என் மலர்
பிரான்ஸ்
- பிரதிநிதிகள் மற்றும் சிவில் சமூக உறுப்பினர்கள் கலந்து கொள்கிறார்கள்.
- சர்வதேச வெப்ப அணுசக்தி பரிசோதனை உலையையும் பார்வையிடுகிறார்.
புதுடெல்லி:
அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் கடந்த மாதம் 20-ந்தேதி பதவி ஏற்றார். இதையடுத்து பிரதமர் நரேந்திரமோடி, டிரம்ப்பை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார். அப்போது இருவரும் சிறிது நேரம் பேசினார்கள்.
இதுகுறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் நிருபர்களி டம் கூறுகையில், 'அமெரிக்கா, இந்தியா இடையே நல்லுறவு நீடிக்கிறது. பிப்ரவரி மாதம் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் மாளிகைக்கு வருவார்' என்று தெரிவித்தார்.
இந்த நிலையில் பிரதமர் மோடி இன்று முதல் வருகிற 14-ந்தேதி வரை பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவில் அரசுமுறை பயணம் மேற்கொள்கிறார்.
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் இன்று முதல் வருகிற 12-ந்தேதி வரை செயற்கை நுண்ணறிவு மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். இதற்காக பிரதமர் மோடி இன்று பிற்பகலில் டெல்லியில் இருந்து புறப்பட்டு பிரான்ஸ் செல்கிறார்.
இன்று இரவு பிரான்ஸ் சென்றடையும் பிரதமர் மோடி, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் அளிக்கும் விருந்தில் கலந்து கொள்கிறார். பின்னர், நாளை (11-ந்தேதி) செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் குறித்த உச்சி மாநாட்டுக்கு அதிபர் மேக்ரானுடன் இணைந்து தலைமை தாங்குகிறார்.
இந்த உச்சி மாநாட்டில் அரசுத்துறை அதிகாரிகள், சிறு மற்றும் பெரு நிறுவ னங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள், அரசு சாரா நிறுவனங்களின் அதி காரிகள், சர்வதேச அமைப்புகளின் தலைவர்கள், கல்வியாளர்களின் பிரதிநிதிகள் மற்றும் சிவில் சமூக உறுப்பினர்கள் கலந்து கொள்கிறார்கள்.
நாளை பிற்பகலில் பிரதமர் மோடி, பிரான்ஸ் அதிபர் மேக்ரான் தலைமையில், பல்வேறு நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளுடனான வட்டமேசை கூட்டம் நடைபெறுகிறது. அதில் நிறுவன அதிகாரிகளுடன் பிரதமர் மோடி, பிரான்ஸ் அதிபர் மேக்ரான் ஆகிய இருவரும் ஆலோசனை நடத்துகிறார்கள்.
பின்னர் பிரதமர் மோடியும், பிரான்ஸ் அதிபர் மேக்ரானும் அங்குள்ள போர் நினைவிடத்துக்கு செல்கிறார்கள். அங்கு முதலாம் உலகப்போரில் உயிர்த்தியாகம் செய்த இந்திய வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறார்கள்.
பின்னர் சர்வதேச வெப்ப அணுசக்தி பரிசோதனை உலை அமைந்துள்ள கடாரச்சி பகுதியையும் பிரதமர் மோடி பார்வையிட உள்ளார். இந்தியாவும் அதில் பங்குதாரராக உள்ளது.
அதன்பிறகு பிரான்ஸ் நாட்டின் மார்சேய் நகருக்கு செல்லும் பிரதமர் மோடி, அங்கு இந்தியாவின் துணை தூதரகத்தை திறந்து வைக்கிறார். அதன் பின்னர், இருதரப்பு உறவுகள் குறித்து பிரான்ஸ் அதிபருடன், பிரதமர் மோடி பேச்சு வார்த்தை நடத்துகிறார்.
பின்னர் பிரான்சில் இருந்து புறப்பட்டு பிரதமர் மோடி வருகிற 12-ந்தேதி அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் செல்கிறார். வருகிற 13-ந்தேதி அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பை, பிரதமர் மோடி சந்தித்து பேசுகிறார்.
