என் மலர்tooltip icon

    விளையாட்டு

    தென்ஆப்பிரிக்கா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி கொரோனா பாசிட்டிவ் முடிவால் ரத்து செய்யப்பட்டுள்ளது.
    இங்கிலாந்து அணி ஒயிட்-பால் கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக தென்ஆப்பிரிக்கா சென்றுள்ளது. ஏற்கனவே முடிவடைந்த மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரை இங்கிலாந்து 3-0 எனக் கைப்பற்றியது.

    இந்த நிலையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நேற்று முன்தினம் நடைபெற இருந்தது. தென்ஆப்பிரிக்கா வீரருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், அந்த போட்டி நாளைய தினத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.

    முதல் போட்டி பார்ல், போலந்து பார்க்கில் இன்று நடைபெற இருந்தது. கடைசி கட்ட பரிசோதனையில் இரு அணி வீரர்களும் தங்கியிருந்த ஓட்டலில் உள்ள இரண்டு ஸ்டாஃப்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் இன்றைய போட்டி பாதுகாப்பு கருதி கைவிடப்பட்டது.

    இரு அணிகளுக்கு இடையிலான 2-வது போட்டி நாளையும் (7-ந்தேதி), 3-வது மற்றும் கடைசி போட்டி 9-ந்தேதியும் நடக்கிறது.
    ரோகித் சர்மா, பும்ரா ஆகிய ஜாம்பவான் வீரர்கள் இல்லாமல் வெற்றி பெற்றிருப்பது பெருமை அளிக்கிறது என விராட் கோலி தெரிவித்துள்ளார்.
    ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை இந்தியா இழந்தது. ஆனால் கடைசி ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்றதுடன், அடுத்த இரண்டு டி20 போட்டிகளிலும் வெற்றி பெற்று டி20 தொடரை கைப்பற்றியுள்ளது.

    டி20 தொடரில் ரோகித் சர்மாவும் இல்லை. பும்ராவும் இல்லை. இளம் வீரர்களை கொண்ட அணி சிறப்பாக செயல்பட்டு வெற்றியை ருசித்தது.

    இன்றைய போட்டியில் வெற்றி பெற்ற பிறகு விராட் கோலி கூறுகையில் ‘‘டி20 கிரிக்கெட்டில் ஒரு அணியாக நாங்கள் சிறப்பாக விளையாடினோம். உண்மை என்னவெனில், இரண்டு ஸ்டார் பிளேயர்களான ரோகித் சர்மா, பும்ரா ஆகியோர் இல்லாமல் கிடைத்த வெற்றி, பெருமை அளிக்கிறது.

    ஹர்திக் பாண்ட்யா போட்டியை வெற்றி பெறச் செய்தது, தவான் அரை சதம் அடித்தது என ஒட்டுமொத்த அணியின் செயல்பாடு. 2016-ல் அவரை அணிக்குள் கொண்டு வந்தது அவரது திறமையால். தற்போது எங்களுக்கான வெற்றியை தேடுக்கொடுக்கனும், பினிஷராக இருக்கனும் என்பதை உணர்ந்துள்ளார். முழு மனதோடும், போட்டி விளையாட்டில் விளையாட வேண்டு என்ற எண்ணமும் அவரிடம் இயற்கையாகவே உள்ளது. அதை வெளிப்படுத்தும்போது உயர்ந்த நிலையில் உள்ளார்.

    அடுத்த போட்டியை காண மைதானம் முழுவதும் ரசிகர்கள் இருப்பார்கள் இது உற்சாகமாக இருக்கும். நான் ஸ்கூப் ஷாட் அடித்தது வேடிக்கையானது. எனக்கே அது ஆச்சர்யத்தை அளித்தது. இன்று இரவு ஏபி டி வில்லியர்ஸ்க்கு இது குறித்த செய்தி அனுப்புவேன். அவர் என்ன நினைக்கிறார்? என்று பார்க்க வேண்டும்’’ என்றார்.
    ஆஸ்திரேலியா கூடுதலாக 10 ரன்கள் அடிப்பதை தடுக்க முக்கிய காரணமாக இருந்த டி நடராஜனுக்குத்தான் ஆட்ட நாயகன் விருது கிடைக்கும் என நினைத்தேன் என ஹர்திக் பாண்ட்யா தெரிவித்துள்ளார்.
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி சிட்னியில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 194 ரன்கள் குவித்தது. டி நடராஜன் நேர்த்தியாக பந்து வீசி 20 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்ததால் இந்தியா ஆஸ்திரேலியாவை 200 ரன்னுக்குள் கட்டுப்படுத்தியது.

