என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • ஆஸ்திரேலிய அணிக்கு கேப்டனாக மேத்யூ வேட் செயல்படுவார் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
    • உலகக்கோப்பை வென்ற அணியில் இடம்பெற்றிருந்த வீரர்களில் 7 பேர் டி20 தொடருக்கான அணியில் இடம்பெற்றுள்ளனர்.

    மும்பை:

    உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டம் வென்றது. உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நிறைவடைந்துள்ள நிலையில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது.

    இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான முதல் டி20 போட்டி வரும் 23-ம் தேதி விசாகப்பட்டினத்தில் நடைபெற உள்ளது.

    இந்நிலையில் இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் இருந்து ஆஸ்திரேலிய அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் விலகியுள்ளார். உலகக்கோப்பை வெற்றிக்கு பின் அவர் தாயகம் திரும்ப முடிவு செய்துள்ளதால் இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக ஆல் ரவுண்டர் ஆரோன் ஹார்டி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    இந்த தொடருக்கான ஆஸ்திரேலிய அணிக்கு கேப்டனாக மேத்யூ வேட் செயல்படுவார் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. உலகக்கோப்பை வென்ற அணியில் இடம்பெற்றிருந்த வீரர்களில் 7 பேர் டி20 தொடருக்கான அணியில் இடம்பெற்றுள்ளனர்.

    இந்த தொடருக்கான ஆஸ்திரேலியா அணி விவரம் பின்வருமாறு;-

    மேத்யூ வேட் (கேப்டன்), ஆரோன் ஹார்டி, ஜேசன் பெஹ்ரன்டோர்ப், சீன் அபோட், டிம் டேவிட், நாதன் எல்லிஸ், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், கிளென் மேக்ஸ்வெல், தன்வீர் சங்கா, மேட் ஷார்ட், ஸ்டீவ் ஸ்மித், மார்கஸ் ஸ்டோய்னிஸ், கேன் ரிச்சர்ட்சன், ஆடம் ஜம்பா

    • அதிர்ஷ்டத்தால் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு வரவில்லை என அக்தர் கூறினார்.
    • இறுதிப் போட்டியில் பயன்படுத்தப்பட்ட ஆடுகளத்தால் நான் மிகவும் ஏமாற்றம் அடைந்தேன்.

    இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதிய இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று உலகக் கோப்பையை கைப்பற்றியது. இந்நிலையில் இந்தியாவின் தோல்விக்கு பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் காரணம் தெரிவித்துள்ளனர்.

    அப்ரிடி (பாகிஸ்தான் முன்னாள் வீரர்):

    எல்லா ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் அந்த நம்பிக்கை ஏற்படும். இதுவே இந்திய அணியின் வீழ்ச்சிக்கு வழி வகுத்தது. நாம் அனைவரும் வாழ்க்கையில் ஒரு கட்டத்தில் இதை அனுபவித்து இருப்போம். டிரெவிஸ் ஹெட் சதம் அடித்தபோது ரசிகர்கள் அமைதியாக இருந்தது ஏன்? இது மிகப்பெரிய சதமாகும். குறைந்தபட்சம் ஒரு சிலராவது எழுந்து நின்று பாராட்டி இருக்கலாம்.

    சோயிப் அக்தர் (பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீரர்):

    அதிர்ஷ்டத்தால் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு வரவில்லை. அபாரமாக விளையாடிதான் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இறுதிப் போட்டியில் பயன்படுத்தப்பட்ட ஆடுகளத்தால் நான் மிகவும் ஏமாற்றம் அடைந்தேன். அதிக பவுன்ஸ் மற்றும் வேகம் இருந்திருந்தால் டாஸ் மிக முக்கிய பங்கு வகித்து இருக்காது என்றார்.

    ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு ஆடுகளம் உகந்ததாக அமைந்ததுதான் காரணம் என்று இங்கிலாந்து முன்னாள் கேப்டன் நாசர் உசேன் தெரிவித்துள்ளார்.

