என் மலர்
செய்திகள்

இலங்கை- வங்காளதேசம் ஆட்டம் (கோப்புப்படம்)
அடுத்த மாதம் நடைபெற இருந்த இலங்கை - வங்காளதேசம் தொடர் காலவரையின்றி ஒத்திவைப்பு
வங்காளதேசம் அணி இலங்கை சென்று விளையாட திட்டமிட்டிருந்த டெஸ்ட் தொடர் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து ஒத்தி வைக்கப்பட்டது. ஜூலை மாதத்திற்குப் பிறகு மீண்டும் கிரிக்கெட் போட்டிகள் தொடங்க ஆரம்பித்தன.
ஆஸ்திரேலியாவில் நடைபெற இருந்த டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஒத்திவைக்கப்பட்டது. இந்த காலக்கட்டத்தில் வங்காளதேச கிரிக்கெட் அணி இலங்கை சென்று டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட முடிவு செய்தது. இலங்கையும் அதற்கு சம்மதம் தெரிவித்திருந்தது. இதன்மூலம் மீண்டும் இலங்கையில் சர்வதேச கிரிக்கெட் போட்டி தொடங்கும் என ரசிகர்கள் உற்சாகத்தில் இருந்தனர்.
இந்நிலையில் வங்காளதேசம் - இலங்கை தொடர் காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக ஐசிசி தெரிவித்துள்ளது.
Next Story






