என் மலர்
விளையாட்டு
பெங்களூர் அணிக்கு எதிரான சூப்பர் ஓவரில் இஷான் கிஷனை களம் இறக்காதது ஏன்? என்று மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா விளக்கம் அளித்துள்ளார்.
துபாய்:
ஐ.பி.எல். போட்டியில் பெங்களூர் அணி சூப்பர் ஓவரில் மும்பையை வீழ்த்தி 2-வது வெற்றியை பெற்றது.
துபாயில் நடந்த 10-வது லீக் ஆட்டத்தில் முதலில் விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 201 ரன் குவித்தது.
டிவில்லியர்ஸ் 24 பந்தில் 55 ரன்னும் (4 பவுண்டரி, 4 சிக்சர்) படிக்கல் 40 பந்தில் 54 ரன்னும் (5 பவுண்டரி, 2 சிக்சர்), ஆரோன்பிஞ்ச் 35 பந்தில் 52 ரன்னும் (7 பவுண்டரி, 1 சிக்சர்), ஷிவம்துபே 10 பந்தில் 27 ரன்னும் (1 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தனர். போல்ட் 2 விக்கெட்டும், ராகுல் சாஹர் 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
பின்னர் விளையாடிய மும்பை இந்தியன்சும் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 201 ரன் எடுத்தது. இதனால் பரபரப்பான இந்த ஆட்டம் டையில் முடிந்தது.
இஷான் கிஷன் 58 பந்தில் 99 ரன்னும் (2பவுண்டரி , 9சிக்சர்), போலார்ட் 24 பந்தில் 60 ரன்னும் (3பவுண்டரி, 5சிக்சர்) எடுத்தனர். உதனா 2 விக்கெட்டும், வாஷிங்டன் சுந்தர், சாஹல், ஆடம் சம்பா தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
ஆட்டம் டை ஆனதால் வெற்றி தோல்வியை நிர்ணயம் செய்ய சூப்பர் ஓவர் கடைபிடிக்கப்பட்டது.
சூப்பர் ஓவரில் பெங்களூர் அணி வெற்றி பெற்றது. முதலில் ஆடிய மும்பை அணி 1 விக்கெட் இழப்புக்கு 7 ரன்னே எடுத்தது. பெங்களூர் அணி 8 ரன் இலக்கை எடுத்து கடைசி பந்தில் வெற்றி பெற்றது. அந்த அணி விக்கெட் இழப்பின்றி 11 ரன்னை எடுத்தது.
இந்த தொடரில் முடிந்த 2-வது சூப்பர் ஓவர் ஆகும். ஏற்கனவே டெல்லி அணி சூப்பர் ஓவரில் பஞ்சாப்பை வீழ்த்தி இருந்தது. பெங்களூர் அணி பெற்ற 2-வது வெற்றியாகும். மும்பை 2-வது தோல்வியை சந்தித்தது.
இந்த வெற்றி குறித்து பெங்களூர் அணி கேப்டன் விராட்கோலி கூறியதாவது:-
இந்த போட்டியின் இரு அணியிலும் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டனர். ஆனால் இதில் டிவில்லியர்சின் ஆட்டம் மிகவும் அபாரமாக இருந்தது. வெற்றி இரு அணிகளின் பக்கம் மாறிமாறி இருந்தது. கடைசியில் நாங்கள் வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
தோல்வி குறித்து மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோகித்சர்மா கூறியதாவது:-
எங்கள் அணியின் தொடக்கம் சிறப்பாக அமையவில்லை. அதே நேரத்தில் இஷான் கிஷனும், போலார்ட்டும் மிகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இஷான் கிஷன் மிகவும் சோர்ந்த நிலையில் இருந்தார். அவர் நல்ல நிலையில் இல்லாததால் சூப்பர் ஓவரில் களம் இறக்கவில்லை.
சூப்பர் ஓவரில் போதுமான ரன்னை எடுக்காததால் தோல்வியை தழுவினோம். இது ஒரு சிறந்த ஆட்டம் ஆகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பெங்களூர் அணி 4 -வது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்சை வருகிற 3-ந்தேதி துபாயில் சந்திக்கிறது. மும்பை இந்தியன்ஸ் அடுத்த போட்டியில் கிங்ஸ்லெவன் பஞ்சாப்பை 1-ந்தேதி எதிர் கொள்கிறது.

