என் மலர்
உலகம்
- இஸ்ரேல் அரசு காசா மீது வான்வழி தாக்குதல்களை நடத்தி வருகிறது.
- மோசமான விளைவுகள் ஏற்படக்கூடும் எனவும் ஐ.நா. எச்சரித்துள்ளது.
பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் ஆட்சி நடத்தி வரும் ஹமாஸ் அமைப்பினர் கடந்த 7-ந் தேதி இஸ்ரேல் மீது திடீரென சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக அதிகாரப்பூர்வமாக போரை அறிவித்த இஸ்ரேல் அரசு காசா மீது வான்வழி தாக்குதல்களை நடத்தி வருகிறது.
இதனால் போர் நாளுக்குநாள் தீவிரமடைந்து வருகிறது. மேலும் காசா மீது தொடர் வான்வழித்தாக்குதல்கள் நடத்தப்படும் எனவும் காசாவில் உள்ள மக்கள் பாதுகாப்பு முகாம்களுக்கு செல்லுமாறும் வானில் இருந்து நோட்டீஸ்களை வீசி இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்து வருகிறது. குறிப்பாக காசாவின் வடக்கு பகுதியில் இருந்து பொதுமக்கள் அனைவரும் அடுத்த 24 மணி நேரத்திற்குள் வெளியேற வேண்டும் என இஸ்ரேல் அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இஸ்ரேலின் இந்த அறிவிப்புக்கு ஐ.நா. சபை கண்டனம் தெரிவித்துள்ளது. சுமார் 11 லட்சம் பேர் வாழும் வடக்கு காசா பகுதியில் இருந்து 24 மணி நேரத்திற்குள் அனைவரும் வெளியேறுவது சாத்தியமில்லாதது எனவும், இதனால் மோசமான விளைவுகள் ஏற்படக்கூடும் எனவும் ஐ.நா. எச்சரித்துள்ளது. ஏற்கனவே பெரும் சோகத்திற்கு ஆளாகியுள்ள மக்கள், மேலும் ஒரு பேரிடரில் சிக்கிக்கொள்வதை தவிர்க்கும் வகையில் இந்த அறிவிப்பை இஸ்ரேல் திரும்பப் பெற வேண்டும் என ஐ.நா. கேட்டுக்கொண்டுள்ளது.
- கனரக ஆயுதங்கள் மூலம் தாக்குவதால் ஏற்றுக்கொள்ள முடியாத அளவுக்கு உயிரிழப்பு.
- தற்போதைய சூழ்நிலையில் ரத்தம் சிந்துவதை நிறுத்த வேண்டும் என்பதே ரஷியாவின் குறிக்கோள்.
இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் கடந்த 7-ந்தேதி ஆயிரக்கணக்கான ஏவுகணைகளை வீசி திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். இதையடுத்து ஹமாஸ் படையினர் மீது இஸ்ரேல் எதிர் தாக்குதல் நடத்தியது. இருவரும் நடத்திவரும் தாக்குதலில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகிவிட்டனர். ஆயிரக்கணக்கானோர் படுகாயமடைந்து இருக்கின்றனர்.
ஹமாஸ் அமைப்பினருக்கு தக்க பதிலடி கொடுத்துவரும் இஸ்ரேல், பணயக் கைதிகளை விடுவிக்கும் வரை காசா முற்றுகை பகுதியில் மனிதாபிமான உதவிகளை வழங்க அனுமதிக்க மாட்டோம் என்று அறிவித்துள்ளது. அங்கு ஒரு சொட்டு தண்ணீரோ, வெளிச்சமோ இருக்காது என்று இஸ்ரேல் அமைச்சர் எச்சரித்திருக்கிறார்.
இந்நிலையில் இரு தரப்பினரும் நடத்திவரும் தாக்குதலுக்கு தினமும் நூற்றுக்கணக்கானோர் பலியாகி வருகின்றனர். இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியாகி விட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்நிலையில், தாக்குதல்களை நிறுத்த இஸ்ரேல் மற்றும் காசா அமைப்புக்கு ரஷிய அதிபர் புதின் வலியுறுத்தி உள்ளார்.
