என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • டி20 உலகக் கோப்பைக்கு பிறகு இந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது.
    • வங்கதேசம் அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடுகிறது.

    புதுடெல்லி:

    டி20 உலகக் கோப்பை தொடருக்கு பின் இந்திய அணி ஜிம்பாப்வேவுக்கு எதிராக டி20 தொடர் மற்றும் இலங்கை அணிக்கு எதிராக டி20 மற்றும் ஒருநாள் தொடர் ஆகியவற்றில் விளையாடியது. இந்த இரு தொடர்களிலும் நட்சத்திர பந்து வீச்சாளர் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது.

    இதையடுத்து, பும்ரா தனது குடும்பத்தினருடன் நேரம் செலவிட்டார்.

    இதற்கிடையே, வங்கதேசம் அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடுகிறது. செப்டம்பர் 19-ம் தேதி முதல் டெஸ்டும், செப்டம்பர் 27-ம் தேதி 2வது டெஸ்ட்டும் நடைபெற உள்ளது.

    இந்நிலையில், வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் பும்ராவுக்கு ஓய்வை நீட்டிக்க பி.சி.சி.ஐ. முடிவுசெய்துள்ளதாக தகவல் வெளியாகியது.

    இந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடரில் இந்திய அணி விளையாடவுள்ளது. இந்த தொடருக்காகவே அவருக்கு ஓய்வு அளிக்கப்படுவதாக தகவல் வெளியாகியது.

    பும்ராவுக்கு பதிலாக இந்திய அணியில் இருந்து இடதுகை வேகப்பந்து வீச்சாளர் ஒருவரை தயார் செய்ய இந்திய அணி முடிவெடுத்துள்ளது.

    இதில் அர்ஷ்தீப் சிங், கலீல் அகமது மற்றும் யாஷ் தயாள் ஆகியோர் அந்தப் பட்டியலில் உள்ளனர். உள்ளூர் போட்டியான துலீப் டிராபியில் விளையாட இவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
    • இதில் ரஷிய வீரர் டேனில் மெத்வதேவ் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் சின்சினாட்டி டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். தற்போது முதல் சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன.

    இந்நிலையில், இன்று நடந்த முதல் சுற்றில் ரஷிய வீரர் டேனில் மெத்வதேவ், செக் நாட்டு வீரர் ஜிரி லெஹெகாவை எதிர்கொண்டார்.

    இந்தப் போட்டியில் மெத்வதேவ் 6-7 (2-7), 4-6 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மகளிர் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் வங்கதேசத்தில் நடைபெறவுள்ளது.
    • வன்முறை சூழ்ந்த வங்கதேசத்தில் கள நிலவரத்தை ஐசிசி தொடர்ந்து கண்காணித்து வருகிறது.

    ஐசிசி நடத்தும் மகளிர் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் அடுத்த மாதம் நடைபெற இருக்கிறது. தற்போதைய திட்டப்படி இந்த தொடரை வங்கதேசம் நடத்த இருக்கிறது.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கும் வங்கதேசம் நாட்டில் தற்போது உள்நாட்டு கலவரம் வெடித்துள்ளது. ராணுவம் ஆட்சியை கைப்பற்றி, அந்நாட்டு தேசிய அரசியலில் பரபரப்பான சூழல் ஏற்பட்டு உள்ளது. மேலும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் மற்றும் வன்முறை தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

    இதன் காரணமாக வருகிற அக்டோபர் மாதம் துவங்க இருக்கும் மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் திட்டமிட்டப்படி வங்கதேசத்தில் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும், வன்முறை சூழ்ந்த வங்கதேசத்தில் கள நிலவரத்தை ஐசிசி தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

    ஒருவேளை வங்காளதேசத்தில் மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறாத பட்சத்தில், இதனை இந்தியா நடத்துவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்பட்டது.

