என் மலர்tooltip icon

    விளையாட்டு

    தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து வீரர்கள், ஓட்டல் ஸ்டாஃப் என கொரோனா தொற்று அதிகரித்ததால் இரு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
    இங்கிலாந்து அணி 3 டி20, 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக தென்ஆப்பிரிக்கா சென்றுள்ளது. டி20 தொடரில் முதலில் நடைபெற்றது. இந்தத் தொடரை இங்கிலாந்து 3-0 எனக் கைப்பற்றியது.

    அதன்பின் கடந்த 4-ந்தேதியில் இருந்து வரும் 9-ந்தேதி வரை மூன்று ஒருநாள் போட்டிகள் நடைபெறும் வகையில் போட்டி அட்டவணை தயாரிக்கப்பட்டிருந்தது.

    4-ந்தேதி போட்டிக்கு தயாராகுவதற்கு முன் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது வீரர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் 4-ந்தேதி நடைபெற இருந்த போட்டி இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

    2-வது போட்டி நேற்று நடைபெற இருந்தது. ஓட்டல் ஸ்டாஃப்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் நேற்றைய போட்டி ரத்து செய்யப்பட்டது.

    இந்த நிலையில் நாளை மறுநாள் 3-வது போட்டி நடைபெற இருந்தது. மேலும் ஒரு வீரருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்த சிக்கலில் போட்டியை நடத்தினால் வீரர்கள் மனதளவில் பாதிக்க வாய்ப்புள்ளதால், இரு நாட்டு கிரிக்கெட் போர்டுகளும் பேச்சுவார்த்தை நடத்தி தொடர ஒத்திவைக்க முடிவு  செய்தது.

    இதனால் தென்ஆப்பிரிக்கா - இங்கிலாந்து இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
    பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் கேப்டன் பதவியை இழந்த ஸ்டீவ் ஸ்மித்திடம், கேப்டன் பதவியை மீண்டும் வழங்கினால் சிறப்பாக செயல்படுவார் என மேத்யூ வடே தெரிவித்துள்ளார்.
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி சிட்னியில் நடைபெற்றது. காயம் காரணமாக ஆரோன் பிஞ்ச் விளையாடவில்லை. இதனால் மேத்யூ வடே பகுதி நேர கேப்டனாக பணியாற்றினார்.

    2018-ம் ஆண்டு ஆஸ்திரேலியா அணி தென்ஆப்பிரிக்கா சென்றபோது பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கியது. இதனால் ஸ்டீவ் ஸ்மித் கேப்டன் பதவியை இழந்தார். ஒரு வருடம் தடைக்காலமும், அதன்பின் ஒருவருடம் கேப்டன் பதவிக்கும் தடைவிதித்தது ஆஸ்திரேலியா கிரிக்கெட் போர்டு.

    இதனால் ஸ்டீவ் ஸ்மித் கேப்டன் பதவியை வகிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் மீண்டும் ஸ்மித்திடம் கேப்டன் பதவியை வழங்கினால் சிறப்பாக செயல்படுவார் என்று மேத்யூ வடே தெரிவித்துள்ளார்.

    ஸ்டீவ் ஸ்மித் குறித்து மேத்யூ வடே கூறுகையில் ‘‘நாம் ஏராளமான சிறந்த கேப்டன்களை பெற்றுள்ளோம். கேப்டன் பொறுப்பு என்னிடம் தரப்பட்டது, ஆனால் நாம் ஸ்மித், ஹென்ரிக்ஸ் ஆகியோரை பெற்றுள்ளோம். இவர்கள் பிக் பாஷ் லீக்கில் கேப்டனாக இருந்தவர்கள். ஏராளமான அனுபவங்கள் கொண்ட வீரர்கள் உள்ளனர். சீனியர் வீரர்களிடையே ஆலோசனைகள் நடைபெறும். அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்றுகிறோம்.

