என் மலர்tooltip icon

    விளையாட்டு

    மைதானத்துக்குள் ரசிகர்களை அனுமதிக்க முடியும் என்றால் நிச்சயம் மெல்போர்னிலேயே ‘பாக்சிங் டே’ டெஸ்ட் நடைபெறும் என ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது.
    இந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு செல்லும் இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இதில் இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் டிசம்பர் 26-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை நடக்கிறது.

    கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மறுநாள் தொடங்கும் இந்த டெஸ்ட் ‘பாக்சிங் டே’ என்ற பாரம்பரிய பெயரில் அழைக்கப்படுகிறது.

    மெல்போர்னை உள்ளடக்கிய விக்டோரியா மாகாணத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதாலும், ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருப்பதாலும் ‘பாக்சிங் டே’ டெஸ்ட் மெல்போர்னில் இருந்து அடிலெய்டுக்கு மாற்றப்படலாம் என்று தகவல்கள் வெளியாகின.

    இதற்கிடையே, ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்டின் இடைக்கால தலைமை செயல் அதிகாரி நிக் ஹாக்லி நேற்று அளித்த பேட்டியில், ‘‘ஆஸ்திரேலிய விளையாட்டு அட்டவணையில் ‘பாக்சிங் டே’ போட்டி முக்கியத்துவம் வாய்ந்தது. திட்டமிட்டபடி போட்டியை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறோம்.

    மைதானத்துக்குள் ரசிகர்களை அனுமதிக்க முடியும் என்றால் நிச்சயம் மெல்போர்னிலேயே ‘பாக்சிங் டே’ டெஸ்ட் நடைபெறும். இந்த போட்டிக்கு இன்னும் 4½ மாதங்கள் உள்ளன. அதற்குள் நிலைமை சரியாகி விடும் என்று எதிர்பார்க்கிறோம்’’ என்றார்.
    பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஓராண்டு தள்ளிவைக்கப்பட்டாலும், அந்த போட்டியில் விளையாட வேண்டும் என்பதில் ஆர்வமாக இருக்கிறேன் என்று இந்திய அணியின் கேப்டன் மிதாலிராஜ் தெரிவித்தார்.
    புதுடெல்லி:

    12-வது பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஒவர்) அடுத்த ஆண்டு (2021) பிப்ரவரி 6-ந் தேதி முதல் மார்ச் 7-ந் தேதி வரை நியூசிலாந்தில் நடக்க இருந்தது. இந்த போட்டிக்கு நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, இந்தியா ஆகிய 5 அணிகள் தகுதி பெற்று இருந்தன. எஞ்சிய 3 இடத்துக்கான தகுதி சுற்று போட்டி இலங்கையில் நடக்க இருந்த நிலையில் கொரோனா அச்சத்தால் அந்த தகுதி சுற்று தள்ளிபோடப்பட்டது. இந்த நிலையில் கொரோனா பரவல் அதிகரிப்பால் பெண்கள் உலக கோப்பை போட்டியை 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை தள்ளிவைப்பதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று முன்தினம் அறிவித்தது.

    இதை சுட்டிகாட்டி ஆஸ்திரேலிய முன்னாள் வீராங்கனையும், வர்ணனையாளருமான லிசா தனது டுவிட்டர் பதிவில், ‘அடுத்த ஆண்டு நடக்க இருந்த உலக கோப்பை போட்டிக்கு பிறகு ஓய்வு பெறலாம் என்று திட்டமிட்டு இருந்த மிதாலிராஜ், ஜூலன் கோஸ்வாமி (இருவரும் இந்தியா), ரேச்சல் ஹெய்ன்ஸ் (ஆஸ்திரேலியா) போன்ற வீராங்கனைகள் இன்னும் ஒரு வருடம் காத்திருக்க வேண்டும்’ என்று கருத்து தெரிவித்து இருந்தார்.