மேலும் அவர், "கனரக ஆயுதங்கள் மூலம் தாக்குவதால் ஏற்றுக்கொள்ள முடியாத அளவுக்கு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.
பேச்சுவார்த்தை மூலமாக மட்டுமே தீர்வு காண முடியும். பேச்சுவார்த்தை நடத்தி அமைதி திரும்ப வேண்டும்.
தற்போதைய சூழ்நிலையில் ரத்தம் சிந்துவதை நிறுத்த வேண்டும் என்பதே ரஷியாவின் குறிக்கோள்.
அமைதி திரும்ப அனைத்து வழிகளிலும் ஒருங்கிணைப்பு வேலைகளை ரஷியா மேற்கொள்ளும் என்று குறிப்பிட்டுள்ளார்.
- இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்து ஆயுதங்களை வழங்கி உள்ளது.
- இஸ்ரேலுக்காக பாதுகாப்பு உதவிக்கு அமெரிக்க ராணுவம் எந்த நிபந்தனைகளையும் விதிக்கவில்லை.
வாஷிங்டன்:
இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்புக்கும் இடையே போர் மூண்டுள்ளது. இதில் இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்து ஆயுதங்களை வழங்கி உள்ளது. மேலும் அமெரிக்காவின் போர் கப்பல் இஸ்ரேலுக்கு சென்றது. நேற்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆன்டனி பிளிங்கன் இஸ்ரேலுக்கு சென்றார். அவர் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை சந்தித்து பேசினார். இந்த நிலையில் அமெரிக்க ராணுவ மந்திரி லாயிட் ஆஸ்டின் இன்று இஸ்ரேலுக்கு செல்ல உள்ளார். அவர், இஸ்ரேல் பிரதமர் மற்றும் அமைச்சர்களை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.
இது தொடர்பாக அமெரிக்க மூத்த அதிகாரி ஒருவர் கூறும் போது, ராணுவ மந்திரி லாயிட் ஆஸ்டின், இஸ்ரேல் தலைவர்களுடன் அவர்களின் செயல்பாட்டு திட்டம், இந்த மோதலுக்கான அவர்களின் நோக்கங்கள் குறித்து பேசுவார். இஸ்ரேலின் பாதுகாப்பு உதவி, தேவைகள் குறித்து விவாதிப்பார் என்றார்.
முன்னதாக லாயிட் ஆஸ்டின் கூறும் போது, இஸ்ரேலுக்காக பாதுகாப்பு உதவிக்கு அமெரிக்க ராணுவம் எந்த நிபந்தனைகளையும் விதிக்கவில்லை. ஹமாசுக்கு எதிரான போரை தொடர இஸ்ரேல் ராணுவம் சரியான முறையில் செயல்படும் என்று அமெரிக்கா எதிர்பார்க்கிறது என்றார்.
- காசா பகுதிக்குள் குடிநீர், மின்சாரம், உணவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் அனைத்தும் இஸ்ரேல் தடுத்து நிறுத்தி உள்ளது.
- காசா பகுதிக்கு உணவு, எரிபொருள், மின்சாரம், மருந்து ஆகியவற்றை வழங்குவதற்கு இஸ்ரேல் நிபந்தனை விதித்துள்ளது.
டெல்அவிவ்:
இஸ்ரேல்-ஹமாஸ் படையினருடன் ஏற்பட்டு உள்ள சண்டை இன்று (வெள்ளிக்கிழமை) 7-வது நாளை எட்டியுள்ளது.
ஹமாஸ் படையினர் வசிக்கும் காசா பகுதிகளை இஸ்ரேல் போர் விமானங்கள் சரமாரியாக குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருகின்றன. நேற்று இரவு மிக கடுமையான தாக்குதல் நடந்ததால் காசா பகுதி மக்கள் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள்.
