search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மெஸ்சி, ரொனால்டு கோமென்
    X
    மெஸ்சி, ரொனால்டு கோமென்

    மெஸ்சி கவலையாக இருந்தாலும் உத்வேகத்துடன் விளையாடுவார்: பார்சிலோனா பயிற்சியாளர் நம்பிக்கை

    சுவாரஸ் அணியில் இருந்து வெளியேறியது மெஸ்சிக்கு கவலை அளிக்கும், இருந்தாலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என பார்சிலோனா பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.
    பார்சிலோனாவின் புதிய பயிற்சியாளராக ரொனால்டு கோமென் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்க விரும்புகிறார். இவருக்கும் மெஸ்சிக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

    இதனால் மெஸ்சி பார்சிலோனாவில் இருந்து வெளியேற விரும்பினார். அதனைத் தொடர்ந்து பயிற்சியையும் புறக்கணித்தார். ஆனால், ஒப்பந்த பிரச்சினை ஏற்பட்டதால் மேலும் ஒரு வருடத்திற்கு விளையாட முடிவு செய்துள்ளார்.

    இதற்கிடையே ஆறு வருடமாக மெஸ்சியுடன் இணைந்து விளையாடிய உருகுவே நாட்டின் லூயிஸ் சுவாரஸை பார்சிலோனா வெளியேற்ற முடிவு செய்தது. அவரும் அட்லெடிக் மாட்ரிட் அணிக்குச் சென்றார்.

    சுவாரஸை வெளியேற்றியது மெஸ்சிக்கு கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இருந்தாலும் சோகத்தை காட்டுக்கொள்ளாமல் மெஸ்சி சிறப்பாக விளையாடுவார் என்று பார்சிலோனா பயிற்சியாளர் ரொனால்டு கோமென் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து கோமென் கூறுகையில் ‘‘மெஸ்சியின் நண்பர் சுவாரஸ் அணியில் இருந்து வெளியேறுவதால் அவர் கவலை அடைவது வழக்கமானதுதான். அவர்கள் பல வருடங்கள் சேர்ந்து விளையாடியுள்ளனர். ஆனால், மெஸ்சி பயிற்சி மேற்கொண்டு விளையாடுவது முக்கியமான விசயம்.

    அவர் ஒவ்வொருவருக்கும் முன்மாதிரியானவர். அவர் அப்செட்டாக இருந்தாலும், அணிக்கு திரும்பியதில் இருந்து அதிக அளவிலான உற்சாகத்தை வெளிப்படுத்துகிறார். மைதானத்தில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவார்’’ என்றார்.
    Next Story
    ×