என் மலர்
விளையாட்டு
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிராக பரபரப்பான ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் 224 என்ற மிகப்பெரிய இலக்கை சேஸிங் செய்து சாதனைப்படைத்தது.
ஐபிஎல் கிரிக்கெட்டில் நேற்றிரவு நடைபெற்ற ஆட்டத்தை யாராலும் மறக்க முடியாது. முதலில் விளையாடிய பஞ்சாப் அணி 223 ரன்கள் குவித்தது. 2-வது போட்டிங் செய்த ராஜஸ்தான் 3 பந்து மீதமுள்ள நிலையில் இலக்கை எட்டி சாதனைப்படைத்தது.
போட்டி ஒரு பக்கமாகவே இருந்தது என்று கூற இயலாது. பீல்டிங், பேட்டிங் என இரண்டு அணிகளும் அசத்தின. டெவாட்டியா 6 பந்தில் ஐந்து சிக்ஸ் விளாசியது. பூரனின் அபார பீல்டிங், இளம் சுழற்பந்து வீச்சாளர் பிஷ்னோயின் அசத்தல் பந்து வீச்சு என பல காரணங்கள் மூலம் ஐபிஎல்-லில் இந்த போட்டி தலைசிறந்தது எனக் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் ஐபிஎல்-ஐ உலகத்தின் சிறந்த லீக்காக இந்த ஆட்டம் உருவாக்கிவிட்டது என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி கூறுகையில் ‘‘What a game.... இதுனால்தான் ஐபிஎல் லீக் உலகின் தலைசிறந்த தொடராக இருக்கிறது. அமேசிங் திறமை வெளிப்படுத்தப்பட்டுள்ளது’’ எனத் தெரிவித்துள்ளார்.
பிரெஞ்ச் ஓபன் டென்னில் பெண்கள் ஒற்றையருக்கான தொடக்க சுற்றில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை வீனஸ் வில்லியம்ஸ் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.
பிரெஞ்ச் ஓபன் டென்னிசின் முதன்மைச் சுற்று நடைபெற்று வருகிறது.
பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு தொடக்க சுற்றில் அமெரிக்காவின் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை வீனஸ் வில்லியம்ஸ் சுலோவேக்கியாவை சேர்ந்த கரோலினா ஸ்கிமிட்லோவாவை எதிர்கொண்டார்.
இதில் வீனஸ் வில்லியம்ஸ் 4-6, 4-6 என்ற நேர் செட்டில் ஸ்கிமிட்லோவாவிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் 11-வது அணியாக ஈஸ்ட் பெங்கால் அணி இணைய இருப்பதாக நிதா அம்பானி அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
மும்பை:
7-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி நவம்பர் முதல் மார்ச் மாதம் வரை கோவாவில் நடக்கிறது. அங்குள்ள மூன்று மைதானங்களில் கொரோனா தடுப்பு மருத்துவ பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி ரசிகர்கள் இன்றி இந்த போட்டியை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இதில், வழக்கமாக சென்னையின் எப்.சி, கேரளா பிளாஸ்டர்ஸ், எப்.சி.கோவா, மும்பை சிட்டி, பெங்களூரு எப்.சி. உள்பட 10 அணிகள் பங்கேற்கும். இந்த ஆண்டு ஐ.எஸ்.எல். போட்டியில் கூடுதலாக ஒரு அணி சேர்க்கப்பட்டு உள்ளது. 11-வது அணியாக ஈஸ்ட் பெங்கால் அணி இணைய இருப்பதாக கால்பந்து விளையாட்டு வளர்ச்சி கழக தலைவர் நிதா அம்பானி நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தார். ஈஸ்ட் பெங்கால் கிளப்பின் பெரும்பான்மையான பங்குகளை ஸ்ரீ சிமென்ட் பவுண்டேசன் வாங்கியுள்ளது.