கடந்த 6 நாட்களில் மட்டும் 6 ஆயிரம் சக்தி வாய்ந்த குண்டுகளை இஸ்ரேல் விமானங்கள் வீசி உள்ளன. இந்த வான்வழி தாக்குதல் காரணமாக காசா பகுதியில் சுமார் 2,500 கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகி விட்டன. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து சேதமாகி உள்ளன.
இதன் காரணமாக காசா நகரம் உருக்குலைந்து பரிதாபமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில் தரைவழி தாக்குதலுக்கு இஸ்ரேல் ராணுவம் தயாராகி வருகிறது. 3 லட்சத்துக்கும் மேற்பட்ட வீரர்களை இதற்காக குவித்துள்ளது.
காசா நகருக்குள் இஸ்ரேல் தரை படை நுழைந்து தாக்குதல் நடத்தினால் உயிர் சேதம் மிக அதிகளவில் இருக்கும் என்று அச்சம் எழுந்துள்ளது. இதனால் காசாவில் இருந்து மக்கள் வெளியேறி வருகிறார்கள். இன்று காலை வரை 4.50 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வெளியேறி விட்டனர்.
காசா பகுதிக்குள் குடிநீர், மின்சாரம், உணவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் அனைத்தும் இஸ்ரேல் தடுத்து நிறுத்தி உள்ளது. இதனால் காசா பகுதியில் வாழும் மக்களின் நிலைமை படுமோசமாக மாறி வருகிறது. ஐ.நா. சபை அதிகாரிகள் அங்கு முகாமிட்டு மக்களுக்கு உதவி செய்து கண்காணித்து வருகிறார்கள்.
காசாவில் பல்வேறு இடங்களில் பாதுகாப்பு முகாம்களை ஐ.நா. சபை ஏற்படுத்தி உள்ளது. அங்கு மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. இதனால் தஞ்சம் அடைய வரும் மக்களுக்கு முழுமையாக உதவி செய்ய முடியாமல் ஐ.நா. சபை அதிகாரிகள் திணறியபடி உள்ளனர்.
காசாவில் உள்ள உணவு ஆலைகள் இன்று முதல் உணவு விநியோகத்தை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. இதனால் காசாவில் உணவு தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது. மக்கள் உணவுக்காக கடைகளில் அரசு வினியோக பகுதிகளில் குவிந்துள்ளனர்.
இன்று காலை காசாவில் உணவுக்காக மக்கள் பல கிலோ மீட்டர் தூரத்துக்கு வரிசையில் நின்ற காட்சியை காண முடிந்தது.
காசா பகுதிக்கு உணவு, எரிபொருள், மின்சாரம், மருந்து ஆகியவற்றை வழங்குவதற்கு இஸ்ரேல் நிபந்தனை விதித்துள்ளது. பிணை கைதிகள் அனைவரும் விடுவிக்கப்படும் வரை இந்த தடை தொடரும் என இஸ்ரேல் திட்டவட்டமாக தெரிவித்து உள்ளது.
தற்போது காசாவில் ஹமாஸ் படையினர் கட்டுப்பாட்டில் 200-க்கும் மேற்பட்ட இஸ்ரேல் வீரர்கள் பிணை கைதிகளாக உள்ளனர்.
அவர்களை விடுவிக்குமாறு அரபு நாடுகளும், பாலஸ்தீன பிரதமரும் வலியுறுத்தி உள்ளனர். ஆனால் அதை ஹமாஸ் படையினர் ஏற்க மறுத்து இருப்பதால் நிலைமை மோசமாகி வருகிறது.
காசாவில் மின்சாரம் இல்லாததால் கடந்த 4 நாட்களாக காசா முழுவதும் இருளில் மூழ்கி உள்ளது. மின்சாரம் இல்லாததால் குடிநீர் வினியோகம் தடைபட்டுள்ளது. சுமார் 10 லட்சம் பேர் தண்ணீர் கிடைக்காமல் கடும் அவதிக்குள்ளாகி இருக்கிறார்கள்.
மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உணவு, குடிநீர் இல்லாத நிலையில் மருந்தும் இல்லாததால் முதியவர்கள், குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.
என்றாலும் இஸ்ரேல் இன்னும் தாக்குதலை நிறுத்தவில்லை. இதன் காரணமாக காசா பகுதி மேலும் உருக்குலைய தொடங்கி உள்ளது. இது ஹமாஸ் இயக்கத்தினருக்கு நீண்ட கால பாதிப்பை கொடுக்கும் என்று கருதப்படுகிறது.
- இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியாகி விட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
- 3.34 லட்சம் பாலஸ்தீனியர்கள் வீடுகளை இழந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
ஜெருசலேம்:
இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் கடந்த 7-ந்தேதி ஆயிரக்கணக்கான ஏவுகணைகளை வீசி திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். இதையடுத்து ஹமாஸ் படையினர் மீது இஸ்ரேல் எதிர் தாக்குதல் நடத்தியது. இருவரும் நடத்திவரும் தாக்குதலில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகிவிட்டனர். ஆயிரக்கணக்கானோர் படுகாயமடைந்து இருக்கின்றனர்.
ஹமாஸ் அமைப்பினருக்கு தக்க பதிலடி கொடுத்துவரும் இஸ்ரேல், பணயக் கைதிகளை விடுவிக்கும் வரை காசா முற்றுகை பகுதியில் மனிதாபிமான உதவிகளை வழங்க அனுமதிக்க மாட்டோம் என்று அறிவித்துள்ளது. அங்கு ஒரு சொட்டு தண்ணீரோ, வெளிச்சமோ இருக்காது என்று இஸ்ரேல் அமைச்சர் எச்சரித்திருக்கிறார்.
இந்நிலையில் இரு தரப்பினரும் நடத்திவரும் தாக்குதலுக்கு தினமும் நூற்றுக்கணக்கானோர் பலியாகி வருகின்றனர். இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியாகி விட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
வடக்கு காசாவில் உள்ள ஜபாலியா அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 45 பேர் பலியாகியிருக்கின்றனர். இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் காசாவில் 500 குழந்தைகள், 276 பெண்கள் உள்பட 1537 பேர் கொல்லப்பட்டு இருக்கின்றனர். 6,612 பேர் காயமடைந்துள்ளனர். ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரையில் 31 பேர் பலியாகினர். 600பேர் காயமடைந்தனர்.
ஹமாஸ் நடத்திய தாக்குதலில் இஸ்ரேலில் பலியானோர் எண்ணிக்கை 1,300 ஆக உயர்ந்திருக்கிறது. அவர்களில் 220 பேர் ராணுவ வீரர்கள் ஆவர். தாக்குதலில் 3,200பேர் காயமடைந்து இருக்கின்றனர்.
3.34 லட்சம் பாலஸ்தீனியர்கள் வீடுகளை இழந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. ஐ.நா. முகாம்களில் 2.2 லட்சம் பேர் உள்ளனர். சிரியாவின் தலைநகர் டகாகஸ் மற்றும் வடக்கு நகரான அலெப்போலில் உள்ள சர்வதேச விமான நிலையங்கள் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதலில் நடத்தியதில் விமான நிலையங்களின் ஓடுபாதைகள் சேதடைந்தன.
இஸ்ரேலில் நடந்துவரும் தாக்குதலில் அமெரிக்க குடிமக்கள் 25பேர் கொல்லப்பட்டதாகவும், 17பேரை காணவில்லை என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது. அதேபோன்று பிரெஞ்சு குடிமக்கள் 12 பேர் கொல்லப்பட்டதாகவும், 16 பேரை காணவில்லை எனவும் கூறப்படுகிறது.
- கிரீன் கார்டுக்காக விண்ணப்பித்தவர்களுக்கு அமெரிக்காவில் தங்கி பணிபுரிய கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.
