என் மலர்tooltip icon

    விளையாட்டு

    மயங்க் அகர்வால், கேஎல் ராகுல் ஜோடி ருத்ர தாண்டவம் ஆட கிங்ஸ் லெவன் பஞ்சாப் 20 ஓவரில் 2 விக்கெட் இழப்பின்றி 223 ரன்கள் குவித்துள்ளது.
    ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிராக கிங்ஸ் லெவன் பஞ்சாப் முதலில பேட்டிங் செய்தது. கேஎல் ராகுல், மயங்க் அகர்வால் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். தொடக்கம் முதலே இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். குறிப்பாக மயங்க் அகர்வால் பட்டைய கிளப்பினார்.

    இதனால் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. 4.3 ஓவரில் 50 ரன்னைக் கடந்த பஞ்சாப், 8.4 ஓவரில் 100 ரன்னைக் கடந்தது. இதற்கிடையில் மயங்க் அகர்வால் 26 பந்தில் அரைசதம் கடந்தார்.

    10 ஓவர் முடிவில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் விக்கெட் இழப்பின்றி 110 ரன்கள் குவித்தது. மயங்க் அகர்வால் 69 ரன்களும், லோகேஷ் ராகுல் 36 ரன்கள் எடுத்திருந்தனர்.

    அரைசதம் அடித்த பின் மயங்க் அகர்வால் ருத்ர தாண்டவம் ஆடினார். 13.2 ஓவரில் பஞ்சாப் அணி 150 ரன்னைக் கடந்தது. இதற்கிடையில் கேஎல் ராகுல் 35 பந்தில் அரைசதம் அடித்தார்.

    மறுமுனையில் ஜெட் வேகத்தில் சென்ற மயங்க் அகர்வால் 15-வது ஓவரின் கடைசி பந்தை பவுண்டரிக்கு விரட்டி 45 பந்தில் 9 பவுண்டரி, 7 சிக்சருடன் சதம் அடித்தார். கடந்த போட்டியில் கேஎல் ராகுல் சதம் அடித்த நிலையில், இந்த போட்டியில் மயங்க் அகர்வால் சதம் அடித்து அசத்தினார்.

    17-வது ஓவரின் 3-வது பந்தில் மயங்க் அகர்வால் 50 பந்தில் 106 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரில் கேஎல் ராகுல் 54 பந்தில் 69 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். அப்போது பஞ்சாப் அணி 18 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 69 ரன்கள் எடுத்திருந்தது.

    கடைசி 2 ஓவரில் மேக்ஸ்வெல், பூரன் ஜோடி 29 ரன்கள் விளாச கிங்ஸ் லெவன் பஞ்சாப் 20 ஓவர் முடிவில் 2  விக்கெட் இழப்பிற்கு 223 ரன்கள் குவித்தது. மேக்ஸ்வெல் 9 பந்தில் 13 ரன்களும், பூரன் 8 பந்தில் 25 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
    மயங்க் அகர்வால், கேஎல் ராகுல் அட்டகாசமான வகையில் விளையாட கிங்ஸ் லெவன் பஞ்சாப் 15 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 172 ரன்கள் அடித்துள்ளது.
    ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிராக கிங்ஸ் லெவன் பஞ்சாப் பேட்டிங் செய்து வருகிறது. கேஎல் ராகுல், மயங்க் அகர்வால் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். தொடக்கம் முதலே இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். குறிப்பாக மயங்க் அகர்வால் பட்டைய கிளப்பினார்.

    இதனால் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. 4.3 ஓவரில் 50 ரன்னைக் கடந்த பஞ்சாப், 8.4 ஓவரில் 100 ரன்னைக் கடந்தது. இதற்கிடையில் மயங்க் அகர்வால் 26 பந்தில் அரைசதம் கடந்தார்.

    10 ஓவர் முடிவில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் விக்கெட் இழப்பின்றி 110 ரன்கள் குவித்தது. மயங்க் அகர்வால் 69 ரன்களும், லோகேஷ் ராகுல் 36 ரன்கள் எடுத்திருந்தனர்.

