என் மலர்tooltip icon

    தென் ஆப்பிரிக்கா

    • படப்பிடிப்புக்கான ஏற்பாடுகளை படக்குழுவினர் செய்து கொண்டிருந்தனர்.
    • துப்பாக்கிகளுடன் 20 பேர் கொண்ட கும்பல் ஒன்று படப்பிடிப்பு தளத்துக்குள் புகுந்தது. துப்பாக்கி முனையில் நடிகர்கள், மாடல் அழகிகளை சிறைபிடித்தனர்.

    ஜோகன்ஸ்பர்க்:

    தென்ஆப்பிரிக்காவின் ஜோகன்ஸ்பர்க்குக்கு மேற்கே உள்ள சிறிய நகரான க்ருகர்ஸ்டோர்ப் பகுதியில் இசை வீடியோ படப்பிடிப்பு நடந்தது. இதில் மாடல் அழகிகள் கலந்து கொண்டனர்.

    படப்பிடிப்புக்கான ஏற்பாடுகளை படக்குழுவினர் செய்து கொண்டிருந்தனர். அப்போது துப்பாக்கிகளுடன் 20 பேர் கொண்ட கும்பல் ஒன்று படப்பிடிப்பு தளத்துக்குள் புகுந்தது. துப்பாக்கி முனையில் நடிகர்கள், மாடல் அழகிகளை சிறைபிடித்தனர்.

    பின்னர் 8 மாடல் அழகிகளை அக்கும்பல் கற்பழித்தது. இதில் ஒரு பெண் 10 பேராலும், மற்றொரு பெண் 8 பேராலும் கற்பழிக்கப்பட்டனர்.

    படப்பிடிப்பில் இருந்த ஆண்களை நிர்வாணமாக்கிய அக்கும்பல் அவர்களிடம் இருந்த பொருட்களை கொள்ளையடித்து கொண்டு தப்பி சென்றனர்.

    இச்சம்பவம் தொடர்பாக போலீசார் இதுவரை 3 பேரை கைது செய்துள்ளனர். மற்றவர்களை தேடி வருகிறார்கள்.

    இதுகுறித்து காவல்துறை மந்திரி பெக்கி செலே கூறும்போது, "கற்பழிப்பில் ஈடுபட்டவர்கள் வெளிநாட்டினர் போல் தெரிகிறது. அவர்கள் நாட்டில் சட்ட விரோதமாக சுரங்கங்களை தோண்டும் கும்பலை சேர்ந்தவர்கள் 20 சந்தேக நபர்களில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்" என்றார். தென்ஆப்பிரிக்காவில் ஒவ்வொரு 12 நிமிடங்களுக்கும் ஒரு குற்றச்செயல் நடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • 11 பேர் காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
    • துப்பாக்கிச் சூட்டில் 14 பேர் கொல்லப்பட்டதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

    தென்னாப்பிரிக்கா தலைநகரின் தென்கிழக்கில் ஜோகன்னஸ்பர்க்கின் மிகப்பெரிய நகரமான சோவெட்டோவின் ஆர்லாண்டோ மாவட்டத்தில் பார் உள்ளது. இந்த மதுக்கடையில் நுழைந்த மர்ம நபர்கள் திடீரென துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டனர். இதில் 14 பேர் கொல்லப்பட்டதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

    போலீஸ் அதிகாரி எலியாஸ் மாவேலா கூறியதாவது:-

    நேற்று நள்ளிரவு 12.30 மணியளவில் அழைப்பு வந்தது. அப்போது, பாரில் துப்பாக்கிச் சூடு நடந்ததாக தகவல் கிடைத்தது. நாங்கள் சம்பவ இடத்திற்கு வந்தபோது, 12 பேர் இறந்தது உறுதி செய்யப்பட்டது. மேலும், 11 பேர் காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில் மேலும் இருவர் உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.

    சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தப்பி ஓடிய கைதிகளில் 300 பேரை போலீசார் பிடித்தனர். மற்றவர்களை தேடி வருகிறார்கள்.
    • ஜெயிலில் உள்ள சக கூட்டாளிகளை மீட்க தாக்குதலை நடத்தி உள்ளனர்.

    நைஜீரியா நாட்டு தலைநகர் அபுஜாவில் உள்ள ஜெயில் மீது பயங்கரவாதிகள் வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மீது துப்பாக்கி சூடு நடத்தினர்.

    பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஜெயிலின் சுவர் இடிந்து விழுந்தது. இதையடுத்து 600-க்கும் மேற்பட்ட கைதிகள் ஜெயிலில் இருந்து தப்பி ஓடினர்.

    இந்த தாக்குதலில் ஜெயில் காவலர் ஒருவர் பலியானார். ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்த போகோ ஹராம் அமைப்பை சேர்ந்தவர்களை விடுவிக்க தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

    இந்தநிலையில் தப்பி ஓடிய கைதிகளில் 300 பேரை போலீசார் பிடித்தனர். மற்றவர்களை தேடி வருகிறார்கள்.

    இதுகுறித்து உள்துறை அமைச்சகத்தின் செயலாளர் ஷூஜப் பெல்கோர் கூறும்போது, "அபுஜாவின் குஜேவில் உள்ள சிறைச்சாலை மீது சக்திவாய்ந்த வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர்.

    அவர்கள் போகோஹராம் அமைப்பை சேர்ந்தவர்கள். ஜெயிலில் உள்ள சக கூட்டாளிகளை மீட்க தாக்குதலை நடத்தி உள்ளனர்' என்றார்.

    • தென் ஆப்பிரிக்காவின் இரவு விடுதியில் 20 பேர் இன்று உயிரிழந்த நிலையில் கிடந்தனர்.
    • 20 பேரின் மர்ம மரணம் பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஜோகன்னஸ்பர்க்:

    தென் ஆப்பிரிக்காவின் தெற்கு நகரான கிழக்கு லண்டனில் நைட் கிளப் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் நிறைய பேர் நேற்று கூடியிருந்தனர்.

    இந்நிலையில், இரவு விடுதியில் இன்று காலை சுமார் 20 பேர் உயிரிழந்த நிலையில் கிடந்தனர். அவர்களது மர்ம மரணம் பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விடுதியில் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டனரா அல்லது வேறு ஏதேனும் விவகாரமா என்பது பற்றிய விவரங்கள் வெளியாகவில்லை.

    ×