search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஸ்டூவர்ட் பிராட்
    X
    ஸ்டூவர்ட் பிராட்

    2-வது இன்னிங்சில் 169 ரன்னில் சுருண்ட பாகிஸ்தான்: இங்கிலாந்துக்கு 277 வெற்றி இலக்கு

    மான்செஸ்டர் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் 2-வது இன்னிங்சில் 169 ரன்னில் சுருண்டதால் இங்கிலாந்துக்கு 277 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
    இங்கிலாந்து - பாகிஸ்தான் இடையிலான முதல் டெஸ்ட் மான்செஸ்டரில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் 326 ரன்கள் குவித்தது. பின்னர் இங்கிலாந்து முதல் இன்னிங்சில் விளையாடியது. யாசீர் ஷா நான்கு விக்கெட் வீழ்த்த இங்கிலாந்து 219 ரன்கள் ஆல்-அவுட் ஆனது.

    இதனால் 107 ரன்கள் முன்னிலையுடன் பாகிஸ்தான் 2-வது இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 3-வது நாள் ஆட்டத்தின்போது இங்கிலாந்தின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் விக்கெட்டுகள் மளமளவென சரிந்தது.

    முதல் இன்னிங்சில் சதம் அடித்த ஷான் மசூத் டக்-அவுட்டிலும், அரைசதம் அடித்த பாபர் அசாம் 5 ரன்னிலும் ஏமாற்றம் அளித்தனர். இதனால் 3-வது நாள் ஆட்ட முடிவில் பாகிஸ்தான் 137 ரன்கள் எடுப்பதற்குள் 8 விக்கெட் இழந்து திணறியது. யாசீர் ஷா 12 ரன்களுடனும், முகமது அப்பாஸ் ரன்ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.

    இன்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கியது. யாசீர் ஷா 33 ரன்கள் அடித்தார். ஷாஹீன் ஷா அப்ரிடி (2), நசீம் ஷா (4) ரன்களில் ஆட்டமிழக்க பாகிஸ்தான் 2-வது இன்னிங்சில் 169 ரன்னில் சுருண்டது. இங்கிலாந்து அணி தரப்பில் ஸ்டூவர்ட் பிராட் 3 விக்கெட்டும், கிறிஸ் வோக்ஸ் மற்றும் பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டும் வீழ்த்தினார்.

    பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 107 ரன்கள் அதிகம் பெற்றதால் ஒட்டுமொத்தமாக 276 ரன்கள் முன்னிலைப் பெற்றது.

    இதனால் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 277 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது. சுமார் ஒன்றரை நாட்களுக்கு மேல் உள்ள நிலையில் 277 ரன்கள் மட்டுமே அடிக்க வேண்டிய நிலையில் இங்கிலாந்து 2-வது சேஸிங் செய்து வருகிறது.
    Next Story
    ×