என் மலர்tooltip icon

    துபாய்

    • ஆசிய கோப்பை தொடரில் அதிக விக்கெட் எடுத்த இந்தியர் என்ற சாதனை படைத்தார்.
    • குல்தீப் யாதவ் நடப்பு தொடரில் 10 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார்.

    துபாய்:

    ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில் வங்கதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய வீரர் குல்தீப் யாதவ் அபாரமாக பந்துவீசி மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். இதன்மூலம் ஆசிய கோப்பை வரலாற்றில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் குல்தீப் யாதவ் இரண்டாவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறார்.

    ஆசிய கோப்பையில் சிறப்பாக பந்துவீசி வரும் குல்தீப் யாதவ் நடப்பு தொடரில் மட்டும் 10 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார்.

    இந்நிலையில், ஆசிய கோப்பை தொடரில் அதிக விக்கெட் வீழ்த்திய பவுலர்கள் பட்டியலில் முத்தையா முரளிதரனைப் பின்னுக்கு தள்ளி குல்தீப் யாதவ் 2வது இடத்திற்கு முன்னேறி இருக்கிறார்.

    மேலும், ஆசிய கோப்பை தொடரில் அதிக விக்கெட் எடுத்த இந்தியர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.

    இதுவரை குல்தீப் யாதவ் மொத்தம் 31 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். இந்தப் பட்டியலில் 33 விக்கெட்களுடன் மலிங்கா முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • டாஸ் வென்ற வங்கதேசம் பவுலிங் தேர்வு செய்துள்ளது.
    • அதன்படி முதலில் ஆடிய இந்தியா 168 ரன்களை எடுத்தது.

    துபாய்:

    17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (டி20) ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது.

    லீக் சுற்று முடிவில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் ஆகிய அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றன.

    இந்நிலையில், துபாயில் நடைபெறும் சூப்பர் 4 சுற்றுக்கான போட்டியில் இந்தியா, வங்கதேசம் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற வங்கதேசம் அணி பவுலிங் தேர்வு செய்தள்ளது.

    அதன்படி, இந்திய அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக அபிஷேக் சர்மா, சுப்மன் கில் இறங்கினர்.

    முதலில் நிதானமாக ஆடிய இந்த ஜோடி அடுத்து அதிரடியில் இறங்கியது. பவர் பிளே முடிவில் விக்கெட் இழப்பின்றி 72 ரன்கள் குவித்தது.

    முதல் விக்கெட்டுக்கு 77 ரன்கள் சேர்த்த நிலையில் சுப்மன் கில் 29 ரன்னில் அவுட்டானார். சிறப்பாக ஆடிய அபிஷேக் சர்மா அரை சதம் கடந்தார். அவர் 37 பந்தில் 5 சிக்சர், 6 பவுண்டரி உள்பட் 75 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

    ஷிவம் துபே 2 ரன்னும், சூர்யகுமார் யாதவ் 5 ரன்னும், திலக் வர்மா 5 ரன்னும் எடுத்து வெளியேறினர்.

    கடைசி கட்டத்தில் பொறுப்புடன் ஆடிய பாண்ட்யா 38 ரன்னும், அக்சர் படேல் 10 ரன்னும் எடுத்தனர்.

    இறுதியில், இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்துள்ளது.

    இதையடுத்து, 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேசம் களமிறங்குகிறது.

    • இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் ஆகிய அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றன.
    • இந்தியாவுக்கு எதிராக டாஸ் வென்ற வங்கதேசம் பவுலிங் தேர்வு செய்துள்ளது.

    துபாய்:

    17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (டி20) ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது.

    லீக் சுற்று முடிவில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் ஆகிய அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றன.

    இந்நிலையில், இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு ஆட்டம் தொடங்கும் நிலையில், 7.30 மணியளவில் டாஸ் போடப்பட்டது. இதில், இந்தியாவுக்கு எதிராக வங்கதேசம் அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்துள்ளது.