    பின்னர் 195 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. ஹர்திக் பாண்ட்யா 22 பந்தில் 42 ரன்கள் விளாசி இந்தியா வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார். இதனால் ஆட்ட நாயகன் விருது ஹர்திக் பாண்ட்யாவுக்கு வழங்கப்பட்டது.

    ஆட்ட நாயகன் விருது வென்ற ஹர்திக் பாண்ட்யா கூறுகையில் ‘‘இந்த ஸ்கோரையும், விளையாட்டையும் உண்மையிலேயே பார்க்க விரும்பினேன். டார்கெட் பற்றி எங்களுக்கு பெரிய விஷயமே அல்ல. கடந்த ஐந்து போட்டிகளில் 80, 90, 100 என அடித்திருக்கிறோம். அதில் இருந்து எனக்கு தன்னம்பிக்கை கிடைத்தது.

    ஒரு குழுவாக நாங்கள் நேர்மறையான ஆட்டத்தை விளையாட வேண்டும் என்று என நம்பினோம். இது ஒவ்வொருவருக்கும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வாய்ப்பு கொடுத்தது. நடராஜன் ஆட்ட நாயகன் விருதை வாங்குவார் என்று நினைத்தேன். அவர் எங்களுக்கு 10 ரன்கள் குறைவாக இலக்கை நிர்ணயிக்க உதவினார்’’ என்றார்.
    சிட்னியில் நடைபெற்ற 2-வது டி20 கிரிக்கெட் போட்டியில் கடைசி ஓவரில் 14 ரன்கள் தேவை என்ற நிலையில், ஹர்திக் பாண்ட்யா 2 சிக்ஸ் விரட்ட இந்தியா த்ரில் வெற்றி பெற்றது. அத்துடன் தொடரையும் 2-0 எனக் கைப்பற்றியது.
    ஆஸ்திரேலியா -இந்தியா இடையிலான 2-வது டி20 போட்டி சிட்னியில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 5 விக்கெட் இழப்பிற்கு 194 ரன்கள் குவித்தது.

    பின்னர் 195 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. மிகப்பெரிய இலக்கு என்பதால் இந்திய வீரர்கள் தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கேஎல் ராகுல் 22 பந்தில் 30 ரன்களும், தவான் 36 பந்தில் 52 ரன்களும், விராட் கோலி 24 பந்தில் 40 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். சஞ்சு சாம்சன் 10 பந்தில் 15 ரன்கள் எடுத்தார்.

    கடைசி 4 ஓவரில் 46 ரன்கள் தேவைப்பட்டது. 17-வது ஓவரை சாம்ஸ் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் விராட் கோலி ஆட்டமிழந்தார். அடுத்து ஹர்திக் பாண்ட்யா உடன் ஷ்ரேயாஸ் அய்யர் ஜோடி சேர்ந்தார். இந்த ஓவரின் கடைசி பந்தில் பவுண்டரி அடித்தார் ஹர்திக் பாண்ட்யா.

    கடைசி 3 ஓவரில் 37 ரன்கள் தேவைப்பட்டது. 18-வது ஓவரை ஆடம் ஜம்பா வீசினார். இந்த ஓவரின் முதல் மூன்று பந்தில் இந்தியா 2 ரன்களே எடுத்தது. ஆனால் 4-பந்தை இமாலய சிக்சருக்கு அனுப்பினார் ஷ்ரேயாஸ் அய்யர். அதோடு மட்டுமல்லாமல் கடைசி பந்தை பவுண்டரிக்கு விரட்டினார். இந்த ஓவரில் 12 ரன்கள் கிடைக்க கடைசி 2 ஓவரில் 25 ரன்கள் தேவைப்பட்டது.

    19-வது ஓவரை அந்த்ரே டை வீசினார். இந்த ஓவரில் பாண்ட்யா இரண்டு பவுண்டரி விரட்டினாலும் 11 ரன்களே கிடைத்தது. இதனால் கடைசி ஓவரில் 14 ரன்கள் தேவைப்பட்டது.