    இதற்கு இந்திய ஒரு நாள் போட்டி அணியின் கேப்டன் 37 வயது மிதாலி ராஜ் பதிலளித்துள்ளார். அவர் டுவிட்டர் பதிவில், ‘நிச்சயமாக உலக கோப்பை மீது எனது பார்வையை பதித்து இருக்கிறேன். எல்லா வகையான சிறிய காயங்களில் இருந்தும் மீண்டு முன்பை விட உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் புத்துணர்ச்சியுடனும், வலுவாகவும் இருக்கிறேன். 2022-ம் ஆண்டு உலக கோப்பை போட்டியில் விளையாடி கோப்பையை வெல்ல வேண்டும் என்ற குறிக்கோளை எட்டுவதில் ஆர்வமாக இருக்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

    37 வயதான இந்திய வேகப்பந்துவீச்சு வீராங்கனை ஜூலன் கோஸ்வாமி கூறுகையில், ‘அடுத்த ஆண்டு உலக கோப்பை போட்டி நடந்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும். இதற்காக நான் நீண்ட காலமாக கவனம் செலுத்தி வந்தேன். தற்போது இதனை எல்லாம் தாண்டி சிந்திக்க வேண்டி உள்ளது. கடந்த 5-6 மாதங்களாக நாங்கள் எந்தவித கிரிக்கெட்டும் விளையாடவில்லை. அதிலும் என்னை போன்றவர்கள் (ஒருநாள் போட்டியில் மட்டும் பங்கேற்பவர்கள்) கடந்த ஆண்டு நவம்பர் மாதத்துக்கு பிறகு எந்தவொரு போட்டியிலும் ஆடவில்லை. இந்தியாவுக்காக விளையாடுவது மிகப்பெரிய கவுரவமாகும். தற்போது 2022-ம் ஆண்டு உலக கோப்பை போட்டியில் ஆடுவதே எனது இலக்காகும். உலக கோப்பைக்கான அணியில் அங்கம் வகிக்க வேண்டும் என்றால் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டியது அவசியமாகும்’ என்றார்.
    கிறிஸ் வோக்ஸ், ஜோஸ் பட்லரின் பொறுப்பான ஆட்டத்தால் முதல் டெஸ்டில் பாகிஸ்தானை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து.
    மான்செஸ்டர்:

    இங்கிலாந்து - பாகிஸ்தான் இடையிலான முதல் டெஸ்ட் மான்செஸ்டரில் நடைபெற்றது.

    முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் 326 ரன்கள் குவித்தது. அதன்பின், இங்கிலாந்து முதல் இன்னிங்சில் விளையாடியது. யாசீர் ஷா 4 விக்கெட் வீழ்த்த இங்கிலாந்து 219 ரன்களில் ஆல்-அவுட் ஆனது.

    இதனால் 107 ரன்கள் முன்னிலையுடன் பாகிஸ்தான் 2-வது இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 3-வது நாள் ஆட்டத்தின்போது இங்கிலாந்தின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் விக்கெட்டுகள் மளமளவென சரிந்தது.

    முதல் இன்னிங்சில் சதமடித்த ஷான் மசூத் டக்-அவுட்டிலும், அரைசதம் அடித்த பாபர் அசாம் 5 ரன்னிலும் ஏமாற்றம் அளித்தனர். இதனால் 3-வது நாள் ஆட்ட முடிவில் பாகிஸ்தான் 137 ரன்கள் எடுப்பதற்குள் 8 விக்கெட் இழந்து திணறியது. யாசீர் ஷா 12 ரன்களுடனும், முகமது அப்பாஸ் ரன்ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.

    இன்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கியது. யாசீர் ஷா 33 ரன்கள் அடித்தார். ஷாஹீன் ஷா அப்ரிடி (2), நசீம் ஷா (4) ரன்களில் ஆட்டமிழக்க பாகிஸ்தான் 2-வது இன்னிங்சில் 169 ரன்னில் சுருண்டது.

    இங்கிலாந்து அணி தரப்பில் ஸ்டூவர்ட் பிராட் 3 விக்கெட்டும், கிறிஸ் வோக்ஸ் மற்றும் பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டும் வீழ்த்தினார்.

    பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 107 ரன்கள் அதிகம் பெற்றதால் ஒட்டுமொத்தமாக 276 ரன்கள் முன்னிலைப் பெற்றது. 

    277 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கியது. தொடக்கத்தில் பாகிஸ்தான் பந்து வீச்சாளர்கள் அபாரமாக பந்து வீசினர். இதனால் இங்கிலாந்து அணி 117 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டை இழந்து தத்தளித்தது.