    இந்நிலையில், வங்கதேசத்தில் நிலவி வரும் உள்நாட்டு பிரச்னை காரணமாக அங்கு நடத்த திட்டமிடப்பட்டுள்ள மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை இந்தியாவில் நடத்த முடியுமா என ஐசிசி பிசிசிஐயிடம் கேட்டுள்ளது.

    ஆனால், அக்டோபர் மாதம் மழைக்காலம் தொடங்கிவிடும் என்பதாலும், இந்தியாவில் அடுத்தாண்டு மகளிர் ODI உலக கோப்பை நடக்கவுள்ளதாலும் ஐசிசியின் கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டதாக பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா தெரிவித்துள்ளார்.

    ஆதலால் மகளிர் டி20 உலகக் கோப்பை நடைபெறும் இடம் குறித்து விரைவில் ஐசிசி முடிவெடுக்கும் என்ற எதிர்பார்க்கப்படுகிறது.

    • வினேஷ் போகத்தின் பதக்க கனவு கலைந்தது.
    • உலகம் முழுவதும் வைரம் போல் பிரகாசிக்கிறீர்கள்.

    வினேஷ் போகத்தின் மேல் முறையீட்டு மனுவை சர்வதேச விளையாட்டு நீதி மன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதன் மூலம் இறுதிப் போட்டியில் நுழைந்த அவரது பதக்க கனவு கலைந்தது.

    இதுகுறித்து சக மல்யுத்த வீரரும், டோக்கியோ ஒலிம் பிக்கில் வெண்கல பதக்கம் வென்றவருமான பஜ்ரங் புனியா கூறியதாவது:-

    இந்த இருளில் உங்கள் (வினேஷ் போகத்) பதக்கம் பறிக்கப்பட்டதாக நான் நம்புகிறேன். நீங்கள் இன்று உலகம் முழுவதும் வைரம் போல் பிரகாசிக்கிறீர்கள். உலக சாம்பியன் இந்தியாவின் பெருமை. நீங்கள் நாட்டின் கோஹினூர் வைரம். பதக்கம் வாங்க விரும்புபவர்கள் அவற்றை ஒவ்வொன்றையும் ரூ.15-க்கு வாங்கலாம்.

    இவ்வாறு பஜ்ரங் புனியா கூறியுள்ளார்.

    இந்திய மல்யுத்த சம்மேளன முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷன் சிங்குக்கு எதிராக போராட்டத்தில் வினேஷ் போகத், பஜ்ரங் புனியா ஆகியோர் முக்கிய பங்கு வகித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தமிழகத்தில் இருந்து 6 பேர் பாரா ஒலிம்பிக்கில் பங்கேற்கிறார்கள்.
    • இந்திய அணி 12 விளையாட்டுகளில் பங்கேற்கிறது.

    புதுடெல்லி:

    உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் சமீபத்தில் முடிவடைந்தது. இதல் 117 பேர் கொணட இந்திய அணி 16 விளையாட்டுகளில் பங்கேற்றது. இந்தியாவுக்கு 1 வெள்ளி, 5 வெண்கலம் ஆக மொத்தம் 6 பதக்கம் கிடைத்தது.

    ஒலிம்பிக் முடிவடைந்ததை தொடர்ந்து பாரீசில் பாரா ஒலிம்பிக் போட்டி நடத்தப்படுகிறது. வருகிற 28-ந்தேதி முதல் செப்டம்பர் 8-ந் தேதி வரை இந்த போட்டி நடக்கிறது. 22 விளையாட்டுகளில் 549 பிரிவுகளில் போட்டி நடைபெறுகிறது.

    பாரா ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 84 பேர் கொண்ட இந்திய அணி இந்த போட்டிக்கு தேர்வு செய்யப் பட்டுள்ளது. 52 வீரர்கள், 32 வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள்.

    இந்திய அணி வில் வித்தை, தடகளம், பேட்மின்டன், சைக்கிளிங், ஜூடோ, வலு தூக்குதல், துப்பாக்கி சுடுதல், நீச்சல், டேபிள் டென்னிஸ், டேக்வாண்டோ உள்பட 12 விளையாட்டுகளில் பங்கேற்கிறது.

