என் மலர்
அமெரிக்கா
- சில தினங்களுக்கு முன் தேர்தல் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
- தேர்தலில் இருந்து விலகிய பிறகு, முதல்முறையாக தொலைகாட்சியில் உரையாற்றினார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக அறிவித்துக் கொண்ட அதிபர் ஜோ பைடன், சில தினங்களுக்கு முன் தேர்தல் போட்டியில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்தார்.
மேலும், ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸை முன்மொழிவதாகவும், அவருக்கு முழு ஆதரவு அளிப்பதாகவும் ஜோ பைடன் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தார். கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தனிமைப்படுத்திக் கொண்டு இருந்த அதிபர் பைடன், தேர்தலில் இருந்து விலகிய பிறகு, நேற்று முதல்முறையாக தொலைகாட்சியில் உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், "ஆபத்தில் இருக்கும் நமது ஜனநாயகத்தை பாதுகாப்பது, எத்தனை பெரிய பதவிகளை விட மிகமுக்கியமான ஒன்று. புதிய தலைமுறையிடம் ஜோதியை வழங்குவது தான் சிறந்த வழியாக இருக்கும் என்று நான் முடிவு செய்துள்ளேன்."
"இது தான் நம் நாட்டை ஒருங்கிணைக்கும் தலைசிறந்த வழி. அடுத்த ஆறு மாத காலம், அதிபராக மேற்கொள்ள வேண்டிய பணிகளில் முழு கவனம் செலுத்துவேன்," என்று தெரிவித்தார்.
- முதலில் ஆடிய வாஷிங்டன் பிரீடம் அணி 15.3 ஓவரில் 174 ரன்கள் எடுத்திருந்தபோது மழை பெய்தது.
- டக்வொர்த் லீவிஸ் விதிப்படி யூனிகார்ன் அணி வெற்றிபெற 14 ஓவரில் 177 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
வாஷிங்டன்:
அமெரிக்காவில் நடந்து வரும் மேஜர் லீக் கிரிக்கெட் தொடரின் 20-வது போட்டியில் சான் பிரான்சிஸ்கோ யூனிகார்ன், வாஷிங்டன் பிரீடம் அணிகள் மோதின. டாஸ் வென்ற சான் பிரான்சிஸ்கோ யூனிகான் அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது.
அதன்படி முதலில் ஆடிய வாஷிங்டன் பிரீடம் அணி 15.3 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 174 ரன் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது.
இதனால் ஆட்டம் தடைபட்டது. ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட் தலா 56 ரன்கள் எடுத்து வெளியேறினர். ரச்சின் ரவீந்திரா 6ப ந்தில் 2 சிக்சருடன் 16 ரன் எடுத்தார்.
மழை பெய்து ஆட்டம் தடைபட்டதால் டக்வொர்த் லீவிஸ் விதிப்படி யூனிகார்ன் அணி வெற்றிபெற 14 ஓவரில் 177 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
சான் பிரான்சிஸ்கோ பிரீடம் அணியின் தொடக்க ஆட்டக்காரர் பின் ஆலன் முதல் பந்தில் அவுட்டானார். அடுத்து களமிறங்கிய இந்திய வம்சாவளி வீரான சஞ்சய் கிருஷ்ணமூர்த்தி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஜோஷ் இங்கிலீஷ் 17 பந்தில் 45 ரன்கள் குவித்தார்.
இறுதியில், சான் பிரான்சிஸ்கோ யூனிகார்ன் அணி 13.4 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 177 ரன்கள் குவித்து அபார வெற்றி பெற்றது. சஞ்சய் கிருஷ்ணமூர்த்தி 42 பந்தில் 6 சிக்சர், 5 பவுண்டரி உள்பட 79 ரன்கள் குவித்து, ஆட்டநாயகன் விருது பெற்றார்.
அமெரிக்காவில் வசித்து வரும் இந்திய வம்சாவளி வீரரான சஞ்சய் கிருஷ்ணமூர்த்தி பிரசாத், கர்நாடகா அண்டர் 16 அணிக்காக விளையாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- கருப்பு நிற பார்பி, பார்வை மாற்றுத்திறன் பார்பி அறிமுகம்
- பார்பி திரைப்படம் 1 பில்லியன் டாலர் வசூலை குவித்தது.
1959 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட பார்பி பொம்மைகள் உலக அளவில் இன்றும் மிக பிரபலமாக உள்ளது. பார்பி பொம்மையை மையமாக வைத்து வெளியான பார்பி திரைப்படம் 1 பில்லியன் டாலர் வசூலை குவித்து சாதனை படைத்திருந்தது.