    கேப்டன் வேலை என்னுடையது கிடையாது. பிஞ்ச் எங்களுடைய கேப்டன். அவர் சிறப்பாக விளையாடும்போது நாங்கள் ஒருங்கிணைந்து செயல்படுவோம். ஸ்மித் கேப்டனாக வேண்டும் என கருத்துகள் உள்ளன. அவர் நீண்ட காலமாக கேப்டனாக இருந்துள்ளார். மீண்டும் வாய்ப்பை பெற்றால், சிறப்பாக செயல்படுவார்’’ என்றார்.
    ஆஸ்திரேலியா மண்ணில் இந்தியா மூன்று தொடர்களையும் தோற்கும் என இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் கூறிய நிலையில், வாசிம் ஜாபர் பதிலடி கொடுத்துள்ளார்.
    இந்திய அணி மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடரிலும் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ளது. ஒருநாள் கிரிக்கெட் தொடர் தொடங்குவதற்கு முன், இந்தியா மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடரிலும் தோல்வியை சந்திக்கும் என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனும், வர்ணனையாளருமான மைக்கேல் வாகன் தெரிவித்திருந்தார்.

    இந்தியா முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் தோல்வியடைந்து ஒருநாள் தொடரை இழந்தது. அப்போது மைக்கேல் வாகனின் கணிப்பு சரியாக இருக்குமோ? எனத் தோன்றியது.

    அதன்பின் சுதாரித்துக்கொண்ட இந்திய அணி அபாரமாக விளையாடியது. கடைசி ஒருநாள் போட்டியை வென்றதுடன், முதல் இரண்டு டி20 போட்டிகளிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.

    இதனால் வாகனின் கணிப்பு தவறானது. இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரும், ரஞ்சி டிராயில் சாதனைப் படைத்தவருமான வாசிம் ஜாபர் ஒரு படத்தை வெளியிட்டு பதிலடி கொடுத்தார்.
    இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் பேட்ஸ்மேனான ஹர்திக் பாண்ட்யா நற்பெயரை உருவாக்கப் போகிறோர் என்று ஜாகீர்கான் தெரிவித்துள்ளார்.
    இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா. ஆஸ்திரேலியா தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். பந்து வீசவில்லை என்றாலும் சிறப்பாக பேட்டிங் செய்கிறார். ஒருநாள் போட்டி தொடரில் சிறப்பாக பேட்டிங் செய்தார்.

    இரண்டு டி20 போட்டியிலும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர்கான், ஹர்திக் பாண்ட்யா நற்பெயரை உருவாக்கப் போகிறார் என்று தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ஜாகீர் கான் கூறுகையில் ‘‘எந்தவொரு கட்டத்திலும் ஹர்திக் பாண்ட்யா டாட் பாலால் விரக்தி அடையமாட்டார். சாந்தமாகவே இருப்பார். எனென்றால், அவரை நம்புகிறார். அவரால் எந்த நேரத்திலும் சிக்சர் அடிக்க முடியும் என்பதால் பந்து வீச்சாளரின் தவறுக்காக காத்திருப்பார். பந்து வீச்சாளர் நெருக்கடியில் இருப்பதை அவர் உறுதி செய்து கொள்வார்.

    அவரது கேரியரில் செல்ல செல்ல, அவர் நற்பெயர் சேர்க்கப்போகிறார் என்பது உங்களுக்குத் தெரியும். எந்தவொரு பவுலரும் அவருக்கு பந்து வீசுவது கடினமானதாக இருக்கும்’’ என்றார்.
    டி நடராஜனுக்கு தொடர் நாயகன் விருது கிடைத்தால், அது அவரின் தன்னம்பிக்கையை உயர்த்தும் என ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
    இந்திய அணியில் இடம் பிடித்துள்ள டி நடராஜன் யாரும் எதிபார்க்காத வகையில் அபாரமான பந்து வீச்சை வெளிப்படுத்தி வருகிறார். அறிமுகமான ஒருநாள் போட்டியில் 2 விக்கெட் சாய்த்தார்.