    அதன்பின்னர் களமிறங்கிய கிறிஸ் வோக்ஸ், ஜோஸ் பட்லர் ஜோடி பொறுப்புடன் ஆடியது. இருவரும் அரை சதம் கடந்தனர். 6 வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 139 ரன்கள் குவித்தது. பட்லர் 74 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

    தொடர்ந்து ஆடிய வோக்ஸ் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றார். அவர் 84 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இறுதியில், இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்புக்கு 277 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக கிறிஸ் வோக்ஸ் தேர்வு செய்யப்பட்டார்.

    பாகிஸ்தான் சார்பில் யாசிர் ஷா 4 விக்கெட் வீழ்த்தினார்.
    மான்செஸ்டர் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் 2-வது இன்னிங்சில் 169 ரன்னில் சுருண்டதால் இங்கிலாந்துக்கு 277 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
    இங்கிலாந்து - பாகிஸ்தான் இடையிலான முதல் டெஸ்ட் மான்செஸ்டரில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் 326 ரன்கள் குவித்தது. பின்னர் இங்கிலாந்து முதல் இன்னிங்சில் விளையாடியது. யாசீர் ஷா நான்கு விக்கெட் வீழ்த்த இங்கிலாந்து 219 ரன்கள் ஆல்-அவுட் ஆனது.

    இதனால் 107 ரன்கள் முன்னிலையுடன் பாகிஸ்தான் 2-வது இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 3-வது நாள் ஆட்டத்தின்போது இங்கிலாந்தின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் விக்கெட்டுகள் மளமளவென சரிந்தது.

    முதல் இன்னிங்சில் சதம் அடித்த ஷான் மசூத் டக்-அவுட்டிலும், அரைசதம் அடித்த பாபர் அசாம் 5 ரன்னிலும் ஏமாற்றம் அளித்தனர். இதனால் 3-வது நாள் ஆட்ட முடிவில் பாகிஸ்தான் 137 ரன்கள் எடுப்பதற்குள் 8 விக்கெட் இழந்து திணறியது. யாசீர் ஷா 12 ரன்களுடனும், முகமது அப்பாஸ் ரன்ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.

    இன்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கியது. யாசீர் ஷா 33 ரன்கள் அடித்தார். ஷாஹீன் ஷா அப்ரிடி (2), நசீம் ஷா (4) ரன்களில் ஆட்டமிழக்க பாகிஸ்தான் 2-வது இன்னிங்சில் 169 ரன்னில் சுருண்டது. இங்கிலாந்து அணி தரப்பில் ஸ்டூவர்ட் பிராட் 3 விக்கெட்டும், கிறிஸ் வோக்ஸ் மற்றும் பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டும் வீழ்த்தினார்.

    பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 107 ரன்கள் அதிகம் பெற்றதால் ஒட்டுமொத்தமாக 276 ரன்கள் முன்னிலைப் பெற்றது.

    இதனால் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 277 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது. சுமார் ஒன்றரை நாட்களுக்கு மேல் உள்ள நிலையில் 277 ரன்கள் மட்டுமே அடிக்க வேண்டிய நிலையில் இங்கிலாந்து 2-வது சேஸிங் செய்து வருகிறது.
    வேகப்பந்து வீச்சாளராக வர வேண்டும் என சமீபத்தில் பிறந்த ஹர்திக் பாண்ட்யாவின் மகனுக்கு கிரிக்கெட் வீரர் கே.எல். ராகுல் அறிவுரை வழங்கியுள்ளார்.
    இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா. இந்தி நடிகையும், மாடல் அழகியுமான செர்பியா நாட்டை சேர்ந்த நடாசா ஸ்டான்கோவிச்சை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

    இந்த தம்பதிக்கு கடந்த ஜூலை 30-ந்தேதி குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள ஆஸ்பத்திரியில் ஆண் குழந்தை பிறந்தது. தந்தையான சந்தோஷத்தில் உள்ள பாண்ட்யாவுக்கு சக கிரிக்கெட் வீரர்கள் விராட் கோலி, ஷிகர் தவான், ஷ்ரேயாஸ் அய்யர், சாஹல் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.

    ஹர்திக் பாண்ட்யாவின் சகோதரரான குருணால் பாண்ட்யாவும் இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் ஆவார்.  அவர் தனது சகோதரனின் குழந்தையை தூக்கி பிடித்தபடி, ‘கிரிக்கெட் பற்றி நாம் பேசுவோம்’ என்ற தலைப்புடன் கூடிய புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு உள்ளார்.