    அரைசதம் அடித்த பின் மயங்க் அகர்வால் ருத்ர தாண்டவம் ஆடினார். 13.2 ஓவரில் பஞ்சாப் அணி 150 ரன்னைக் கடந்தது. இதற்கிடையில் கேஎல் ராகுல் 35 பந்தில் அரைசதம் அடித்தார்.

    மறுமுனையில் ஜெட் வேகத்தில் சென்ற மயங்க் அகர்வால் 15-வது ஓவரின் கடைசி பந்தை பவுண்டரிக்கு விரட்டி 45 பந்தில் 9 பவுண்டரி, 7 சிக்சருடன் சதம் அடித்தார். கடந்த போட்டியில் கேஎல் ராகுல் சதம் அடித்த நிலையில், இந்த போட்டியில் மயங்க் அகர்வால் சதம் அடித்து அசத்தியுள்ளார்.
    உலகின் தலைசிறந்த டி20 லீக்கான ஐபிஎல் தொடரில் விளையாடாததால் பாகிஸ்தான் வீரர்கள் மிகப்பெரிய வாய்ப்பை இழக்கின்றனர் என அப்ரிடி தெரிவித்துள்ளார்.
    இந்திய கிரிக்கெட் வாரியத்தால் கடந்த 2008-ம் ஆண்டு ஐபிஎல் டி20 லீக் தொடர் தொடங்கப்பட்டது. அந்தத் தொடரில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் இடம் பிடித்திருந்தனர். பெரும்பாலான வீரரகள் பந்து வீச்சு மற்றும் பேட்டிங்கில் அசத்தினர்.

    ஆனால், எல்லையில் நடைபெற்று வரும் பதற்றமான சூழ்நிலையால் இரு நாடுகளுக்கு இடையில் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறவில்லை. இதனால் ஐபிஎல் போட்டியிலும் பாகிஸ்தான் வீரர்கள் இடம்பெற முடியாமல் போனது. இது பாகிஸ்தான் வீரர்களுக்கு மிகப்பெரிய இழப்பு என்று ஷாகித் அப்ரிடி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ஷாகித் அப்ரிடி கூறுகையில் ‘‘பாகிஸ்தான் அரசு இரு நாடுகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டிக்கு எப்போதுமே தயாராக இருக்கிறது. ஆனால், தற்போதுள்ள அரசு இருக்கும் வரை அதற்கு வாய்ப்பு இல்லை. மோடி அரசு அதிகாரத்தில் இருக்கும்போது, இரு நாட்டுக்கும் இடையில் கிரிக்கெட் நடக்காது.

    உலகளவில் ஐபிஎல் மிகப்பெரிய பிராண்ட் என்பது எனக்குத் தெரியும். நெருக்கடியான சூழ்நிலையின் கீழ் விளையாடுவது, வீரர்கள் அறைகளை பகிர்ந்து கொள்வது பாபர் அசாம் அல்லது பல பாகிஸ்தான் வீரர்களுக்கு சூப்பரான வாய்ப்பாகும். இதனால் என்னுடைய பார்வையில் பாகிஸ்தான் வீரர்கள் மிகப்பெரிய வாய்ப்பை தவற விடுகின்றனர்’’ என்றார்.
    மயங்க் அகர்வால், கேஎல் ராகுல் அட்டகாசமான தொடக்கம் கொடுக்க கிங்ஸ் லெவன் பஞ்சாப் 10 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 110 ரன்கள் அடித்துள்ளது.
    ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிராக கிங்ஸ் லெவன் பஞ்சாப் பேட்டிங் செய்து வருகிறது. கேஎல் ராகுல், மயங்க் அகர்வால் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். தொடக்கம் முதலே இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். குறிப்பாக மயங்க் அகர்வால் பட்டைய கிளப்பினார்.

    இதனால் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. 4.3 ஓவரில் 50 ரன்னைக் கடந்த பஞ்சாப், 8.4 ஓவரில் 100 ரன்னைக் கடந்தது. இதற்கிடையில் மயங்க் அகர்வால் 26 பந்தில் அரைசதம் கடந்தார்.