இந்த சந்திப்பு சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அன்று இரவு டிரம்ப் சார்பில் பிரதமர் மோடிக்கு சிறப்பு இரவு விருந்து அளிக்கப்பட உள்ளது. வருகிற 14-ந்தேதி அமெரிக்க தொழில் அதிபர்கள் மற்றும் இந்திய வம்சாவளியினரை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேச உள்ளார். அதன் பிறகு அவர் நாடு திரும்புகிறார்.
- ஹேக் செய்யப்பட்டு இருக்கலாம் என்று நினைத்தனர்.
- இவை என்னை சிரிக்க செய்தன.
பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி போலி வீடியோக்களை உருவாக்கி வருகிறார். மேலும் அவற்றை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார். அவ்வாறு அவர் உருவாக்கிய போலி வீடியோ ஒன்றில் 1980-க்களில் பிரபலமாக "வோயேஜ் வோயேஜ்" பாடலுக்கு அவரே நடனமாடும் காட்சி இடம்பெற்றுள்ளது.
இந்த வீடியோவை உருவாக்கியவர்களை பாராட்டிய மேக்ரான் "வீடியோக்கள் அருமையாக உருவாக்கப்பட்டு இருக்கின்றன. இவை மிக அழகாக உள்ளன. இவை என்னை சிரிக்க செய்தன," என்று குறிப்பிட்டுள்ளார்.
பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் ஏ.ஐ. உச்சிமாநாட்டை ஊக்குவிக்கும் வகையில், மேக்ரான் இந்த வீடியோக்களை உருவாக்கி இருக்கிறார். இந்த மாநாட்டில் இந்திய பிரதமர் மோடி உள்பட பல்வேறு உலக தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். இந்த மாநாட்டிற்கு இந்தியாவும் இணைந்து தலைமை தாங்குகிறது.
இது தொடர்பாக அதிபர் மேக்ரானின் இன்ஸ்டாகிராம் பதிவு அதிக பார்வையாளர்களை பெற்றதோடு, அதிகளவு பகிரப்பட்டும் வருகிறது. எனினும், சிலர் அதிபர் மேக்ரானின் சமூக வலைதள கணக்கு ஹேக் செய்யப்பட்டு இருக்கலாம் என்று நினைத்தனர்.
- உலகம் முழுவதும் நாளை கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.
- ஈபிள் டவர் பகுதியில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
பாரிஸ்:
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் பிரசித்தி பெற்ற ஈபிள் டவர் உள்ளது. கஸ்டவ் ஈபிள் என்பவர் கட்டமைத்ததால் அவரது பெயரிலேயே இந்தக் கோபுரம் அழைக்கப்பட்டு வருகிறது.
கிறிஸ்துமஸ் தினம் நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் ஈபிள் டவர் பகுதியில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர்.
இந்நிலையில், ஈபிள் டவரில் உள்ள லிப்டில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. முதல் தளத்திற்கும், இரண்டாவது தளத்திற்கும் இடையே லிப்ட்டில் தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து அங்கு விரைந்து வந்த தீயணைப்புப் படையினர் தீயை அணைத்தனர்.
தீவிபத்து காரணமாக ஈபிள் டவர் பகுதியில் குவிந்திருந்த 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் உடனடியாக அங்கிருந்து பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்தப்பட்டனர். மேலும், அப்பகுதியில் சுற்றுலா பயணிகளுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டது.
ஈபிள் டவரில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் அங்கு குவிந்த சுற்றுலாப் பயணிகள் கவலை அடைந்துள்ளனர்.
- உணவு மற்றும் பானங்களில் நொறுக்கப்பட்ட தூக்க மாத்திரைகளையும், போதைப்பொருள்களையும் கலந்து கொடுத்தார்
- தீயணைப்பு வீரர்கள், லாரி ஓட்டுநர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் DJக்கள் அந்த 51 பேரில் அடங்குவர்.
பிரான்சில் தெற்குப் பகுதியில் அமைதியான நகரங்கள் மற்றும் இயற்கை எழில் கொஞ்சும் கிராமப்புறங்களில் ஒன்று மசான் கிராமம்.
ஆனால் இங்கு கண்டதை 10 ஆண்டுகளாக ஒரு பயங்கர ரகசியமும் ஒளிந்திருந்தது. பிரான்ஸ் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய ஒரு வழக்கு அது. டொமினிக் பெலிகாட் என்ற கணவன் கடந்த 10 ஆண்டுகால காலத்தில் சுமார் 51 ஆண்களை வைத்து தனது மனைவி கிசெல் -லை பாலியல் பலாத்காரம் செய்ய வைத்த வழக்கு அது.