    தமிழகத்தில் இருந்து 6 பேர் பாரா ஒலிம்பிக்கில் பங்கேற்கிறார்கள். அதன் விவரம்:-

    டி.மாரியப்பன் (உயரம் தாண்டுதல்), துளசிமதி, முருகேசன், மனிஷா ராமதாஸ், நித்யா ஸ்ரீசிவன், சிவராஜன் சோலைமலை (நால்வரும் பேட்மின்டன்), கஸ்தூரி ராஜாமணி (வலு தூக்குதல்)

    29 வயதான தங்கவேலு மாரியப்பன் பாரா ஒலிம் பிக்கில் 2 பதக்கம் பெற்றுள்ளார். 2016 ரியோவில் நடந்த பாரா ஒலிம்பிக்கில் தங்கமும், 2021-ம் ஆண்டு டோக்கியோவில் நடை பெற்ற பாரா ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கமும் பெற்றார். தொடர்ந்து 37-வது முறையாக பாரா ஒலிம்பிக்கில் மாரியப்பன் பதக்கம் பெறுவாரா? என்ற எதிர்பாரப்பு அதிகமாக உள்ளது.

    இந்த ஆண்டு நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியிலும் மாரியப்பன் தங்கம் வென்று இருந்தார். மற்ற தமிழக வீரர், வீராங்கனைகள் முதல் முறையாக பாரா ஒலிம்பிக்கில் பங்கேற்கிறார்கள். இதில் துளசிமதி, மனிஷா, நித்யா ஆகியோர் சர்வதேச போட்டிகளில் பதக்கம் வென்று இருக்கிறார்கள்.

    கடந்த 2021-ம் ஆண்டு டோக்கியோவில் நடந்த பாரா ஒலிம்பிக்கில் 54 பேர் கொண்ட இந்திய அணி 9 விளையாட்டுகளில் பங்கேற்றது. இதில் 5 தங்கம், 8 வெள்ளி, 6 வெண்கலம் ஆகி மொத்தம் 19 பதக்கம் கிடைத்தது.

    தற்போது அதைவிட கூடுதலாக பாரீஸ் பாரா ஒலிம்பிக்கில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த முறை பங்கேற்றவர்களில் 19 பேர் இந்த தடவை இடம் பெற்றுள்ளனர்.

    • வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக ஒலிம்பிக் கமிட்டி அறிவித்தது.
    • தகுதி நீக்கத்திற்கு எதிரான வினேஷ் போகத்தின் முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டது.

    பாரீஸ் ஒலிம்பிக்கில் பெண்கள் 50 கிலோ எடைப்பிரிவுக்கான மல்யுத்த இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் அமெரிக்காவைச் சேர்ந்த சாரா ஹில்டெப்ரண்ட்-ஐ எதிர்கொள்ள இருந்தார்.

    ஆனால் வினேஷ் போகத் உடல் எடை சில கிராம்கள் வரை கூடி இருப்பதால் அவர் தகுதிநீக்கம் செய்யப்பட்டதாக ஒலிம்பிக் கமிட்டி அறிவித்தது.

    இதையடுத்து, தனது தகுதி நீக்கத்திற்கு எதிராக விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றத்தில் வினேஷ் போகத் முறையிட்டுள்ளார்.

    தனது தகுதிநீக்கத்தை ரத்துசெய்ய வேண்டும் எனக்கூறிய வினேஷ் போகத், இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்ற தமக்கு வெள்ளிப் பதக்கம் பகிர்ந்து அளிக்கவேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

    இந்த வழக்கு சமீபத்தில் விசாரணைக்கு வந்தது. வினேஷ் போகத் விவகாரத்தில் அனைத்து தரப்பினரிடமும் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், தீர்ப்பு தேதி 2 முறை ஒத்திவைக்கப்பட்டது.

