என் மலர்tooltip icon

    பிரிட்டன்

    • இடுப்பில் ஏற்பட்ட காயம் காரணமாக நேற்றைய பயிற்சியில் விராட் கோலி பங்கேற்கவில்லை.
    • டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது.

    ஓவல்:

    ரோகித்சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளும் மோதிய 3 ஆட்டம் கொண்ட 20 ஓவர் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது.

    இத் அடுத்து இந்தியா-இங்கிலாந்து அணிகள் 3 ஆட்டம் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் இன்று முதல் நடைபெறுகிறது. முதல் ஒருநாள் போட்டி ஓவல் மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று மாலை 5.30 மணிக்கு தொடங்குகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான 2-வது போட்டி 14-ந் தேதியும், 3-வது போட்டி 17-ந் தேதியும் நடக்கிறது.

    இந்நிலையில் காயம் காரணமாக நேற்றைய பயிற்சியில் விராட் கோலி பங்கேற்கவில்லை. விராட்சி கோலிக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டதில் இடுப்பில் அவருக்கு காயம் இருப்பதாக சந்தேகிக்கப்படுவதாகவும், முதல் ஒருநாள் போட்டியில் அவர் விளையாட வாய்ப்பில்லை என்றும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.

    • முதலாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
    • 3 போட்டி கொண்ட தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

    இங்கிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20  தொடரில் பங்கேற்றுள்ளது. முதலாவது டி 20 போட்டியில் இந்திய அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த போட்டியில் அரைசதத்துடன், 4 விக்கெட்டும் வீழ்த்திய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்த ஹர்திக் பாண்ட்யா ஆட்டநாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.

    ரோகித் சர்மா தலைமையில் டி20 போட்டியில் இந்திய அணி தொடர்ச்சியாக 13-வது வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் டி20 போட்டியில் தொடர்ந்து அதிக வெற்றிகளை குவித்த கேப்டன் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

    இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பஸ்டன் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.

    முதல் போட்டியில் ஓய்வு அளிக்கப்பட்டு இருந்த விராட்கோலி, பும்ரா, ரவீந்திர ஜடேஜா, ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பண்ட் ஆகியோர் இன்றைய ஆட்டத்தில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை சோனி சிக்ஸ், சோனி டென் 3, 4 ஆகிய சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

    • விம்பிள்டன் இறுதிப் போட்டிக்கு ஆப்பிரிக்க நாட்டை சேர்ந்த வீராங்கனை முதல் முறையாக தகுதி.
    • இறுதிப் போட்டியில் விளையாட கஜகஸ்தான் நாட்டு வீராங்கனை தகுதி பெற்றார்.

    லண்டன்:

    லண்டனில் நடைபெற்று வரும் விம்பிள்டன் டென்னிஸ் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று அரை இறுதி ஆட்டங்கள் நடைபெற்றன.

    முதல் அரை இறுதி ஆட்டத்தில் உலக தரவரிசையில் 3-வது இடம் வகிக்கும் துனிசியா வீராங்கனை ஒன்ஸ் ஜபீர் 6-2, 3-6, 6-1 என்ற செட் கணக்கில் ஜெர்மனி வீராங்கனை டட்யானா மரியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார்.

    இதன் மூலம் ஆப்பிரிக்க நாட்டை சேர்ந்த வீராங்கனை ஒருவர் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் இறுதி சுற்றுக்கு எட்டுவது இதுவே முதல் முறையாகும்.

    மற்றொரு ஆட்டத்தில் தரவரிசையில் 23-வது இடத்தில் உள்ள கஜகஸ்தானைச் சேர்ந்த எலினா ரைபகினா 6-3, 6-3 என்ற நேர் செட்டில் முன்னாள் சாம்பியனான ருமேனியாவின் சிமோனா ஹாலெப்பை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார்.

    இதன் மூலம் விம்பிள்டன் இறுதிப்போட்டிக்குக்குள் நுழைந்த முதல் கஜகஸ்தான் நாட்டு வீராங்கனை என்ற சிறப்பை அவர் பெற்றுள்ளார். நாளை நடைபெறம்விம்பிள்டன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் ஜபீரை, எலினா எதிர்கொள்ள உள்ளார்.

    • முதலில் விளையாடிய இந்திய அணி 198 ரன்கள் குவித்திருந்தது.
    • இந்திய வீரர் ஹர்திக் பாண்ட்யா அரை சதம் அடித்ததுடன், 4 விக்கெட்களை கைப்பற்றினார்.