    இதற்கு பலர் லைக் செய்துள்ளனர். ஹர்திக் பண்ட்யாவின் நெருங்கிய நண்பரும், சகவீரருமான கே.எல். ராகுல், ‘‘வேகப்பந்து வீச்சாளராக வரவேண்டும் என அவனிடம் கூறுங்கள்’’ என கமெண்ட் பகுதியில் பதிவிட்டு உள்ளார்.

    இதேபோன்று தனது குழந்தைக்காக டயாபர் வாங்க ஷாப்பிங் செய்த புகைப்படம் ஒன்றை ஹர்திக் நேற்று தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார். காரின் ஓட்டுனர் இருக்கையில் ஹர்திக் அமர்ந்திருப்பதும், பின் இருக்கையில் குழந்தைகளுக்கான டயாபர்கள் இருப்பதும் புகைப்படத்தில் இடம் பெற்றிருந்தது.

    ஹர்திக், காயத்தினால் சர்வதேச போட்டிகளில் நீண்ட காலம் ஆக விளையாடாமல் இருந்து வரும் நிலையில், தென்ஆப்ரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் போட்டிக்கான தேசிய அணியில் இடம் பெறுவார் என கூறப்படுகிறது.

    இதேபோன்று ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள 13-வது ஐ.பி.எல். போட்டிகளில் ஹர்திக் மற்றும் கே.எல்.ராகுல் ஒருவரை ஒருவர் சந்தித்து கொள்ளும் வாய்ப்பு உள்ளது.
    2021-ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை போட்டியை இந்தியாவில் நடத்துவது என்று ஐ.சி.சி. கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
    துபாய்:

    7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா வைரசின் கோரதாண்டவத்தால் இந்த போட்டி வேறுவழியின்றி தள்ளிவைக்கப்பட்டது.

    2021-ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை போட்டியை நடத்தும் உரிமத்தை இந்தியா பெற்றுள்ளது. இந்த தொடரை நடத்தும் வாய்ப்பை தங்களுக்கு மாற்றித் தர வேண்டும் என்று ஆஸ்திரேலியா வலியுறுத்தியது. ஆனால் 2021-ம் ஆண்டு உலக கோப்பை போட்டியை நடத்தும் உரிமையை விட்டுக்கொடுக்க இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு விருப்பம் இல்லை. ஏனெனில், 2022-ம் ஆண்டில் 20 ஓவர் உலக கோப்பை போட்டியை நடத்தினால், அதற்கு அடுத்த ஆண்டு 50 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான ஏற்பாடுகளை செய்வது மிகவும் சிரமமாக இருக்கும் என்று இந்திய தரப்பில் சொல்லப்பட்டது.

    இந்த சூழ்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் நேற்று நடந்தது. இந்தியா, ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். 20 ஓவர் உலக கோப்பை போட்டி விவகாரத்தில் இந்தியா தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தது.

    இதன் முடிவில் 2021-ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை போட்டியை (அக்டோபர்-நவம்பர்) திட்டமிட்டபடி இந்தியாவில் நடத்துவது என்றும், தள்ளிவைக்கப்பட்ட 20 ஓவர் உலக கோப்பை போட்டியை 2022-ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

    12-வது பெண்களுக்கான உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) அடுத்த ஆண்டு பிப்ரவரி 6-ந்தேதி முதல் மார்ச் 7-ந்தேதி வரை நியூசிலாந்தில் நடக்க இருந்தது. கொரோனா அபாயத்தால் இதற்கான தகுதி சுற்று முழுமை பெறாமல் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இந்த உலக கோப்பை போட்டியையும் 2022-ம் ஆண்டு பிப்ரவரி வரை தள்ளிவைப்பது என்று தீர்மானிக்கப்பட்டது. இந்த தகவல்கள் ஐ.சி.சி. வெளியிட்ட செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    யாசீர் ஷா, சதாப் கான் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 219 ரன்களில் சுருண்டது.
    இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் மான்செஸ்டரில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்த பாகிஸ்தான் ஷான் மசூத் (156), பாபர் அசாம் (69), சதாப் கான் (45) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் முதல் இன்னிங்சில் 326 ரன்கள் குவித்து அல்-அவுட் ஆனது.