    சாம்ஸ் கடைசி ஓவரை வீசினார். முதல் பந்தில் 2 ரன் அடித்த ஹர்திக் பாண்ட்யா அடுத்த பந்தை சிக்சருக்கு தூக்கினார். 3-வது பந்தில் ரன் அடிக்காத ஹர்திக் பாண்ட்யா 4-வது பந்தை இமாலய சிக்சருக்கு தூக்கி இரண்டு பந்துகள் மீதமுள்ள நிலையில் இந்திய அணியை த்ரில் வெற்றி பெற வைத்தார்.

    ஹர்திக் பாண்ட்யா 22 பந்தில் 3 பவுண்டரி, 2 சிக்சருடன் 42 ரன்களும், ஷ்ரேயாஸ் அய்யர் 5 பந்தில் 12 ரன்களும் எடுத்து ஆட்மிழக்காமல் இருந்தனர். இந்த வெற்றி மூலம் இந்தியா 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என வென்றுள்ளது.
    ஜடேஜா காயத்தால் வெளியேறியது சர்ச்சையை எழுப்பிய நிலையில், பொதுவான டாக்டரை நியமிக்க ஐசிசி கருத்தில் கொள்ள வேண்டும் என மார்க் வாக் தெரிவித்துள்ளார்.
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி கார்பெர்ராவில் நடைபெற்றது. ஜடேஜா பேட்டிங் செய்யும்போது மிட்செல் ஸ்டார்க் வீசிய பந்து அவரது ஹெல்மெட்டை கடுமையாக தாக்கியது. இதனால் ஜடேஜா நிலைகுலைந்து போனார்.

    ஜடேஜா சற்று மயக்கமாக இருப்பதாக தோன்றியதால் கன்கசன் மாற்று வீரராக சாஹல் களம் இறங்கினார். அவர் 3 விக்கெட் வீழ்த்தி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.

    ஜடேஜாவுக்கு உண்மையிலேயே விளையாட முடியாத அளவிற்கு மயக்கம் இருந்ததா? என்ற சர்ச்சை எழுந்துள்ளது, போட்டியின்போது ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் கடும் அதிருப்தி தெரிவித்திருந்தார்.

    இந்த நிலையில் விமர்சனத்தை தடுக்க ஐசிசி போட்டியின்போது பொதுவான டாக்டரை நியமிக்க வேண்டும் என ஆஸ்திரேலியாவின் முன்னாள் பேட்ஸ்மேனும், கிரிக்கெட் வர்ணனையாளருமான மார்க் வாக் வலியுறுத்தியுள்ளார்.
    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டி20 கிரிக்கெட் போட்டியில் 1 விக்கெட் வீழ்த்தியதன் மூலம் பும்ராவின் சாதனையை சமன் செய்துள்ளார் சாஹல்.
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. கான்பெர்ராவில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியா 11 ரன்னில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ஆடும் லெவன் அணியில் சாஹல் இடம் பெறவில்லை. ஆனால் ஜடேஜா கன்கசன் மூலம் வெளியேற சாஹல் அணியில் இடம் பிடித்தார். அவர் 25 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார்.

    இன்றைய போட்டியில் 51 ரன்கள் விட்டுக்கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினார். இதனால் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் மொத்தம் 59 விக்கெட் வீழ்த்தியுள்ளார். இதற்கு முன் பும்ரா 59 விக்கெட் வீழ்த்தி முதல் இடத்தில் உள்ளார். தற்போது டி20-யில் அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய வீரர் சாதனையில் பும்ரா உடன் இணைந்துள்ளார் சாஹல்.
    சிட்னியில் நடைபெற்று வரும் 2-வது டி20 போட்டியில் மற்ற பந்து வீச்சாளர்கள் 35 ரன்களுக்கு மேல் விட்டுக்கொடுத்த நடராஜன் 20 ரன் கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார்.
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    ஆஸ்திரேலியா தொடக்க வீரர் மேத்யூ வடே களம் இறங்கியதில் இருந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். முதல் பகுதியில் சிறப்பாக பந்து வீசினால், டி. நடராஜனை டெத் ஓவரில் பயன்படுத்திக் கொள்ளலாம் என விராட் கோலி நினைத்திருந்தார்.