    சவுத்தம்டன்:

    இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இந்தியா-இங்கிலாந்து அணிகள் மூன்று டி20 போட்டி மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்கின்றன. இரு அணிகளுக்கும் இடையே முதல் டி20 போட்டி சவுத்தம்டனில் நடைபெற்றது.

    இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. துவக்க வீரர்களாக களமிறங்கிய ரோகித் சர்மா 24 ரன்களிலும், இஷான் கிஷன் 8 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். தீபக் ஹூடா 33 ரன்களும், சூரியகுமார் யாதவ் 39 ரன்களும் அடித்தனர். ஹர்திக் பாண்ட்யா 33 பந்துகளில் 51 ரன்கள் குவித்தார். அக்சர் படேல் 17 ரன்னுடன் வெளியேறினார். இந்திய அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் எடுத்தது.

    இதையடுத்து 199 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணியில் ஜசன்ராய் 4 ரன்னுடன், கேப்டன் ஜாஸ் பட்லர் ரன் எதுவும் எடுக்காமலும் அவுட்டானார்கள். டேவிட் மலன் 21 ரன்னும், ஹாரி புரூக் 28 ரன்னும் அடித்தனர். லிவிங்ஸ்டோன் டக்அவுட்டானர். அதிகபட்சமாக மொயின் அலி 36 ரன்கள் அடித்தார். கிரிஷ் ஜோர்டன் ரன்கள் அடித்தார்.

    19.3 ஓவர் முடிவில் இங்கிலாந்து அணி 148 ரன்களுக்கு ஆல்அவுட்டானது. இதையடுத்து 50 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்திய தரப்பில் சிறப்பாக பந்து வீசிய ஹர்திக் பாண்ட்யா 4 விக்கெட்களை கைப்பற்றினார். சாஹல் மற்றும் அறிமுக வீரர் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினர். புவனேஸ்குமார், ஹர்சல் படேல் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். 

    • இந்திய அணியில் அர்ஷ்தீப் சிங் அறிமுக வீரராக களம் இறங்கினார்.
    • இந்திய வீரர் ஹர்திக் பாண்ட்யா அரை சதம் அடித்தார்.

    சவுத்தம்டன்:

    இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையே மூன்று டி20 போட்டி மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் நடைபெற உள்ளன.

    இரு அணிகளுக்கும் இடையே முதல் டி20 போட்டி சவுத்தம்டனில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார்.

    இந்திய அணியில் அர்ஷ்தீப் சிங் அறிமுகமாகி உள்ளார். துவக்க வீரர்களாக களமிறங்கிய ரோகித் சர்மா 24 ரன்களிலும், இஷான் கிஷன் 8 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். தீபக் ஹூடா 33 ரன்களும், சூரியகுமார் யாதவ் 39 ரன்களும் அடித்தனர்.

    ஹர்திக் பாண்ட்யா 33 பந்துகளில் 51 ரன்கள் குவித்தார். அக்சர் படேல் 17 ரன்னுடன் வெளியேறினார். இந்திய அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் எடுத்துள்ளது. இதையடுத்து 199 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி விளையாட உள்ளது.

    • இந்தியா முதல் இன்னிங்சில் 416 ரன்கள் எடுத்தது
    • இங்கிலாந்து 2 ஆம் நாள் தேநீர் இடைவெளியின்போது 356 ரன்கள் பின் தங்கியிருந்தது.

    பர்மிங்காம்:

    இந்தியா-இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி இங்கிலாந்தின் பர்கிம்காம் நகரில் நடைபெற்று வருகிறது. 2-வது நாளான இன்று முதல் இன்னிங்சில் இந்திய அணி 84.5 ஓவர்களில் 416 ரன்களுக்கு அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 146 ரன்களும் ஜடேஜா 104 ரன்களும், பும்ரா 31 ரன்களும் எடுத்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் ஆண்டர்சன் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    இதனையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி தொடக்க வீரர் அலெக்ஸ் லீஸ் 6 ரன்னும், சாக் கிராலி 9 ரன்னுக்கும் விக்கெட்டை பறிகொடுத்தனர். உல்லிபாபு 10 ரன்னுடன் வெளியேறினார். இங்கிலாந்து 31 ரன்கள் எடுத்தபோது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.

    2 நாள் தேநீர் இடைவேளையின்போது 15.1 ஓவர் முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட்கள் இழப்பிற்கு 60 ரன்கள் எடுத்திருந்தது. இதையடுத்து அந்த அணி இந்தியாவை விட 356 ரன்கள் பின் தங்கியிருந்தது. மூன்று விக்கெட்களையும் பும்ரா கைப்பற்றினார்.

    • சிறப்பாக விளையாடிய ரவீந்திர ஜடேஜா அரை சதம் அடித்தார்.
    • மழை குறுக்கிட்டதால் போட்டி சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.