    பின்னர் இங்கிலாந்து முதல் இன்னி்ங்சை தொடங்கியது. பாகிஸ்தானின் வேகப்சபந்து வீச்சாளர்கள் முகமது அப்பாஸ், நசீம் ஷா,  ஷாஹீன் ஷா ஆகியோர் துல்லியமாக பந்து வீச இங்கிலாந்து நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 92 ரன்கள் எடுத்திருந்தது.

    ஒல்லி போப் 46 ரன்களுடனும், ஜோஸ் பட்லர் 15 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ஒல்லி போப் அரைதம் அடித்தார். ஆனால் 62 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

    யாசீர் ஷா பட்லர் (38), கிறிஸ் வோக்ஸ் (19), பெஸ் (1) ஆகியோரை வெளியேற்ற இங்கிலாந்து தடுமாறியது. ஜாஃப்ரா ஆர்சர் (16), ஜேம்ஸ் ஆண்டர்சன் (7) ஆகியோரை சதாப் கான் வெளியேற்ற இங்கிலாந்து முதல் இன்னி்ங்சில் 219 ரன்னில் சுருண்டது.

    பாகிஸ்தான் அணி தரப்பில் யாசீர் ஷா நான்கு விக்கெட்டும், சதாப் கான் மற்றும் முகமது அப்பாஸ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    பின்னர் 107 ரன்கள் முன்னிலையுடன் பாகிஸ்தான் 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்து வருகிறது.
    ஒவ்வொரு நாளும் மணிக்கு 90 மைல வேகத்தில் பந்து வீச இயலாது. யாரும் ரோபா கிடையாது என்று ஜாஃப்ரா ஆர்சர் தெரிவித்துள்ளார்.
    இங்கிலாந்து - பாகிஸ்தான் இடையிலான முதல் டெஸ்ட் மான்செஸ்டரில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் 326 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து 92 ரன்கள் எடுப்பதற்குள் நான்கு விக்கெட்டுக்களை இழந்துள்ளது.

    ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட், ஜாஃப்ரா ஆர்சர், கிறிஸ் வோக்ஸ் ஆகிய நான்கு வேகப்பந்து வீச்சாளர்கள் இருந்த போதிலும், இரண்டு நாட்களின் முதல் செசனில் மட்டுமே பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களுக்கு இவர்களால் நெருக்கடி கொடுக்க முடிந்தது. உணவு இடைவேளைக்குப்பிறகு இங்கிலாந்து பந்து வீச்சு மிகப்பெரிய அளவில் இல்லை.

    ஆனால் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர்கள் அப்பாஸ், ஷாஹீன் ஷா அப்ரிடி, நசீம் ஷா ஆகியோர் சிறப்பாக பந்து வீசி நெருக்கடி கொடுத்தனர்.

    இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜாஃப்ரா ஆர்சர் திடீர் பவுன்சராகவும், அதிவேகமாகவும் பந்து வீசக்கூடியவர். ஆனால் மான்செஸ்டரில் அவரின் தீப்பொறி பந்து வீச்சை காண இயலவில்லை.

    59 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட் வீழ்த்திய ஜாஃப்ரா ஆர்சர் கூறுகையில் ‘‘நாங்கள் நினைத்த மாதிரி ஆட்டம் சென்றதாக நினைக்கவில்லை. எங்களுடைய ஏராளமான பந்துகள் பேட்டில் பட்டு எட்ஜ் ஆகியது. ஆனால் அவைகள் கேட்ச்-ஆக மாறவில்லை. உணவு இடைவேளைக்குப்பிறகு பாகிஸ்தான் வீரர்கள் சிறப்பாக பேட்டிங் செய்து எங்களை நெருக்கடிக்குள்ளாக்கினர். ஆனால்., மற்றொரு டெஸ்ட் போட்டியில் நாங்கள் நினைத்தவாறு சென்றால், கட்டாயம் இரண்டு செசனுக்குள் 8 அல்லது 9 விக்கெட்டை வீழ்த்தி விடுவோம்.

