என் மலர்
விளையாட்டு
- ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்க ஓபன் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
- 2016-ல் நடந்த ஒலிம்பிக் போட்டியில் கெர்பர் வெள்ளிப் பதக்கம் வென்றவர்.
பாரீஸ்:
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நாளை ஒலிம்பிக் போட்டிகள் கோலாகலமாக தொடங்குகிறது.
இந்நிலையில், ஜெர்மனியைச் சேர்ந்த வீராங்கனை ஏஞ்சலிக் கெர்பர் பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்குப் டென்னிசில் இருந்து ஓய்வு பெற உள்ளேன் என இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக, கெர்பர் வெளியிட்டுள்ள செய்தியில், பாரீஸ் 2024-ஐ ஒருபோதும் மறக்கமாட்டேன். ஏனென்றால் இது ஒரு டென்னிஸ் வீரராக எனது கடைசி தொழில்முறை போட்டியாக இருக்கும்.
இது உண்மையில் சரியான முடிவு. விளையாட்டை முழு மனதுடன் நேசிப்பதாலும், அது எனக்கு வழங்கிய நினைவுகள் மற்றும் வாய்ப்புகளுக்காகவும் நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். மக்களுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். எனது கடைசி போட்டியை முடித்தவுடன் அதைச் செய்வேன் என தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியா ஓபன் மற்றும் அமெரிக்க ஓபன் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றுள்ள இவர், தரவரிசையில் முதல் இடமும் பிடித்துள்ளார்.
ஏஞ்சலிக் கெர்பர் 2016-ல் நடந்த ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
- முழு நேர கேப்டன் என்பதால் சூர்யகுமார் யாதவுக்கு அழுத்தமும் நெருக்கடியும் ஏற்படலாம்.
- இந்த சூழலில் தான் அவர் கம்பீரின் தயவு நிச்சயம் வேண்டும்.
மும்பை:
இந்திய டி20 அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா நியமிக்கபடுவார் என்று எதிர்பார்க்கபட்ட நிலையில் சூர்யகுமார் நியமிக்கப்பட்டார்.
இது குறித்து இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ஸ்ரீதர் கூறியதாவது:-

சூர்யாவை எனக்கு இளம் வயதில் இருந்து தெரியும். சூர்யகுமார் யாதவ், ஒரு இளம் வீரராக தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு வந்து பயிற்சி செய்வார். இளம் வீரர் என்பதால் எப்போதுமே ஆக்ரோஷமாக இருப்பார். தற்போது நான் அவரை பார்க்கும் போது முதிர்ச்சி அடைந்த வீரராக இருக்கின்றார்.
ஐபிஎல் தொடரிலோ இந்திய அணிக்கோ சூர்யகுமார் யாதவ் பெரிய அளவில் வழிநடத்தியது கிடையாது. ஆனால் இந்திய அணிக்காக ஒரு எட்டு போட்டிகளில் கேப்டனாக இருந்திருக்கிறார். அப்போது நான் கிரிக்கெட் வர்ணனையில் இருந்தேன். அதில் சூர்ய குமார் யாதவ் ஒரு கேப்டனாக சிறந்த ஒரு பணியை செய்தார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரிலும் சூர்யகுமார் யாதவும் கேப்டனாக நல்ல பணியை மேற்கொண்டார்.
கேப்டனாக முதலில் இது அவருக்கு கடும் சவால்களை அளிக்கலாம். ஆனால் சூர்யகுமார் யாதவ் இந்தப் பணியை சிறப்பாக செய்வார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது. ஒரு வெற்றிகரமான கேப்டனாக கூடிய அனைத்து தகுதியிலும் அவருக்கு இருக்கின்றது.
தற்போது முழு நேர கேப்டன் என்பதால் சூர்யகுமார் யாதவுக்கு அழுத்தமும் நெருக்கடியும் ஏற்படலாம். இந்த சூழலில் தான் அவர் கம்பீரின் தயவு நிச்சயம் வேண்டும். கம்பீருடன் இணைந்து செயலாற்ற வேண்டும். கே கே ஆர் அணிக்கு விளையாடும் போது கம்பீரை சூர்யகுமார் யாதவுக்கு நன்கு தெரியும் என்பதால் இருவரும் பழகுவதில் எந்த சிக்கலும் இருக்காது.
என ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.
- தென்கொரியா 2049 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்தது.
- பிரான்ஸ் 2025 புள்ளிகள் பெற்று 2-வது இடம் பிடித்தது.
பாரிஸ் ஒலிம்பிக்கில் வில்வித்தை போட்டிக்கான முதன்மை சுற்றுகள் 30-ந்தேதி தொடங்குகின்றன. இன்று தரவரிசை பெறுவதற்கான சுற்று நடைபெற்றது. இதில் ஒவ்வொரு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் 72 அம்புகள் எய்த வேண்டும். புள்ளிகள் அடிப்படையில் தரவரிசை கொடுக்கப்படும்.
தனிநபர் புள்ளிகள் அணிகள் மற்றும் கலப்பு அணிகளுக்கு அப்படியே சேர்க்கப்படும். அதன்படி இன்று மதியம் பெண்களுக்கான போட்டி நடைபெற்றது. இதில் இந்திய வீராங்கனைகள் (இந்திய அணி) 4-வது இடத்தை பிடித்து காலிறுதிக்கு தகுதி பெற்றனர்.
இந்த நிலையில் தற்போது ஆண்களுக்கான போட்டி நடைபெற்றது. இந்தியாவின் திராஜ் பொம்மாதேவரா, தருண்தீப் ராய், பிரவீன் ரமேஷ் ஜாதவ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
திராஜ் பொம்மாதேவரா 681 புள்ளிகளும், தருண்தீப் ராய் 674 புள்ளிகளும், பிரவீன் ரமேஷ் ஜாதவ் 658 புள்ளிகளும் பெற்றனர். மொத்தமாக 2013 புள்ளிகள் பெற்று அணிகள் பிரிவில் 3-வது இடம் பிடித்தனர். இதனால் ஆண்கள் அணி காலிறுதிக்கு தகுதி பெற்றனர். முதல் நான்கு அணிகள் காலிறுதிக்கு தகுதி பெறும். மீதமுள்ள 8 அணிகளில் நான்கு அணிகள் காலிறுதிக்கு தகுதி பெறும். தென்கொரியா 2049 புள்ளிகளுடன் முதலிடத்தையும், பிரான்ஸ் 2025 புள்ளிகளுடன் 2-வது இடத்தையும் பிடித்தன.
- குரோசியா ஓபன் தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்று நடந்தது.
- இதில் இத்தாலி வீரர் முசெட்டி வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.
ஜாக்ரெப்:
குரோசியா ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு சுற்று நேற்று நடைபெற்றது.
இதில் இத்தாலி வீரர் லாரன்சோ முசெட்டி, அர்ஜெண்டினாவின் மார்கோ உடன் மோதினார்.
இந்தப் போட்டியின் முடிவில் முசெட்டி 6-4, 6-3 என்ற நேர் செட்கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.
நாளை நடைபெறும் காலிறுதியில் முசெட்டி, செர்பிய வீரர் டுசன் லஜோவிக்கை சந்திக்கிறார்.
- முதலில் நடைபெற்ற 2 டெஸ்ட் போட்டிகளிலும் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது.
- இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை இங்கிலாந்து அணி கைப்பற்றியது.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதல் 2 டெஸ்ட் போட்டிகளிலும் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை கைப்பற்றி உள்ளது.
இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியானது நாளை பர்மிங்ஹாமில் நடைபெற உள்ளது. இந்நிலையில் இப்போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியானது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இரண்டாவது டெஸ்ட் போட்டியின்போது காயமடைந்த வேகப்பந்து வீச்சாளர் ஜெர்மையா லூயிசுக்கு பதிலாக அறிமுக வீரர் அகீம் ஜோர்டன் அணியில் இடம்பிடித்துள்ளார்.
அகீம் ஜோர்டன் கடந்த 2022-ம் ஆண்டு முதல் விளையாடி 19 முதல் தர போட்டிகளில் 67 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் அணி:
கிரேக் பிராத்வைட் (கேப்டன்), அலிக் அதானாஸ், ஜோசுவா டா சில்வா, ஜேசன் ஹோல்டர், கவேம் ஹாட்ஜ், டெவின் இம்லாச், அகீம் ஜோர்டான், அல்ஸாரி ஜோசப், ஷமார் ஜோசப், மைக்கைல் லூயிஸ், சச்சரி மெக்கஸ்கி, கிர்க் மெக்கென்சி, கெமர் ரோச், குடகேஷ் மோட்டி, ஜெய்டன் சீல்ஸ், கெவின் சின்க்ளேர்.
