என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்திய அணி
    X
    இந்திய அணி

    2 ஜாம்பவான்கள் இல்லாமல் கிடைத்த வெற்றி பெருமையளிக்கிறது: விராட் கோலி

    ரோகித் சர்மா, பும்ரா ஆகிய ஜாம்பவான் வீரர்கள் இல்லாமல் வெற்றி பெற்றிருப்பது பெருமை அளிக்கிறது என விராட் கோலி தெரிவித்துள்ளார்.
    ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை இந்தியா இழந்தது. ஆனால் கடைசி ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்றதுடன், அடுத்த இரண்டு டி20 போட்டிகளிலும் வெற்றி பெற்று டி20 தொடரை கைப்பற்றியுள்ளது.

    டி20 தொடரில் ரோகித் சர்மாவும் இல்லை. பும்ராவும் இல்லை. இளம் வீரர்களை கொண்ட அணி சிறப்பாக செயல்பட்டு வெற்றியை ருசித்தது.

    இன்றைய போட்டியில் வெற்றி பெற்ற பிறகு விராட் கோலி கூறுகையில் ‘‘டி20 கிரிக்கெட்டில் ஒரு அணியாக நாங்கள் சிறப்பாக விளையாடினோம். உண்மை என்னவெனில், இரண்டு ஸ்டார் பிளேயர்களான ரோகித் சர்மா, பும்ரா ஆகியோர் இல்லாமல் கிடைத்த வெற்றி, பெருமை அளிக்கிறது.

    ஹர்திக் பாண்ட்யா போட்டியை வெற்றி பெறச் செய்தது, தவான் அரை சதம் அடித்தது என ஒட்டுமொத்த அணியின் செயல்பாடு. 2016-ல் அவரை அணிக்குள் கொண்டு வந்தது அவரது திறமையால். தற்போது எங்களுக்கான வெற்றியை தேடுக்கொடுக்கனும், பினிஷராக இருக்கனும் என்பதை உணர்ந்துள்ளார். முழு மனதோடும், போட்டி விளையாட்டில் விளையாட வேண்டு என்ற எண்ணமும் அவரிடம் இயற்கையாகவே உள்ளது. அதை வெளிப்படுத்தும்போது உயர்ந்த நிலையில் உள்ளார்.

    அடுத்த போட்டியை காண மைதானம் முழுவதும் ரசிகர்கள் இருப்பார்கள் இது உற்சாகமாக இருக்கும். நான் ஸ்கூப் ஷாட் அடித்தது வேடிக்கையானது. எனக்கே அது ஆச்சர்யத்தை அளித்தது. இன்று இரவு ஏபி டி வில்லியர்ஸ்க்கு இது குறித்த செய்தி அனுப்புவேன். அவர் என்ன நினைக்கிறார்? என்று பார்க்க வேண்டும்’’ என்றார்.
    Next Story
    ×