- கிரீன் கார்டு விண்ணப்பம் நிலுவையில் இருக்கும்போது விண்ணப்பதாரர்கள் வேலை வாய்ப்பு அங்கீகார ஆவணத்துக்கு விண்ணப்பிக்கலாம்.
அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை (கிரீன் கார்டு) பெற இந்தியர்கள் உள்பட ஏராளமான வெளிநாட்டினர் விண்ணப்பித்துள்ளனர். கிரீன் கார்டை பெற லட்சக்கணக்கானோர் காத்து இருக்கிறார்கள். கிரீன் கார்டுக்காக விண்ணப்பித்தவர்களுக்கு அமெரிக்காவில் தங்கி பணிபுரிய கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கிரீன் கார்டு விண்ணப்பதாரர்களுக்கு பணி அனுமதி செல்லுபடியாகும் காலம் 5 ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது. வேலை வாய்ப்பும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. வேலை வாய்ப்பு அங்கீகார ஆவணங்களின் அதிகபட்சம் செல்லுபடியாகும் காலத்தை 5 ஆண்டுகள் நீட்டிப்பதாக அமெரிக்க குடியுரிமை மற்றும் குடி வரவு சேவைகள் துறை அறிவித்துள்ளது. கிரீன் கார்டு விண்ணப்பம் நிலுவையில் இருக்கும்போது விண்ணப்பதாரர்கள் வேலை வாய்ப்பு அங்கீகார ஆவணத்துக்கு விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் அமெரிக்காவில் தொடர்ந்து பணிபுரியும் வாய்ப்பு கிடைக்கும்.
கடந்த மாதம் 22-ந் தேதி அல்லது அதற்கு பிறகு நிலுவையில் உள்ள அல்லது தாக்கல் செய்யப்பட்ட தகுதியான வேலை வாய்ப்பு அங்கீகார ஆவண விண்ணப்பங்களுக்கு இந்த புதிய கொள்கை பொருத்தும்.
இது அமெரிக்காவில் எச்.1பி.விசாவில் பணிபுரியும் இந்தியர்கள் உள்பட வெளிநாட்டினருக்கும் பயன் அளிக்கும்.
- அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆன்டனி பிளிங்கன் இன்று ஜோர்டான் சென்றடைந்தார்.
- பாலஸ்தீன அதிபர் மகமது அப்பாசையும் சந்தித்துப் பேசவுள்ளார்.
அம்மான்:
இஸ்ரேல், ஹமாஸ் இடையே நடைபெற்று வரும் போரினால் இருதரப்பிலும் பலி எண்ணிக்கை 3 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆண்டனி பிளிங்கன் நேற்று இஸ்ரேல் சென்றார். தலைநகர் டெல் அவிவில் உள்ள ராணுவ அமைச்சகத்தில் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவை சந்தித்துப் பேசினார்.
இந்நிலையில், அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆன்டனி பிளிங்கன் ஜோர்டான் சென்றடைந்தார்.
அவர் ஜோர்டான் மன்னர் அப்துல்லா மற்றும் பாலஸ்தீன அதிபர் மகமது அப்பாஸ் ஆகியோரை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
இஸ்ரேல், ஹமாஸ் இடையே போர் தீவிரம் அடைந்து வரும் நிலையில், போர் நிறுத்தம் குறித்து விரைவில் பேச்சுவார்த்தை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு மற்றும் அதிபரைச் சந்தித்து தனது ஆதரவை உறுதிப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஹமாஸ் தாக்குதலுக்கு பதிலடியாக காசா மீது இஸ்ரேல் ஏவுகணைகளை வீசி வருகிறது.
- காசாவில் உள்ள 10 லட்சம் மக்கள் அடுத்த 24 மணி நேரத்தில் வெளியேறவும் எச்சரித்துள்ளது.
டெல் அவிவ்:
இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினர். அத்துடன் பலர் பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளனர். இதற்கு இஸ்ரேல் காசா மீது ஏவுகணைகளை வீசி பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் இரு பக்கமும் பலத்த உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது.