- சாம்பியன் டிராபி அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற உள்ளது.
- இந்த தொடர் பாகிஸ்தானில் நடைபெறுகிறது.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி அடுத்த வருடம் பாகிஸ்தானில் நடைபெற இருக்கிறது. பாகிஸ்தான் சென்று விளையாட இந்திய அணி தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறது. பொதுவான இடத்திற்கு போட்டியை மாற்ற வேண்டும் என இந்தியா கோரிக்கை விடுத்து வருகிறது.
இந்தியா கடைசியாக 2008-ம் ஆண்டு ஆசியக் கோப்பைக்காக பாகிஸ்தானுக்குச் சென்றது. அதன்பிறகு, இரு அணிகளும் ஐசிசி தொடர்களில் மட்டுமே மோதி வருகின்றனர்.
இந்நிலையில் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக விராட் கோலி பாகிஸ்தானுக்கு வந்து விளையாட வேண்டும் என பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் யூனிஸ் கான் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
2025 சாம்பியன்ஸ் டிராபிக்காக கோலி பாகிஸ்தானுக்கு வர வேண்டும். அது எங்களின் விருப்பமும் கூட. பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து விளையாடுவது மட்டுமே விராட்டின் வாழ்க்கையில் எஞ்சியிருக்கும் என்று நான் நினைக்கிறேன்.
என்று யூனிஸ்கான் கூறினார்.
- குரோசியா ஓபன் தொடரில் ஆண்கள் இரட்டையர் பிரிவு காலிறுதி சுற்று நடந்தது.
- இதில் யூகி பாம்ப்ரி-அல்பானோ ஜோடி தோல்வி அடைந்தது.
ஜாக்ரெப்:
குரோசியா ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது. ஆண்கள் இரட்டையர் பிரிவு காலிறுதி சுற்று இன்று நடைபெற்றது.
இதில் நம்பர்-3 அந்தஸ்து பெற்ற இந்தியாவின் யூகி பாம்ப்ரி, பிரான்சின் அல்பானோ ஜோடி, பிரான்சின் மானுவல் கினார்டு-கிரிகோரி ஜாக் ஜோடியைச் சந்தித்தது.
முதல் செட்டை பிரான்ஸ் ஜோடி 6-4 என கைப்பற்றியது. இதற்கு பதிலடியாக யூகி பாம்ப்ரி ஜோடி 6-1 என எளிதில் கைப்பற்றியது.
வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை பிரான்ஸ் ஜோடி 10-6 என கைப்பற்றி, அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது. இந்த தோல்வியின் மூலம் யூகி பாம்ப்ரி ஜோடி குரோசியா ஓபன் தொடரில் இருந்து வெளியேறியது.
- ஒலிம்பிக் போட்டிகள் நாளை தொடங்கி ஆகஸ்டு 11-ம் தேதி வரை நடைபெறுகிறது.
- இம்முறை இந்தியா இரட்டை இலக்கத்தில் பதக்கம் வெல்லவேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
புதுடெல்லி:
33-வது ஒலிம்பிக் திருவிழா பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நாளை தொடங்கி ஆகஸ்டு 11-ம்தேதி வரை நடைபெற உள்ளது. இதில் 16 விளையாட்டுகளில் சுமார் 112 இந்திய வீரர்கள், வீராங்கனைகள் களமிறங்குகிறார்கள்.
இந்நிலையில் பாரிசில் நடைபெற உள்ள ஒலிம்பிக் தொடரின் தொடக்க விழா அணிவகுப்பில் இந்தியா சார்பில் டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல் மற்றும் பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து ஆகியோர் தேசிய கொடியை ஏந்திச் செல்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒலிம்பிக் தொடரில் இந்திய அணியின் தலைவராக ககன் நரங் செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ககன் நரங் 5 முறை ஒலிம்பிக்கில் பங்கேற்றவர்.
