என் மலர்
டென்னிஸ்

சீனா ஓபன் டென்னிஸ்: காயத்தால் அரையிறுதியில் விலகிய மெத்வதேவ்
- சீனா ஓபன் டென்னிஸ் தொடர் தலைநகர் பீஜிங்கில் நடைபெற்று வருகிறது.
- இதில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ் அரையிறுதியில் காயத்தால் விலகினார்.
பீஜிங்:
சீனா ஓபன் டென்னிஸ் தொடர் சீன தலைநகர் பீஜிங்கில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், அமெரிக்காவின் லீனர் டீன் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய மெத்வதேவ் 7-5 என முதல் செட்டை கைப்பற்றினார். இதற்கு பதிலடியாக ஆடிய அமெரிக்க வீரர் லீனர் டீன் 7-5 என வென்றார்.
வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டில் அமெரிக்க வீரர் 4-0 என முன்னிலை பெற்றிருந்தபோது, காயம் காரணமாக மெத்வதேவ் போட்டியில் இருந்து விலகினார். இதனால் அமெரிக்க வீரர் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
Next Story






