என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிரிக்கெட்

முதலும் நீ.. முடிவும் நீ.. சிறந்த பீல்டர் விருதை தட்டிச் சென்ற விராட்

- அவர் இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் அடித்த பந்தை ஸ்லிப் திசையில் நின்று அற்புதமாக பிடித்தார்.
- அவருக்கு தங்கப்பதக்கத்தை கடந்த ஆட்டத்தில் சிறந்த பீல்டராக தேர்வு செய்யப்பட்ட ஜடேஜா வழங்கி கவுரவித்தார்.
அகமதாபாத்:
உலகக்கோப்பை இறுதி போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்று அரங்கேறியது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி உலகக்கோப்பையை வென்றது. டிராவிஸ் ஹெட் ஆட்டநாயகன் விருதையும், இந்திய வீரர் விராட் கோலி தொடர்நாயகன் விருதையும் பெற்றனர்.
உலகக்கோப்பை தொடரின் ஒவ்வொரு ஆட்டத்திலும் சிறப்பாக பீல்டிங் செய்யும் இந்திய வீரருக்கு பிசிசிஐ சார்பில் தங்கப்பதக்கம் வழங்கப்பட்டு வந்தது. அதன்படி நேற்று நடைபெற்ற இறுதி போட்டியில் சிறந்த பீல்டராக விராட் கோலி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அவர் இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் அடித்த பந்தை ஸ்லிப் திசையில் நின்று அற்புதமாக பிடித்தார். அதனால் அவர் சிறந்த பீல்டராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு தங்கப்பதக்கத்தை கடந்த ஆட்டத்தில் சிறந்த பீல்டராக தேர்வு செய்யப்பட்ட ஜடேஜா வழங்கி கவுரவித்தார்.
முன்னதாக இந்த உலகக்கோப்பை தொடரில் இந்திய அணிக்கான முதல் ஆட்டத்திலும் சிறந்த பீல்டராக விராட் கோலி தேர்வு செய்யப்பட்டு தங்கப்பதக்கம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.