தமிழகத்தை சேர்ந்த சுழற்பந்து வீரர் முருகன் அஸ்வினை பஞ்சாப் அணி சரியாக பயன்படுத்தவில்லை என்று கிரிக்கெட் ஜாம்பவான் தெண்டுல்கர் விமர்சித்துள்ளார்.
மும்பை:
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் 223 ரன் குவித்தும் தோல்வியை தழுவியது. 224 ரன் இலக்கை எடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் ஐ.பி.எல்.லில் புதிய சாதனை படைத்தது.
இந்த போட்டியில் தமிழகத்தை சேர்ந்த சுழற்பந்து வீரர் முருகன் அஸ்வினை பஞ்சாப் அணி சரியாக பயன்படுத்தவில்லை என்று கிரிக்கெட் ஜாம்பவான் தெண்டுல்கர் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-
ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சுமித், சஞ்சு சாம்சன், திவேதியா ஆகியோரது பேட்டிங் அபாரமாக இருந்தது. பெரிய இலக்கை வெற்றிகரமாக விரட்டினார்கள். அமைதியாக ஆடி பிறகு அதிரடியை வெளிப்படுத்தினார்கள்.
கிங்ஸ் லெவன் பஞ்சாப் வேகப்பந்து வீரர்கள் யார்க்கர்களை வீசாதது ஆச்சரியமாக இருந்தது. இதேபோல சுழற்பந்து வீரர் முருகன் அஸ்வினையும் சரியாக பயன்படுத்தவில்லை. இது அதிர்ச்சி அளித்தது.
இவ்வாறு அவர் கூறினார்.
முருகன் அஸ்வின் இந்த ஆட்டத்தில் 1.3 ஓவர்கள் வீசி 16 ரன்கள் கொடுத்து 1 விக்கெட்டை கைப்பற்றினார்.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் ஐதராபாத் சன் ரைசர்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன.
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி இந்த சீசனை வெற்றிகரமாக தொடங்கி இருக்கிறது. அந்த அணி கிங்ஸ் லெவன் பஞ்சாப்பை சூப்பர் ஓவரிலும், சென்னை சூப்பர் கிங்சை 44 ரன் வித்தியாசத்திலும் வீழ்த்தியது. டெல்லி அணியின் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு நேர்த்தியாக உள்ளது. அந்த அணியின் பீல்டிங் முன்னேற்றம் காண வேண்டியது அவசியமானதாகும். முதலாவது ஆட்டத்தில் கையில் காயம் அடைந்த சுழற்பந்து வீச்சாளர் ஆர்.அஸ்வின் தேறிவிட்டாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்றைய ஆட்டத்தில் ஆடமாட்டார் என்று தெரிகிறது.
முன்னாள் சாம்பியனான ஐதராபாத் சன் ரைசர்ஸ் தடுமாற்றத்தை சந்தித்து வருகிறது. முதலாவது ஆட்டத்தில் பெங்களூருவிடமும், அடுத்த ஆட்டத்தில் கொல்கத்தாவிடமும் வீழ்ந்தது. ஐதராபாத் அணியின் பேட்டிங், பந்து வீச்சு இன்னும் நல்ல நிலைக்கு வரவில்லை. முந்தைய தோல்வியை மறந்து வெற்றிக் கணக்கை தொடங்க ஐதராபாத் அணி தீவிரம் காட்டும். அதேநேரத்தில் தங்களது வெற்றியை நீட்டிக்க டெல்லி அணி நம்பிக்கையுடன் செயல்படும். வெற்றிக்காக இரு அணிகளும் மல்லுக்கட்டும் என்பதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில் ஆஸ்திரிய வீரர் டொமினிக் திம், அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் ஆகியோர் வெற்றி பெற்றனர்.
