்கப்பட்டார்.

    இந்நிலையில், விடுதலையாகி வந்த சில நாட்களிலேயே ஆண்டர்சன் ஓக்லஹோமா மாகாணத்தில் பெண்ணின் இதயத்தை வெட்டி எடுத்து கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஆண்டர்சன், ஆண்ட்ரியா பிளாங்கன்ஷிப் என்ற பெண்ணின் இதயத்தை வெட்டிக் எடுத்து தனது அத்தை மற்றும் மாமாவின் வீட்டிற்கு எடுத்துச் சென்று உருளைக்கிழங்குடன் சமைத்து அவர்களுக்கு பரிமாறியுள்ளார்.

    பின்னர், அத்தை, மாமா மற்றும் 4 வயது குழந்தையையும் கொலை செய்துள்ளார். இந்த சம்பவத்தை தொடர்ந்து ஆண்டர்சனை போலீசார் கைது செய்து வழக்குப்பதிவு செய்தனர்.

    இந்நிலையில், ஆண்டர்சனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    Next Story
    ×