    ஒவ்வொரு நாளும் மணிக்க 90 மைல் வேகத்தில் பந்து வீச இயலாது. யாரும் ரோபோ கிடையாது. இந்த ஆடுகளம் பந்தை பவுன்ஸ் செய்வதற்கானதாக இருக்கவில்லை. காலையில் மற்றும் சற்று ஒத்துழைத்தது. அதன்பின் பந்து டர்ன் ஆக ஆரம்பித்தது’’என்றார்.
    இங்கிலாந்துக்கு எதிரான மான்செஸ்டர் டெஸ்டில் சதம் அடித்ததன் மூலம் ஷான் மசூத் தொடர்ச்சியாக மூன்று சதங்கள் அடித்தவர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.
    இங்கிலாந்து - பாகிஸ்தான் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது.

    தொடக்க பேட்ஸ்மேன் ஷான் மசூத் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 319 பந்தில் 156 ரன்கள் விளாசினார்.

    இந்த சதம் மூலம் தொடர்ச்சியாக மூன்று டெஸ்ட் போட்டிகளில் சதம் அடித்து சாதனைப் படைத்தார். இதன்மூலம் ஜாகீர் அப்பாஸ், மடாஸ்சர் நாசர், முகமது யூசுப், யூனிஸ் கான், மிஸ்பா-உல-ஹக் ஆகியோர் சாதனையுடன் இணைந்துள்ளார். இவர்கள் ஏற்கனவே தொடர்ச்சியாக மூன்று டெஸ்ட் போட்டிகளில் சதம் அடித்து சாதனைப் படைத்தவர்கள்.

    ஷான் மசூத் இலங்கைக்கு எதிராக கராச்சியில் 135 ரன்களும், வங்காளதேசத்திற்கு எதிராக ராவல்பிண்டியில் 100 ரன்களும் அடித்திருந்தார்.
    பாகிஸ்தான் ராணுவத்தின் பட்ஜெட்டை அதிகரிக்கும் என்றால், அதற்காக புல்லை சாப்பிடுவேன் என்று சோயிப் அக்தர் தெரிவித்துள்ளார்.
    பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர். இந்தியா - பாகிஸ்தான் இடையிலான கிரிக்கெட் போட்டி குறித்தும், இரு நாடுகளுக்கு இடையில் நிலவி வரும் பதற்றம் குறித்து அடிக்கடி கருத்து தெரிவிக்கும் நபர்களில் இவரும் ஒருவர்.

    ARY News-க்கு அளித்த பேட்டியில் சோயிக் அக்தர் கூறியதாவது:-

    அல்லா எனக்கு எல்லா வகையிலான அதிகாரத்தையும் கொடுத்தால், நான் புல் திண்பேன். ஆனால், ராணுவத்தின் பட்ஜெட்டை அதிகரிப்பேன்.

    என்னுடன் அமர்ந்து முடிவுகளை எடுக்குமாறு ராணுவ தலைவரிடம் கேட்டுக்கொள்வேன். பட்ஜெட் 20 சதவீதமாக இருந்தால், அதை 60 சதவீதமாக மாற்றுவேன். நாம் ஒருவருக்கொருவர் அவமதித்துக் கொண்டால், இழப்பு நமக்கு மட்டுமே.

    நாட்டிங்காம்ஷைர் அணியுடன் ஒரு லட்சத்து 75 ஆயிரம் பவுண்டுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டேன். அதன்பின் 2002-ல் மேலும் ஒரு பெரிய ஒப்பந்தம் வந்தது. கார்கில் போர் நடக்கும்போது எதிர்த்து போராட இரண்டையும் தவிர்த்தேன்.

    நான் லாகூரின் புறநகரில் நின்றேன். நான் அங்கு என்ன செய்கிறேன் என்று ஒரு ஜெனரல் என்னிடம் கேட்டார். போர் தொடங்கப்போகிறது, நாம் ஒன்றாக இறப்போம் என்று சொன்னேன். நான் இப்படி இரண்டு முறை கவுன்ட்டியை (கிரிக்கெட்) விட்டுவிட்டேன். கவுன்ட்டி அணி அதிர்ச்சியடைந்தன. நான் அதைப்பற்றி கவலைப்படவில்லை. நான் காஷ்மீரில் உள்ள எனது நண்பர்களை அழைத்து, நான் போராட தயாராக இருக்கிறேன் என்று சொன்னேன்.

    இந்தியாவில் இருந்து வந்த வி்மானங்கள் நமது சில மரங்களை சாய்த்தன. அது நமக்கு மிகப்பெரிய இழப்பு. அவர்கள் 6 முதல் 7 மரங்களை சாய்த்தனர். நாம் அவற்றின் மீது அதிகமான கவனம் செலுத்தினோம். அது எனக்கு மிகப்பெரிய வலியை ஏற்படுத்தியது.