கடந்த முறை டோக்கியோவில் நடந்த ஒலிம்பிக்கில் ஒரு தங்கம், 2 வெள்ளி மற்றும் 4 வெண்கலம் என மொத்தம் 7 பதக்கங்களை இந்தியா வென்றிருந்தது. இம்முறை இந்திய அணி இரட்டை இலக்கத்தில் பதக்கங்கள் வெல்ல வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
- இளம் வீரர் ரூ.20 லட்சத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டால், அவரின் ஊதியம் அடுத்த மெகா ஏலம் வரை ரூ.20 லட்சமாகவே இருக்கும்.
- ரூ.30 லட்சத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட இளம் வீரர், சிறப்பாக செயல்பட்டால் அவருக்கு ரூ.3 கோடிக்கு ஒப்பந்தம் அளிக்கலாம்.
மும்பை:
ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் இன்னும் சில மாதங்களில் நடக்கவுள்ள நிலையில், ஐபிஎல் உரிமையாளர்களின் ஆலோசனை கூட்டம் வரும் 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் நடக்கவுள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் வீரர்களை ரீடெய்ன் செய்வதற்கான விதிகள், ஆர்டிஎம், இம்பேக்ட் பிளேயர் விதி உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது.
ஆர்டிஎம் விதி என்பது, ஒரு அணி ஏலத்திற்கு முன்பு 3 வீரர்களை ரீடெய்ன் செய்து கொள்ளலாம். அதன் பிறகு ஏலத்தின் போது மற்ற அணி வீரர்கள் தங்களது வீரர்களை அதிக விலைக்கு எடுக்கும் போது ஆர்டிஎம் முறைப்படி அந்த வீரரை தனது அணிக்கு எடுத்துக் கொள்ளலாம்.
இந்த முறையை பயன்படுத்தி ஒவ்வொரு அணியும் 4 முதல் 5 வீரர்களை ஆர்டிஎம் முறைப்படியும் சில அணிகள் 8 வீரர்களை ஆர்டிஎம் முறைப்படி எடுத்துக் கொள்ளலாம் என ஆலோசனை வழங்கி வருகின்றனர்.
அந்த வகையில் இதுவரை நடந்த ஆலோசனை கூட்டத்தில் கேகேஆர் அணி தரப்பில் ஒரு வீரரை மட்டும் ரீடெய்ன் செய்ய அனுமதி கொடுத்துவிட்டு, 8 ஆர்டிஎம் வாய்ப்புகளை அளிக்கலாம். இதன் மூலமாக இந்திய வீரர்கள் அனைவரும் ஏலத்தில் பங்கேற்று, அவர்களின் தகுதிக்கேற்ற ஊதியத்தை பெற முடியும் என்று பரிந்துரை அளிக்கப்பட்டது. அதேபோல் மும்பை அணி தரப்பில் 5 அல்லது 6 வீரர்களை ரீடெய்ன் செய்ய அனுமதிக்க கோரிக்கை விடுத்தது.
இதனிடையே பஞ்சாப், டெல்லி, லக்னோ போன்ற அணிகள் 3 வீரர்களுக்கு மேல் ரீடெய்ன் எண்ணிக்கையை அதிகரிக்க கூடாது என்று கூறி வருகின்றனர். அதேபோல் இந்த அணிகள் இளம் வீரர்களை பாதுகாக்கவும், அவர்கள் நன்றாக செயல்பட்டால் ஊதியத்தை அதிகரிக்க பிசிசிஐ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.
ஏனென்றால் இளம் வீரர் ரூ.20 லட்சத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டால், அவரின் ஊதியம் அடுத்த மெகா ஏலம் வரை ரூ.20 லட்சமாகவே இருக்கும். இதனால் அந்த வீரர் மீண்டும் ஏலத்திற்கு செல்ல விரும்புவார். மும்பை போன்ற அணிகள் அவரை அணுகும் போது, சில சர்ச்சைக்குரிய விஷயங்கள் நடக்க வாய்ப்புகள் உள்ளது.
இதனால் ஒரு இளம் வீரர் சிறப்பாக செயல்பட்டால், அவரின் ஒப்பந்தத்தை மாற்றியமைக்க அனுமதிக்க பல்வேறு அணிகளும் கோரிக்கை வைத்துள்ளனர். உதாரணமாக ரூ.30 லட்சத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட இளம் வீரர், அந்த சீசனில் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் அவருக்கு ரூ.3 கோடிக்கு ஒப்பந்தம் அளிக்கலாம் என்று அனுமதி கோரப்பட்டுள்ளது.