உலக அளவில் பிரபலமாக இருந்தாலும் பார்பி பொம்மைகளின் மீது பல விமர்சனங்கள் இருந்து வருகின்றது. வெள்ளை நிறம், கச்சிதமான உடல் அமைப்பு ஆகியவை தான் அழகானவை என்ற தவறான தோற்றத்தை பார்பி உருவாக்குவதாக பலர் விமர்சித்துள்ளளனர்.
இந்நிலையில், அனைவரையும் உள்ளடக்கிய அணுகுமுறையை கடைப்பிடிக்கும் வகையில் பார்வை மாற்றுத்திறன் கொண்டது போன்ற பார்பி பொம்மையையும் உடல்நல குறைபாடுகள் உடைய கருப்பு நிற பார்பி பொம்மையையும் அமெரிக்காவின் மேட்டல் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
பார்வையற்றோருக்கான அமெரிக்க அறக்கட்டளை மற்றும் தேசிய டவுன் சிண்ட்ரோம் சொசைட்டி உடன் இணைந்து இந்த பொம்மையை மேட்டல் நிறுவனம் உருவாக்கியுள்ளது.
- ஜோபைடன் வெள்ளை மாளிகைக்கு திரும்பினார்.
- உடல்நிலையை டாக்டர்கள் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.
வாஷிங்டன்:
அமெரிக்க அதிபர் ஜோபைடனுக்கு கடந்த 17-ந்தேதி கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவருக்கு லேசான அறிகுறி தென்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து அவர் டெலாவேரில் உள்ள வீட்டில் தன்னை தனிமைப்படுத்தி கொண்டார். அவரது உடல்நிலையை டாக்டர்கள் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.
இந்த நிலையில் கொரோனா பாதிப்பில் இருந்து ஜோபைடன் குணமடைந்தார். இதுகுறித்து அவரது டாக்டர் கெவின் ஓ கானர் கூறும்போது, அதிபர் ஜோபைடனுக்கு ஆன்டிஜென் சோதனை நடத்தப்பட்டதில் அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று முடிவு வந்தது.
அவர் தனது நோய்த்தொற்றில் இருந்து முழுமையாக குணமடைந்துள்ளார். அவருக்கு எந்தவிதமான அறிகுறியும் இல்லை என்றார்.
இதையடுத்து ஜோபைடன் வெள்ளை மாளிகைக்கு திரும்பினார். அப்போது அவர் கூறும்போது, நான் நன்றாக உணர்கிறேன் என்று தெரிவித்தார்.
- கமலா ஹாரிசுக்கு ஜனநாயக கட்சியினரிடையே ஆதரவு அதிகரித்தது.
- கமலா ஹாரிசுக்கு நன்கொடை குவிந்து வருகிறது.
வாஷிங்டன்:
அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் 5-ந்தேதி நடைபெற உள்ளது. இதில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்ட தற்போதைய அதிபர் ஜோ பைடன், தேர்தலில் இருந்து விலகுவதாக அறிவித்தார். மேலும் துணை அதிபர் கமலா ஹாரிசை அதிபர் வேட்பாளராக்க தனது ஆதரவை தெரிவித்தார்.
கமலா ஹாரிசுக்கு ஜனநாயக கட்சியினரிடையே ஆதரவு அதிகரித்தது. அவர் அதிபர் வேட்பாளராக தேர்வு செய்யப்படுவதற்கான பிரதிநிதிகள் ஆதரவு எண்ணிக்கையை பெற்றார்.
இதன்மூலம் அவர் அதிபர் வேட்பாளராக தேர்வு செய்யப்படுவது உறுதியாகிவிட்டது. இதையடுத்து கமலா ஹாரிசுக்கு நன்கொடை குவிந்து வருகிறது.
இந்த நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தல் குறித்து புதிய கருத்துக்கணிப்புகள் நடத்தப்பட்டன. குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்பை விட துணை அதிபர் கமலா ஹாரிஸ் 2 சதவீதம் அதிகமான புள்ளிகள் முன்னிலை பெற்றுள்ளதாக ராய்ட் டர்ஸ்-இப்சோஸ் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கருத்துக்கணிப்பின்படி கமலா ஹாரிஸ் 44 சதவீத ஆதரவை பெற்று உள்ளார். டிரம்புக்கு 42 சதவீத ஆதரவு உள்ளது.
