என் மலர்
விளையாட்டு
சென்னை:
18-வது பெடரேசன் கோப்பை தேசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி மத்திய பிரதேச மாநிலம் போபாலில் நடந்தது.
இந்தப் போட்டியில் 15 சிறுவர்கள், 10 சிறுமிகள் ஆகியோர் அடங்கிய 25 பேர் கொண்ட தமிழக அணி பங்கேற்றது. தமிழக வீரர், வீராங்கனைகளின் செயல்பாடு இந்த போட்டியில் மிகவும் சிறப்பாக இருந்தது.
தமிழக அணிக்கு 5 தங்கம், 2 வெள்ளி, 5 வெண்கலம் ஆக மொத்தம் 12 பதக்கம் கிடைத்தது.
10 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் எம்.சதீஷ் குமாரும், நீளம் தாண்டுதலில் ஜெஸ்வின் ஆல்டிரினும், 800 மீட்டர் ஓட்டத்தில் ஸ்ரீகிரணும், டிரிபிள் ஜம்ப்பில் பிரவீன் சித்ரவேலும் தங்கப்பதக்கம் பெற்றனர்.
இதில் பிரவீன் 16.01 மீட்டர் தூரம் தாண்டி புதிய சாதனை படைத்தார். வீராங்கனைகளில் ஒருவர் மட்டுமே தங்கம் வென்றார். டிரிபிள் ஜம்ப்பில் பவிஷா முதல் இடம் பிடித்தார்.
800 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்ற தமிழக வீரர் ஸ்ரீகிரண் 1,500 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளி பதக்கம் பெற்றார். உயரம் தாண்டுதலில் கெவினா அஸ்வினிக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது.
10 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்ற சதீஷ்குமார், 5 ஆயிரம் மீட்டரில் வெண்கலப்பதக்கம் வென்றார். இதேபோல நிஷந்த் ராஜா (110 மீட்டர் தடை தாண்டுதல் ஓட்டம்) உள்பட 4 பேர் வெண்கலப் பதக்கம் வென்றனர்.
பதக்கம் வென்ற தமிழக வீரர்-வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படும் என்று தமிழ்நாடு தடகள சங்க செயலாளர் சி.லதா தெரிவித்துள்ளார்.
துபாய்:
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) ஒருநாள் போட்டி அடிப்படையில் வீரர்களின் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.
அதன்படி பேட்டிங் தரவரிசையில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி, ரோகித் சர்மா தொடர்ந்து முதல் 2 இடங்களில் நீடிக்கின்றனர். கோலி 870 புள்ளிகளுடனும், ரோகித் சர்மா 842 புள்ளிகளுடனும் உள்ளனர்.
பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசம் 791 புள்ளிகள் பெற்று தொடர்ந்து 3-வது இடத்தில் உள்ளார்.
பந்துவீச்சு தரவரிசையில் இந்திய வீரர்களில் பும்ரா 3-வது நீடிக்கிறார். அவர் 700 புள்ளிகள் பெற்றுள்ளார். நியூசிலாந்தை சேர்ந்த போல்ட் முதல் இடத்திலும், ஆப்கானிஸ்தானின் முஜிபூர் ரகுமான் 2-வது இடத்திலும் உள்ளனர்.
சென்னை:
இங்கிலாந்து கிரிக்கெட் அணி 4 டெஸ்ட், ஐந்து 20 ஓவர் போட்டி, மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது.
இதில் முதல் 2 டெஸ்ட் போட்டிகளும் சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடக்கிறது. முதல் டெஸ்ட் வருகிற 5-ந் தேதி முதல் 9-ந் தேதி வரையும், 2-வது டெஸ்ட் 13-ந் தேதி முதல் 17-ந் தேதி வரையும் நடக்கிறது.
இதற்காக ஜோரூட் தலைமையிலான இங்கிலாந்து அணி இலங்கையில் இருந்து சென்னை வந்துள்ளது. இதைப்போல இந்திய வீரர்களும் சென்னை வந்தடைந்தனர்.
வீரர்கள் 6 நாட்கள் நட்சத்திர ஓட்டலில் தனிமைப்படுத்தப்படுவார்கள். பின்னர் 3 தினங்கள் பயிற்சியில் ஈடுபடுவார்கள்.