அதிகமான கால்பந்து ரசிகர்களை கொண்ட மேற்கு வங்காளத்தில் இருந்து ஐ.எஸ்.எல்.-ல் அடியெடுத்து வைக்கும் 2-வது அணி ஈஸ்ட் பெங்கால் ஆகும். ஏற்கனவே பங்கேற்று வரும் அட்லெட்டிகோ டி கொல்கத்தா அணியுடன் பழமைவாய்ந்த மோகன் பகான் கிளப் இணைந்து இந்த முறை ஒருங்கிணைந்த அணியாக களம் காண இருப்பது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச 20 ஓவர் போட்டிகளில் அதிகம் பேரை அவுட் ஆக்கிய விக்கெட் கீப்பர் என்ற சாதனையை இந்திய முன்னாள் விக்கெட் கீப்பர் டோனியிடம் இருந்து தட்டிப்பறித்தார் 30 வயதான அலிசா ஹீலே.
பிரிஸ்பேன்:
நியூசிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது. இதில் தொடக்க ஆட்டத்தில் வெற்றி கண்ட ஆஸ்திரேலியா பிரிஸ்பேனில் நேற்று நடந்த 2-வது ஆட்டத்திலும் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது.
ஆஸ்திரேலிய பெண்கள் அணியின் விக்கெட் கீப்பர் அலிசா ஹீலே இவ்விரு ஆட்டங்களிலும் சேர்த்து 2 கேட்ச், 2 ஸ்டம்பிங் செய்தார். இதையடுத்து 20 ஓவர் போட்டியில் அவர் விக்கெட் கீப்பிங் மூலம் ஆட்டம் இழக்கச் செய்தவர்களின் எண்ணிக்கை 92 ஆக (114 ஆட்டத்தில் 42 கேட்ச், 50 ஸ்டம்பிங்) உயர்ந்தது.
இதன் மூலம் ஒட்டுமொத்த சர்வதேச 20 ஓவர் போட்டிகளில் அதிகம் பேரை அவுட் ஆக்கிய விக்கெட் கீப்பர் என்ற சாதனையை இந்திய முன்னாள் விக்கெட் கீப்பர் டோனியிடம் இருந்து தட்டிப்பறித்தார். 30 வயதான அலிசா ஹீலே, ஆஸ்திரேலிய பிரபல கிரிக்கெட் வீரர் மிட்செல் ஸ்டார்க்கின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த மாதம் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்ற டோனி சர்வதேச 20 ஓவர் போட்டிகளில் விக்கெட் கீப்பிங்கில் 91 பேரை (98 ஆட்டத்தில் 57 கேட்ச் மற்றும் 34 ஸ்டம்பிங்) ஆட்டம் இழக்கச் செய்துள்ளார்.

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் ஒரே ஓவரில் 5 சிக்சர்கள் அடித்து அசத்திய ராகுல் டெவாட்டியாவுக்கு முன்னாள் வீரர் யுவராஜ் சிங் பாராட்டு தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ஷார்ஜாவில் நடைபெற்றது.
முதலில் ஆடிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் மயங்க் அகர்வால் சதமடித்து அசத்தினார். கே எல் ராகுல் அரை சதமடித்தார். இறுதியில் பஞ்சாப் அணி 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 223 ரன்கள் குவித்தது.
தொடர்ந்து ஆடிய ராஜஸ்தான் அணி 224 ரன்கள் என்ற வெற்றி இலக்கை எட்டிப்பிடித்து, ஐ.பி.எல். வரலாற்றில் அதிகப்படியான ஸ்கோரை சேஸிங் செய்த அணி என்ற சாதனையைப் படைத்துள்ளது.
ஸ்மித் (50), சஞ்சு சாம்சன் (85) ஆகியோரின் சிறந்த ஆட்டத்தால் ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றியை நோக்கி சென்றது.
கடைசி 3 ஓவர்களில் ராஜஸ்தான் அணிக்கு 51 ரன்கள் தேவைப்பட்டது. 18-வது ஓவரை காட்ரெல் வீசினார். இந்த ஓவரை ராகுல் டெவாட்டியா எதிர்கொண்டார்.