    இந்நிலையில், பாரிஸ் ஒலிம்பிக்ஸில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிரான வினேஷ் போகத்தின் மேல்முறையீட்டு மனுவை சர்வதேச விளையாட்டு நடுவர் மன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இந்த முடிவால் வினேஷ் போகத்தின் வெள்ளி பதக்க கனவு பறிபோயுள்ளது.

    இந்நிலையில், வினேஷ் போகத்துக்கு ஆதரவாக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் முனாப் பட்டேல் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அவரது பதிவில், "வெள்ளி பதக்கம் தொடர்பாக நாங்கள் அனைவரும் கேட்க விரும்பிய செய்தி இது அல்ல. ஆனால் வினேஷ் போகத், நீங்கள் எப்போதும் எங்களுக்கு ஒரு சாம்பியன். உங்களின் முயற்சிகளை நினைத்து நாங்கள் பெருமைப்படுகிறோம்" என்று தெரிவித்துள்ளார்.

    • வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக ஒலிம்பிக் கமிட்டி அறிவித்தது.
    • தகுதி நீக்கத்திற்கு எதிராக விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றத்தில் வினேஷ் போகத் முறையீடு.

    பாரீஸ்:

    பாரீஸ் ஒலிம்பிக்கில் பெண்கள் 50 கிலோ எடைப்பிரிவுக்கான மல்யுத்த இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் அமெரிக்காவைச் சேர்ந்த சாரா ஹில்டெப்ரண்ட்-ஐ எதிர்கொள்ள இருந்தார்.

    ஆனால் வினேஷ் போகத் உடல் எடை சில கிராம்கள் வரை கூடி இருப்பதால் அவர் தகுதிநீக்கம் செய்யப்பட்டதாக ஒலிம்பிக் கமிட்டி அறிவித்தது. அவர் தகுதிநீக்கம் செய்யப்பட்டதால் அரையிறுதியில் அவரிடம் 5-0 என்ற கணக்கில் தோல்வி அடைந்த கியூபா வீராங்கனை குஸ்மான் இறுதிப்போட்டிக்கு விளையாட தகுதிபெற்றார்.

    இதையடுத்து, தனது தகுதி நீக்கத்திற்கு எதிராக விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றத்தில் வினேஷ் போகத் முறையிட்டுள்ளார்.

    தனது தகுதிநீக்கத்தை ரத்துசெய்ய வேண்டும் எனக்கூறிய வினேஷ் போகத், இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்ற தமக்கு வெள்ளிப் பதக்கம் பகிர்ந்து அளிக்கவேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

    இந்த வழக்கு சமீபத்தில் விசாரணைக்கு வந்தது. வினேஷ் போகத் விவகாரத்தில் அனைத்து தரப்பினரிடமும் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், தீர்ப்பு தேதி 2 முறை ஒத்திவைக்கப்பட்டது.

    இந்நிலையில், பாரிஸ் ஒலிம்பிக்ஸில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிரான வினேஷ் போகத்தின் மேல்முறையீட்டு மனுவை சர்வதேச விளையாட்டு நடுவர் மன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

    இந்த முடிவால் வினேஷ் போகத்தின் வெள்ளி பதக்க கனவு பறிபோயுள்ளது.

    • அடுத்த வருடம் பாகிஸ்தான் சாம்பியன்ஸ் டிராபி தொடரை நடத்துகிறது.
    • இதற்காக மைதானத்தை புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    வங்கதேச அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக பாகிஸ்தான் சென்றுள்ளது. 2-வது டெஸ்ட் போட்டி கராச்சி நேஷனல் பேங்க் மைதானத்தில் ஆகஸ்ட் 30-ந்தேதி தொடங்குகிறது.