இந்த நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அஸ்வின் முக்கிய பங்கு வகிப்பார் என்று இங்கிலாந்து முன்னாள் சுழற்பந்து வீரரும், இந்திய வம்சாவழியை சேர்ந்தவருமான பனேசர் கணித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறி இருப்பதாவது:-
ஆஸ்திரேலிய தொடரில் அஸ்வின் சிறப்பான முறையில் செயல்பட்டார். அவர் இங்கிலாந்துக்கு எதிராகவும் நம்பிக்கையுடன் பந்து வீசுவார். டெஸ்ட் தொடரில் அவர் இந்திய அணிக்கு முக்கிய பங்கு வகிப்பார். ஜடேஜா காயத்தால் ஆடவில்லை. இதனால் 2-வது சுழற்பந்து வீரர் அஸ்வினுக்கு ஏற்ற வகையில் பந்து வீச வேண்டும். இந்த இடத்தை அக்தர் படேல் சரியாக பயன்படுத்தி கொள்வார்.
இங்கிலாந்து அணி சமீபத்தில் இலங்கை மண்ணில் 2 டெஸ்டில் வென்று சாதித்தது. இதனால் அந்த அணி நம்பிக்கையுடன் இந்தியாவை எதிர்கொள்ளும்.
சென்னை டெஸ்டில் இங்கிலாந்து அணியால் வெற்றிபெற முடியும். வலுவான இந்தியாவுக்கு எதிராக இங்கிலாந்து அணி கடுமையாக போராடும் என்று எதிர்பார்க்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
34 வயதான அஸ்வின் 74 டெஸ்டில் விளையாடி 377 விக்கெட் கைப்பற்றியுள்ளார். 59 ரன் கொடுத்து 7 விக்கெட் கைப்பற்றியது ஒரு இன்னிங்சில் அவரது சிறந்த பந்துவீச்சாகும். 27 முறை 5 விக்கெட்டும், 7 தடவை 10 விக்கெட்டுக்கு மேலும் எடுத்துள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் அஸ்வின் 9 டெஸ்டில் 42 விக்கெட் கைப்பற்றி உள்ளார்.
இங்கிலாந்து அணி 2012-13-ல் இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்த தொடரில் இங்கிலாந்தின் வெற்றிக்கு பனேசர் முக்கிய பங்கு வகித்தார். அவர் 17 விக்கெட் கைப்பற்றினார்.
இந்திய கிரிக்கெட் வாரிய தலைவரும், இந்திய அணியின் முன்னாள் கேப்டனுமான சவுரவ் கங்குலிக்கு கடந்த 2-ந்தேதி திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக கொல்கத்தாவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு இதயத்துக்கு செல்லும் ரத்தக்குழாயில் 3 அடைப்பு இருப்பது தெரியவந்தது. ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சையின் மூலம் ஒரு அடைப்பு அகற்றப்பட்டது.
5 நாள் சிகிச்சைக்கு பிறகு அவர் வீடு திரும்பினார். இந்த நிலையில் கங்குலியை நேற்று மீண்டும் அவசரமாக ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றதால் பரபரப்பு உண்டானது. அவருக்கு மறுபடியும் லேசான நெஞ்சு வலி ஏற்பட்டதாக தகவல்கள் பரவின. ஆனால் அவர் தனது இதயம் செயல்பாடு தொடர்பாக பரிசோதித்துக் கொள்ள வந்ததாகவும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் ஆஸ்பத்திரி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் நேர்மை மற்றும் பாதுகாப்பு கமிட்டியின் தலைவர் சீன் காரோல் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சிட்னி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் போது இந்திய வீரர்கள்(முகமது சிராஜ், பும்ரா) ரசிகர்களின் இனவெறி பேச்சுக்கு ஆளானது உண்மை தான். விரும்பத்தகாத இந்த சம்பவத்துக்காக நாங்கள் மீண்டும் இந்திய அணியிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம்.
இந்த விவகாரத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஸ்டேடியத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவின் பதிவுகள், டிக்கெட் விவரங்கள், ரசிகர்களிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை அடையாளம் காண முயற்சித்து வருகிறோம். மைதானத்தில் இருந்து சந்தேகத்தின் பேரில் வெளியேற்றப்பட்ட 6 ரசிகர்களுக்கும் இனவெறி புகாருக்கும் தொடர்பு இல்லை என்பது தெரியவந்துள்ளது. நியூசவுத் வேல்ஸ் போலீசாரும் விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர்களது விசாரணை முடியும் வரை நாங்கள் எதுவும் சொல்ல முடியாது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.