    10 ஓவர் முடிவில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் விக்கெட் இழப்பின்றி 110 ரன்கள் குவித்துள்ளது. மயங்க் அகர்வால் 69 ரன்களும், லோகேஷ் ராகுல் 36 ரன்கள் எடுத்து விளையாடி வருகின்றனர்.
    பார்முலா 1 கார் பந்தயத்தின் ரஷியா கிராண்ட் பிரீயில் வால்டெரி போட்டாஸ் வெற்றி பெற்ற நிலையில், லீவிஸ் ஹாமில்டன் 3-வது இடத்தையே பெற்றார்.
    பார்முலா 1 கார் பந்தயத்தின் 10-வது சுற்றான ரஷியா கிராண்ட் பிரீ இன்று நடைபெற்றது. இதில் மெர்சிடெஸ் வீரர் வால்டெரி போட்டாஸ் முதல் இடம் பிடித்தார். ரெட் புல் வீரர் வெர்ஸ்டாப்பன் 7.729 வினாடிகள் பின்தங்கி 2-வது இடம் பிடித்தார்.

    மற்றொரு மெர்சிடெஸ் வீரரும், நட்டசத்திர வீரருமான லீவிஸ் ஹாமில்டன் 22.729 வினாடிகளில் பின்தங்கி 3-வது இடம் பிடித்தார்.
    ஷார்ஜாவில் நடைபெறும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
    ஐபிஎல் 2020 சீசனின் 9-வது லீக் ஆட்டம் ஷார்ஜாவில் 7.30 மணிக்கு தொடங்குகிறது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடதுக்கின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.

    ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விவரம்:-

    1. ஜோஸ் பட்லர், 2. ஸ்டீவ் ஸ்மித், 3. சஞ்சு சாம்சன், 4. ராபின் உத்தப்பா, 5. ராகுல் டெவாட்டியா, 6. ரியான் பராக், 7. டாம் கர்ரன், 8. ஜாஃப்ரா  ஆர்சர், 9. ஷ்ரேயாஸ் கோபால், 10.  உனத் கட், 11. அங்கீத் ராஜ்பூட்.

    கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி விவரம்:-

    1. கேஎல் ராகுல், 2. மயங்க் அகர்வால், 3. பூரன், 4. மேக்ஸ்வெல், 5. கருண் நாயர, 6. சர்பராஸ் கான், 7. ஜேம்ஸ் நீசம், 8. முருகன் அஸ்வின், 9. ரவி போஷ்னாய், 10. முகமது ஷமி, 11. காட்ரெல்.

    கேப்டனாக நாம் மற்ற வீரர்களை செய்யச் சொல்வதை விட அவர்கள் என்ன செய்யப்போகிறார்கள் என்பது குறித்து யோசிப்பதுதான் முக்கியமானது என ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.
    மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ரோகித் சர்மா கடந்த 2013-ம் ஆண்டில் இருந்து செயல்பட்டு வருகிறார். இவரது தலைமையில் நான்கு முறை சாம்பியன் பட்டம் வென்று சாதனைப் படைத்துள்ளது.

    ரிக்கி பாண்டிங் தலைமை பயிற்சியாளராக இருந்தபோது ரோகித் சர்மா கேப்டனாக இருந்து சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். கேப்டன் பதவியில் எப்படி செயல்பட வேண்டும் என்பதை ரிக்கி பாண்டிங்கியிடம் இருந்து கற்றுக் கொண்டேன் என ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ரோகித் சர்மா கூறுகையில் ‘‘நான் என்ன செய்கிறேனோ, அதேபோன்று சக வீரர்களும் செய்ய வேண்டும் என விரும்புவேன். நான் என்னுடைய வீரர்களுடன் பேசும்போது, நான் என்னையே முக்கியத்துவம் குறைந்த நபராக நினைத்துக் கொள்வேன். நான் முக்கியமான நபர் இல்லை என்றால், நீங்கள் முக்கியமான நபர். ஏனென்றால், நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்களோ, அதை உங்களால் வெளிப்படுத்த முடியும்.