அதேபோல் மெகா ஏலத்தை முன்னிட்டு ஒவ்வொரு அணிகளின் பர்ஸ் வேல்யூவையும் ரூ.130 கோடி முதல் ரூ.140 கோடியாக அதிகரிக்க வேண்டும் என்று பரிந்துரைகள் அளிக்கப்பட்டுள்ளன. இதுவரை ஐபிஎல் தொடரில் ஒரு அணியின் பர்ஸ் தொகையாக ரூ.100 கோடி வரை அனுமதிக்கப்பட்டது. சுமார் ரூ.30 கோடி முதல் ரூ.40 கோடி வரை அதிகரித்தால், வீரர்களின் மதிப்பும் ஊதியமும் அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
- பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் 117 பேர் கொண்ட இந்திய அணி பங்கேற்கிறது.
- வில்வித்தை மகளிர் பிரிவுக்கான தரவரிசையை முடிவு செய்வதற்கான சுற்று நடந்தது.
பாரிஸ்:
பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் 117 பேர் கொண்ட இந்திய அணி பங்கேற்கிறது. வில்வித்தை, தடகளம், பேட்மிண்டன், குத்துச்சண்டை, குதிரையேற்றம், ஹாக்கி உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வீரர், வீராங்கனைகள் களம் காண்கின்றனர்.
இந்நிலையில், வில்வித்தை மகளிர் பிரிவுக்கான தரவரிசையை முடிவு செய்வதற்கான சுற்று இன்று நடைபெற்றது. இதில் 72 அம்புகள் எய்யப்பட்டன.
இதில் தென் கொரியா 2016 புள்ளிகளுடன் முதல் இடத்தையும், சீனா 1996 புள்ளிகளுடன் 2வது இடத்தையும், மெக்சிகோ 1986 புள்ளிகளுடன் 3வது இடத்தையும், இந்தியா 1983 புள்ளிகளுடன் 4வது இடத்தையும் பிடித்தன.
இதன்மூலம் வில்வித்தை பிரிவில் இந்திய மகளிர் அணி காலிறுதி சுற்றுக்கான வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டுள்ளது.
- தென் ஆப்பிரிக்கா அணி டெஸ்ட் மற்றும் டி20 தொடரில் விளையாடுவதற்காக வெஸ்ட் இண்டீஸ் செல்ல உள்ளது.
- இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி அடுத்த மாதம் 7-ந் தேதி தொடங்குகிறது.
வெஸ்ட் இண்டீஸ் அணி தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் 0-2 என்ற கணக்கில் தொடரை வெஸ்ட் இண்டீஸ் அணி இழந்துள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது.
இந்த போட்டி முடிந்தவுடன் தாயகம் திரும்ப உள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி சொந்த மண்ணில் தென் ஆப்பிரிக்காவுடன் டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. முதலில் டெஸ்ட் போட்டிகளும் அதனை தொடர்ந்து 3 டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி அடுத்த மாதம் 7-ந் தேதி தொடங்குகிறது.
இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளர் கோட்ஸி காயம் காரணமாக விலகி உள்ளார். அவருக்கு மாற்றுவீரராக பிரிட்டோரியஸ் நியமிக்கப்பட்டார்.
- இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி வரும் 27-ம் தேதி நடக்கிறது.
- நுவான் துஷாரா காயத்தால் இந்த தொடரில் இருந்து விலகி உள்ளார்.
கொழும்பு:
இந்திய அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.
இந்தத் தொடரில் இருந்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கம்பீர் செயல்பட்டு வருகிறார். இவரது தலைமையில் இந்திய வீரர்கள் வலை பயிற்சியில் ஈடுபட்டனர்.
இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி வரும் 27-ம் தேதி நடக்க உள்ளது.
இதற்கிடையே, இலங்கை அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் சமீரா காயம் காரணமாக இந்தத் தொடரில் இருந்து விலகி உள்ளார்.
இந்நிலையில், இந்தியாவுக்கு எதிரான தொடரில் இருந்து மற்றொரு வேகப்பந்து வீச்சாளரான நுவான் துஷாரா காயம் காரணமாக விலகி உள்ளார். அவருக்கு பதிலாக தில்ஷன் மதுஷனகா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.






