search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராஜஸ்தான் ராயல்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப்
    X
    ராஜஸ்தான் ராயல்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப்

    இன்று 9-வது ஆட்டம்: ராகுலின் அதிரடியை ராஜஸ்தான் சமாளிக்குமா?

    ஜாஃப்ரா ஆர்சர் அதிவேகத்தை எதிர்த்து மீண்டும் ஒரு அசத்தலான ஆட்டத்தை கேஎல் ராகுல் வெளிப்படுத்துவார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
    13-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜாவில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும்.

    9-வது லீக் ஆட்டம் சார்ஜாவில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கிறது. இதில் ஸ்டீவ் சுமித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் - லோகேஷ் ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.

    இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவரும், பஞ்சாப் அணி கேப்டனுமான லோகேஷ் ராகுல் பெங்களூரு அணிக்கு எதிராக அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

    அவர் 69 பந்தில் 132 ரன் எடுத்தார். இந்த சீசனில் செஞ்சுரி அடித்த ஒரே வீரர் ஆவார். ராகுலின் அதிரடியை ராஜஸ்தான் இன்று சமாளிக்குமா என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    மேலும் மேக்ஸ்வெல், மயங் அகர்வால் நிக்கோலஸ் பூரன் போன்ற சிறந்த பேட்ஸ்மேன்களும் முகமது சமி, காட்ரெல், ரவி பிஷ்னோய், முருகன் அஸ்வின் போன்ற சிறந்த பந்து வீச்சாளர்களும் அந்த அணியில் உள்ளனர்.

    பஞ்சாப் அணி தொடக்க ஆட்டத்தில் சூப்பர் ஓவரில் டெல்லியிடம் தோற்றது. 2-வது போட்டியில் 97 ரன் வித்தியாசத்தில் பெங்களூர் அணியை அபாரமாக வீழ்த்தியது. அந்த அணி இன்று ராஜஸ்தானை வீழ்த்தி 2-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.

    ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தொடக்க ஆட்டத்தில் 16 ரன் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்சை வீழ்த்தியது. அந்த அணி இன்று 2-வது வெற்றிக்காக காத்திருக்கிறது.

    பஞ்சாப் அணியில் ராகுல் எப்படி அதிரடி வீரராக இருக்கிறாரோ அதேபோல ராஜஸ்தான் அணியில் சஞ்சு சாம்சன் அபாரமாக ஆட கூடியவர். அவர் சென்னை அணிக்கு எதிராக 32 பந்தில் 70 ரன்களுக்கு மேல் விளாசினார்.

    கேப்டன் ஸ்டீவ் சுமித், டேவிட் மில்லர், ஜாஃப்ரா ஆர்ச்சர், ராகுல் திவேதியா போன்ற சிறந்த வீரர்களும் அந்த அணியில் உள்ளனர். இங்கிலாந்தை சேர்ந்த பட்லர் அணிக்கு திரும்பியுள்ளார். அவர் இன்றைய ஆட்டத்தில் தொடக்க வீரராக களம் இறங்கலாம். அவரது வருகை ராஜஸ்தான் அணிக்கு கூடுதல் பலமாகும்.

    இரு அணிகளும் 19 முறை மோதியுள்ளன. இதில் ராஜஸ்தான் 10-ல், பஞ்சாப் 9-ல் வெற்றி பெற்றுள்ளன.
    Next Story
    ×