    நான் அணி எப்படி செல்ல வேண்டும் என்று நினைத்தால், அதை என்னால் செய்ய இயலாது. நான் கடைசி நபர் என்றால், மற்ற 10 பேரும் எனக்கு முக்கியமானவர்கள்.’’ என்றார்.
    சுவாரஸ் அணியில் இருந்து வெளியேறியது மெஸ்சிக்கு கவலை அளிக்கும், இருந்தாலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என பார்சிலோனா பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.
    பார்சிலோனாவின் புதிய பயிற்சியாளராக ரொனால்டு கோமென் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்க விரும்புகிறார். இவருக்கும் மெஸ்சிக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

    இதனால் மெஸ்சி பார்சிலோனாவில் இருந்து வெளியேற விரும்பினார். அதனைத் தொடர்ந்து பயிற்சியையும் புறக்கணித்தார். ஆனால், ஒப்பந்த பிரச்சினை ஏற்பட்டதால் மேலும் ஒரு வருடத்திற்கு விளையாட முடிவு செய்துள்ளார்.

    இதற்கிடையே ஆறு வருடமாக மெஸ்சியுடன் இணைந்து விளையாடிய உருகுவே நாட்டின் லூயிஸ் சுவாரஸை பார்சிலோனா வெளியேற்ற முடிவு செய்தது. அவரும் அட்லெடிக் மாட்ரிட் அணிக்குச் சென்றார்.

    சுவாரஸை வெளியேற்றியது மெஸ்சிக்கு கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இருந்தாலும் சோகத்தை காட்டுக்கொள்ளாமல் மெஸ்சி சிறப்பாக விளையாடுவார் என்று பார்சிலோனா பயிற்சியாளர் ரொனால்டு கோமென் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து கோமென் கூறுகையில் ‘‘மெஸ்சியின் நண்பர் சுவாரஸ் அணியில் இருந்து வெளியேறுவதால் அவர் கவலை அடைவது வழக்கமானதுதான். அவர்கள் பல வருடங்கள் சேர்ந்து விளையாடியுள்ளனர். ஆனால், மெஸ்சி பயிற்சி மேற்கொண்டு விளையாடுவது முக்கியமான விசயம்.

    அவர் ஒவ்வொருவருக்கும் முன்மாதிரியானவர். அவர் அப்செட்டாக இருந்தாலும், அணிக்கு திரும்பியதில் இருந்து அதிக அளவிலான உற்சாகத்தை வெளிப்படுத்துகிறார். மைதானத்தில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவார்’’ என்றார்.
    விராட் கோலியும் மனிதர் தான், அவர் ஒன்றும் மெஷின் அல்ல என்பதை ரசிகர்கள் மறந்து விடுகின்றனர் என்று கோலியின் சிறுவயது பயிற்சியாளர் ராஜ்குமார் சர்மா தெரிவித்துள்ளார்.
    ஐபிஎல் 2020 கிரிக்கெட்டில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலன்சர்ஸ் பெங்களூர் அணி இதுவரை 2 போட்டிகளில் விளையாடியுள்ளது. ஐதராபாத் அணிக்கு எதிரான முதல் போட்டியில் 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற பெங்களூர் அணி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் 97 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது.

    இந்த போட்டிகளில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி மிகவும் சொற்பமான ரன்களை மட்டுமே எடுத்தார். ஐதராபாத்திற்கு எதிரான போட்டியின் 14 ரன்களை எடுத்த கோலி பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் 1 ரன் மட்டுமே எடுத்து ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தினார். மேலும், சில கேட்ச்களையும் கோலி தவறவிட்டார். 

    இது குறித்து போட்டியின்போது வர்ணனையாளராக இருந்த சுனில் கவாஸ்கர் விராட் கோலி மீது சில விமர்சனங்களை செய்தார். இந்த விவகாரமும் தற்போது பூதாகரமாகி வருகிறது. 

    இதற்கிடையில், அடுத்த போட்டியில் இருந்து விராட் கோலி மீண்டும் தனது ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பதே ஆர்சிபி ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.

    இந்நிலையில், விராட் கோலியின் தற்காலிக பேட்டிங் தடுமாற்றம் குறித்து கோலியின் சிறுவயது பயிற்சியாளர் ராஜ்குமார் சர்மா கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:-

    மைதானத்தில் உங்களுக்கு நல்ல நாட்களும் இருக்கும், மோசமான நாட்களும் இருக்கும். இது ஒவ்வொரு விளையாட்டு வீரனின் வாழ்க்கையிலும் ஒரு பகுதி. கோலி ஒரு மனிதர் தான்.. அவர் ஒன்றும் மெஷின் அல்ல... என்பதை ரசிகர்கள் மறந்து விடுகின்றனர். 