தற்போது 72 வயதாகும் டொமினிக் பெலிகாட் 72 வயதாகும் தனது முன்னாள் மனைவி கிசெல் -க்கு ஏறக்குறைய 2011 முதல் 2020 வரை 10 ஆண்டுகளாக, அவர் அறியாமலேயே டொமினிக் உணவு மற்றும் பானங்களில் நொறுக்கப்பட்ட தூக்க மாத்திரைகளையும், போதைப்பொருள்களையும் கொடுத்து சுயநினைவை இழக்கச் செய்து இந்த பாலியல் சித்திரவதைகளில் ஈடுபடுத்தியுள்ளார்.

கிசெல் பெலிகாட்
போதைப்பொருள் கடுமையான நினைவாற்றல் இழப்பை ஏற்படுத்தியதால் தனக்கு நேர்வது இன்னதென அறியாமலேயே கிசெல் இருந்துள்ளார்.
இப்போது தடைசெய்யப்பட்ட வலைத்தளமான Coco.fr மூலம் கிராமத்தின் அருகில் உள்ள பகுதிகளில் உள்ள சுமார் 51 ஆண்களை அலுத்துவந்து இந்த சமயங்களில் கிசெல் - ஐ பாலியல் பலாத்காரம் செய்ய வைத்துள்ளார்.
2020 ஆம் ஆண்டில் டொமினிக் பெண்களின் பாவாடையின் கீழ் புகைப்படம் எடுப்பதை சூப்பர் மார்க்கெட் பாதுகாவலர் பிடித்ததை அடுத்து கைது செய்யப்பட்டார்.

அப்போது அவரது செல்போன் உள்ளிட்ட டிஜிட்டல் சாதனங்களை போலீசார் ஆராய்ந்தபோது கிசெல்-க்கு நேர்ந்த கொடுமை வெளிச்சத்துக்கு வந்தது.
கிசெல் மீதான சித்திரவதை மற்றும் பலாத்கார வீடியோக்களை போலீசார் கண்டுபிடித்தனர். டொமினிக் படம்பிடித்த இந்தப் பதிவுகள், விசாரணையின் மையச் சான்றாக மாறியது.
இதனையடுத்து கிச்செல் வழக்கு பிரான்ஸ் சட்ட வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த வழக்காக மாறியது. போதைப்பொருட்கள் தனது வாழ்க்கையில் துண்டு துண்டான நினைவுகளையும் 10 வருட கால வெற்றிடத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக கிசெல் உண்மையை அறிந்துகொண்ட கிசெல் கூறுகிறார்.
டொமினிக் - கிசெல் தம்பதிக்கு 3 குழந்தைகளும் உள்ளனர். வழக்குக்கு மத்தியில் இந்த வருடம் டொமினிக்கை கிசெல் விவாகரத்து செய்தார்.

கிச்செல் - ஐ பலாத்காரம் செய்தவர்களில் 27 முதல் 74 வயது ஆண்கள் அடங்குவர். அருகிலுள்ள கிராமங்கள் மற்றும் நகரங்களில் இருந்து வந்த ஆண்கள், தீயணைப்பு வீரர்கள், லாரி ஓட்டுநர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் DJக்கள் அந்த 51 பேரில் அடங்குவர்.
அவர்கள் தங்கள் மீதான குற்றச்சாட்டை மறுத்தபோதிலும், வீடியோ ஆதாரங்கள் மூலம் அவர்களில் 50 பேரின் குற்றம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமை வழங்கப்பட்ட இறுதித் தீர்ப்பில் 3 ஆண்டுகள் முதல் 12 ஆண்டுகள் வரை அவர்களுக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

முக்கிய குற்றவாளி டொமினிக் பெலிகாட் 20 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுள்ளார். மற்றொரு பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றதற்காகவும், தனது சொந்த மகள் மற்றும் மருமகள்களின் அந்தரங்கமாக படங்களை எடுத்ததற்காகவும் சேர்த்து அவருக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

- மயோட்டே தீவை சிடோ புயல் கடுமையாக தாக்கியது.
- பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
மமுத்சொ:
இந்திய பெருங்கடலில் அமைந்துள்ள தீவு மயோட்டே. இந்தத் தீவு பிரான்சின் கட்டுப்பாட்டில் உள்ளது. சுமார் 3 லட்சத்து 20 ஆயிரம் பேரை மக்கள்தொகையாகக் கொண்டுள்ள மயோட்டே தீவு மடகாஸ்கர் நாட்டின் அருகே அமைந்துள்ளது.
இந்நிலையில், மயோட்டே தீவை நேற்று சிண்டோ என்ற புயல் தாக்கியது. கனமழையுடன் வீசிய இந்தப் புயலால் பல வீடுகள் சேதமடைந்தன.
மின்கம்பங்கள், சாலைகள், கட்டிடங்கள் உள்பட பல்வேறு உள்கட்டமைப்புகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்தப் புயலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர் என்றும், 200-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர் என்றும் முதல் கட்ட தகவல் வெளியானது.
புயல் தாக்கிய மயோட்டே தீவிற்கு தேவையான நிவாரண உதவிகளை பிரான்ஸ் அரசு வேகப்படுத்தியுள்ளது. மீட்புப்பணியில் ராணுவம் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
- நாட்டர்டாம் தேவாலயத்தில் கடந்த 2019-ம் ஆண்டு தீ விபத்து ஏற்பட்டது.
- இதில் அந்த தேவாலயம் கடுமையாக சேதம் அடைந்தது.
பாரிஸ்:
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள நாட்டர்டாம் தேவாலயத்தில் கடந்த 2019-ம் ஆண்டு தீ விபத்து ஏற்பட்டது. இதில் அந்த தேவாலயம் கடுமையாக சேதம் அடைந்தது.
இதையடுத்து, பிரான்ஸ் அதிபரான இம்மானுவல் மேக்ரோன் தேவாலயத்தை 5 ஆண்டுகளுக்குள் புனரமைப்பு செய்வதாக உறுதி அளித்திருந்தார்.
அதன்படி, சுமார் 750 மில்லியன் டாலர்கள் செலவிடப்பட்டு நாட்டர்டாம் தேவாலயம் புனரமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பாரிசின் புகழ்பெற்ற இடங்களில் ஒன்றான நாட்டர்டாம் தேவாலயம் 5 ஆண்டுக்குப் பிறகு பொதுமக்களின் வழிபாடுகளுக்காக இன்று மீண்டும் திறக்கப்பட்டது.
இந்த தேவாலய திறப்பு விழாவில் அதிபர் இம்மானுவல் மேக்ரான், அமெரிக்க ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப், அதிபர் ஜோ பைடனின் மனைவி ஜில் பைடன், இங்கிலாந்து இளவரசர் வில்லியம் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உள்ளிட்ட உலகத் தலைவர்கள் பங்கேற்றனர்.
ஒரு சாத்தியமற்ற மறுசீரமைப்பை பிரான்ஸ் சாத்தியப்படுத்தி உள்ளது என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
- பிரான்ஸ் பிரதமர் பார்னியர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி
- அதிபர் இமானுவேல் மேக்ரான் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் போர்க்கொடி
பிரான்ஸ் பிரதமர் பார்னியர் மீது நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இந்த தீர்மானத்தில் மொத்தமுள்ள 577 உறுப்பினர்களில் 331 பேர் பார்னியர் அரசுக்கு எதிராக வாக்களித்தனர். நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றதால் பிரான்ஸ் அரசு கவிந்தது.
3 மாதங்களுக்கு முன்பு பிரதமராக பதவியேற்ற பார்னியேர் இதனை தொடர்ந்து தமது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து அதிபர் இமானுவேல் மேக்ரானும் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
சமூகப் பாதுகாப்பு நிதி மசோதாவை சிறப்பு அதிகாரம் மூலம் அதிபர் மேக்ரான் நிறைவேற்ற முயன்றதால் அரசு கவிழ்க்கப்பட்டது.
பிரான்ஸ் வரலாற்றில் கடந்த 60 ஆண்டுகளில் நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் பிரான்ஸ் அரசாங்கம் கவிழ்க்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.