சில வாரங்களுக்கு முன்பு அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் தேர்வு செய்யப்பட்டால் டிரம்புக்கு எதிராக அவருக்கு ஆதரவு எவ்வளவு இருக்கும் என்று கருத்துக்கணிப்பு நடத்தப் பட்டதில் இருவரும் சம நிலையுடன் இருந்தனர்.
தற்போது கமலா ஹாரிஸ் அதிபர் வேட்பாளராகி உள்ள நிலையில் நடத்தப்பட்ட புதிய கருத்துக் கணிப்பில் டிரம்பை பின்னுக்கு தள்ளி உள்ளார்.
அதேபோல் டிரம்பிற்கு எதிரான போட்டியில் ஜோபைடன் 2 புள்ளி குறைவாக இருந்தார். ஆனால் தற்போது கமலா ஹாரிஸ் உடன் ஒப்பிடும் போது டிரம்ப் 2 புள்ளிகள் குறைவாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் டிரம்புக்கு கடும் சவால் அளிக்கக்கூடிய போட்டியாளராக கமலா ஹாரிஸ் உள்ளார்.
- தேர்தல் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
- துணை அதிபர் வேட்பாளராக ஜேடி வேன்ஸ் அறிவிக்கப்பட்டார்.
அமெரிக்காவில் இந்த ஆண்டு இறுதியில் அதிபர் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில் ஜனநாயக கட்சி வேட்பாளராக தற்போதைய அதிபர் ஜோ பைடன் போட்டியிடுவதாக அறிவித்த நிலையில், சமீபத்தில் தேர்தல் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
துணை அதிபர் பதவிக்கு போட்டியிட்ட கமலா ஹாரிஸ் தற்போது அதிபராக களம் காண்கிறார். குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளராக டொனால்டு டிரம்ப் அறிவிக்கப்பட்டார். துணை அதிபர் வேட்பாளராக ஜேடி வேன்ஸ் அறிவிக்கப்பட்டார்.
இந்த நிலையில், அதிபர் தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிஸை எளிதில் வீழ்த்திவிட முடியும் என்று எதிர்தரப்பில் போட்டியிடும் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய டிரம்ப், "அவரைவிட கமலா அதிக தீவிரமானவர். இதனால், பைடனை விட கமலா எளிதானவராக இருப்பார் என நினைக்கிறேன்," என்று தெரிவித்தார்.
- துப்பாக்கிச்சூடு நடத்திய வாலிபரை போலீசார் சுட்டுக்கொன்றனர்.
- கொலை முயற்சியில் இருந்து தப்பிய பிறகு டிரம்ப் பிரசார கூட்டத்தில் பங்கேற்றார்.
வாஷிங்டன்:
அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார். கடந்த 14-ம் தேதி பென்சில்வேனியா மாகாணத்தின் பட்லர் நகரில் பிரசாரம் செய்தபோது டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.
இதில் அவரது வலது காதில் தோட்டா உரசிச் சென்றதில் காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். துப்பாக்கிச்சூடு நடத்திய வாலிபரை போலீசார் சுட்டுக்கொன்றனர். இதற்கிடையே, கொலை முயற்சியில் இருந்து தப்பிய பிறகு டிரம்ப் பிரசார கூட்டத்தில் பங்கேற்றார்.
இதற்கிடையே, டிரம்ப் மீது நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக அமெரிக்காவின் ரகசிய பிரிவின் கவனக்குறைவே காரணம் என புகார்கள் எழுந்தன.
இந்நிலையில், பாதுகாப்பு குறைபாட்டுக்கு பொறுப்பேற்று கிம்பர்லி சீட்டல் அமெரிக்காவின் ரகசிய பிரிவு தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்துள்ளார் என தகவல் வெளியானது.
- கமலா ஹாரிஸ் குறித்த பிரபலமான மீம் [MEME] ஒன்று தற்போது மீண்டும் டிரண்டாகத் தொடங்கியுள்ளது.
- கமலா ஹாரிஸ் கொகநட் மர மீம்கள் இணையத்தில் உலா வரத் தொடங்கின.
அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து ஜோ பைடன் விலகியுள்ள நிலையில், இந்திய - ஆப்பிரிக்க வம்சாவளியைச் சேர்ந்த துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பளராகி உள்ளார். இந்நிலையில் கமலா ஹாரிஸ் குறித்த பிரபலமான மீம் [MEME] ஒன்று தற்போது மீண்டும் டிரண்டாகத் தொடங்கியுள்ளது.