    இந்த போட்டியை நேரில் பார்த்து ரசிப்பதற்கு ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கை உடனடியாக அமலுக்கு வருகிறது எனவும் தெரிவித்துள்ளது. ஏற்கனவே டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டிருந்தால் ரசிகர்களுக்கு முழுத்தொகையும் திருப்பி வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.

    அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடைபெற இருக்கிறது. இதற்காக மைதானத்தை (கேலரி உள்ளிட்ட இடங்கள்) புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் ரசிகர்களுக்கு அனுமதி இல்லை எனத் தெரிவித்துள்ளது. ரசிகர்களின் பாதுகாப்புதான் எங்களுடைய முதன்மை நோக்கம் இதனால் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.

    1996-ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் கராச்சி மைதானத்தில் நடைபெற்றன. அதன்பின் நடைபெற இருக்கும் ஐசிசி தொடர் (சாம்பியன்ஸ் டிராபி) இதுவாகும்.

    பாகிஸ்தான்- வங்கதேசம் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் ஆகஸ்ட் 21-ந்தேதி தொடங்குகிறது.

    • அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
    • இதில் குரோசியா வீராங்கனை டோனா வெகிக் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் சின்சினாட்டி டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். தற்போது முதல் சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன.

    இந்நிலையில், இன்று நடந்த முதல் சுற்றில் குரோசிய வீராங்கனை டோனா வெகிக், அமெரிக்காவின் ஆஷ்லின் குருகருடன் மோதினார்.

    இந்தப் போட்டியில் ஆஷ்லின் 5-7, 7-6 (7-4), 6-2 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். இதன்மூலம் குரோசிய வீராங்கனை வெகிக் தொடரில் இருந்து வெளியேறினார்.

    • மோர்னே மோர்கல் பவுலிங் பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
    • லக்னோ அணி வழிகாட்டியாக கம்பீர் இருந்தபோது மோர்கல் பவுலிங் பயிற்சியாளராக செயல்பட்டார்.

    புதுடெல்லி:

    இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் சமீபத்தில் நியமனம் செய்யப்பட்டார்.

    கவுதம் கம்பீர் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில் பந்துவீச்சு பயிற்சியாளர், பேட்டிங், பீல்டிங் பயிற்சியாளர் போன்றவர்களையும் தேர்வு செய்யாமல் இருந்தது.

    இதற்கிடையே, பவுலிங் பயிற்சியாளராக பாகிஸ்தான் அணியின் முன்னாள் பயிற்சியாளராக இருந்த தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த மோர்னே மோர்கலை நியமிக்குமாறு கம்பீர் கேட்டிருந்தார். அதற்கு பி.சி.சி.ஐ. எந்த பதிலும் கூறாமல் இருந்தது.

    இந்நிலையில், இந்திய அணியின் புதிய பவுலிங் பயிற்சியாளராக மோர்னே மோர்கல் செயல்படுவார் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதுகுறித்த தகவலை பி.சி.சி.ஐ. செயலாளர் ஜெய்ஷா உறுதிப்படுத்தியுள்ளார்.

    கவுதம் கம்பீர் மற்றும் மோர்னே மோர்கல் இருவரும் நீண்ட நாட்களாக நல்ல உறவில் இருந்து வருகின்றனர். கம்பீர் ஒரு வீரராக கொல்கத்தா அணிக்கு விளையாடிய போது மோர்கல் விளையாடியுள்ளார்.

    லக்னோ அணியின் வழிகாட்டியாக கம்பீர் இருந்தபோது மோர்கல் பந்துவீச்சு பயிற்சியாளராக செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஹர்திக் பாண்ட்யா பிரிட்டிஷ் பாடகியுடன் டேட்டிங்கில் இருப்பதாக தகவல் வெளியாகியது.
    • ஹர்திக் பாண்ட்யா தற்போது கிரீஸ் நாட்டில் விடுமுறையை கொண்டாடி வருகிறார்.