பாரீஸ்:
‘கிராண்ட்ஸ்லாம்’ என்ற உயரிய அந்தஸ்து பெற்ற பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் 2-வது நாளான நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் அமெரிக்க ஓபன் சாம்பியனும், உலக தரவரிசையில் 3-வது இடத்தில் இருப்பவருமான ஆஸ்திரிய வீரர் டொமினிக் திம் 6-4, 6-3, 6-3 என்ற நேர்செட்டில் 7-ம் நிலை வீரரான மரின் சிலிச்சை (குரோஷியா) வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு ஆட்டத்தில் கஜகஸ்தான் வீரர் மிகைல் குகுஷ்கின் 7-5, 3-6, 7-6 (7-1), 6-0 என்ற செட் கணக்கில் இத்தாலியின் பாபி போக்னினியை வெளியேற்றினார். மற்ற ஆட்டங்களில் ஹெர்பெர்ட் (பிரான்ஸ்), காஸ்டன் (பிரான்ஸ்), டாமி பால் (அமெரிக்கா), பெட்ரோ மார்டினெஸ் (ஸ்பெயின்), நிஷிகா (ஜப்பான்), ஜாக் சோக் (அமெரிக்கா) ஆகியோர் வெற்றி பெற்றனர்.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் தரவரிசையில் 11-வது இடத்தில் இருக்கும் கிவிடோவா (செக்குடியரசு) 6-3, 7-5 என்ற நேர்செட்டில் பிரான்ஸ் வீராங்கனை ஓசியன் டோடினை தோற்கடித்து 2-வது சுற்றுக்குள் நுழைந்தார். இன்னொரு ஆட்டத்தில் 8-ம் நிலை வீராங்கனையான கிகி பெர்டென்ஸ் (நெதர்லாந்து) 2-6, 6-2, 6-0 என்ற செட் கணக்கில் உக்ரைன் வீராங்கனையை காதரினா ஜவாத்ஸ்காவை சாய்த்தார். மற்றொரு ஆட்டத்தில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா) 7-6 (7-2), 6-0 என்ற நேர்செட்டில் சக நாட்டு வீராங்கனை கிறிஸ்டியை விரட்டியடித்தார்.
மற்ற ஆட்டங்களில் ஸ்விடோலினா (உக்ரைன்), ஜாஸ்மின் பாலினி (இத்தாலி), பிரோன்கோவா (பல்கேரியா), சாரா எர்ரானி (இத்தாலி), சினிய கோவா (செக்குடியரசு), அனிசி மோவா (அமெரிக்கா) ஆகியோர் வெற்றியை ருசித்தனர். ரஷிய வீராங்கனை குஸ்னெட்சோவா முதல் சுற்றில் அதிர்ச்சி தோல்வி கண்டு நடையை கட்டினார்.

மும்பை இந்தியன்ஸ் அணியை சூப்பர் ஓவரில் வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி திரில் வெற்றி பெற்றது.
துபாய்:
ஐபிஎல் தொடரின் 10-வது லீக் ஆட்டம் துபாயில் நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் ஆரோன் பிஞ்ச் - தேவ்தத் படிக்கல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். தேவ்தத் படிக்கல் நிதானமாக விளையாட, ஆரோன் பிஞ்ச் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இதனால் பவர் பிளே-யான முதல் ஆறு ஓவரில் ஆர்சிபி விக்கெட் இழப்பின்றி 59 ரன்கள் விளாசியது.
8-வது ஓவரின் 3-வது பந்தை பவுண்டரிக்கு விரட்டி ஆரோன் பிஞ்ச் 31 பந்தில் அரைசதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 9-வது ஓவரின் கடைசி பந்தில் ஆட்டமிழந்தார்.
அவர் 35 பந்தில் 7 பவுண்டரி, 1 சிக்சருடன் 52 ரன்கள் அடித்தார்.
அப்போது ஆர்சிபி 1 விக்கெட் இழப்பிற்கு 81 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்து விராட் கோலி களம் இறங்கினார். விராட் கோலி பந்தை எதிர்கொள்ள மிகவும் திணறினார். அவர் 11 பந்தில் 3 ரன்கள் எடுத்த நிலையில் ஏமாற்றம் அளித்தார்.
தேவ்தத் படிக்கல் - விராட் கோலி ஜோடி 20 பந்தில் ஒரு பவுண்டரி கூட அடிக்காமல் வெறும் 11 ரன்கள் மட்டுமே அடித்தது. அடுத்து டி வில்லியர்ஸ் களம் இறங்கினார். அதன்பின் படிக்கல் ஆட்டத்தில் வேகம் பிடித்தது.