முதல் நான்கு பந்திலும் இமாலய சிக்சர் விளாசினார். இதனால் ஆறு பந்தில் ஆறு சிக்ஸ் அடிப்பாரா? என்ற ஆர்வம் எழுந்தது. ஆனால் ஐந்தாவது பந்து பேட்டில் படவில்லை. 6-வது பந்தை மீண்டும் ஒருமுறை எல்லைக்கோட்டுக்கு வெளியே அனுப்பினார். ஒரே ஓவரில் ஐந்து சிக்சர்கள் அடித்து அசத்தினார் டெவாட்டியா.
இறுதியில், ராஜஸ்தான் அணி 19.3 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 226 ரன்கள் குவித்து சாதனை வெற்றி பெற்றது.
இந்நிலையில், ஒரே ஓவரில் 5 சிக்சர்கள் அடித்த ராகுல் டெவாட்டியாவுக்கு முன்னாள் ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், ஒரே ஓவரில் 5 சிக்சர்கள் அடித்த டெவாட்டியாவுக்கு பாராட்டுக்கள். சாதனை வெற்றி பெற்றுள்ள ராஜஸ்தான் அணிக்கு வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு கடைசி 3 ஓவரில் 51 ரன்கள் தேவை என்ற நிலையில், 3 பந்துகள் மீதமிருக்கும் நிலையில் சேஸிங் செய்து அசத்தியது.
ராஜஸ்தான் ராயல்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ஷார்ஜாவில் நடைபெற்றது. இதில் 224 ரன்கள் வெற்றி இலக்கை ராஜஸ்தான் ராயல்ஸ் எட்டி, ஐபிஎல் வரலாற்றில் அதிகப்படியான ஸ்கோரை சேஸிங் செய்த அணி என்ற சாதனையைப் படைத்துள்ளது.
ஸ்மித் (50), சஞ்சு சாம்சன் (85) ஆகியோரின் சிறந்த ஆட்டத்தால் ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றியை நோக்கி சென்றது. மிடில் ஓவர்கள் சற்று பின்தங்கியதால் நெருக்கடி ஏற்பட்டது. அணியின் ஸ்கோர் 16.1 ஓவரில் 161 ரன்னாக இருக்கும்போது சஞ்சு சாம்சன் ஆட்டமிழந்தார்.
அப்போது ராஜஸ்தான் அணிக்கு 63 ரன்கள் தேவைப்பட்டது. இந்த ஓவரின் கடைசி இரண்டு பந்துகளில் ராபின் உத்தப்பா பவுண்டரிகள் அடிக்க ராஜஸ்தான் அணிக்கு கடைசி 3 ஓவர்களில் 51 ரன்கள் தேவைப்பட்டது.
18-வது ஓவரை காட்ரெல் வீசினார். இந்த ஓவரை ராகுல் டெவாட்டியா எதிர்கொண்டார். முதல் நான்கு பந்திலும் இமாலய சிக்சர் விளாசினார். இதனால் ஆறு பந்தில் ஆறு சிக்ஸ் அடிப்பாரா? என்ற ஆர்வம் எழுந்தது. ஆனால் ஐந்தாவது பந்து பேட்டில் படவில்லை. 6-வது பந்தை மீண்டும் ஒருமுறை எல்லைக்கோட்டுக்கு வெளியே அனுப்பினார். ஒரே ஓவரில் ஐந்து சிக்சர்கள் அடிக்க ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு கடைசி இரண்டு ஓவரில் 21 ரன்களே தேவைப்பட்டது.
19-வது ஓவரை முகமது ஷமி வீசினார். முதல் பந்தில் ராபின் உத்தப்பா ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஆர்சர் 2-வது மற்றும் 3-வது பந்தை இமாயல சிக்சருக்கு தூக்கினார். அடுத்த பந்தில் ஒரு ரன் அடித்தார். அதற்கு அடித்த பந்தில் டெவாட்டியா ஒரு சிக்ஸ் விளாசினார்.
இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் 11 பந்தில் 8 சிக்சர்கள் அடித்தது. ஒரு சிங்கிள் உள்பட 49 ரன்கள் அடிக்க அணியின் வெற்றி உறுதியானது. ராகுல் டெவாட்டியா கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். அவர் 31 பந்தில் 7 சிக்சருடன் 53 ரன்கள் அடித்தார். இவர் கடைசி 8 பந்தில் 36 ரன்கள் அடித்தார். முதல் 23 பந்தில் 17 ரன்களே அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜாப்ரா ஆர்சர் 3 பந்தில் 2 சிக்சருடன் 13 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் சிமோனா ஹெலெப், அசரெங்கா எளிதாக வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் இன்று தொடங்கியது. பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் முதல் நிலை வீராங்கனையான சிமோனா ஹாலெப் சாரா சோரிபோஸ் டோர்னோவை எதிர்கொண்டார். இதில் சிமோனா ஹாலெப் 6-4, 6-0 என நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
மற்றொரு ஆட்டத்தில் அசரெங்கா 6-1, 6-2 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்றார். 16-ம் நிலை வீராங்கனை மெர்டன்ஸ் 6-2, 6-3 என வெற்றி பெற்றார்.
17-ம் நிலை வீராங்கனை கோன்டாவெயிட் 4-6, 6-3, 4-6 என கார்சியாகவிடம் தோல்வியடைந்தார்.
சஞ்சு சாம்சன், டெவாட்டியாவின் அதிரடி ஆட்டத்தால் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ஐபிஎல் கிரிக்கெட்டின் 9வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயலஸ் அணியும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, கிங்ஸ் லெவன் பஞ்சாப் முதலில் பேட்டிங் செய்தது. கேஎல் ராகுல், மயங்க் அகர்வால் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். தொடக்கம் முதலே இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது.
முதல் 10 ஓவர் முடிவில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் விக்கெட் இழப்பின்றி 110 ரன்கள் குவித்தது. மயங்க் அகர்வால் 69 ரன்களும், லோகேஷ் ராகுல் 36 ரன்கள் எடுத்திருந்தனர்.
அரைசதம் அடித்த பின் மயங்க் அகர்வால் ருத்ர தாண்டவம் ஆடினார். 13.2 ஓவரில் பஞ்சாப் அணி 150 ரன்னைக் கடந்தது. இதற்கிடையில் கேஎல் ராகுல் 35 பந்தில் அரைசதம் அடித்தார்.
மறுமுனையில் ஜெட் வேகத்தில் சென்ற மயங்க் அகர்வால் 15-வது ஓவரின் கடைசி பந்தை பவுண்டரிக்கு விரட்டி 45 பந்தில் 9 பவுண்டரி, 7 சிக்சருடன் சதம் அடித்தார். மயங்க் அகர்வால் 50 பந்தில் 106 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கேஎல் ராகுல் 69 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
இறுதியில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் 20 ஓவர் முடிவில் 2 விக்கெட்டுக்கு 223 ரன்கள் குவித்தது. மேக்ஸ்வெல் 13 ரன்னும், பூரன் 25 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இதையடுத்து 224 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் ராஜஸ்தான் ராயலஸ் அணி களமிறங்கியது.
தொடக்க ஆட்டக்காரர்களாக ஜோஸ் பட்லரும், ஸ்டீவ் ஸ்மித்தும் விளையாடினர். பட்லர் 4 ரன்னில் அவுட்டாகினார்.
ஸ்மித் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்து ஆட்டமிழந்தார்.
ஸ்மித் அவுட்டானதும் மறுமுனையில் ஆடிய சஞ்சு சாம்சன் அதிரடியை வெளிப்படுத்தினார். கிடைத்த பந்துகளை சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார். சாம்சன் 42 பந்தில் 7 சிக்சர், 4 பவுண்டரி உள்பட 85 ரன்கள் குவித்து அவுட்டானார். அப்போது ராஜஸ்தான் அணி 161 ரன்கள் எடுத்திருந்தது.
தொடர்ந்து ஆடிய ராகுல் டெவாட்டியா, 18 வது ஓவரில் 5 சிக்சர் அடித்து அசத்தினார். இதனால் கடைசி 2 ஓவரில் ராஜஸ்தான் வெற்றி பெற 21 ரன்கள் தேவைப்பட்டது. அதிரடியாக ஆடிய டெவாட்டியா 53 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
இறுதியில் ராஜஸ்தான் அணி 6 விக்கெட் இழப்புக்கு 226 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக சஞ்சு சாம்சன் தேர்வு செய்யப்பட்டார்.
