என் மலர்tooltip icon

    சீனா

    • ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது.
    • இதில் ரஷியாவின் ரூப்லெவ் 2வது சுற்றில் தோல்வி அடைந்தார்.

    பீஜிங்:

    ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது.

    இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரரான ரஷியாவின் ஆண்ட்ரு ரூப்லெவ், ஜப்பானின் யோஷிஹிட்டோ நிஷியோகா உடன் மோதினார்.

    இதில் ரூப்லெவ் முதல் செட்டை 6-2 என கைப்பற்றினார். இதில் சுதாரித்துக் கொண்ட ஜப்பான் வீரர் அதிரடியாக ஆடி அடுத்த இரு செட்களை 6-1, 6-4 என வென்று 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றார். இதனால் ரூப்லெவ் தொடரில் இருந்து வெளியேறினார்.

    • ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது.
    • இதில் இத்தாலியின் ஜானிக் சின்னர் 2வது சுற்றில் வெற்றி பெற்றார்.

    பீஜிங்:

    ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது.

    இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்று ஆட்டம் ஒன்றில் நம்பர் 2 வீரரான இத்தாலியின் ஜானிக் சின்னர், ஜெர்மனியின் டேனியல் அல்டமையர் உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய சின்னர் 6-3, 6-3 என்ற நேர் செட்டில் வென்று 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

    • ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது.
    • இதில் செர்பியாவின் ஜோகோவிச் 2வது சுற்றில் வெற்றி பெற்றார்.

    பீஜிங்:

    ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது.

    இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் நம்பர் ஒன் வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், குரோஷியாவின் மரின் சிலிச் உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய ஜோகோவிச் 7-6 (7-2), 6-4 என்ற நேர் செட்டில் மரின் சிலிச்சை வீழ்த்தி 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

    • சீனா ஓபன் டென்னிஸ் தொடர் தலைநகர் பீஜிங்கில் நடந்து வருகிறது.
    • காலிறுதி சுற்றில் அமெரிக்காவின் கோகோ காப் வெற்றி பெற்றார்.

    பீஜிங்:

    சீனா ஓபன் டென்னிஸ் தொடர் சீன தலைநகர் பீஜிங்கில் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் அமெரிக்காவின் கோகோ காப், ஜெர்மனியின் எவா லிஸ் உடன் மோதினார்.

    இதில் அதிரடியாக ஆடிய கோகோ காப் 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    நாளை நடைபெறும் அரையிறுதியில் கோகோ காப், சக நாட்டு வீராங்கனை அனிசிமோவாவை எதிர்கொள்கிறார்.

    • சீனா ஓபன் டென்னிஸ் தொடர் சீன தலைநகர் பீஜிங்கில் நடந்து வருகிறது.
    • காலிறுதி சுற்றில் இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினி அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

    பீஜிங்:

    சீனா ஓபன் டென்னிஸ் தொடர் சீன தலைநகர் பீஜிங்கில் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் இத்தாலி வீராங்கனையான ஜாஸ்மின் பவுலினி, அமெரிக்காவின் அமெண்டா அனிசிமோவா உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய அனிசிமோவா 6-7(4-7), 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார். இதன்மூலம் இத்தாலி வீராங்கனையான ஜாஸ்மின் பவுலினி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

    • சீனா ஓபன் டென்னிஸ் தொடர் சீன தலைநகர் பீஜிங்கில் நடந்து வருகிறது.
    • நான்காவது சுற்றில் இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினி வெற்றி பெற்றார்.

    பீஜிங்:

    சீனா ஓபன் டென்னிஸ் தொடர் சீன தலைநகர் பீஜிங்கில் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவு நான்காவது சுற்றில் இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினி, செக் நாட்டின் மேரி பவுஸ்கோவா உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய ஜாஸ்மின் பவுலினி 6-2, 7-5 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா 6-3, 6-7 (4-7), 6-1 என்ற செட் கணக்கில் உக்ரைன் வீராங்கனையை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

    • சீனா ஓபன் டென்னிஸ் தொடர் சீன தலைநகர் பீஜிங்கில் நடந்து வருகிறது.
    • நான்காவது சுற்றில் போலந்தின் இகா ஸ்வியாடெக் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

    பீஜிங்:

    சீனா ஓபன் டென்னிஸ் தொடர் சீன தலைநகர் பீஜிங்கில் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவு நான்காவது சுற்றில் நம்பர் 1 வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக், பிரிட்டனின் எம்மா நவாரோ உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய எம்மா நவாரோ 6-4, 4-6, 6-0 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார். இதன்மூலம் நம்பர் 1 வீராங்கனையான இகா ஸ்வியாடெக் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

    • சீனா ஓபன் டென்னிஸ் தொடர் சீன தலைநகர் பீஜிங்கில் நடைபெற்றது.
    • இத்தாலி வீரர் ஜானிக் சின்னர், அமெரிக்காவின் லெர்னெர் தியான் உடன் மோதினார்.