    • சுனில்சேத்ரி தலைமையிலான இந்திய அணி ஏ பிரிவில் இடம் பெற்றுள்ளது.
    • கத்தார், குவைத், ஆப்கானிஸ்தான் ஆகியவை அந்த பிரிவில் உள்ள மற்ற அணிகளாகும்.

    புவனேஸ்வர்:

    2026-ம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கான ஆசிய மண்டல தகுதி சுற்றின் 2-வது ரவுண்டில் 36 அணிகள் பங்கேற்றுள்ளன. இவை 9 பிரிவாக பிரிக்கப்பட்டு உள்ளூர்-வெளியூர் அடிப்படையில் மோதுகின்றன. இதன் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் 3-வது சுற்றுக்கு முன்னேறும்.

    இதில் சுனில்சேத்ரி தலைமையிலான இந்திய அணி ஏ பிரிவில் இடம் பெற்றுள்ளது. கத்தார், குவைத், ஆப்கானிஸ்தான் ஆகியவை அந்த பிரிவில் உள்ள மற்ற அணிகளாகும். இந்தியா முதல் ஆட்டத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் குவைத்தை வீழ்த்தியது. தரவரிசையில் 102-வது இடத்தில் உள்ள இந்திய அணி அடுத்ததாக 61-ம் நிலை அணியான பலம் வாய்ந்த கத்தாரை இன்று எதிர்கொள்கிறது.

    இந்த ஆட்டம் புவேனஸ்வரில் உள்ள கலிங்கா ஸ்ேடடியத்தில் இரவு 7 மணிக்கு நடக்கிறது. இழப்பதற்கு எதுவும் இல்லை என்ற மனநிலையுடன் அந்த அணிைய எதிர்த்து ஆடுவோம் என்று இந்திய அணியின் பயிற்சியாளர் இகோர் ஸ்டிமாக் கூறியுள்ளார். இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் அடுத்த சுற்றுக்கான வாய்ப்பு பிரகாசமாகும்.

    • கோடிக்கணக்கான மக்களின் இதயத்தை உடைத்ததற்கு மன்னிப்பு கேட்கிறேன்.
    • இந்திய மிகத்தீவிரமாக இந்த தொடரை நடத்தியது.

    புதுடெல்லி:

    13-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி சாம்பியன் பட்டம் பெற்றது. அகமதாபாத்தில் நடந்த இறுதிப் போட்டியில் அந்த அணி இந்தியாவை வீழ்த்தி 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 6-வது முறையாக உலக கோப்பையை கைப்பற்றியது.

    இந்நிலையில் இந்திய ரசிகர் ஒருவரின் பதிவிற்கு பதிலளித்த ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர், இந்திய ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    முற்றிலும் நம்பமுடியாத உலகக் கோப்பையை நடத்தியதற்காக இந்தியாவுக்கு முதலில் நான் நன்றி சொல்ல விரும்புகிறேன். இந்த தொடர்களில் எடுக்கப்பட்ட முயற்சி மிகப்பெரியது. இந்த தொடருக்கு பின்னால் மிகவும் சிறப்பாக செயல்பட்ட மைதான ஊழியர்கள், டிரஸ்ஸிங் ரூம்களில் இருப்பவர்கள், சமையல்காரர்கள், ஹோட்டல் ஊழியர்கள், போலீஸ், நிகழ்ச்சி அமைப்பாளர்கள், என சொல்லி கொண்டே போகலாம்.

    இங்குள்ள ரசிகர் சூழல் நம்ப முடியாத அளவில் இருந்தது. உங்கள் பொறுமை மிகவும் பாராட்டத்தக்கது. நீங்கள் இல்லாமல் நாங்கள் அனைவரும் விரும்பும் விளையாட்டை விளையாட முடியாது. கோடிக்கணக்கான மக்களின் இதயத்தை உடைத்ததற்கு மன்னிப்பு கேட்கிறேன்.

    இவ்வாறு வார்னர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா 240 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.
    • ஆஸ்திரேலியா 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இலக்கை எட்டி சாம்பியன் பட்டம் வென்றது.