பேட்டின்சன் வீசிய 14-வது ஓவரில் இரண்டு சிக்சர் விளாசினார் படிக்கல். 17-வது ஓவரின் 2-வது பந்தை பவுண்டரிக்கு விரட்டி படிக்கல் 38 பந்தில் அரைசதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர், 40 பந்தில் 54 ரன்கள் எடுத்து போல்ட் பந்தில் ஆட்டமிழந்தார்.
மறுபக்கம் டி வில்லியர்ஸ் மும்பை பந்து வீச்சை புரட்டி எடுத்தார். 19-வது ஓவரின் கடைசி பந்தை சிக்சருக்கு விரட்டி டி வில்லியர்ஸ் 23 பந்தில் 4 பவுண்டரி, 4 சிக்சருடன் அரைசதம் கடந்தார்.
கடைசி ஓவரில் ஷவம் டுபே இரண்டு சிக்ஸ் விளாசி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 20 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் குவித்தது. டி வில்லியர்ஸ் 24 பந்தில் 55 ரன்களுடனும், ஷிவம் டுபே 10 ஓவரில் 3 சிக்ஸ், ஒரு பவுண்டரியுடன் 27 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
மும்பை தரப்பில் டிரண்ட் போல்ட் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் மும்பை அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் ரோகித் சர்மா மற்றும் குயின்டன் டிகாக் களமிறங்கினர்.
8 பந்துகளை சந்தித்து ஒரு சிக்சர் உள்பட 8 ரன்கள் எடுத்திருந்த ரோகித் சர்மா வாஷிங்டன் சுந்தர் பந்து வீச்சில் அவுட் ஆனார். அடுத்து வந்த சூர்ய குமார் யாதவ் 2 பந்துகளை சந்தித்து ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினார்.
தொடக்க வீரரான டிக்காக்கும் 14 ரன்னில் வெளியேறினார். இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி 6.4 ஓவரில் 39 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து திணறியது.
அடுத்து களமிறங்கிய இஷான் கிஷன், ஹர்திக் பாண்ட்யா அணியின் ஸ்கோரை உயர்த்தினர். பாண்ட்யா 15 ரன்னில் வெளியேறினார். பின்னர் வந்த பொல்லார்ட் இஷான் கிஷனுடன் ஜோடி சேர்ந்து பெங்களூர் வீரர்களின் பந்து வீச்சை புரட்டி எடுத்தார். சிறப்பாக ஆடிய இஷான் கிஷன் 58 பந்துகளில் 2 பவுண்டரிகள், 9 சிக்சர்கள் உள்பட 99 ரன்கள் குவித்து உடானா பந்து வீச்சில்
அவுட் ஆகி வெளியேறினார்.
கடைசி பந்தில் 5 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் உடானா வீசிய பந்தை பொல்லார்ட் பவுண்டரிக்கு விளாசினார். இதனால், மும்பை அணி 201 ரன்களை எடுத்தது. இரு அணிகளில் ஸ்கோரும் சமன் ஆனதையடுத்து சூப்பர் ஓவர் வீசப்பட்டது.
சூப்பர் ஓவரில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணியின் பாண்ட்யா, பொல்லாட் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.
3 பந்தில் 2 ரன்களுடன் இருந்த மும்பை அணிக்கு 4-வது பந்தில் போல்லாட் பவுண்டரியை விளாசினார். இதனால், 4 பந்தில் 6 ரன்கள் என மும்பையின் ஸ்கோர் இருந்தது. சைனி வீசிய 5-வது பந்தில் பொல்லாட் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். 6-வது பந்தில் 1 ரன் எடுத்ததால் சூப்பர் ஓவர் முடிவில் மும்பை அணி 7 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து 6 பந்தில் 8 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூர் அணியின் தொடக்க வீரர்களாக விராட் கோலி மற்றும் டிவில்லியர்ஸ் களமிறங்கினர். மும்பை அணியின் பும்ரா சூப்பர் ஓவரை வீசினார்.