    அதேபோல் அறிமுகமான முதல் டி20 போட்டியில் 3 விக்கெட்டும், நேற்றைய 2-வது போட்டியில் 2 விக்கெட்டும் வீழ்த்தினார். இரண்டு போட்டியிலும் ஆட்ட நாயகன் விருது பெறும் வாய்ப்பை இழந்தார்.

    விருதை இழந்தாலும் ஒட்டுமொத்தமாக அனைவரின் இதயத்திலும் இடம் பிடித்துள்ளார். பாராட்டு மழையில் குவிந்து வரும் அவருக்கு தொடர் நாயகன் விருது வழங்க வேண்டும். அது அவரின் தன்னம்பிக்கை அதிகரிக்கும் என இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளராக திகழ்ந்த ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ஹர்பஜன் சிங் கூறுகையில் ‘‘நான் நடராஜனுக்காக மகிழ்ச்சி அடைகிறேன். அவருடைய வாழ்க்கை சூழ்நிலையில், இந்த பெர்பார்மன்ஸ் நம்பமுடியாத வகையில் உள்ளது. நம்பிக்கை வைத்து கடுமையாக உழைத்து, உங்களுக்குள்ளேயே நம்பிக்கை வளர்த்தால் எல்லாமே சாத்தியம்தான்.

    இந்திய தொடரில் அபாரமாக பந்து வீசியுள்ளார். இந்த தொடரில் இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய தூணாக அமைந்துள்ளார். இந்தியாவுக்கு தேவையான போதெல்லாம் விக்கெட் வீழ்த்தி கொடுத்துள்ளார்.

    இந்தியாவுக்கு வெற்றியை தேடிக்கொடுக்கக் கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளன என்பதை வெளிப்படுத்தியுள்ளார். நான் ஸ்கிரீனில் பார்த்தபோது, பந்து அடிபட்டாலும் கவலைப்படவில்லை. அந்த அளவிற்கு தன்னம்பிக்கை உள்ளவராக உள்ளார். இது மிகவும் சிறப்பானது. இக்கட்டான நிலையில் எவ்வளவு நம்பிக்கையுடன் இருக்கிறீர்கள் என்பதுதான் முக்கியம்.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, ஆஸ்திரேலியா மண்ணில் தொடர் நாயகன் விருதை பெற்றால் அவரது நம்பிக்கையை உயர்த்துவதாக இருக்கும். இது இந்திய அணிக்கும் மிகப்பெரியதாக இருக்கும். அவர் எங்கிருந்து வந்தார், அணிக்காக என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பது சிறந்த கதை’’ என்றார்.
    வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான முதல் டெஸ்டில் 251 ரன்கள் விளாசியதன் மூலம் ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசையில் கேன் வில்லியம்சன் 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
    நியூசிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் ஹாமில்டனில் நடைபெற்றது. இதில் நியூசிலாந்து இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. முதல் இன்னிங்சில் நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் இரட்டை சதம் அடித்ததுடன் 251 ரன்கள் விளாசினார்.

    இரட்டை சதம் அடித்ததன் மூலம் ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசையில் 74 புள்ளிகள் பெற்று 812 புள்ளிகளில் இருந்து 886 ரன்களுக்கு முன்னேறினார். இதன் மூலம் ஐசிசி தரவரிசையில் 2-வது இடத்தை விராட் கோலியுடன் பகிர்ந்துள்ளார்.

    ஸ்டீவ் ஸ்மித் 911 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளார். மார்னஸ் லாபஸ்சேன் 827 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும், பாபர் அசாம் 797 புள்ளிகளுடன் 5-ம் இடத்திலும் உள்ளனர்.

    பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் பேட் கம்மின்ஸ் 904 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளார். நீல் வாக்னர் 849 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளார். ஸ்டூவர்ட் பிராட் 845 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும், டிம் சவுத்தி 817 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும், காகிசோ ரபடா 802 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் உள்ளார்.
    சிட்னியில் நடைபெற்று வரும் மூன்று நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா ‘ஏ’ அணி 2-வது நாள் ஆட்ட முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 286 ரன்கள் அடித்துள்ளது.
    இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற இருக்கிறது. இதற்கு முன்னோட்டமாக இந்திய அணி ஆஸ்திரேலியா ‘ஏ’ அணிக்கெதிராக 3 நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டத்தில் விளையாட முடிவு செய்தது.

    அதன்படி பயிற்சி ஆட்டம் நேற்று சிட்னி மைதானத்தில் தொடங்கியது. இந்திய அணிக்கு ரகானே கேப்டன் பதவியை ஏற்றுக் கொண்டார். டாஸ் வென்ற ரகானே பேட்டிங் தேர்வு செய்தார். தொடக்க வீரர்களான பிரித்வி ஷா, ஷுப்மான் கில் ஆகியோர் ரன் ஏதும் அடிக்காமல் டக்அவுட் ஆனார்கள். புஜாரா (54) அரைசதம் அடிக்க ரகானே சதம் விளாச இந்தியா முதல் நாள் ஆட்ட முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 237 ரன்கள் எடுத்துள்ளது.

    இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. இந்தியா 9 விக்கெட் இழப்பிற்கு 247 ரன்கள் எடுத்திருந்த போது முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது.

    அதன்பின் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சை தொடங்கியது. மிகவம் எதிர்பார்க்கப்பட்ட வில் புகோவ்ஸ்கி 1 ரன்னிலும், ஜோ பேர்ன்ஸ் 4 ரன்னிலும் வெளியேறினர். ஆஸ்திரேலியா ‘ஏ’  98 ரன்கள் எடுப்பதற்குள் ஐந்து விக்கெட்டை இழந்தது.

    விக்கெட் கீப்பர் டிம் பெய்ன் 44 ரன்கள் அடித்தார். இளம் வீரர் கேமரூன் கிரீன் சதம் அடிக்க ஆஸ்திரேலியா இன்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 286 ரன்கள் சேர்த்துள்ளது. கேமரூன் கிரீன் 114  ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இந்திய அணி சார்பில் உமேஷ் யாதவ் 3 விக்கெட்டும், முகமது சிராஜ், அஸ்வின் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றதன் மூலம் இந்திய அணி தொடர்ச்சியாக 5-வது தொடரை வென்றுள்ளது.
    ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிட்னியில் நேற்று நடந்த 2-வது 20 ஓவர் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஏற்கனவே முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்று இருந்ததால் 3 போட்டி கொண்ட தொடரை இந்தியா 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

    20 ஓவர் போட்டியில் இந்திய அணி தொடர்ச்சியாக 5-வது தொடரை கைப்பற்றியது. வங்காள தேசத்துக்கு எதிராக 2019 நவம்பரில் 2-1 என்ற கணக்கிலும், வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் (2019 டிசம்பர்) 2-1 என்ற கணக்கிலும், இலங்கைக்கு எதிராக (2020 ஜனவரி) 2-0 என்ற கணக்கிலும், நியூசிலாந்து மண்ணில் (2020 ஜனவரி-பிப்ரவரி) 5-0 என்ற கணக்கிலும் கைப்பற்றி இருந்தது.

    அதற்கு முன்பு தென் ஆப்பிரிக்காவுடனான தொடர் (2019 செப்டம்பர்) 1-1 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது. இந்திய அணி கடைசியாக விளையாடிய ஏழு 20 ஓவர் தொடரில் 6 தொடரை கைப்பற்றியது. ஒரு தொடர் சமனானது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2019 பிப்ரவரி மாதம் 20 ஓவர் தொடரை 0-2 என்ற கணக்கில் இழந்தது. அதன்பிறகு இந்திய அணி இதுவரை 20 ஓவர் தொடரை இழந்தது இல்லை.