    அன்றைய தினம் காலை நான் எழுந்தபோது சற்று மயக்கமாக இருந்தது. எனது மனைவி அமைதியாக இருங்கள் என்று கூறினார். ஆனால் அடுத்த நாள் வரை டி.வி.யை பார்க்கும் வரைக்கும் அது தொடர்ந்தது. அடுத்தநாள் என்ன நடந்தது என்பதற்கான உள்கதை எனக்குத் தெரியும், நான் ராவல்பிண்டியைச் சேர்ந்தவன். ராணுவ தலைமையகம் எனக்குத் தெரியும் ’’ என்றார்.
    மான்செஸ்டர் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் ரன் எதுவும் எடுக்காமல் பாகிஸ்தான் வீரர் முகமது அப்பாசின் பந்து வீச்சில் போல்ட் ஆனார்.
    மான்செஸ்டர்:

    இங்கிலாந்து - பாகிஸ்தான் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நேற்றுமுன்தினம் தொடங்கியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது.

    அந்த அணியின் மசூத், பாபர் அசாம் மற்றும் சதாப்கான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இறுதியில் பாகிஸ்தான் அணி தனது முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 326 ரன்கள் எடுத்தது. சிறப்பாக ஆடிய மசூத் அதிகபட்சமாக 156 ரன்கள் குவித்தார்.

    இதையடுத்து, இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான ரோய் பொர்ன்ஸ் மற்றும் டொமினிக் சிப்லி களமிறங்கினர். ரோய் 4 ரன்னிலும், சிப்லி 8 ரன்னிலும் ஷாகின் அப்ரிடி மற்றும் முகமது அப்பாஸ் பந்துவீச்சில் அடுத்தடுத்து வெளியேறினர்.

    பின்னர் இங்கிலாந்து அணியின் சிறந்த ஆல்ரவுண்டரான பென் ஸ்டோக்ஸ் களத்திற்கு வந்தார்.  சொந்த மண்ணில் நடைபெறும் ஆட்டங்களில் எப்போதும் சிறப்பாக விளையாடும் ஸ்டோக்ஸ் இப்போட்டியிலும் தனது வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்பட்டது. 

    6 பந்துகளை சந்தித்திருந்த ஸ்டோக்ஸ் ரன் எதுவும் எடுக்காமலேயே இருந்தார். அவருக்கு பாகிஸ்தான் அணியின் முகமது அப்பாஸ் பந்து வீசினார். 7-வது பந்தை சந்தித்த ஸ்டோக்சுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. 

    அப்பாஸ் லேக் சைடில் வீசிய பந்தை ஸ்ரேட் ரிரைவாக அடிக்க ஸ்டோக்ஸ் முற்பட்டார். இதற்காக தனது பேட்டை ஸ்ரேட் ரிடைவ் கோணத்தில் சுழற்றினார். ஆனால், அப்பாஸ் வீசிய பந்து லேக் சைடில் இருந்து ஸ்விங்காகி பேட்டில் படாமல் லாவகமாக ஆப் ஸ்டெம்பை தெரிக்கவிட்டது.

    129 கிலோமீட்டர் வேகத்தில் வீசப்பட்ட அந்த பந்து பேட்டில் படாமல் ஸ்டெம்பை தெரிக்கவிட்டதை கண்ட ஸ்டோக்ஸ் சில வினாடிகள் திகைத்து நின்றார். மறுமுனையில் நின்றுகொண்டிருந்த இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட்டும் ஒரு நிமிடம் வாயடைத்து நின்றார். இதனால் ஸ்டோக்ஸ் ரன் எதுவும் எடுக்காமலேயே பெவிலியன் திரும்பினார்.

    அப்பாஸ் வீசிய பந்து ஸ்டோக்கின் பேட்டை இலாவகமாக கடந்து ஸ்டெம்பை தெறிக்கவிட்ட வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    இங்கிலாந்து மண்ணில் தொடர்ச்சியாக 50 சர்வதேச போட்டிகளில் விளையாடிய பின்னர் ரன் எதுவும் எடுக்காமல் பென் ஸ்டோக்ஸ்(0) தனது விக்கெட்டை பறிகொடுத்தது இதுவே முதல்முறையாகும்.   