கடந்த 2023 ஆம் ஆண்டு வெள்ளை மாளிகையில் வைத்து நடந்த ஹிஸ்பானிக் அமரிக்கர்களின் முன்னேற்றம் குறித்து நடந்த நிகழ்ச்சியில் பேசிய துணை அதிபர் கமலா ஹாரிஸ், 'எனது தாய் சில நேரங்களில் சொல்வதுண்டு, இந்த இளைய தலைமுறை பிள்ளைகளிடம் என்ன தவறு என்று எனக்குத் தெரியவில்லை, நீங்கள் எல்லோரும் எதோ தென்னை மரத்தில் இருந்து நேராக பூமியில் விழுந்தவர்கள் என்று நினைக்கிறீர்களா? என்று அவர் கேட்பதுண்டு' என்று சொல்லிவிட்டு சிரித்தார் கமலா ஹாரிஸ்.
அவர் பேசியது அப்போது டிரண்ட் ஆன நிலையில் கமலா ஹாரிஸ் கொகநட் மர மீம்கள் இணையத்தில் உலா வரத் தொடங்கின. தற்போது கமலா அதிபர் வேட்பாளராகியுள்ள நிலையில் அவரது ஆதரவாளர்கள் இந்த மீமீக்களை பிரச்சார ஆயுதமாகியுள்ளனர்.
- அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸை முன்மொழிவதாக ஜோ பைடன் அதிகாரப்பூர்வமாக தெரிவித்தார்.
- அதிபர் தேர்தலில் வென்றால் அமெரிக்காவின் முதல் பெண் அதிபர் என்ற சாதனையை கமலா ஹாிஸ் படைப்பார்.
அதிபர் தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து விலகிக் கொள்வதாக ஜோ பைடன் அறிவித்துள்ளார். மேலும், ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸை முன்மொழிவதாக ஜோ பைடன் அதிகாரப்பூர்வமாக தெரிவித்தார்.
இது தொடர்பான எக்ஸ் தள பதிவில், "ஜனநாயக கட்சியினரே, எனது வேட்புமனுவை ஏற்க வேண்டாம். எஞ்சியிருக்கும் பதவிக்காலம் முழுக்க அதிபராக எனது கடமைகளில் முழு ஆற்றலை செலுத்த முடிவு செய்துள்ளேன்."
"இந்த ஆண்டு தேர்தலில் எங்கள் கட்சியின் அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ்-க்கு என் முழு ஆதரவு, ஒப்புதலை வழங்குகிறேன். ஜனநாயகவாதிகள் ஒன்றுகூடி டிரம்ப்-ஐ தோற்கடிக்க வேண்டிய நேரம் இது. இதை செய்வோம்," என்று குறிப்பிட்டுள்ளார்.
அதிபர் தேர்தலில் வென்றால் அமெரிக்காவின் முதல் பெண் அதிபர் என்ற சாதனையை கமலா ஹாிஸ் படைப்பார்.
இந்நிலையில், அதிபர் வேட்பாளராக கமலா தனது பிரசாரத்தை தொடங்கியுள்ளார்.
இதற்கிடையே, பைடனின் பிரசார செயலகம், கமலா பிரசார செயலகம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
பிரசாரத்தின்போது, நீதிமன்றத்தால் குற்றவாளி என தண்டிக்கப்பட்டது டொனால்ட் டிரம்ப்பா ? வழக்கறிஞர் கமலா ஹாரிசா ? என்ற முழுக்கத்துடன் கமலா அணி பிரசாரத்தை தொடங்கியது.
பிரசாரத்தில், பெண்களின் கருத்தடை உரிமை, ஜனநாயகத்தை டிரம்பிடமிருந்து காப்பது உள்ளிட்டவற்றை முன்னிலைப்படுத்தி பிரசாரம் செய்ய கமலா திட்டமிட்டுள்ளார்.
அதிபர் வேட்பாளராக பெறப்பட்ட பல மில்லியன் டாலர் பிரசார நிதியை கமலா ஹாரிஸ் பிரசாரத்துக்கு மாற்றிக் கொடுக்கும் வேலைகளில் பைடன் இறங்கியுள்ளார்.
- பெண்ணின் உணர்ச்சிகரமான வீடியோ இணையத்தில் வைரலானது.
- பெண்ணிடம் ஒரு பரிசு பையை கொடுத்து திறக்க சொல்கிறார்.