    சீனா ஓபன் டென்னிஸ் தொடர் சீன தலைநகர் பீஜிங்கில் நடைபெற்றது.

    இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் இத்தாலி வீரர் ஜானிக் சின்னர், அமெரிக்காவின் லெர்னெர் தியான் உடன் மோதினார்.

    இதில் அதிரடியாக ஆடிய சின்னர் 6-2, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வென்று 2 ஆவது முறையாக சீனா ஓபன் கோப்பையை வென்றார்.

    • சீனா ஓபன் டென்னிஸ் தொடர் தலைநகர் பீஜிங்கில் நடைபெற்று வருகிறது.
    • இதில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ் அரையிறுதியில் காயத்தால் விலகினார்.

    பீஜிங்:

    சீனா ஓபன் டென்னிஸ் தொடர் சீன தலைநகர் பீஜிங்கில் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், அமெரிக்காவின் லீனர் டீன் உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய மெத்வதேவ் 7-5 என முதல் செட்டை கைப்பற்றினார். இதற்கு பதிலடியாக ஆடிய அமெரிக்க வீரர் லீனர் டீன் 7-5 என வென்றார்.

    வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டில் அமெரிக்க வீரர் 4-0 என முன்னிலை பெற்றிருந்தபோது, காயம் காரணமாக மெத்வதேவ் போட்டியில் இருந்து விலகினார். இதனால் அமெரிக்க வீரர் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    • சீனா ஓபன் டென்னிஸ் தொடர் சீன தலைநகர் பீஜிங்கில் நடைபெற்று வருகிறது.
    • இதில் அமெரிக்காவின் கோகோ காப் காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    பீஜிங்:

    சீனா ஓபன் டென்னிஸ் தொடர் சீன தலைநகர் பீஜிங்கில் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவில் அமெரிக்காவின் கோகோ காப், சுவிட்சர்லாந்தின் பெலிண்டா பென்கிக் உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய கோகோ காப் 4-6, 7-6 (7-4), 6-2 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    நாளை நடைபெற உள்ள காலிறுதியில் கோகோ காப், ஜெர்மனியின் எவா லிஸ் உடன் மோதுகிறார்.

    • சீனா ஓபன் டென்னிஸ் தொடர் சீன தலைநகர் பீஜிங்கில் நடைபெற்று வருகிறது.
    • இன்று நடந்த அரையிறுதியில் இத்தாலி வீரர் ஜானிக் சின்னர் வெற்றி பெற்றார்.

    பீஜிங்:

    சீனா ஓபன் டென்னிஸ் தொடர் சீன தலைநகர் பீஜிங்கில் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் இத்தாலி வீரர் ஜானிக் சின்னர், ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார் உடன் மோதினார்.

    இதில் அதிரடியாக ஆடிய சின்னர் 6-3, 4-6, 6-2 என்ற செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    • விஜய் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.
    • இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

    கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு சீனா இரங்கலைத் தெரிவித்துள்ளது.

    செப்டம்பர் 27 அன்று (சனிக்கிழமை) கரூரில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் உடைய பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

    இந்நிலையில் இன்று (திங்கட்கிழமை) அன்று பெய்ஜிங்கில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் குவோ ஜியாகுன் கரூர் கூட்டநெரிசல் சம்பவம் குறித்து பேசினார்.

    அவர் கூறியதாவது, "உயிரிழந்தவர்களுக்கு எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம், மேலும் அவர்களது குடும்பங்களுக்கும், காயமடைந்தவர்களுக்கும் எமது மனமார்ந்த ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறோம்" என்று தெரிவித்தார்.

    மேலும் இந்தியாவில் உள்ள சீனத் தூதரகமும் ஏற்கனவே தமது இரங்கலைத் தெரிவித்துள்ளதாகவும், உயிரிழந்தவர்களில் சீன நாட்டவர் யாரும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

    முன்னதாக, இந்தியாவுக்கான சீனத் தூதர் ஸூ ஃபெய்போங் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இரங்கலைத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. 

    ×