- சிறுமிகள் தற்கொலைக்கு டிக்-டாக் செயலி காரணமாக இருந்ததாகவும், 4 பேர் தற்கொலைக்கு முயன்றதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
- இதுதொடர்பான வழக்கு விசாரணை பாரீஸ் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.
பாரீஸ்:
பிரபல சமூகவலைதள செயலியான 'டிக்-டாக்' தனியுரிமையை மீறுவதாக கூறி பல நாடுகள் அதற்கு தடை விதித்துள்ளன. இதற்கிடையே பிரான்சில் இரு சிறுமிகள் தற்கொலைக்கு டிக்-டாக் செயலி காரணமாக இருந்ததாகவும், 4 பேர் தற்கொலைக்கு முயன்றதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதனையடுத்து குழந்தைகளிடையே மன அழுத்தம், தற்கொலை போன்றவற்றை 'டிக்-டாக்' செயலி தூண்டுவதாக கூறி 'டிக்-டாக்' செயலிக்கு எதிராக 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இதுதொடர்பான வழக்கு விசாரணை பாரீஸ் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. ஐரோப்பிய நாடுகளில் 'டிக்-டாக்' செயலிக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்படுவது இதுவே முதல்முறை ஆகும். இதனால் 'டிக்-டாக்' செயலி புதிய சிக்கல்களை எதிர்கொள்கிறது.
- பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் பாரீசில் நடந்து வருகிறது.
- இதில் நம்பர் 3 வீரர் ஸ்வரேவ் சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.
பாரீஸ்:
பல முன்னணி வீரர்கள் பங்கேற்றுள்ள பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டங்கள் நடைபெற்றது.
இந்நிலையில், இன்று நடந்த இறுதிப்போட்டியில் நம்பர் 3 வீரரும் ஜெர்மனியைச் சேர்ந்த அலெக்சாண்டர் ஸ்வரேவ், பிரான்சின் யூகோ ஹம்பர்ட் உடன் மோதினார்.
இதில் ஸ்வரேவ் 6-2, 6-2 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.
- பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் பாரீசில் நடைபெற்று வருகிறது.
- இதில் பிரான்ஸ் வீரர் யூகோ ஹம்ர்பர்ட் இறுதிக்கு முன்னேறினார்.
பாரீஸ்:
பல முன்னணி வீரர்கள் பங்கேற்றுள்ள பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், நேற்று நடந்த அரையிறுதி சுற்றில் பிரான்சின் யூகோ ஹம்பர்ட், ரஷிய வீரர் கரன் கச்சனாவ் உடன் மோதினார்.
இதில் ஹம்பர்ட் 6- 7 (6-8), 6-4, 6-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
இன்று இரவு நடைபெறும் இறுதிப்போட்டியில் ஹம்ப்ர்ட், ஸ்வரேவுடன் மோதுகிறார்.
- பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் பாரீசில் நடந்து வருகிறது.
- இதில் நம்பர் 3 வீரர் ஸ்வரேவ் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
பாரீஸ்:
பல முன்னணி வீரர்கள் பங்கேற்றுள்ள பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இன்று நடந்த முதல் அரையிறுதிச் சுற்றில் நம்பர் 3 வீரரும் ஜெர்மனியைச் சேர்ந்த அலெக்சாண்டர் ஸ்வரேவ், டென்மார்க்கின் ஹோல்ஜர் ரூனே உடன் மோதினார்.
இதில் ஸ்வரேவ் 6-3, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
- பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் பாரீசில் நடைபெற்று வருகிறது.
- இதில் நம்பர் 3 வீரர் ஸ்வரேவ் அரையிறுதிக்கு முன்னேறினார்.
பாரீஸ்:
பல முன்னணி வீரர்கள் பங்கேற்றுள்ள பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், நேற்று நடந்த காலிறுதி சுற்றில் நம்பர் 3 வீரரும் ஜெர்மனியைச் சேர்ந்த அலெக்சாண்டர் ஸ்வரேவ், கிரீஸ் வீரர் சிட்சிபாசுடன் மோதினார்.
இதில் ஸ்வரேவ் 7-5, 6-4 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் ரஷிய வீரர் கரன் கச்சனாவ், பல்கேரியாவின் கிரிகோர் டிமித்ரோவை 6-2, 6-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.