    நீங்கள் மைதானத்திற்குள் நுழையும் ஒவ்வொரு நேரமும் வெற்றியடையமாட்டீர்கள். கோலி தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதை அவரது ரசிகர்கள் பார்த்துக்கொண்டிருந்தனர். தற்போது அவர் ஒரே ஒரு போட்டியில் மோசமாக விளையாடினாலும் அவரது ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தி விடுகிறது.

    என்றார்.

    பேட்டிங்கில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தடுமாறி வரும் நிலையில், சின்ன தல மீண்டும் அணிக்கு திரும்ப வேண்டும் என டுவிட்டரில் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சின்ன தல என அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னா இடம்பிடித்திருந்தார். இவரை சிஎஸ்கே அணியின் பேட்டிங்கில் முதுகெலும்பு என்று சொன்னால் மிகையாகாது. மேலும் அவ்வப்போது பந்து வீசக்கூடியவர். சிறந்த பீல்டர்.

    இவர் சிஎஸ்கே அணியுடன் ஐக்கிய அரபு அமீரகம் சென்றிருந்தார். ஆனால் தனிமைப்படுத்தும் காலம் முடிவடைவதற்குள் சொந்த வேலைக்காரணமாக இந்தியா திரும்பினார். அவர் இந்தியா திரும்பியதும் சென்னை அணியின் உரிமையாளர் ஸ்ரீனிவாசன் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.

    தற்போது சென்னை அணி பேட்டிங்கில் சொதப்பி வருகிறது. அம்பதி ராயுடு, டு பிளிசிஸ் ஆகியோர் மட்டுமே சிறப்பாக விளையாடியுள்ளனர். அம்பதி ராயுடன் இரண்டு போட்டிகளில் விளையாடவில்லை. இதனால் ரெய்னாவை மீண்டும் அணிக்கு கொண்டு வர வேண்டும் என டுவிட்டரில் ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

    ஆனால் அதற்கான வாய்ப்பு இல்லை என்று சென்னை சூப்பர் கிங்ஸ் சிஇஓ காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து காசி விஸ்வநாதன் கூறுகையில் ‘‘நாங்கள் ரெய்னாவை எதிர்பார்க்க முடியாது. ஏனென்றால், அவராகத்தான் தொடரில் இருந்து வெளியேறினார். அவருடைய முடிவுக்கும், இடத்திற்கும் நாங்கள் மதிப்பு அளிக்கிறோம். நாங்கள் சுரேஷ் ரெய்னா பற்றி சிந்திக்கவில்லை.

    இந்த தொடரில் மீண்டும் வலுவாக திரும்புவோம் என்பதை ரசிர்களுக்கு என்னால் உறுதியாக சொல்ல முடியும். இது விளையாட்டு. இதில் சிறந்த நாட்களும் இருக்கும். கெட்ட நாட்களுக்கும் இருக்கும். நாங்கள் நன்றாக விளையாடி மீண்டும் சிரிப்பை கொண்டு வர வேண்டியது அவசியம் என்பது ரசிகர்களுக்கு தெரியும்’’ என்றார்.
    முதல் ஆட்டத்தில் 3 ஓவரில் 49 ரன்கள் விட்டுக்கொடுத்து விமர்சனத்திற்கு உள்ளான பேட் கம்மின்ஸ், நேற்றைய ஆட்டத்தில் 19 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார்.
    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் வலுவான பேட்டிங் ஆர்டரையும், சிறந்த பந்து வீச்சு குழுவையும் கொண்டுள்ளது. ஆனால் மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் பந்து வீச்சு மற்றும் பேட்டிங் இரண்டிலும் சொதப்பியது. குறிப்பாக 15.5 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்ட பேட் கம்மின்ஸ் 3 ஓவரில் 49 ரன்கள் விட்டுக்கொடுத்து கடும் விமர்சனத்திற்கு உள்ளானார்.