    பர்மிங்காம்:

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பர்மிங்காம் நகரில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக புஜாரா-சுப்மன் கில் ஜோடி களமிறங்கியது. கில் 17 ரன்னிலும், புஜாரா 13 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். மழை குறுக்கிட்டதால் ஆட்டம் சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. மழை நின்ற நிலையில் ஆட்டம் தொடர்ந்து நடைபெற்றது. விகாரி 20 ரன்னுக்கும், விராட் கோலி 11 ரன்னில்  ஆட்டமிழந்தனர்.

    ஸ்ரேயஸ் அய்யர் 15 ரன்னில் ஆண்டர்சன் பந்துச்சில் விக்கெட் கீப்பர் பில்லிங்சிடம் பிடிபட்டார். இதனால் இந்திய அணி 100 ரன்னுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது. பின்னர்  ரிஷப் பண்ட்டும், ரவீந்திர ஜடேஜாவும் இணைந்து ரன் சேகரிப்பில் ஈடுபட்டனர்.

    இந்திய அணி தேநீர் இடைவேளை வரை 5 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்களை எடுத்தது. ரிஷப் பண்ட் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்தார். பின்னர் தொடர்ந்து பண்ட்-ஜடேஜா ஜோடி ரன் குவிப்பில் ஈடுபட்டது.

    அபாரமாக விளையாடிய ரிஷப் பண்ட் சதம் அடித்தார். ஜடேஜா அரைச்சதம் அடித்தார். முதல் நாள் ஆட்டத்தில் இந்திய அணி 60 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 259 ரன்கள் அடித்திருந்தது.

    • ரோகித் சர்மாவுக்கு இன்று மீண்டும் கொரோனா பரிசோதனை நடைபெறுகிறது.
    • பரிசோதனை முடிவு அடிப்படையில் பும்ராவுக்கு கேப்டன் வாய்ப்பு வழங்கப்படும்.

    பர்மிங்காம்:

    கொரோனா அச்சுறுத்தலால் கடந்த ஆண்டு தள்ளிவைக்கப்பட்ட இந்தியா- இங்கிலாந்து அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் நாளை இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்குகிறது.

    இந்நிலையில் இந்திய கேப்டன் ரோகித் சர்மாவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இதனால் அவர் டெஸ்ட் போட்டியில் பங்கேற்பதில் சிக்கில் நீடிக்கிறது.

    இதனிடையே, ரோகித் சர்மாவுக்கு பதில் இந்திய அணியை வேகப்பந்து வீச்சாளரும் துணை கேப்டனுமான பும்ரா வழிநடத்துவார் என்று பிசிசிஐ தகவல்கள் தெரிவித்துள்ளன.

    எனினும் இன்று ரோகித் சர்மாவுக்கு நடத்தப்படும் கொரோனா பரிசோதனையின் முடிவில் அவர் போட்டியில் பங்கேற்பாரா இல்லையா என்பது உறுதிசெய்யப்படும் என பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.

    அப்படி வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் கபில்தேவுக்கு பிறகு இந்திய டெஸ்ட் அணியை வழிநடத்தும் வேகப்பந்து வீச்சாளர் என்ற சிறப்பையும் பும்ரா பெற உள்ளார்.

    • முர்ரேவை வீழ்த்தி மூன்றாவது சுற்றுக்கு அமெரிக்க வீரர் தகுதி.
    • இரண்டாவது சுற்றில் பிரான்ஸ் வீரர் யுகோ ஹம்பெர்ட் வெற்றி.

    லண்டன்:

    விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகள் லண்டனில் நடைபெற்று வருகின்றன. ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்று ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச், ஆஸ்திரேலிய வீரர் தனாசி கோக்கினாகிசை எதிர்கொண்டார்.

    இதில் 6-1, 6-4, 6-2 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்ற ஜோகோவிச் 3-வது சுற்றுக்கு முன்னேறினார். அடுத்த சுற்றில் சக நாட்டை சேர்ந்த கெக்மனோவிச்சை அவர் சந்திக்கிறார்.

    மற்றொரு பரபரப்பான ஆட்டத்தில் பிரிட்டடை சேர்ந்த முன்னணி டென்னிஸ் வீரர் ஆன்டி முர்ரே, அமெரிக்காவின் ஜான் இஸ்னருடன் மோதினர். இதில் 6-4, 7-6, 6-7, 6-4 என்ற செட்களில் முர்ரேவை வீழ்த்திய இஸ்னர் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு ஆட்டத்தில் பிரான்ஸ் வீரர் யுகோ ஹம்பெர்ட் 3-6, 6-2, 7-5, 6-4 என்ற செட் கணக்கில் 6-ம் நிலை வீரர் நார்வேயை சேர்ந்த கேஸ்பர் ரூட்டை வீழ்த்தினார்.