    50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இறுதிப் போட்டியில் மோதின. இதில் ஆஸ்திரேலியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடர் முழுவதும் தொடர்ச்சியாக வெற்றி பெற்று இறுதிப் போட்டியில் இந்தியா தோல்வியடைந்ததை, இந்திய ரசிகர்களால் ஜீரணிக்க முடியவில்லை.

    பல ரசிகர்கள் கண்ணீர் விட்டு அழுதனர். பெரும்பாலான ரசிகர்கள், இந்திய அணியால் சாம்பியன் பட்டத்தை வெல்லவே முடியாதா?... என தலையில் அடித்துக் கொண்டனர். இதற்கிடையே இரண்டு ரசிகர்கள் விபரீத முடிவை எடுத்துள்ளனர்.

    ஒடிசா மாநிலம் ஜாஜ்பூர் பகுதியை சேர்ந்த தேவ் ராஜன் தாஸ் (23) என்ற ரசிகர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அதேபோல் மேற்கு வங்காள மாநிலம் பெங்குரா பகுதியை சேர்ந்த ராகுல் லோகர் (23) என்ற ரசிகரும் தற்கொலை செய்து கொண்டார். இவர் போட்டி முடிந்த அன்று இரவு தனது அறையில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்தியாவின் தோல்வி இரண்டு இளம் உயிர்களை பறித்துள்ளது.

    ரசிகர்கள் விளையாட்டை விளையாட்டாக பார்க்க வேண்டும். விளையாட்டில் வெற்றியும் தோல்வியும் சகஜம். அதை உயிர்ப்போகும் அளவிற்கு எடுத்துக் கொள்ளக் கூடாது என்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வரும் நிலையிலும், இதுபோன்ற விபரீத முடிவு எடுக்கப்பட்டு வருவதுதான் துரதிருஷ்டவசமானது. வேதனைக்குரியது.

    • ஆளும் வங்காளதேசம் அவாமி லீக் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.
    • ஜனவரி மாதம் நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட இருக்கிறார்.

    வங்காளதேச அணியின் நட்சத்திர வீரர் சாகிப் அல் ஹசன். வங்காளதேச கிரிக்கெட்டை பொறுத்தவரை இவர் பல்வேறு சாதனைகள் படைத்துள்ளார். இவர் தலைமையில் வங்காளதேசம் அணி உலகக் கோப்பை தொடரை சந்தித்தது. இருந்தபோதிலும் வங்காளதேச அணி சோபிக்க தவறிவிட்டது.

    இலங்கை வீரர் மேத்யூஸ் "டைம் அவுட்" முறையில் ஆட்டமிழந்த விவகாரத்தில் விமர்சனத்திற்கு உள்ளானார்.

    தற்போது ஷாகிப் அல் ஹசன் அரசியல் கட்சியில் இணைந்துள்ளார். வங்காளதேசத்தின் ஆளும் கடசியான வங்களாதேசம் அவாமி லீக்கில் இணைந்துள்ளார். ஷாகிப் அல் ஹசனை வேட்பாளராக நிறுத்த அக்கட்சி தயாராக உள்ளது.

    இதனால் ஷாகிப் அல் ஹசன் தனது வாழ்க்கையில் 2-வது இன்னிங்சை தொடங்க இருக்கிறார். வங்காளதேசத்தில் அடுத்த வருடம் ஜனவரி மாதம் பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. பெரும்பாலான எதிர்க்கட்சிகள் தேர்தலை புறக்கணிப்பதாக தெரிவித்துள்ளன. அப்படி புறக்கணித்தால் ஷேக் ஹசினா 4-வது முறையாக ஆட்சியை பிடிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா விளையாடுகிறது.
    • விசாகப்பட்டினத்தில் நாளைமறுதினம் முதல் போட்டி நடைபெற இருக்கிறது.

    உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் முடிந்த கையோடு இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நாளைமறுதினம் (நவம்பர் 23) முதல் நடைபெற இருக்கிறது.