நேற்றைய 6-வது நாள் தாக்குதலுக்குப் பிறகு இருதரப்பிலும் பலி எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
இந்நிலையில், வட காசாவில் உள்ள 10 லட்சம் மக்கள் அடுத்த 24 மணி நேரத்தில் துரிதமாக வெளியேற வேண்டும் என இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபை ஊழியர்கள், ஐக்கிய நாடுகள் சபையின் பள்ளிகள் உள்பட அனைத்து இடங்களில் உள்ள பாலஸ்தீனியர்களை உடனே வெளியேறவும் அறிவுறுத்தியுள்ளது.
- ஆப்கானிஸ்தானில் இன்று காலை 6.39 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
- இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.6 ஆக பதிவாகியுள்ளது.
காபூல்:
ஆப்கானிஸ்தானில் இன்று காலை 6.39 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இது ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவாகியுள்ளது என தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் குலுங்கின. ஒரே வாரத்தில் ஏற்படும் 2வது நிலநடுக்கம் இதுவாகும்.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் வெளியாகவில்லை.
கடந்த வாரம் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியானது குறிப்பிடத்தக்கது.
- அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆண்டனி பிளிங்கன் நேற்று இஸ்ரேல் சென்றார்.
- அவர் தலைநகர் டெல் அவிவில் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவை சந்தித்துப் பேசினார்.
டெல் அவிவ்:
இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் காசா மீது ஏவுகணைகளை வீசி பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் இரு பக்கமும் பலத்த உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது. இருதரப்பிலும் பலி எண்ணிக்கை 3 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
இந்நிலையில், அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆண்டனி பிளிங்கன் நேற்று இஸ்ரேல் சென்றார். தலைநகர் டெல் அவிவில் உள்ள ராணுவ அமைச்சகத்தில் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாகுவை சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர் நேதன்யாகுவிடம், என்னுடன் நான் கொண்டு வந்துள்ள செய்தி இதுதான். உங்களை தற்காத்துக் கொள்ளும் அளவுக்கு நீங்கள் பலம் வாய்ந்தவர்களாக இருக்கலாம். அமெரிக்கா இருக்கும்வரை நீங்கள் தனியாகப் போராட வேண்டிய அவசியமில்லை. போர்ச்சூழலைப் பயன்படுத்தி யாராவது இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினால் நாங்கள் பார்த்துக்கொண்டு இருக்க மாட்டோம் என தெரிவித்தார்.
- காசாவில் உள்ள மக்கள் பாதுகாப்பு முகாம்களுக்கு செல்லுமாறு வானில் இருந்து நோட்டீஸ்களை வீசி இஸ்ரேல் எச்சரிக்கை.
- ஹமாஸ் அமைப்புக்கு எதிரான போரில் ராணுவத்தின் பலத்தை அதிகரிக்க இஸ்ரேல் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இஸ்ரேல் மீது ஹமாஸ் படையினர் கடந்த சனிக்கிழமை முதல் தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இஸ்ரேல் ராணுவம் பதிலடி நடவடிக்கையாக போர் விமானங்கள் மூலம் குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதல் இன்று 6-வது நாளாக நீடிக்கிறது.
இந்நிலையில், சிரியாவில் உள்ள டமாஸ்கஸ் மற்றும் அலெப்போ ஆகிய 2 விமான நிலையங்கள் மீது இஸ்ரோ வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது.
இதற்கிடையே, இஸ்ரேலில் உள்ள தங்கள் நாட்டினரை மீட்க இங்கிலாந்து விமானம் அனுப்புகிறது.
மத்திய காசா பகுதியில் உள்ள நுசிராத் அகதிகள் முகாமில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 18 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர்.
பல்வேறு நாடுகளில் உள்ள இஸ்ரேலின் விமான படையினர் உடனடியாக நாடு திரும்ப வேண்டும் என இஸ்ரேல் அழைப்பு விடுத்துள்ளது.