    தீபக் சாஹர் வீசிய முதல் ஓவரில் 13 ரன்கள் விட்டுக்கொடுத்தார். அடுத்த ஓவரில் வாஷிங்டன் சுந்தர் 10 ரன்கள் விட்டுக்கொடுத்தார். ஷர்துல் தாகூர் 3-வது ஓவரில் 8 ரன்கள் விட்டுக்கொடுத்தார். வாஷிங்டன் சுந்தர் 4-வது ஓவரில் 15 ரன்கள் விட்டுக்கொடுத்தார். இதனால் ஆஸ்திரேலியா 4 ஓவருக்குள் 46 ரன்கள் குவித்தது.

    இந்தியாவுக்கு நெருக்கடி உண்டாக ஐந்தாவது ஓவரில் விராட் கோலி டி நடராஜனை பந்து வீச அழைத்தார். முதல் பந்தில் ஒரு ரன் விட்டுக்கொடுத்த நடராஜன் 2-வது ரன் விட்டுக்கொடுக்கவில்லை. 3-வது பந்தில் ஆர்கி ஷார்ட்டை அவுட்டாக்கினார். அடுத்த 3-பந்துகளிலும் ஸ்டீவ் ஸ்மித்தை ரன் ஏதும் அடிக்க விடாமல் அட்டகாசமாக பந்து வீசினார். 1 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

    ஆனால் மறுமுனையில் ரன்கள் சென்று கொண்டே இருந்தது. 9-வது ஓவரை வீசினார். இந்த ஓவரில் மேக்ஸ்வெல், ஸ்மித்திற்கு தண்ணி காட்டி 6 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார். 15-வது ஓவரை வீசினார். இந்த ஓவரில் ஸ்மித், ஹென்ரிக்ஸ் ஆகியோருக்கு எதிராக துல்லியமாக பந்து வீசி 5 ரன்கள் மட்டும்தான் விட்டுக்கொடுத்தார்.

    19-வது ஓவரை வீசினார். இந்த ஓவரின் 3-வது பந்தில் ஹென்ரிக்ஸை வீழ்த்தினார். கடைசி பந்தில் பவுண்டரி விட்டுக்கொடுக்க 8 ரன்கள் விட்டுக்கொடுத்து 1 விக்கெட் சாய்த்தார். மொத்தமாக 4 ஓவரில் 20 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

    மற்ற பந்து வீச்சாளர்களான தீபக் சாஹர் 48 ரன்களும், வாஷிங்டன் சுந்தர் 35 ரன்களும், ஷர்துல் தாகூர் (1 விக்கெட்) 39 ரன்களும், சாஹல் (1 விக்கெட்) 51 ரன்களும் விட்டுக்கொடுத்தனர்.

    கடந்த போட்டியில் 3 விக்கெட் வீழ்த்திய நிலையில், இந்த போட்டியிலும் 2 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். ஆஸ்திரேலிய  பேட்ஸ்மேன்கள் இவரது பந்தை அடித்து ஆட விரும்பாமல் தடுத்தாடவே விரும்பினர்.
    சிட்னியில் நடைபெற்று வரும் 3 நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டத்தில் இந்தியா முதல் நாள் ஆட்ட முடிவில் 237 ரன்கள் அடித்துள்ளது.
    இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற இருக்கிறது. இதற்கு முன்னோட்டமாக இந்திய அணி ஆஸ்திரேலியா ஏ அணிக்கெதிராக 3 நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டத்தில் விளையாட முடிவு செய்தது.

    அதன்படி பயிற்சி ஆட்டம் இன்று தொடங்கியது. இந்திய அணிக்கு ரகானே கேப்டன் பதவியை ஏற்றுக் கொண்டார். டாஸ் வென்ற ரகானே பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணிக்கு தொடக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது.

    தொடக்க வீரர்களான பிரித்வி ஷா, ஷுப்மான் கில் ஆகியோர் ரன் ஏதும் அடிக்காமல் டக்அவுட் ஆனார்கள். அதன்பின் வந்த புஜாரா தாக்குப்பிடித்து விளையாட ஹனுமா விஹாரி 15 ரன்னில் ஏமாற்றம் அடைந்தார்.
    பிரித்வி ஷா

    4-வது விக்கெட்டுக்கு புஜாரா உடன் ரகானே ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பாக விளையாடியது. புஜாரா 54 ரன்கள் எடுத்து வெளியேறினார். மறுபுறம் விளையாடிய ரகானே சதம் அடித்தார். விக்கெட் கீப்பர் சகா டக்அவுட் ஆனார். குல்தீப் யாதவ் 15 ரன்களும், உமேஷ் யாதவ் 24 ரன்களும் அடித்தனர்.