    இதற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சூர்யகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ருதுராஜ் கெய்க்வாட் துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    அணி விவரம்:-

    1. சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), 2. ருதுராஜ் கெய்க்வாட் (துணைக் கேப்டன்), 3. இஷான் கிஷன், 4. ஜெய்ஸ்வால், 5. திலக் வர்மா, 6. ரிங்கி சிங், 7. ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), 8. வாஷிங்டன் சுந்தர், 9. அக்சார் பட்டேல், 10. ஷிவம் டுபே, 11. ரவி பிஷ்னோய், 12. அர்ஷ்தீப்சிங், 13. பிரசித் கிருஷ்ணா, 14. அவேஷ் கான், 15. முகேஷ் குமார்.

    ஷ்ரேயாஸ் அய்யர் கடைசி இரண்டு போட்டியில் விளையாடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ரோகித் சர்மா, விராட் கோலி, பும்ராவிற்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதின.
    • ஆஸ்திரேலியா அணி 6-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

    உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியை இந்திய வீரர் முகமது சமியின் தாயார் அனும் அரா உத்தர பிரதேச மாநிலத்தின் அம்ரோகா மாவட்டத்தை சேர்ந்த தனது கிராமத்தில் கண்டுகளித்தார். போட்டியின் போது பதட்டம் அடைந்த அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டதாக தெரிகிறது. இதன் காரணமாக அவர் அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

    அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மேல்சிகிச்சை பெற மற்றொரு மருத்துவமனைக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டார். அதன்படி சுகாதார மையத்திற்கு விரைந்த சமியின் தாயார் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. சிகிச்சைக்கு பிறகு அவரின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    "அவர் காய்ச்சல் மற்றும் பதட்டம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவரின் உடல்நிலை, சீராக உள்ளது," என சமியின் உறவினர் மும்தாஸ் தகவல் தெரிவித்ததாக தனியார் செய்தி நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. 

    • துரதிர்ஷ்டவசமாக நேற்று நமது நாள் அல்ல.
    • போட்டி முழுவதும் எங்கள் அணிக்கும் எனக்கும் ஆதரவாக இருந்த அனைத்து இந்தியர்களுக்கும் நன்றி.

    உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தொடர் வெற்றிகளை பெற்று வந்த நிலையில், இறுதிப்போட்டியில் தோல்வி அடைந்தது. அனைத்து போட்டியிலும் வெற்றி பெற்ற இந்திய அணி இறுதிப்போட்டியில் வெற்றி பெறாதது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்தநிலையில் போட்டி முழுவதும் எங்கள் அணிக்கும் எனக்கும் ஆதரவாக இருந்த அனைத்து இந்தியர்களுக்கும் நன்றி என முகமது சமி தெரிவித்துள்ளார்.

    இது குறித்து முகமது சமி கூறியிருப்பதாவது:-

    துரதிர்ஷ்டவசமாக நேற்று நமது நாள் அல்ல. போட்டி முழுவதும் எங்கள் அணிக்கும் எனக்கும் ஆதரவாக இருந்த அனைத்து இந்தியர்களுக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். டிரெஸ்ஸிங் அறைக்கு வந்து எங்களை உற்சாகப்படுத்திய பிரதமருக்கு நன்றி...மீண்டும் வருவோம்...மீண்டு வருவோம்.

    இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

    • அவர் இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் அடித்த பந்தை ஸ்லிப் திசையில் நின்று அற்புதமாக பிடித்தார்.
    • அவருக்கு தங்கப்பதக்கத்தை கடந்த ஆட்டத்தில் சிறந்த பீல்டராக தேர்வு செய்யப்பட்ட ஜடேஜா வழங்கி கவுரவித்தார்.

    அகமதாபாத்:

    உலகக்கோப்பை இறுதி போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்று அரங்கேறியது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி உலகக்கோப்பையை வென்றது. டிராவிஸ் ஹெட் ஆட்டநாயகன் விருதையும், இந்திய வீரர் விராட் கோலி தொடர்நாயகன் விருதையும் பெற்றனர்.