      

    இதற்கிடையில், 2 ஆவது நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 92 ரன்கள் எடுத்துள்ளது. மேலும், அந்த அணி பாகிஸ்தானை விட 234 ரன்கள் பின் தங்கிய நிலையில் உள்ளது.

    மான்செஸ்டர் டெஸ்டின் முதல் இன்னிங்சின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்த இங்கிலாந்து அணி 92 ரன்களை எடுத்துள்ளது.
    மான்செஸ்டர்: 

    இங்கிலாந்து - பாகிஸ்தான் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நேற்றுமுன்தினம் தொடங்கியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது.

    ஷான் மசூத், அபித் அலி ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். அபித் அலி 16 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அடுத்து கேப்டன் அசார் அலி களம் இறங்கினார். அவர் ரன் ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆனார். பாகிஸ்தான் 43 ரன்கள் எடுப்பதற்குள் இரண்டு விக்கெட்டுக்களை இழந்திருந்தது.

    3-வது விக்கெட்டுக்கு ஷான் மசூத் உடன் பாபர் அசாம் ஜோடி சேர்ந்தார். 
    இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 

    பாகிஸ்தான் 49 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 139 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழை குறுக்கீட்டதால் முதல்நாள் ஆட்டம் நிறுத்தப்பட்டது.
    பாபர் அசாம் 69 ரன்களுடனும், ஷான் மசூத் 46 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    நேற்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. பாபர் அசாம் 69 ரன்னிலேயே ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த ஆசாத் ஷபிக் 7 ரன்னிலும், முகமது ரிஸ்வான் 9 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    மறுமுனையில் ஷான் மசூத் 156 பந்தில் அரைசதத்தை கடந்து சதத்தை நோக்கிச் சென்றார். அவருக்கு சுழற்பந்து வீச்சாளர் ஷதாப் கான் பக்கபலமாக இருக்க 251 பந்துகளை சந்தித்து ஷான் மசூத் சதம் அடித்தார்.

    சதாப்கான் 45 ரன்னில் வெளியேறினார். அடுத்து வந்த யாசிர் ஷா 5 ரன்னிலும், முகமது அப்பாஸ் ரன்ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தார். 
    ஷான் மசூத் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 156 ரன்கள் (319) அடித்து கடைசி விக்கெட்டாக ஆட்டமிழக்க பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 109.3 ஓவரில் 326 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது.

    இங்கிலாந்து அணி சார்பில் ஸ்டூவர்ட் பிராட், ஜாஃப்ரா ஆர்சர் தலா 3 விக்கெட்டும், கிறிஸ் வோக்ஸ் 2 விக்கெட்டும், ஆண்டர்சன் மற்றும் பெஸ் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. அந்த அணியில் தொடக்க வீரர்களாக ரோய் பொர்ன்ஸ் மற்றும் டொமினிக் சிப்லி களமிறங்கினர்.

    ரோய் 4 ரன்னிலும், சிப்லி 8 ரன்னிலும் ஷாகின் அப்ரிடி மற்றும் முகமது அப்பாஸ் பந்துவீச்சில் அடுத்தடுத்து வெளியேறினர். பின்னர் வந்த பென் ஸ்டோக்ஸ் ரன் எதுவும் எடுக்காமல் முகமது அப்பாஸ் பந்துவீச்சில் அவுட் ஆனார். கேப்டன் ஜோ ரூட் 14 ரன்கள் எடுத்திருந்த நிலையில் யாசிர் ஷா பந்துவீச்சில் அவுட் ஆனார்.  

    அடுத்து களமிறங்கிய போப் மற்றும் பட்லர் ஜோடி சற்று நிலைத்து நின்று ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இங்கிலாந்து அணி 28 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 92 ரன்கள் எடுத்திருந்தபோது இரண்டாவது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. அந்த அணியின் போப் 46 ரன்களுடனும், பட்லர் 15 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். 

    இதனால் பாகிஸ்தான் அணியை விட 234 ரன்கள் பின்தங்கிய நிலையில் இங்கிலாந்து அணி சற்று திணறிவருகிறது. 

    பாகிஸ்தான் தரப்பில் அந்த அணியின் இளம் வீரர் முகமது அப்பாஸ் 2 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். 
    ×