    • நடாலுக்கு, பிரான்சிஸ்கோ கடும் சவாலாக திகழ்ந்தார்.
    • முதல் சுற்றில் செரீனாவை வீழ்த்தி ஹார்மனி டான் வெற்றி பெற்றார்.

    லண்டன்:

    கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டிகளில் மிக உயர்ந்ததாக கருதப்படும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகள் லண்டனில் நடைபெற்று வருகின்றன.

    நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் முன்னாள் நம்பர் ஒன் வீரர், ரபேல் நடால் - அர்ஜென்டினாவின் பிரான்சிஸ்கோ செருண்டோலோவை எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் நடாலுக்கு, பிரான்சிஸ்கோ கடும் சவாலாக திகழ்ந்தார். இறுதியில் 6-4,6-3,3-6,6-4 என்ற செட் கணக்கில் ரபேல் நடால் வெற்றி பெற்றார்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் பிரான்ஸ் வீராங்கனை ஹார்மனி டானை, அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் எதிர்கொண்டார். 40 வயதான செரீனா காயம் காரணமாக ஒரு வருட இடைவெளிக்குப் பின்னர் டென்னிஸ் போட்டியில் பங்கேற்றார். இந்த போட்டியில் 7-5 1-6 7-6 (10-7) என்ற செட்கணக்கில் ஹார்மனி டான் வெற்றி பெற்றார்.

    • நார்வே, இங்கிலாந்து வீரர்களும் முதல் சுற்றில் வெற்றி பெற்றனர்.
    • பெண்கள் ஒற்றையர் பிரிவில், துனிசியா வீராங்கனை வெற்றி பெற்றுள்ளார்.

    லண்டன்:

    கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர்களில், மிக உயரியதாக கருதப்படும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகள் லண்டனில் நேற்று தொடங்கின.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதலாவது சுற்று ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியன் நோவக் ஜோகோவிச் (செர்பியா) 6-3, 3-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில், தென்கொரியாவின் சூன்வோகிவோனை தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு ஆட்டத்தில் ஸ்பெயின் இளம் வீரர் கார்லோஸ் அல்கராஸ், ஜெர்மனியின் ஜான் லெனார்ட் ஸ்ட்ரஃப்பை 4-6, 7-5, 4-6, 7-6, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றார். இதேபோல் கேஸ்பர் ரூட் (நார்வே), கேமரூன் நோரி (இங்கிலாந்து) உள்ளிட்டோரும் முதல் சுற்றில் வெற்றி பெற்றனர்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் துனிசியா வீராங்கனை ஆன்ஸ் ஜாபியர், சுவீடனின் மிர்ஜாம் பிஜோர்க்லுன்டை 6-1, 6-3 என்ற நேர்செட்டில் வீழ்த்தினார்.

    • கடைசி டெஸ்ட் போட்டி தொடங்க உள்ள நிலையில் ரோகித் சர்மா கொரோனாவால் பாதிப்பு
    • ரோகித் சர்மா தனிமைபடுத்தப்பட்டுள்ளதுடன் மருத்துவ குழு கண்காணிப்பில் உள்ளார்.

    லண்டன்:

    கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி இங்கிலாந்து சென்றுள்ளது. இங்கிலாந்தின் லீசெஸ்டயர் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்திய வீரர்கள் பங்கேற்றனர்.

    இந்நிலையில், கேப்டன் ரோகித் சர்மா கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். சனிக்கிழமை நடத்தப்பட்ட ரேபிட் கொரோனா பரிசோதனையில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இதையடுத்து ஹோட்டலில் அவர், தனிமைபடுத்தப் பட்டுள்ளதாகவும், மருத்துவக்குழுவின் கண்காணிப்பில் அவர் உள்ளதாகவும் பிசிசிஐ தெரிவித்துள்ளது. ஜூலை ஒன்றாம் தேதி இங்கிலாந்து அணியுடன், இந்திய அணி பங்கேற்கும் கடைசி டெஸ்ட் போட்டி தொடங்க உள்ள நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள ரோகித் சர்மா இதில் பங்கேற்க மாட்டார் என தெரிகிறது.

    முன்னதாக மாலத்தீவு சென்று விட்டு திரும்பிய விராட் கோலிக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதாக தகவல் வெளியாகின. ஆனால் அவர் தப்போது குணமடைந்து விட்டதாக கூறப்படுகிறது.

    ×