ஏழைகளுக்கு உணவு, உடை கொடுத்து பலரும் உதவி செய்வார்கள். ஆனால் அமெரிக்காவை சேர்ந்த சமூகவலைதள பிரபலம் ஒருவர் வீடற்ற ஒரு பெண்ணுக்கு குடியிருப்பு வழங்கி உள்ளார்.
இதுதொடர்பாக அந்த பெண்ணின் உணர்ச்சிகரமான வீடியோ இணையத்தில் வைரலானது. இன்ஸ்டாகிராமில் இசாஹியா கிராஸா என்ற பயனர் பகிர்ந்துள்ள அந்த வீடியோவில், அவர் தனது வாகனத்தில் ஒரு பெண்ணை வாழ்த்தும் காட்சிகள் உள்ளது.

அப்போது அந்த பெண்ணிடம் ஒரு பரிசு பையை கொடுத்து திறக்க சொல்கிறார். அந்த பையில் வீட்டு சாவி இருக்கிறது. அப்போது, நான் உங்களுக்கு ஒரு குடியிருப்பை தருகிறேன் என கூறுகிறார். இதைகேட்டதும் அந்த பெண்ணின் கண்களில் இருந்து கண்ணீர் வருகிறது.
தொடர்ந்து வீடியோவில், அந்த பெண்ணை கிராஸா புதிய வீட்டிற்கு அழைத்து செல்கிறார். அந்த வீட்டில் படுக்கை வசதி, டி.வி. உள்ளிட்ட கூடுதல் வசதிகள் இருக்கிறது.

வீடியோவுடன் கிராஸாவின் பதிவில், 10 ஆண்டுகளுக்கும் மேலாக வீடு இல்லாமல் தெருக்களில் வாழ்ந்து வந்த பெண்ணுக்கு வீட்டை கொடுத்து ஆச்சரியப்படுத்துகிறேன். அந்த பெண் ஒரு அற்புதமானவர். இந்த அழகான தருணத்தை என்னால் மறக்க முடியாது.
சமூக வலைதளங்களில் 200 மில்லியன் பார்வைகளை பெற்றதன் விளைவாக இந்த சிறிய மாற்றத்தை ஏற்படுத்துகிறேன் என பதிவிட்டுள்ளார். அவரது இந்த பதிவு 1.10 கோடிக்கும் மேல் பார்வைகளையும், 9 லட்சம் விருப்பங்களையும் குவித்துள்ளது. பயனர்கள் பலரும் கிராஸாவை வாழ்த்தியும், பாராட்டியும் பதிவிட்டு வருகின்றனர்.
- அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் ஒவ்வொருவராக சிரிப்பூட்டும் வித்தியாசமான கெட்டப்பில் நடந்து வருகின்றனர்.
- கையில் டெத் ஆப் புளூ ஸ்க்ரீன் கணினியுடன் பில் கேட்ஸ் நடந்து வருகிறார்.
இதுவரை வந்த ஏஐ வீடியோக்களிலேயே சிறந்த வீடியோ இதுதான் என்று எலான் மஸ்க் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள வீடியோ இணையத்தைக் கலக்கி வருகிறது. அந்த வீடியோவில், பேஷன் ஷோவில் உலக அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் ஒவ்வொருவராக சிரிப்பூட்டும் வித்தியாசமான கெட்டப்பில் நடந்து வருகின்றனர்.
கைதி உடையில் டொனால்டு டிரம்ப், சக்கர நாற்காலியில் ஜோ பைடன், ஒபாமா, மார்க் ஸுகர்பெர்க், நரேந்திர மோடி, கமலா ஹார்ஸ், ஸேனா அதிபர் ஜி ஜிங்பிங், வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன், ரஷிய அதிபர் புதின், ஐரோப்பிய அரசியல் தலைவர்கள், போப் ஆண்டவர் என அனைவரும் வரிசையாக நடந்து வருகின்றனர்.
இறுதியாக சமீபத்தில் நடந்த மைக்ரோசாப் குளறுபடியை கிண்டலடிக்கும் வகையில், கையில் டெத் ஆப் புளூ ஸ்க்ரீன் கணினியுடன் மைக்ரோசாப் நிறுவனர் பில் கேட்ஸ் நடந்து வருவதும் வீடியோவில் இடம்பெற்றுள்ளது. எலான் மஸ்க்கும் இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளார். ஏஐ தொழிநுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த வீடியோ தற்போது இணையத்தில் பேசுபொருளாக மாறி வருகிறது.