முதல் பந்தில் டிவில்லியர்ஸ் 1 ரன் எடுத்தார். இரண்டாவது பந்தில் கோலி 1 ரன் எடுக்க அணியின் ஸ்கோர் 2 ஆனது. 3-வது பந்தில் விக்கெட் கீப்பரிடம் டிவில்லியர்ஸ் கேட்ச் கொடுத்து அவுட் ஆனதாக கள நடுவர் தீர்ப்பளித்ததை எதிர்த்து மூன்றாவது நடுவரிடம் ரீவ்யூ கேட்கப்பட்டது. அதில் டிவில்லியர்ஸ் அவுட் ஆகவில்லை என தெரிவிக்கப்பட்டது.
பின்னர் அடுத்த பந்தான 4-வது பந்தில் டிவில்லியர்ஸ் பவுண்டரி விளாசினார். இதனால் பெங்களூர் அணியின் ஸ்கோர் 6 ரன்கள் ஆனது. 5-வது பந்தில் டிவில்லியர்ஸ் 1 ரன்கள் எடுத்தார்.
கடைசி பந்தில் 1 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் விராட் கோலி பவுண்டரி எடுத்து அணியின் ஸ்கோரை 11 ரன்களாக உயர்த்தி வெற்றிக்கு வழிவகுத்தார். இதனால் மும்பை இந்தியன்ஸ் அணியை சூப்பர் ஓவரில் வீழ்த்தி ராயல் சேலன்ஞ்சர்ஸ் பெங்களூர் அணி திரில் வெற்றி பெற்றது.
ஐபிஎல் கிரிக்கெட்டின் பெங்களூர் - மும்பை அணிகளுக்கு இடையேயான போட்டி ’டை’யில் முடிந்தது. இதையடுத்து சூப்பர் ஓவர் வீசப்பட உள்ளது.
துபாய்:
ஐபிஎல் தொடரின் 10-வது லீக் ஆட்டம் துபாயில் நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் ஆரோன் பிஞ்ச் - தேவ்தத் படிக்கல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். தேவ்தத் படிக்கல் நிதானமாக விளையாட, ஆரோன் பிஞ்ச் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இதனால் பவர் பிளே-யான முதல் ஆறு ஓவரில் ஆர்சிபி விக்கெட் இழப்பின்றி 59 ரன்கள் விளாசியது.
8-வது ஓவரின் 3-வது பந்தை பவுண்டரிக்கு விரட்டி ஆரோன் பிஞ்ச் 31 பந்தில் அரைசதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 9-வது ஓவரின் கடைசி பந்தில் ஆட்டமிழந்தார்.
அவர் 35 பந்தில் 7 பவுண்டரி, 1 சிக்சருடன் 52 ரன்கள் அடித்தார்.
அப்போது ஆர்சிபி 1 விக்கெட் இழப்பிற்கு 81 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்து விராட் கோலி களம் இறங்கினார். விராட் கோலி பந்தை எதிர்கொள்ள மிகவும் திணறினார். அவர் 11 பந்தில் 3 ரன்கள் எடுத்த நிலையில் ஏமாற்றம் அளித்தார்.
தேவ்தத் படிக்கல் - விராட் கோலி ஜோடி 20 பந்தில் ஒரு பவுண்டரி கூட அடிக்காமல் வெறும் 11 ரன்கள் மட்டுமே அடித்தது. அடுத்து டி வில்லியர்ஸ் களம் இறங்கினார். அதன்பின் படிக்கல் ஆட்டத்தில் வேகம் பிடித்தது.
பேட்டின்சன் வீசிய 14-வது ஓவரில் இரண்டு சிக்சர் விளாசினார் படிக்கல். 17-வது ஓவரின் 2-வது பந்தை பவுண்டரிக்கு விரட்டி படிக்கல் 38 பந்தில் அரைசதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர், 40 பந்தில் 54 ரன்கள் எடுத்து போல்ட் பந்தில் ஆட்டமிழந்தார்.
மறுபக்கம் டி வில்லியர்ஸ் மும்பை பந்து வீச்சை புரட்டி எடுத்தார். 19-வது ஓவரின் கடைசி பந்தை சிக்சருக்கு விரட்டி டி வில்லியர்ஸ் 23 பந்தில் 4 பவுண்டரி, 4 சிக்சருடன் அரைசதம் கடந்தார்.