    ரகானே ஆட்டமிழக்காமல் 108 ரன்கள் அடிக்க இந்தியா முதல் நாள் ஆட்ட முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 237 ரன்கள் எடுத்துள்ளது. ஆஸ்திரேலியா ஏ அணியில் ஜேம்ஸ் பேட்டின்சன் 3 விக்கெட்டும், டிராவிஸ் ஹெட் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
    மேத் வடே அதிரடியாக விளையாடி அரைசதம் அடிக்க இந்தியாவுக்கு 195 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது ஆஸ்திரேலியா.
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 2-வது டி20 போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்தியா பந்து வீச்சை தேர்வு செய்தார். ஆஸ்திரேலியா அணியில் ஆரோன் பிஞ்ச், மிட்செல் ஸ்டார்க் விளையாடவில்லை. மேத்யூ வடே கேப்டனாக செயல்பட்டார்.

    மேத்யூ வடே, ஆர்கி ஷார்ட் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். மேத் வடே தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினார். மேலும், பந்துகள் அனைத்தையும் அவரே சந்தித்து வந்தார். ஒரு ஓவருக்கு 10 ரன்கள் என்ற விகிதத்தில் ரன்கள் வந்து கொண்டிருந்தது. 5-வது ஓவரை டி நடராஜன் வீசினார். இந்த ஓவரின் 3-வது பந்தில் ஆர்கி ஷார்ட் 9 ரன்கள் (9 பந்தில்) எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

    அடுத்து ஸ்டீவ் ஸ்மித் களம் இறங்கினார். ஆஸ்திரேலியா பவர்பிளேயில் 1 விக்கெட் இழப்பிற்கு 59 ரன்கள் எடுத்திருந்தது. சிறப்பாக விளையாடி மேத்யூ வடே 25 பந்தில் 10 பவுண்டரி, 1 சிக்சருடன் அரைசதம் அடித்தார்.

    8-வது ஓவரை வாஷிங்டன் சுந்தர் வீசினார். இந்த ஓவரின் கடைசி பந்தை மேத்யூ வடே எதிர்கொண்டார். பந்து பேட்டில் பட்டு கோலியிடம் சென்றது. விராட் கோலி எளிதான கேட்சை கோட்டைவிட்டார். ஆனால் பந்தை எடுத்து விக்கெட் கீப்பரிடம் வீசி ரன்அவுட் செய்தார். இதனால் வடே 32 பந்தில் 58 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    அடுத்து வந்த அதிரடி பேட்ஸ்மேன் மேக்ஸ்வெல் 13 பந்தில் 22 ரன்கள் எடுத்து ஷர்துல் தாகூர் பந்தில் வெளியேறினார். ஸ்டீவ் ஸ்மித் 38 பந்தில் 46 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
    2 விக்கெட் வீழ்த்திய டி நடராஜன்

    இதற்கிடையில் ஆஸ்திரேலியா 11 ஓவரில் 100 ரன்களும், 15.5 ஓவரி் 150 ரன்களையும் கடந்தது. 18-வது ஓவரில் சாஹல் ஸ்மித்தையும், 19-வது ஓவரில் நடராஜன் ஹென்ரிக்ஸையும் வெளியேற்றினர். நடராஜன் சிறப்பாக பந்து வீசி 4 ஓவரில் 19 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விகக்கெட் வீழ்த்தினார்.

    கடைசி ஓவரில் தீபக் சாஹர் 17 ரன்கள் விட்டுக்கொடுத்த ஆஸ்திரேலியா 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 194 ரன்கள் குவித்தது. இதனால் இந்தியாவுக்கு 195 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

    தீபக் சாஹர் 48 ரன்களும், வாஷிங்டன் சுந்தர் 35 ரன்களும், ஷர்துல் தாகூர் 39 ரன்களும், சாஹல் 51 ரன்களும் விட்டுக்கொடுத்தனர்.
    இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் இரண்டாவது 20 ஓவர் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
    சிட்னி, 

    இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. ஒரு நாள் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்த இந்திய அணி அடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் கான்பெர்ராவில் நடந்த முதலாவது 20 ஓவர் போட்டியில் இந்திய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

    இந்த நிலையில் இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 2-வது 20 ஓவர் போட்டி சிட்னி நகரில் இன்று நடக்கிறது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    இந்தியா: ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், விராட் கோலி (கேப்டன்), சஞ்சு சாம்சன், ஸ்ரேயாஸ் அய்யர், ஹர்திக் பாண்ட்யா, யுஸ்வேந்திர சாஹல், வாஷிங்டன் சுந்தர், சர்துல் தாகூர், தீபக் சாஹர், டி.நடராஜன்.