- ஜோ பைடனின் தடுமாற்றம் குறித்து கேள்வி எழ முக்கிய காரணமாக அமைந்தது டொனால்டு டிரம்புடன் அவர் பங்கேற்ற விவாத நிகழ்ச்சிதான்.
- அவரை நான் சிரிக்கும் கமலா என்றே அழைப்பேன், அவர் சிரிப்பதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?
அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடக்க உள்ள நிலையில் ஜனநாயகக் கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடனும் குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனல்டு டிரம்பும் வேட்பளார்களாக அறிவிக்கப்பட்டிருந்தனர்.
ஆனால் அதிபர் ஜோ பைடன் வயது மூப்பு காரணமாக பேச்சிலும் செயல்களிலும் தடுமாற்றத்துடன் இருந்து வருவது அவர் மீண்டும் வேட்பாளராக போட்டியிட தகுதியானவர்தானா என்ற சந்தேகத்தை அவரது சொந்த கட்சிக்குள்ளேயே எழச் செய்தது.
இதற்கிடையில் டிரம்ப் மீது நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் குடியரசுக் கட்சியின் வாக்கு வங்கியை அதிகரிக்க செய்துள்ளதாக பார்க்கமுடிகிறது, எனவே பைடன் அதிபராக போட்டியிட்டால் நிச்சயம் ஜெயிக்க முடியாது என்று ஜநாயனாய கட்சியினர் பயந்தனர்.
இந்த நிலையில்தான் அதிபர் ஜோ பைடன் தேர்தலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். மேலும் இந்திய- ஆபிரிக்க வம்சாவளியைச் சேர்ந்த துணை அதிபர் கமலா ஹாரிஸை அதிபர் வேட்பாளராக அவர் முன்மொழிந்துள்ளார். கமலா ஹாரிஸுக்கு ஜனநாய கட்சியினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

முன்னதாக ஜோ பைடனின் தடுமாற்றம் குறித்து கேள்வி எழ முக்கிய காரணமாக அமைந்தது டொனால்டு டிரம்புடன் அவர் பங்கேற்ற விவாத நிகழ்ச்சிதான். அதை சுட்டிக்காட்டி டிரம்பும் பைடனை கடுமையாக விமர்சித்து வந்த நிலையில் தற்போது பைடன் தேர்தலில் இருந்து விலகியது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது, ஊழல் நிறைந்த தீவிரவாத ஜனநாயகவாதிகள் அவரை தூக்கியெறிந்துள்ளனர். நிலையற்ற ஜோ பைடன் அமரிக்க வரலாற்றிலேயே இது வரை இருந்த மிகவும் மோசமான அதிபர். தெற்கு எல்லை விவகாரத்தில் இருந்து , தேச பாதுகாப்பு, சர்வதேச நிலைப்பாடுவரை நமது நாட்டை அழிக்க சாத்தியமான எல்லா வழிகளிலும் அவர் செயல்பட்டுள்ளார்.
பைடனை சுற்றியுள்ளவர்கள் அவரது உடல் மற்றும் மன நிலை, நியாபகமறதி குறித்து அமெரிக்காவிடம் பொய் சொல்லிவந்துள்ளனர். இப்போது [பைடன் விலகியுள்ள நிலையில்] மீதமுள்ளவர்களும் அவரைப் போன்றவரே ஆவர் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் தற்போது ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக முன்மொழியப்பட்டுள்ள கமலா ஹாரிஸ் குறித்து டிரம்ப், அவரை நான் சிரிக்கும் கமலா என்றே அழைப்பேன், அவர் சிரிப்பதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? ஒருவரின் சிரிப்பை வைத்து நிறைய விஷயங்களை சொல்லிவிட முடியும். She is nuts. அவரை வெல்வது மிகவும் சுலபம் என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் ஜனநாயகக் காட்சியைச் சேர்ந்த அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, பைடன் தேர்தலில் இருந்து விலகியது குறித்து பேசுகையில், சண்டையில் இருந்து பைடன் எப்போதும் பின்வாங்க மாட்டார் என்று எனக்குத் தெரியும். ஆனால் தற்போதுள்ள அரசியல் சூழலை புரிந்துகொண்டு அவர் எடுத்துள்ள இந்த முடிவு அவரது வாழ்வில் எடுத்த மிகவும் கடினமான முடிவாக இருக்கும். அமரிக்காவுக்கு நன்மை பயக்காது என்றால் இந்த முடிவை அவர் எடுத்திருக்க மாட்டார் என எனக்குத் தெரியும் என்று தெரிவித்துள்ளார்.