கடைசி ஓவரில் ஷவம் டுபே இரண்டு சிக்ஸ் விளாசி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 20 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் குவித்தது.
டி வில்லியர்ஸ் 24 பந்தில் 55 ரன்களுடனும், ஷிவம் டுபே 10 ஓவரில் 3 சிக்ஸ், ஒரு பவுண்டரியுடன் 27 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
மும்பை தரப்பில் டிரண்ட் போல்ட் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் மும்பை அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் ரோகித் சர்மா மற்றும் குயின்டன் டிகாக் களமிறங்கினர்.
8 பந்துகளை சந்தித்து ஒரு சிக்சர் உள்பட 8 ரன்கள் எடுத்திருந்த ரோகித் சர்மா வாஷிங்டன் சுந்தர் பந்து வீச்சில் அவுட் ஆனார். அடுத்து வந்த சூர்ய குமார் யாதவ் 2 பந்துகளை சந்தித்து ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினார்.
தொடக்க வீரரான டிக்காக்கும் 14 ரன்னில் வெளியேறினார். இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி 6.4 ஓவரில் 39 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து திணறியது.
அடுத்து களமிறங்கிய இஷான் கிஷன், ஹர்திக் பாண்ட்யா அணியின் ஸ்கோரை உயர்த்தினர். பாண்ட்யா 15 ரன்னில் வெளியேறினார். பின்னர் வந்த பொல்லார்ட் இஷான் கிஷனுடன் ஜோடி சேர்ந்து பெங்களூர் வீரர்களின் பந்து வீச்சை புரட்டி எடுத்தார்.
சிறப்பாக ஆடிய இஷான் கிஷன் 58 பந்துகளில் 2 பவுண்டரிகள், 9 சிக்சர்கள் உள்பட 99 ரன்கள் குவித்து உடானா பந்து வீச்சில் அவுட் ஆகி வெளியேறினார்.
கடைசி பந்தில் 5 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் உடானா வீசிய பந்தை பொல்லார்ட் பவுண்டரிக்கு விளாசினார். இதனால், மும்பை அணி 201 ரன்களை எடுத்தது. இதனால் இரு அணிகளில் ஸ்கோரும் சமன் ஆனது. தற்போது சூப்பர் ஓவர் நடைபெற உள்ளது.
ஆரோன் பிஞ்ச் 35 பந்தில் 52 ரன்களும், தேவ்தத் 40 பந்தில் 54 ரன்களும், டி வில்லியர்ஸ் 24 பந்தில் 55 ரன்களும் விளாசினர்.
ஐபிஎல் தொடரின் 10-வது லீக் ஆட்டம் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் ஆரோன் பிஞ்ச் - தேவ்தத் படிக்கல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். தேவ்தத் படிக்கல் நிதானமாக விளையாட, ஆரோன் பிஞ்ச் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் பவர் பிளே-யான முதல் ஆறு ஓவரில் ஆர்சிபி விக்கெட் இழப்பின்றி 59 ரன்கள் விளாசியது.
8-வது ஓவரின் 3-வது பந்தை பவுண்டரிக்கு விரட்டி ஆரோன் பிஞ்ச் 31 பந்தில் அரைசதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 9-வது ஓவரின் கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். அவர் 35 பந்தில் 7 பவுண்டரி, 1 சிக்சருடன் 52 ரன்கள் அடித்தார்.
அப்போது ஆர்சிபி 9 விக்கெட் இழப்பிற்கு 81 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்து விராட் கோலி களம் இறங்கினார். விராட் கோலி பந்தை எதிர்கொள்ள மிகவும் திணறினார். அவர் 11 பந்தில் 3 ரன்கள் எடுத்த நிலையில் ஏமாற்றம் அளித்தார்.
தேவ்தத் படிக்கல் - விராட் கோலி ஜோடி 20 பந்தில் ஒரு பவுண்டரி கூட அடிக்கவில்லை. மேலும் 11 ரன்களே அடித்தது. அடுத்து டி வில்லியர்ஸ் களம் இறங்கினார். அதன்பின் படிக்கல் ஆட்டத்தில் வேகம் பிடித்தது.