    உலகக்கோப்பை தொடரின் ஒவ்வொரு ஆட்டத்திலும் சிறப்பாக பீல்டிங் செய்யும் இந்திய வீரருக்கு பிசிசிஐ சார்பில் தங்கப்பதக்கம் வழங்கப்பட்டு வந்தது. அதன்படி நேற்று நடைபெற்ற இறுதி போட்டியில் சிறந்த பீல்டராக விராட் கோலி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    அவர் இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் அடித்த பந்தை ஸ்லிப் திசையில் நின்று அற்புதமாக பிடித்தார். அதனால் அவர் சிறந்த பீல்டராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு தங்கப்பதக்கத்தை கடந்த ஆட்டத்தில் சிறந்த பீல்டராக தேர்வு செய்யப்பட்ட ஜடேஜா வழங்கி கவுரவித்தார்.

    முன்னதாக இந்த உலகக்கோப்பை தொடரில் இந்திய அணிக்கான முதல் ஆட்டத்திலும் சிறந்த பீல்டராக விராட் கோலி தேர்வு செய்யப்பட்டு தங்கப்பதக்கம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • நாங்கள் ஒரு சிறந்த தொடரை விளையாடினோம்.
    • நாங்கள் அனைவரும் மனம் உடைந்துள்ளோம்.

    2023-ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா நேற்று மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 240 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி முதலில் விக்கெட்டுகளை இழந்தாலும் அதன்பின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியை தோற்கடித்தது. இதன் மூலம் 6-வது முறையாக உலகக் கோப்பையை ஆஸ்திரேலியா அணி கைப்பற்றியது.

    இந்நிலையில் நாங்கள் இன்றும் எப்போதும் உங்களுடன் இருக்கிறோம் என தோல்வியடைந்த இந்திய வீரர்களுக்கு பிரதமர் மோடி ஆறுதல் தெரிவித்தார். அது மட்டுமின்றி இந்திய வீரர்களின் ஓய்வு அறைக்கு நேரில் சென்று அனைவரையும் சந்தித்து பேசினார்.

    இந்த சந்திப்பு குறித்து ஜடேஜா எக்ஸ் தளத்தில் மோடியின் வருகை ஊக்கமளிப்பதாக இருந்தது என தெரிவித்திருந்தார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    நாங்கள் ஒரு சிறந்த தொடரை விளையாடினோம். ஆனால் நேற்று குறுகிய காலத்தில் அது முடிந்தது. நாங்கள் அனைவரும் மனம் உடைந்துள்ளோம். ஆனால் எங்கள் மக்களின் ஆதரவு எங்களை தொடர்ந்து முன்னேற துண்டுகிறது. பிரதமர் மோடி எங்கள் ஓய்வு அறைக்கு வருகை தந்தது சிறப்பானது மற்றும் ஊக்கமளிப்பதாக இருந்தது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ரோகித் சர்மா, விராட் கோலி, கேஎல் ராகுல், ஜடேஜா, பும்ரா, முகமது சமி ஆகியோர் ஐசிசி கனவு அணியில் இடம் பிடித்தனர்.
    • ஆஸ்திரேலிய அணியில் மேக்ஸ்வேல், ஆடம் ஜாம்பா மட்டுமே தேர்வு செய்யப்பட்டனர்.

    உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டி நேற்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்திய அணி போராடி தோல்வியடைந்தது.

    இந்நிலையில் உலகக் கோப்பை 2023-க்கான கனவு அணியை ஐசிசி அறிவித்துள்ளது. இந்த அணியின் கேப்டனாக ரோகித் இடம் பெற்றுள்ளார். இந்திய அணியில் 6 வீரர்கள் இடம் பிடித்துள்ளனர். ரோகித் சர்மா, விராட் கோலி, கேஎல் ராகுல், ஜடேஜா, பும்ரா, முகமது சமி ஆகியோர் ஐசிசி கனவு அணியின் இடம் பிடித்தனர்.

    ஆஸ்திரேலிய அணியில் மேக்ஸ்வேல், ஆடம் ஜாம்பாவும் தென் ஆப்பிரிக்க அணியில் டி காக், நியூசிலாந்து அணியில் டெய்ரி மிட்செல், இலங்கை அணியில் மதுஷன்கா ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். 12-வது வீரராக தென் ஆப்பிரிக்க அணியில் ஜெரால்ட் கோட்ஸி இடம் பிடித்துள்ளார்.

    ×