ஐபிஎல் வரலாற்றில் அதிக சேசிங் கொண்ட வெற்றி இது என்பதால் ராஜஸ்தான் அணி சாதனை வெற்றி பெற்றது.
சஞ்சு சாம்சன் அடித்த பந்தை பவுண்டரி லைன் அருகில் நின்ற நிக்கோலஸ் பூரன் பந்தை பிடித்த விதம் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்துள்ளது.
கிங்ஸ் லெவன் பஞ்சாப் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான 9-வது லீக் ஆட்டம் ஷார்ஜாவில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் 223 ரன்கள் குவித்தது.
பின்னர் 224 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி களம் இறங்கியது, ஜோஸ் பட்லர், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.
ஜோஸ் பட்லர் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து ஸ்மித் உடன் சஞ்சு சாம்சன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
8-வது ஓவரை முருகன் அஸ்வின் வீசினார். 3-வது பந்தை சஞ்சு சாம்சன் லெக் சைடு தூக்கி அடித்தார். பந்து பவுண்டரி லைனை தாண்டவும் மின்னல் வேகத்தில் நிக்கோலஸ் பூரன் லைனுக்கு வெளியில் பாய்ந்து பந்தை பிடித்தார்.
லைனுக்கு வெளியே சென்றது தெரிந்ததால் தரையில் விழுவதற்குள் பந்தை பவுண்டரி லைனுக்கள் வீசினார். அப்போது அவரது உடல் முழுவதும் பவுண்டரி லைனுக்கு வெளியில் இருந்தது.
அபாரமாக பீல்டிங் செய்து இரண்டு ரன்களை சேமித்தார். அவரது பீல்டிங்கை அனைவரும் பாராட்டி வருகின்றனர். இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் ‘‘என்னுடைய வாழ்க்கையில் நான் பார்த்ததில் மிகவும் சிறந்த சேமிப்பு. நம்ப முடியாதது’’ என புகழ்ந்துள்ளார்.
கிரிக்கெட் விமர்சகர்களும் புகழந்து வருகின்றனர்.
பிரெஞ்ச் ஓபன் டென்னில் ஆண்கள் ஒற்றையருக்கான தொடக்க சுற்றில் பெல்ஜியம் வீரர் டேவிட் கோபின் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸின் முதன்மைச் சுற்று இன்று தொடங்கியது. ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு தொடக்க சுற்றில் 11-ம் நிலை வீரரான பெல்ஜியத்தின் டேவிட் கோபின் தரநிலை பெறாத இத்தாலியின் ஜேனிக் சின்னெரை எதிர்கொண்டார்.
இதில் டேவிட் கோபின் 5-7, 0-6,3-6 என நேர்செட் கணக்கில் அதிர்ச்சிகரமாக தோல்வியடைந்தார். மற்றொரு ஆட்டத்தில் அமெரிக்காவின் கோர்டா, டி. ஃப்ரிட்ஸ், தென்கொரியாவின் நிசிகோரி, அர்ஜென்டினாவின் கோரியா, 21-ம் நிலை வீரர் இஸ்னர், ஆஸ்திரியாவின் ரோடியன்நவ் ஆகியோர் முதல் சுற்றில் வெற்றி பெற்றனர்.
மயங்க் அகர்வால், கேஎல் ராகுல் ஜோடி ருத்ர தாண்டவம் ஆட கிங்ஸ் லெவன் பஞ்சாப் 20 ஓவரில் 2 விக்கெட் இழப்பின்றி 223 ரன்கள் குவித்துள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிராக கிங்ஸ் லெவன் பஞ்சாப் முதலில பேட்டிங் செய்தது. கேஎல் ராகுல், மயங்க் அகர்வால் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். தொடக்கம் முதலே இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். குறிப்பாக மயங்க் அகர்வால் பட்டைய கிளப்பினார்.