பேட்டின்சன் வீசிய 14-வது ஓவரில் இரண்டு சிக்சர் விளாசினார் படிக்கல். 17-வது ஓவரின் 2-வது பந்தை பவுண்டரிக்கு விரட்டி படிக்கல் 38 பந்தில் அரைசதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர், 40 பந்தில் 54 ரன்கள் எடுத்து போல்ட் பந்தில் ஆட்டமிழந்தார்.
மறுபக்கம் டி வில்லியர்ஸ் அவ்வப்போது வாணவேடிக்கை நிகழ்த்தினார். இதனால் 19-வது ஓவரின் கடைசி பந்தை சிக்சருக்கு விரட்டி 23 பந்தில் 4 பவுண்டரி, 4 சிக்சருடன் அரைசதம் கடந்தார்.
கடைசி ஓவரில் ஷவம் டுபே இரண்டு சிக்ஸ் விளாசி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 20 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் குவித்தது. டி வில்லியர்ஸ் 24 பந்தில் 55 ரன்களுடனும், ஷிவம் டுபே 10 ஓவரில் 3 சிக்ஸ், ஒரு பவுண்டரியுடன் 27 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
வங்காளதேசம் அணி இலங்கை சென்று விளையாட திட்டமிட்டிருந்த டெஸ்ட் தொடர் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து ஒத்தி வைக்கப்பட்டது. ஜூலை மாதத்திற்குப் பிறகு மீண்டும் கிரிக்கெட் போட்டிகள் தொடங்க ஆரம்பித்தன.
ஆஸ்திரேலியாவில் நடைபெற இருந்த டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஒத்திவைக்கப்பட்டது. இந்த காலக்கட்டத்தில் வங்காளதேச கிரிக்கெட் அணி இலங்கை சென்று டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட முடிவு செய்தது. இலங்கையும் அதற்கு சம்மதம் தெரிவித்திருந்தது. இதன்மூலம் மீண்டும் இலங்கையில் சர்வதேச கிரிக்கெட் போட்டி தொடங்கும் என ரசிகர்கள் உற்சாகத்தில் இருந்தனர்.
இந்நிலையில் வங்காளதேசம் - இலங்கை தொடர் காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக ஐசிசி தெரிவித்துள்ளது.
துபாயில் நடைபெறும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கெதிராக மும்பை இந்தியன்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
ஐபிஎல் தொடரின் 10-வது லீக் ஆட்டம் துபாயில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோகித் சர்மா டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.
ஆர்சிபி அணியில் ஸ்டெயின், உமேஷ் யாதவ், பிலிப் நீக்கப்பட்டு ஆடம் ஜம்பா, குர்கீரத் சிங் மான், இசுரு உடானா சேர்க்கப்பட்டுள்ளனர்.
மும்பை இந்தியன்ஸ் அணியில் இஷான் கிஷன் சேர்க்கப்பட்டுள்ளனார்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி விவரம்:-
1. தேவ்தத் படிக்கல், 2. ஆரோன் பிஞ்ச், 3. விராட் கோலி, 4. டி வில்லியர்ஸ், 5. குர்கீரத் சிங் மான், 6. ஷிவம் டுபே, 7. வாஷிங்டன் சுந்தர், 8. நவ்தீப் சைனி, 9. சாஹல், 10. ஆடம் ஜம்பா, 11. இசுரு உடானா
மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-
1. குயின்டான் டி காக், 2. ரோகித் சர்மா, 3. சூர்யகுமார் யாதவ், 4. இஷான் கிஷான், 5. ஹர்திக் பாண்ட்யா, 6. பொல்லார்ட், 7. குருணால் பாண்ட்யா, 8. ராகுல் சாஹர், 9. ஜேம்ஸ் பேட்டின்சன், 10. டிரென்ட் போல்ட், 11. பும்ரா.
காயத்தில் இருந்து மீண்டு அஸ்வின், இசாந்த் சர்மா வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளதால் டெல்லி அணி உற்சாகத்தில் உள்ளது.
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி இந்த வருடம் ஐபிஎல் சாம்பியன் கோப்பையை வென்றே தீர வேண்டும் என்ற நோக்கத்தில் விளையாடி வருகிறது. இதற்கு ஏற்ப வீரர்களை தயார் செய்துள்ளது. தொடக்க பேட்ஸ்மேன் வரிசையில் ரகானேவையும், சுழற்பந்து வீச்சில் அஸ்வினையும் புதிதாக அணியில் இணைத்துள்ளது.