    இந்நிலையில் நேற்று நடைபெற்ற 2-வது நாள் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. குறிப்பாக பேட் கம்மின்ஸ் 4 ஓவரில் 19 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார்.

    மேலும், ஏழு பவுலர்களை கொண்டு கடும் நெருக்கடி கொடுத்தனர். இதனால் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியால் 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 142 ரன்கள் மட்டுமே அடித்தது.

    சுனில் நரைன் 31 ரன்னும், ஷிவம் மவி 2 ஓவரில் 15 ரன்களும், குல்தீப் யாதவ் 2 ஓவரில் 15 ரன்களும், வருண் சக்ரவர்த்தி 4 ஓவரில் 25 ரன்களும், நாகர்கோட்டி 2 ஓவரில் 17 ரன்களும், அந்த்ரே ரஸல் 2 ஓவரில் 16 ரன்களும் விட்டுக்கொடுத்தனர்.

    பின்னர் கொல்கத்தா 18 ஓவரில் 3 விக்கெட்டை மட்டுமே இழந்து இலக்கை எட்டியது.ஷுப்மான் கில் 70 ரன்களும், மோர்கன் 42 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
    ஜாஃப்ரா ஆர்சர் அதிவேகத்தை எதிர்த்து மீண்டும் ஒரு அசத்தலான ஆட்டத்தை கேஎல் ராகுல் வெளிப்படுத்துவார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
    13-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜாவில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும்.

    9-வது லீக் ஆட்டம் சார்ஜாவில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கிறது. இதில் ஸ்டீவ் சுமித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் - லோகேஷ் ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.

    இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவரும், பஞ்சாப் அணி கேப்டனுமான லோகேஷ் ராகுல் பெங்களூரு அணிக்கு எதிராக அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

    அவர் 69 பந்தில் 132 ரன் எடுத்தார். இந்த சீசனில் செஞ்சுரி அடித்த ஒரே வீரர் ஆவார். ராகுலின் அதிரடியை ராஜஸ்தான் இன்று சமாளிக்குமா என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    மேலும் மேக்ஸ்வெல், மயங் அகர்வால் நிக்கோலஸ் பூரன் போன்ற சிறந்த பேட்ஸ்மேன்களும் முகமது சமி, காட்ரெல், ரவி பிஷ்னோய், முருகன் அஸ்வின் போன்ற சிறந்த பந்து வீச்சாளர்களும் அந்த அணியில் உள்ளனர்.

    பஞ்சாப் அணி தொடக்க ஆட்டத்தில் சூப்பர் ஓவரில் டெல்லியிடம் தோற்றது. 2-வது போட்டியில் 97 ரன் வித்தியாசத்தில் பெங்களூர் அணியை அபாரமாக வீழ்த்தியது. அந்த அணி இன்று ராஜஸ்தானை வீழ்த்தி 2-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.

    ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தொடக்க ஆட்டத்தில் 16 ரன் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்சை வீழ்த்தியது. அந்த அணி இன்று 2-வது வெற்றிக்காக காத்திருக்கிறது.

    பஞ்சாப் அணியில் ராகுல் எப்படி அதிரடி வீரராக இருக்கிறாரோ அதேபோல ராஜஸ்தான் அணியில் சஞ்சு சாம்சன் அபாரமாக ஆட கூடியவர். அவர் சென்னை அணிக்கு எதிராக 32 பந்தில் 70 ரன்களுக்கு மேல் விளாசினார்.

    கேப்டன் ஸ்டீவ் சுமித், டேவிட் மில்லர், ஜாஃப்ரா ஆர்ச்சர், ராகுல் திவேதியா போன்ற சிறந்த வீரர்களும் அந்த அணியில் உள்ளனர். இங்கிலாந்தை சேர்ந்த பட்லர் அணிக்கு திரும்பியுள்ளார். அவர் இன்றைய ஆட்டத்தில் தொடக்க வீரராக களம் இறங்கலாம். அவரது வருகை ராஜஸ்தான் அணிக்கு கூடுதல் பலமாகும்.

    இரு அணிகளும் 19 முறை மோதியுள்ளன. இதில் ராஜஸ்தான் 10-ல், பஞ்சாப் 9-ல் வெற்றி பெற்றுள்ளன.
    ×