    இதையடுத்து, வங்கதேசம் அணி பந்து வீச, இந்திய அணி பேட் செய்ய களமிறங்குகிறது.

    • சமீபகாலமாக அமெரிக்க அணி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகிறது.
    • அமெரிக்க கிரிக்கெட் வாரியத்தை, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அதிரடியாக இடைநீக்கம் செய்தது.

    துபாய்:

    சமீபகாலமாக அமெரிக்க அணி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகிறது.

    இந்நிலையில், அமெரிக்க கிரிக்கெட் வாரியத்தை ஐ.சி.சி. அதிரடியாக இடைநீக்கம் செய்துள்ளது.

    அமெரிக்க கிரிக்கெட் சங்கம், ஐசிசி விதிமுறைகளைத் தொடர்ச்சியாக மீறியதும், முறையான நிர்வாக அமைப்பைச் செயல்படுத்தத் தவறியதுமே இந்த நடவடிக்கைக்கு முக்கியக் காரணம் என ஐசிசி தெரிவித்துள்ளது.

    2028-ம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ள நிலையில் ஐசிசியின் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

    இருப்பினும் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தியா, இலங்கையில் நடக்கும் டி20 உலகக் கோப்பை போட்டியில் அமெரிக்க பங்கேற்பதில் சிக்கல் இருக்காது.

    • பாகிஸ்தானுக்கு எதிராக டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு செய்தது.
    • அதன்படி, முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 171 ரன்கள் எடுத்தது.

    துபாய்:

    17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (டி20) ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது.

    சூப்பர் 4 சுற்றின் 2வது ஆட்டம் துபாயில் நடந்து வருகிறது. இதில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. அணியின் எண்ணிக்கை 21 ஆக இருந்தபோது பகர் சமான் 15 ரன்னில் அவுட்டானார்.

    2வது விக்கெட்டுக்கு இணைந்த பர்ஹான், சயீம் அயூப் ஜோடி அதிரடியாக ஆடியது. குறிப்பாக பர்ஹான் சிக்சர், பவுண்டரிகளை விளாசி அரை சதம் கடந்தார்.

    இந்த ஜோடி 72 ரன்கள் சேர்த்த நிலையில் சயீம் அயூப் 21 ரன்னில் அவுட்டானார். பொறுப்புடன் ஆடிய பர்ஹான் 58 ரன்னில் வெளியேறினார். முகமது நவாஸ் 21 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இறுதியில், பாகிஸ்தான் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்துள்ளது. இதையடுத்து, 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்குகிறது.

    • இவ்விரு அணிகளும் டி20 கிரிக்கெட்டில் இதுவரை 14 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளன.
    • 11-ல் இந்தியாவும், 3-ல் பாகிஸ்தானும் வென்று இருக்கின்றன.

    துபாய்:

    17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (டி20) ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது.

    லீக் சுற்று முடிவில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் ஆகிய அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றன. நேற்று நடந்த சூப்பர் 4 சுற்றின் முதல் போட்டியில் இலங்கையை வங்கதேசம் வீழ்த்தியது.

    இந்நிலையில், இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு ஆட்டம் தொடங்கும் நிலையில், 7.30 மணியளவில் டாஸ் போடப்பட்டது. இதில், பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்துள்ளது.

    இதையடுத்து, இந்திய அணி பந்து வீச, பாகிஸ்தான் பேட்டிங் செய்ய களம் இறங்க உள்ளது.

    • ஐ.சி.சி. டி20 போட்டிகளில் வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டது.
    • இதில் இந்தியாவின் வருண் சக்கரவர்த்தில் 3 இடங்கள் முன்னேறியுள்ளார்.

    துபாய்:

    டி20 போட்டிகளில் வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை ஐ.சி.சி வெளியிட்டுள்ளது.

    இதில் இந்திய பந்துவீச்சாளர் வருண் சக்கரவர்த்தி 3 இடங்கள் முன்னேறி முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார். சமீபத்தில் நடந்த டி20 போட்டிகளில் அவர் சிறப்பாக பந்து வீசினார்.

    பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்தியாவின் அபிஷேக் சர்மா முதலிடத்திலும், திலக் வர்மா 2 இடம் பின்தங்கி 4-வது இடத்திலும் சூர்யகுமார் யாதவ் 7வது இடத்திலும் உள்ளார்.

    ஆல் ரவுண்டர் தரவரிசையில் இந்தியாவின் ஹர்திக் பாண்ட்யா முதலிடத்தில் நீடிக்கிறார்.

    • ஸ்மிருதி மந்தனா 2வது இடத்தில் இருந்து முதல் இடத்திற்கு முன்னேறி உள்ளார்.
    • பந்துவீச்சில் இந்தியாவின் தீப்தி சர்மா 3 இடம் சரிந்து 7வது இடத்தில் உள்ளார்.

    துபாய்:

    மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டுக்கான வீராங்கனைகள் தரவரிசை பட்டியலை ஐ.சி.சி இன்று வெளியிட்டது.

    அதன்படி, பேட்டிங் தரவரிசையில் இந்தியாவின் முன்னணி வீராங்கனையான ஸ்மிருதி மந்தனா (735 புள்ளி) 2வது இடத்தில் இருந்து முதல் இடத்திற்கு முன்னேறி உள்ளார்.

    முதல் இடத்தில் இருந்த இங்கிலாந்தின் நாட் ஸ்கிவர் பிரண்ட் (731 புள்ளி) 2வது இடத்திற்கு சரிந்துள்ளார். 3-வது இடத்தில் தென் ஆப்பிரிக்காவின் லாரா வோல்வார்ட் (725 புள்ளி) உள்ளார்.

    ஹர்மன்பிரீத் கவுர் 12வது இடத்திலும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 15வது இடத்திலும் உள்ளனர்.

    பந்துவீச்சாளர்கள் பட்டியலில் முதல் 3 இடங்களில் மாற்றமில்லை. இங்கிலாந்தின் சோபி எக்லெஸ்டோன் (795 புள்ளி) முதல் இடத்திலும், ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே கார்ட்னெர் (725 புள்ளி) 2ம் இடத்திலும், மேஹன் ஸ்கட் (691 புள்ளி) 3ம் இடத்திலும் உள்ளனர்.

    இந்தியாவின் தீப்தி சர்மா 3 இடங்கள் சரிந்து 7வது இடத்தில் உள்ளார்.

    ஆல் ரவுண்டர்கள் பட்டியலில் இந்தியாவின் தீப்தி சர்மா தொடர்ந்து 4வது இடத்திலேயே நீடிக்கிறார்.

    • ஓமனுக்கு எதிரான போட்டியில் ஐக்கிய அரபு அமீரகம் வெற்றி பெற்றது.
    • ஐக்கிய அரபு அணி கேப்டன் முகமது வாசிம் 54 பந்தில் 69 ரன்கள் விளாசினார்.

    துபாய்:

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடந்த முதல் போட்டியில் ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த ஐக்கிய அரபு அமீரகம் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் குவித்தது. கேப்டன் முகமது வாசிம் 54 பந்தில் 69 ரன்கள் விளாசினார்.

    அடுத்து ஆடிய ஓமன் அணி 18.4 ஓவரில் 130 ரன்களில் ஆல் அவுட்டானது. இதனால் ஐக்கிய அரபு அமீரகம் அணி 42 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்நிலையில், இப்போட்டியில் அரை சதம் அடித்தன் மூலம், முகமது வாசிம் 83 டி20 போட்டிகளில், 37.71 சராசரி, 154.88 ஸ்ட்ரைக் ரேட்டில் 3,000 ரன்களைக் கடந்தார்.

    இதன்மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் குறைந்த பந்துகளில் அதிவிரைவாக மூவாயிரம் ரன்களை எட்டிய வீரர் என்ற வரலாற்று சாதனையை முகமது வாசிம் படைத்துள்ளார். மேலும், அவர் 1,947 பந்துகளில் 3,000 ரன்களைக் கடந்த ஜாஸ் பட்லர் சாதனையை முறியடித்துள்ளார்.