இதனால் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. 4.3 ஓவரில் 50 ரன்னைக் கடந்த பஞ்சாப், 8.4 ஓவரில் 100 ரன்னைக் கடந்தது. இதற்கிடையில் மயங்க் அகர்வால் 26 பந்தில் அரைசதம் கடந்தார்.
10 ஓவர் முடிவில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் விக்கெட் இழப்பின்றி 110 ரன்கள் குவித்தது. மயங்க் அகர்வால் 69 ரன்களும், லோகேஷ் ராகுல் 36 ரன்கள் எடுத்திருந்தனர்.
அரைசதம் அடித்த பின் மயங்க் அகர்வால் ருத்ர தாண்டவம் ஆடினார். 13.2 ஓவரில் பஞ்சாப் அணி 150 ரன்னைக் கடந்தது. இதற்கிடையில் கேஎல் ராகுல் 35 பந்தில் அரைசதம் அடித்தார்.
மறுமுனையில் ஜெட் வேகத்தில் சென்ற மயங்க் அகர்வால் 15-வது ஓவரின் கடைசி பந்தை பவுண்டரிக்கு விரட்டி 45 பந்தில் 9 பவுண்டரி, 7 சிக்சருடன் சதம் அடித்தார். கடந்த போட்டியில் கேஎல் ராகுல் சதம் அடித்த நிலையில், இந்த போட்டியில் மயங்க் அகர்வால் சதம் அடித்து அசத்தினார்.
17-வது ஓவரின் 3-வது பந்தில் மயங்க் அகர்வால் 50 பந்தில் 106 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரில் கேஎல் ராகுல் 54 பந்தில் 69 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். அப்போது பஞ்சாப் அணி 18 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 69 ரன்கள் எடுத்திருந்தது.
கடைசி 2 ஓவரில் மேக்ஸ்வெல், பூரன் ஜோடி 29 ரன்கள் விளாச கிங்ஸ் லெவன் பஞ்சாப் 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 223 ரன்கள் குவித்தது. மேக்ஸ்வெல் 9 பந்தில் 13 ரன்களும், பூரன் 8 பந்தில் 25 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
மயங்க் அகர்வால், கேஎல் ராகுல் அட்டகாசமான வகையில் விளையாட கிங்ஸ் லெவன் பஞ்சாப் 15 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 172 ரன்கள் அடித்துள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிராக கிங்ஸ் லெவன் பஞ்சாப் பேட்டிங் செய்து வருகிறது. கேஎல் ராகுல், மயங்க் அகர்வால் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். தொடக்கம் முதலே இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். குறிப்பாக மயங்க் அகர்வால் பட்டைய கிளப்பினார்.
இதனால் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. 4.3 ஓவரில் 50 ரன்னைக் கடந்த பஞ்சாப், 8.4 ஓவரில் 100 ரன்னைக் கடந்தது. இதற்கிடையில் மயங்க் அகர்வால் 26 பந்தில் அரைசதம் கடந்தார்.
10 ஓவர் முடிவில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் விக்கெட் இழப்பின்றி 110 ரன்கள் குவித்தது. மயங்க் அகர்வால் 69 ரன்களும், லோகேஷ் ராகுல் 36 ரன்கள் எடுத்திருந்தனர்.
அரைசதம் அடித்த பின் மயங்க் அகர்வால் ருத்ர தாண்டவம் ஆடினார். 13.2 ஓவரில் பஞ்சாப் அணி 150 ரன்னைக் கடந்தது. இதற்கிடையில் கேஎல் ராகுல் 35 பந்தில் அரைசதம் அடித்தார்.
மறுமுனையில் ஜெட் வேகத்தில் சென்ற மயங்க் அகர்வால் 15-வது ஓவரின் கடைசி பந்தை பவுண்டரிக்கு விரட்டி 45 பந்தில் 9 பவுண்டரி, 7 சிக்சருடன் சதம் அடித்தார். கடந்த போட்டியில் கேஎல் ராகுல் சதம் அடித்த நிலையில், இந்த போட்டியில் மயங்க் அகர்வால் சதம் அடித்து அசத்தியுள்ளார்.