    ஆஸ்திரேலியா: மேத்யூ வேட் (கேப்டன்), டார்சி ஷார்ட், ஸ்டீவன் சுமித், மேக்ஸ்வெல், ஹென்ரிக்ஸ், சீன் அப்போட், ஆடம் ஜம்பா, ஸ்வெப்சன் அல்லது நாதன் லயன், மிட்செல் ஸ்டார்க், ஹேசில்வுட்.

    சிட்னி மைதானம் பேட்டிங்குக்கு சாதகமானது. இங்கு நடந்த முதல் இரு ஒரு நாள்போட்டிகளில் இரு அணியினரும் 300 ரன்களுக்கு மேல் குவித்து ரன்மழை பொழிந்ததை பார்க்க முடிந்தது. சுழலும் ஓரளவு எடுபடும்.

    இந்த மைதானத்தில் இதுவரை ஏழு 20 ஓவர் போட்டிகள் நடந்துள்ளன. இவற்றில் 4-ல் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றிருக்கிறது. ஒரு ஆட்டத்தில் முடிவில்லை. இரு ஆட்டங்களில் தோற்று இருக்கிறது. இரு தோல்விகளும் இந்தியாவுக்கு எதிராக (2016 மற்றும் 2018-ம் ஆண்டு) நிகழ்ந்தவை ஆகும். 2007-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக ஆஸ்திரேலியா 221 ரன்கள் குவித்தது இந்த மைதானத்தில் ஒரு அணியின் அதிகபட்ச ஸ்கோராகும். இந்திய அணி 2016-ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 200 ரன் எடுத்து சேசிங் செய்ததும் கவனிக்கத்தக்கது.
    இந்தியாவுக்கு எதிரான இன்றைய 2-வது 20 ஓவர் போட்டியில் இருந்து ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஸ்டார்க் விலகி உள்ளார்.

    சிட்னி:

    விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

    இரு அணிகள் இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. சிட்னியில் நடந்த முதல் போட்டியில் 66 ரன் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் 51 ரன் வித்தியாசத்திலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. கான்பெராவில் நடந்த 3-வது போட்டியில் இந்தியா 13 ரன் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றது.

    மூன்று 20 ஓவர் போட்டி தொடரில் கான்பெராவில் நேற்று நடந்த முதல் ஆட்டத்தில் இந்தியா 11 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2-வது 20 ஓவர் போட்டி சிட்னியில் இன்று பிற்பகல் நடக்கிறது.

    இந்திய அணி இந்த ஆட்டத்திலும் வென்று தொடரை கைப்பற்றுமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். ஒருநாள் தொடரை இழந்ததற்கு பதிலடி கொடுக்க 20 ஓவர் தொடரை வெல்வது அவசியமாகும்.

    ஆஸ்திரேலிய அணி பதிலடி கொடுத்து தொடரை சமன் செய்யும் ஆர்வத்தில் உள்ளது. நாளைய ஆட்டத்தில் வெற்றிபெற வேண்டிய கட்டாயம் அந்த அணிக்கு உள்ளது.

    இந்த நிலையில் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீரர் ஸ்டார்க் 20 ஓவர் போட்டிக்கான அணியில் இருந்து விலகி உள்ளார்.

    தன்னுடைய குடும்பத்தில் உள்ள சிலருக்கு உடல்நலம் சரி இல்லாமல் இருப்பதால் அவர் போட்டியில் இருந்து விலகி உள்ளதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

    இன்று நடைபெறும் 20 ஓவர் போட்டியில் ஸ்டார்க் விளையாட மாட்டார். இது ஆஸ்திரேலியாவுக்கு பின்னடைவாகும். அவர் எப்போது அணிக்கு திரும்புவார் என்பது உறுதியாக தெரியவில்லை.

    வருகிற 17-ந் தேதி தொடங்கும் முதல் டெஸ்ட போட்டியிலும் ஸ்டார்க் இடம்பெறுவாரா? என்பது சந்தேகமே.