ஹமாஸ் அமைப்புக்கு எதிரான போரில் ராணுவத்தின் பலத்தை அதிகரிக்க இஸ்ரேல் நடவடிக்கை எடுத்து வருகிறது.
மேலும், காசாவில் உள்ள மக்கள் பாதுகாப்பு முகாம்களுக்கு செல்லுமாறு வானில் இருந்து நோட்டீஸ்களை வீசி இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது.
- ஹமாஸ் அமைப்பை முற்றிலும் அழிக்க போவதாக இஸ்ரேல் கூறியுள்ளது
- 150 இஸ்ரேலியர்களின் கதி என்னவென்று இதுவரை தெரியவில்லை
கடந்த சனிக்கிழமை காலை இஸ்ரேல் மீது பாலஸ்தீன ஹமாஸ் அமைப்பினர் திடீர் தாக்குதல் நடத்தினர். பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் உள்ளிட்ட பல இஸ்ரேலியர்கள் இதில் உயிரிழந்தனர். மேலும் பல இஸ்ரேலியர்களை பணய கைதிகளாக ஹமாஸ் கொண்டு சென்றது.
இதை தொடர்ந்து ஹமாஸ் அமைப்பை முற்றிலும் அழிக்க போவதாக கூறி, இஸ்ரேல் அதை சேர்ந்தவர்களை காசா பகுதியில் தேடி தேடி வேட்டையாடி வருகிறது.
இஸ்ரேல் அறிவித்திருக்கும் இந்த போர் 6-வது நாளாக இன்றும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள காசா பகுதியின் மீது இஸ்ரேல் வான்வழியாக தொடர்ந்து குண்டு மழையை பொழிவதால் அப்பகுதியில் பல வீடுகள் சேதமடைந்தன. பலர் அண்டையில் உள்ள அரபு நாடுகளுக்கு அகதிகளாக செல்ல தொடங்கி விட்டனர்.
காசாவில் பல லட்சம் மக்களுக்கு வீடு, மின்சாரம், எரிபொருள், குடிநீர், மருந்து பொருட்கள் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் இஸ்ரேல் துண்டித்து விட்டது. குண்டு வீச்சில் காயமடைந்தவர்களால் அங்குள்ள மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன.
இந்நிலையில், மனிதாபிமான அடிப்படையில் பாலஸ்தீன மக்களுக்கு அவசர தேவைகள் சென்றடைய வழித்தடத்தை அமைத்து தரவும், குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு தடை விதிக்க வேண்டாம் என்றும் இஸ்ரேலுக்கு சில மனிதாபிமான அமைப்புகள் கோரிக்கை வைத்தன.
இதற்கு இஸ்ரேல் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்து விட்டது.
"காசாவிற்கு மனிதாபிமான உதவிகளா? எங்கள் நாட்டவர்களை ஹமாஸ் விடுவிக்காத வரை காசாவில் எந்த மின்சார சுவிட்சும் வேலை செய்யாது; எந்த குடிநீர் குழாயும் திறக்கப்பட மாட்டாது; எந்த எரிபொருள் வாகனமும் உள்ளே நுழைய முடியாது. மனிதாபிமானமாக நடந்து கொள்பவர்களிடம்தான் மனிதாபிமானத்தை காட்ட முடியும். தார்மீக கடமைகளை எங்களுக்கு எவரும் கற்று தர வேண்டாம்" என தனது அதிகாரபூர்வ எக்ஸ் கணக்கில் இஸ்ரேல் அமைச்சர் இஸ்ரேல் கட்ஸ் (Israel Katz) உறுதியாக கூறியுள்ளார்.
ஹமாஸ் அமைப்பால் கடத்தி செல்லப்பட்டுள்ளதாக கூறப்படும் சுமார் 150 இஸ்ரேலியர்களின் கதி என்னவென்று இதுவரை தெரியவில்லை.
பாலஸ்தீன பகுதியின் ஒரே மின்சார உற்பத்தி நிலையம் நேற்று எரிபொருள் இல்லாததால் முடங்கியது.