    • ஆப்கானிஸ்தான் அணியின் முதல் போட்டியில் நவீன் உல் ஹக் விளையாடவில்லை.
    • அவருக்கு பதிலாக அப்துல்லா அஹ்மத்ஷாய் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    துபாய்:

    ஆப்கானிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளரான நவீன் உல் ஹக் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து விலகி உள்ளார்.

    தோள்பட்டையில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக ஆப்கானிஸ்தான் அணியின் முதல் போட்டியில் இவர் விளையாடவில்லை.

    இந்நிலையில், தோள்பட்டை காயம் முழுமையாக குணமடையாத நிலையில் ஆசிய கோப்பை தொடரிலிருந்து நவீன் உல் ஹக் நீக்கப்பட்டுள்ளார் என ஆப்கானிஸ்தான் அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.

    அவருக்கு பதிலாக அப்துல்லா அஹ்மட்ஷாய் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் எனவும் அந்த அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    சமீபத்தில் ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு எதிரான டி20 தொடரில் தான் அப்துல்லா அஹ்மட்ஷாய் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இந்தியா 15.5 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 131 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
    • கேப்டன் சூர்யகுமார் யாதவ் பொறுப்புடன் ஆடி 47 ரன்கள் குவித்தார்.

    துபாய்:

    ஆசிய கோப்பை தொடரின் 6வது லீக் போட்டி துபாயில் நடைபெற்றது. இதில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 127 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    இந்தியா சார்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டும், பும்ரா, அக்சர் படேல் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    தொடர்ந்து ஆடிய இந்தியா 15.5 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 131 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. அபிஷேக் சர்மா 13 பந்தில் 31 ரன்கள் குவித்தார். திலக் வர்மா 31 ரன்னில் வெளியேறினார். கேப்டன் சூர்யகுமார் யாதவ் பொறுப்புடன் ஆடி 47 ரன்கள் குவித்தார்.

    இந்நிலையில், வெற்றிக்கு பிறகு கேப்டன் சூர்யகுமார் யாதவ் பேசியதாவது:

    இது ஓர் அற்புதமான உணர்வு. இந்தியாவிற்கு நான் கொடுக்கும் சரியான பிறந்தநாள் பரிசு இது.

    பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுடன் நாங்கள் நிற்கிறோம். எங்கள் ஒற்றுமையை வெளிப்படுத்துகிறோம்.

    இந்த வெற்றியை, எல்லையில் வீரத்தைக் காட்டிய நமது ராணுவப் படைகள் அனைவருக்கும் நான் சமர்ப்பிக்க விரும்புகிறேன். அவர்கள் தொடர்ந்து எங்களுக்கு உத்வேகம் அளிக்க வேண்டும் என தெரிவித்தார்.

    கேப்டன் சூர்யகுமாருக்கு நேற்று பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இந்தியா, பாகிஸ்தான் போட்டிக்கு பலத்த எதிர்ப்பு எழுந்தது.
    • டாசிலும், போட்டி முடிந்த பிறகும் வீரர்கள் கை கொடுக்காமல் புறக்கணித்தனர்.

    துபாய்:

    துபாயில் நடைபெற்ற ஆசிய கோப்பை லீக் ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 127 ரன்கள் மட்டுமே சேர்த்தது..

    எளிய வெற்றி இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி 16 ஓவர்களுக்குள் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 131 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    ஆட்டம் முடிந்ததும், பாகிஸ்தான் வீரர்களுடன் கை குலுக்குவதை இந்திய வீரர்கள் தவிர்த்தனர். பஹல்காமில் நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து இந்திய வீரர்கள் இதனைச் செய்ததாகக் கூறப்படுகிறது.

    இந்நிலையில், இரு அணி வீரர்களும் கை குலுக்காததால் No Handshake எனும் வார்த்தை டிரெண்டாகி வருகிறது.

    ×