    இந்திய அணி 20 ஓவர் போட்டியில் தொடர்ச்சியாக 10-வது வெற்றியை பெற்று சாதித்துள்ளது. வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக 2019 டிசம்பரில் நடந்த 2-வது 20 ஓவர் போட்டியில் தோல்வியை தழுவியது. அதன் பிறகு இந்திய அணி விளையாடிய 10 ஆட்டத்திலும் (வெஸ்ட் இண்டீஸ் 1, இலங்கை 2, நியூசிலாந்து 5, ஆஸ்திரேலியா 2) வெற்றி பெற்று முத்திரை பதித்தது.
    சிட்னியில் நாளை நடக்கவுள்ள 3-வது 20 ஓவர் போட்டியிலும் ஆஸ்திரேலியாவை வீழ்த்தும் ஆர்வத்தில் இந்திய அணி உள்ளது.

    சிட்னி:

    இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

    இரு அணிகள் இடையேயான 3 போட்டி கொண்ட ஒரு நாள் தொடரை ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. சிட்னியில் நடந்த முதல் போட்டியில் 66 ரன் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் 51 ரன் வித்தியாசத்திலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. கான்பெராவில் நடந்த 3-வது போட்டியில் இந்தியா 13 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    மூன்று 20 ஓவர் போட்டி தொடரில் இதுவரை நடந்த 2 ஆட்டத்திலும் இந்தியா வென்று தொடரை கைப்பற்றியது. கான்பெராவில் நடந்த முதல் ஆட்டத்தில் 11 ரன்னிலும், சிட்னியில் நடந்த 2-வது போட்டியில் 6 விக்கெட்டிலும் வெற்றி பெற்றது.

    இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி சிட்னியில் நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.

    இந்திய அணி இந்த ஆட்டத்திலும் வென்று ஒயிட்வாஷ் செய்யும் ஆர்வத்தில் உள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக முழுமையாக தொடரை வெல்லுமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.

    ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணி தொடர்ந்து 3 ஆட்டங்களில் (ஒருநாள் போட்டி 1 + 20 ஓவர் ஆட்டம் 2) வெற்றி பெற்றுள்ளது. இதனால் வீரர்கள் மிகுந்த நம்பிக்கையுடன் விளையாடுவார்கள். மேலும் 20 ஓவர் போட்டியில் இந்திய அணி தொடர்ச்சியாக 10 ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளது.

    பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் இந்திய அணி சமபலத்துடன் திகழ்கிறது.

    லோகேஷ் ராகுல், ஷிகர் தவான், கேப்டன் விராட் கோலி, ஹர்த்திக் பாண்ட்யா, ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோர் பேட்டிங்கிலும், தமிழக வீரர் டி. நடராஜன், யசுவேந்திர சாகல், தீபக் சாகர் ஆகியோர் பந்து வீச்சிலும் நல்ல நிலையில் உள்ளனர்.

    ஐ.பி.எல். அனுபவம் இந்திய வீரர்களுக்கு 20 ஓவர் தொடரில் மிகவும் உதவியாக இருக்கிறது.

    20 ஓவர் தொடரை சொந்த மண்ணில் இழந்த ஆஸ்திரேலியா நாளைய கடைசி போட்டியிலாவது வென்று ஆறுதல் பெறுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அந்த அணி வீரர்கள் முழுமையாக தொடரை இழக்காமல் இருக்கும் வகையில் வெற்றிக்காக மிகவும் கடுமையாக போராடுவார்கள்.

    இரு அணிகளும் 20 ஓவர் போட்டியில் 22 முறை மோதியுள்ளன. இதில் இந்தியா 13-ல், ஆஸ்திரேலியா 8-ல் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டம் முடிவு இல்லை.