    இதுகுறித்து ஆஸ்திரேலிய பயிற்சியாளர் லாங்கர் கூறும் போது,’உலகில் குடும்பத்தை விட முக்கியமானது வேறு எதுவும் இல்லை. இதற்கு ஸ்டார்க்கும விதிவிலக்கு இல்லை. அவரது குடும்பத்தில் உள்ளவர்களுக்கு உடல்நலக் கோளாறு இருப்பதால் ஸ்டார்க்கை இந்த நேரத்தில் விடுவிக்கிறோம் என்றார்.

    மாற்று வீரர் வி‌ஷயத்தில் இந்திய அணி விதிமுறையை மீறியதாக முன்னாள் வீரரும், டெலிவி‌ஷன் வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்ச்ரேக்கர் குற்றம் சாட்டியுள்ளார்.

    புதுடெல்லி:

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் 20 ஓவர் போட்டியில் ஜடேஜாவுக்கு பதிலாக யசுவேந்திர சாகல் மாற்று வீரராக களம் இறங்கியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த போட்டியில் ஜடேஜா பேட்டிங்கில் அசத்தினார். 20-வது ஓவரில் 2-வது பந்தில் அவரது ஹெல்மெட்டில் பந்து தாக்கியது. தலையில் பட்ட காயத்தால் தொடர்ந்து விளையாட முடியாத சூழல் ஏற்பட்டதாக கூறி அவருக்கு பதிலாக சுழற்பந்து வீரர் சாகல் பந்து வீச்சில் களம் இறங்கினார்.

    அவர் சிறப்பாக பந்து வீசி 3 விக்கெட் வீழ்த்தினார். இது வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தது. ஒரே இடத்துக்கு 2 பேர் ஆடினர். பேட்டிங்கின்போது ஜடேஜாவும், பந்துவீச்சின் போது சாகலும் விளையாடினர்.

    மாற்று வீரர் வி‌ஷயத்தில் இந்திய அணி விதிமுறையை மீறியதாக முன்னாள் வீரரும், டெலிவி‌ஷன் வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்ச்ரேக்கர் குற்றம் சாட்டியுள்ளார்.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் 20 ஓவர் போட்டியில் இந்திய அணி மாற்று வீரர் விதிமுறையை மீறிவிட்டதாகவே நான் கருதுகிறேன்.

    ஜடேஜா ஹெல்மெட்டில் பந்து பட்டு காயம் ஏற்பட்டது என்றால், உடனடியாக இந்திய அணியின் உடல் தகுதி நிபுணர் நிதின் படேல் களத்துக்கு வந்திருக்க வேண்டும். ஜடேஜாவின் உடல்நிலை எவ்வாறு இருக்கிறது என்று அவர் கேட்டிருக்க வேண்டும்.

    ஆனால் ஜடேஜா தொடர்ந்து 4 பந்துகள் விளையாடி 9 ரன்கள் சேர்த்தார். ஓய்வு அறைக்கு சென்று தன்னால் விளையாட முடியாது என்று கூறி மாற்று வீரரை தேர்வு செய்யுமாறு சொன்னார். இதில் பல்வேறு கேள்விகள் எழுகின்றன.

    ஜடேஜாவுவின் காயத்தை உடல் தகுதி நிபுணர் பரிசோதிக்க சென்றிருக்க வேண்டும். அப்படி செய்யாததால் அவருக்கு உண்மையிலேயே தலையில் காயம் ஏற்பட்டதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

    நல்ல நோக்கத்தோடுதான் மாற்று வீரர் விதிமுறை ஐ.சி.சி.யால் கொண்டுவரப்பட்டது. இந்திய அணி மாற்று வீரர் விதிமுறையை மீறி சாகலை களம் இறக்கியதா? என்று எனக்கு தெரியாது. ஆனால் இதுபோன்ற நேரங்களில் ஐ.சி.சி. சிறிது கவனத்துடன் ஆய்வு செய்ய வேண்டும்.

    ஒரு வீரருக்கு மாற்று வீரர் என்ற திட்டமே இந்த சம்பவத்தால் கேள்விக் குள்ளாகி இருக்கிறது. விதிமுறைகளை தங்களுக்கு சாதகமாக வளைக்க எந்த அணியையும் ஐ.சி.சி. அனுமதிக்கக்கூடாது.

    இவ்வாறு சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறியுள்ளார்.

    ×