ஏற்கனவே ரபடா, நோர்ட்ஜ் ஆகியோர் வேகப்பந்து வீச்சில் அசத்தி வருகின்றனர். முதல் போட்டியில் அஸ்வின் ஒரு ஓவர் வீசிய நிலையில் காயத்தால் வெளியேறினார். இசாந்த் சர்மா போட்டி தொடங்குவதற்கு முன்பே காயத்தால் அவதிப்பட்டார்.
தற்போது இருவரும் உடற்தகுதி பெற்றுள்ளனர். உடற்தகுதி பெற்ற இருவரும் நேற்று வலைப்பயிற்சி மேற்கொண்டனர். இதனால் டெல்லி அணி உற்சாகத்தில் உள்ளது. டெல்லி நாளை அபு தாபியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் இருவரும் விளையாட வாய்ப்புள்ளது.
கடைசி 8 பந்தில் 6 சிக்ஸ் அடித்த ராகுல் டெவாட்டியாவுக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் புகழாரம் சூட்டியுள்ளார்.
டெவாட்டியா குறித்து ஸ்மித் கூறுகையில் ‘‘வலைப் பயிற்சியின்போது ராகுல் டெவாட்டியாவிடம் என்னதை பார்த்தோமோ, அதை காட்ரெலுக்கு எதிராக செய்தார். அவருக்கு ஒரு பந்து சரியாக பேட்டில் பட்டுவிட்டால், அதன்பின் மடைதிறந்த வெள்ளம் போன்று விளையாடுவார் என ஏற்கனவே நான் சொல்லியிருக்கிறேன். அவர் இதயத்தை காட்டிவிட்டார். டைம்அவுட் இடைவெளியின்போது அவர் என்னிடம், இன்னும் நமக்கு நம்பிக்கை உள்ளது என்று கூறினார்.
மைதானத்தின் எல்லா பக்கமும் சஞ்சு சாம்சனின் அடித்த பந்து சென்றது. ஒவ்வொருவர் மீதும் நெருக்கடியை செலுத்துபவர். நாங்கள் மிகப்பெரிய மைதானத்திற்கு ஏற்ப எங்களை மாற்றிக்கொள்ள வேண்டும். இதுபோன்ற ஷாட்ஸ் எந்த மைதானத்திலும் சிக்சராகத்தான் இருக்கும்’’ என்றார்.
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிராக பரபரப்பான ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் 224 என்ற மிகப்பெரிய இலக்கை சேஸிங் செய்து சாதனைப்படைத்தது.
ஐபிஎல் கிரிக்கெட்டில் நேற்றிரவு நடைபெற்ற ஆட்டத்தை யாராலும் மறக்க முடியாது. முதலில் விளையாடிய பஞ்சாப் அணி 223 ரன்கள் குவித்தது. 2-வது போட்டிங் செய்த ராஜஸ்தான் 3 பந்து மீதமுள்ள நிலையில் இலக்கை எட்டி சாதனைப்படைத்தது.
போட்டி ஒரு பக்கமாகவே இருந்தது என்று கூற இயலாது. பீல்டிங், பேட்டிங் என இரண்டு அணிகளும் அசத்தின. டெவாட்டியா 6 பந்தில் ஐந்து சிக்ஸ் விளாசியது. பூரனின் அபார பீல்டிங், இளம் சுழற்பந்து வீச்சாளர் பிஷ்னோயின் அசத்தல் பந்து வீச்சு என பல காரணங்கள் மூலம் ஐபிஎல்-லில் இந்த போட்டி தலைசிறந்தது எனக் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் ஐபிஎல்-ஐ உலகத்தின் சிறந்த லீக்காக இந்த ஆட்டம் உருவாக்கிவிட்டது என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி கூறுகையில் ‘‘What a game.... இதுனால்தான் ஐபிஎல் லீக் உலகின் தலைசிறந்த தொடராக இருக்கிறது. அமேசிங் திறமை வெளிப்படுத்தப்பட்டுள்ளது’’ எனத் தெரிவித்துள்ளார்.