    இந்திய அணியின் ஆல் ரவுண்டராக விளங்கி வருபவர் ஹர்திக் பாண்ட்யா. இவர் தனது மனைவி நடாஷா ஸ்டான்கோவிக் உடனான திருமண உறவில் இருந்து விலகுவதாக ஜூலை 18-ம் தேதி அறிவித்தார்.

    இலங்கை அணியுடனான டி20 தொடருக்கு பின் ஹர்திக் பாண்டியா கிரீஸ் நாட்டில் விடுமுறையை கொண்டாடி வருகிறார். இதில் பாடகியும், நடிகையுமான ஜாஸ்மின் வாலியா மற்றும் ஹர்திக் பாண்ட்யா இருவரும் ஒரே இடத்தில் இருப்பது தெரிய வந்துள்ளது. பிரிட்டனைச் சேர்ந்த ஜாஸ்மின் வாலியாவின் பெற்றோர் இந்தியர்கள் தான்.

    இவர் பிரிட்டிஷ் ரியாலிட்டி தொலைக்காட்சி தொடரான, தி ஒன்லி வே இஸ் எஸ்ஸக்ஸ் என்ற தொடரின் மூலமாக பிரபலமடைந்தார். 2014-ம் ஆண்டு தனது பெயரில் யூ டியூப் சேனல் ஒன்றை தொடங்கி நடத்தியுள்ளார். தற்போது 6 லட்சத்திற்கும் அதிகமான பாலோயர்களை இன்ஸ்டாகிராமில் வைத்துள்ளளார்.

    இந்நிலையில், ஹர்திக் பாண்ட்யா பிரிட்டிஷ் பாடகியான ஜாஸ்மின் வாலியாவுடன் டேட்டிங்கில் இருப்பதாக தகவல் வெளியாகியது.

    இன்ஸ்டாகிராமில் இருவரும் பின்தொடர்ந்து வருவதுடன், புகைப்படங்களுக்கும் லைக் செய்து வருகின்றனர். ஜாஸ்மின் வாலியாவும் இந்திய வீரர்களில் ஹர்திக் பாண்ட்யாவை மட்டுமே பின்தொடர்ந்து வருகிறார். இதனால் இருவரும் உறவில் இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பான புகைப்படங்களும் வைரலாகி வருகின்றன.

    • அடுத்த டி20 உலகக் கோப்பை 2026-ம் ஆண்டில் இந்தியா மற்றும் இலங்கையில் நடத்தப்படுகிறது.
    • டி20 உலகக் கோப்பையில் விளையாட 12 அணிகள் தற்போது வாய்ப்பை பெற்றுள்ளது.

    புதுடெல்லி:

    அடுத்த டி20 உலகக் கோப்பை 2026-ம் ஆண்டில் இந்தியா மற்றும் இலங்கையில் நடத்தப்படவுள்ளது. இதிலும் 20 அணிகள் பங்கேற்க உள்ளன.

    இதில் விளையாடும் அணிகள் 4 குரூப்களாக பிரிக்கப்படும். ஒவ்வொரு குரூப்பிலும் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும். சூப்பர் 8 சுற்றில் அணிகள் இரு குரூப்பாக பிரிக்கப்படும். இதில் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறும். இரு அரையிறுதி போட்டி நடைபெறும். இதில் வெற்றி பெறும் அணிகள் இறுதிப் போட்டியில் விளையாடும்.

    டி20 உலகக் கோப்பையில் விளையாட 12 அணிகள் தற்போது வரை வாய்ப்பை பெற்றுள்ளது. இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, அமெரிக்கா, ஆப்கானிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், வங்கதேசம், தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான், அயர்லாந்து ஆகிய அணிகள் தகுதி பெற்றுள்ளன.

    இந்நிலையில், டி20 உலகக் கோப்பையை மையமாக வைத்து இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான தோதா கணேஷ் என்பவரை கென்ய அணியின் தலைமை பயிற்சியாளராக நியமனம் செய்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை தோதா கணேஷ் தனது எக்ஸ் வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

    ×