    நாளைய ஆட்டம் இந்திய நேரப்படி பிற்பகல் 1.40 மணிக்கு தொடங்குகிறது. சோனி டெலிவி‌ஷன் சேனல்களில் இந்த போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

    பாகிஸ்தான் அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து டி20 மற்றும் டெஸ்ட் தொடர்களில் விளையாடுகிறது. இதற்கான நியூசிலாந்து சென்றுள்ள பாகிஸ்தான் வீரர்கள் 14 நாட்கள் கோரன்டைனில் உள்ளனர்.
    நாளைமறுநாள் உடன் 14 நாட்கள் கோரன்டைன் முடிவடைகிறது. அதன்பின் தீவிர பயிற்சி மேற்கொள்ள இருக்கிறது. பாகிஸ்தான் அணி விளையாடும் அதேவேளையில் ‘ஏ’ அணியும் விளையாடுகிறது. இதனால் 30-க்கும் மேற்பட்ட வீரர்கள் சென்றுள்ளனர். இவர்கள் அனைவரும் ஒன்றாக பயிற்சி மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர்.

    இந்த நிலையில் 18-ந்தேதி தொடங்க இருக்கும் டி20 தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் அணியில் முன்னாள் கேப்டன் சர்பராஸ் அகமது, ஆல்-ரவுண்டர் ஹுசைன் தலாத் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    ஜிம்பாப்வே அணி பாகிஸ்தான் சென்று விளையாடிய போது சர்பராஸ் அகமது இடம் கிடைக்கவில்லை. தற்போது அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
    நியூசிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின்போது ஹோல்டரை திட்டி டேரில் மிட்செல்லுக்கு ஐசிசி அபராதம் விதித்துள்ளது.
    நியூசிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஹாமில்டனில் நடைபெற்றது. போட்டியின்போது டேரில் மிட்செல்லை கடந்து சென்ற ஹோல்டரை, ஆபாச வார்த்தையில் திட்டியுள்ளார் டேரில் மிட்செல்.

    விசாரணை நடத்திய ஐசிசி நடுவர் 15 சதவீத அபராதத்துடன், சஸ்பெண்டுக்கான ஒரு புள்ளியையும் வழங்கியுள்ளார். மைதான நடுவர் அளவிலான குற்றம் என்பதால் அதிகப்பட்சம் 50 சதவீதம் வரை அபராதம் விதிக்கவும், சஸ்பெண்டுக்கான 2 புள்ளிகள் வரை வழங்கவும் விதிமுறை உள்ளது.

    டேரில் மிட்செல் குற்றத்தை ஒப்புக்கொண்டு அபராதத் தொகையை ஏற்றுக் கொண்டதால் மேற்கொண்டு விசாரணை தேவையில்லை என ஐசிசி நடுவர் ஜெஃப் க்ரோவ் தெரிவித்துள்ளார்.
    தென்ஆப்பிரிக்கா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி கொரோனா பாசிட்டிவ் முடிவால் ரத்து செய்யப்பட்டுள்ளது.
    இங்கிலாந்து அணி ஒயிட்-பால் கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக தென்ஆப்பிரிக்கா சென்றுள்ளது. ஏற்கனவே முடிவடைந்த மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரை இங்கிலாந்து 3-0 எனக் கைப்பற்றியது.

    இந்த நிலையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நேற்று முன்தினம் நடைபெற இருந்தது. தென்ஆப்பிரிக்கா வீரருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், அந்த போட்டி நாளைய தினத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.

    முதல் போட்டி பார்ல், போலந்து பார்க்கில் இன்று நடைபெற இருந்தது. கடைசி கட்ட பரிசோதனையில் இரு அணி வீரர்களும் தங்கியிருந்த ஓட்டலில் உள்ள இரண்டு ஸ்டாஃப்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் இன்றைய போட்டி பாதுகாப்பு கருதி கைவிடப்பட்டது.

    இரு அணிகளுக்கு இடையிலான 2-வது போட்டி நாளையும் (7-ந்தேதி), 3-வது மற்றும் கடைசி போட்டி 9-ந்தேதியும் நடக்கிறது.
    ×