என் மலர்
விளையாட்டு
சென்னையில் பிப்ரவரி 18-ந்தேதி ஐபிஎல் 2021 சீசனுக்கான வீரர்கள் ஏலம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 2020-ம் ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மார்ச் மாதத்திற்குப் பதிலாக செப்டம்பர் மாதம் தொடங்கியது. 2021-ம் ஆண்டுக்கான சீசன் மார்ச் மாதம் இறுதியில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்கள் குறைவாக இருக்கும் நிலையில் வீரர்கள் ஏலம் நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்தது. ஆனால் வீரர்கள் ஏலம் நடைபெற்றே தீரும் என பிசிசிஐ உறுதியாக தெரிவித்தது.
அதன்படி ஜனவரி 20-ந்தேதிக்குள் வீரர்களை தக்கவைப்பது, வெளியேற்றுவது குறித்த விவரங்களை வௌயிட வேண்டும் என ஐபிஎல் நிர்வாகம் கேட்டுக்கொண்டது. 8 அணிகளும் விவரங்களை வெளியிட்டது.
அதன்பின் பிப்ரவரி 18-ந்தேதி வீரர்களுக்கான ஏலம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் எங்கு வைத்து நடைபெறும் என்பது அப்போது தெரிவிக்கப்படவில்லை.
இந்த நிலையில் சென்னையில் வீரர்கள் ஏலம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான சவுரவ் கங்குலிக்கு மீண்டும் நெஞ்சுவலி ஏற்பட்டதை தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொல்கத்தா:
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான சவுரவ் கங்குலி இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) தலைவராக உள்ளார்.
இந்நிலையில் 48 வயதான கங்குலிக்கு இன்று மீண்டும் நெஞ்சு வலி ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஏற்கனவே கடந்த 2-ம் தேதி சவுரவ் கங்குலிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ‘ஐசிசி பியேளர் ஆஃப் தி மன்த்’ விருதை அறிமுகம் செய்துள்ளது. சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியவர்களை கவுரவிக்க இந்த விருது எனத் தெரிவித்துள்ளது.
ஐசிசி ஆண்டுதோறும் சிறந்த வீரர்களை தேர்வு செய்து விருதுகள் வழங்கி கவுரவித்து வருகிறது. சில வீரர்கள் ஒரு மாதத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருப்பார்கள். அடுத்த மாதம் காயம், ஓய்வு போன்ற காரணங்களால் விளையாட முடியாத சூழ்நிலை ஏற்படும்.
இப்படிபட்ட நிலையில் ஐசிசி-யின் சிறந்த வீரர்கள் தேர்வு பட்டியலில் இடம் பிடிக்க முடியாத நிலை ஏற்படும். இதனால் மாதந்தோறும் சிறந்த வீரர்களுக்கு விருது வழங்க ஐசிசி முடிவு செய்துள்ளது. இதன்மூலம் இந்த மாதத்தில் யார் சிறந்த வீரர் என்பதை ரசிர்கள் தெரிந்து கொள்ள முடியும்.
கால்பந்து போன்ற விளையாட்டுக்களில் இதுபோன்ற பிளேயர் ஆப் தி மன்த் விருது வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ள நிலையில், இங்கிலாந்து வீரர்கள் சென்னை வந்தடைந்தனர்.
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. முதல் டெஸ்ட் பிப்ரவரி 5-ம்தேதி தொடங்குகிறது.
இங்கிலாந்து அணி இலங்கையில் சுற்றுப் பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இங்கிலாந்து அபார வெற்றி பெற்றது தொடரை 2-0 எனக் கைப்பற்றியது.

இந்த நிலையில் இங்கிலாந்து வீரர்கள் இன்று சென்னை வந்தடைந்தனர். சென்னை விமான நிலையம் வந்த அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
அதன்பிறகு ஓட்டலில் தனிமைப்படுத்தப்படுவார்கள். தனிமைப்படுத்திய காலம் முடிவடைந்த பின்னர் ஒன்றாக இணைந்து பயிற்சி மேற்கொள்வார்கள்.
அயர்லாந்துக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியிலும் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றதோடு, தொடரையும் 3-0 எனக் கைப்பற்றியது.
ஆப்கானிஸ்தான் - அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி அபு தாபியில் நேற்று நடைபெற்றது.
முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் 9 விக்கெட் இழப்பிற்கு 266 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் கேப்டன் அஷ்கர் ஆஃப்கன் 41 ரன்களும், ரஷித் கான் 48 ரன்களும் விளாசினர்.
பின்னர் 267 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் அயர்லாந்து களம் இறங்கியது. தொடக்க வீரர்கள் பால் ஸ்டிர்லிங் சிறப்பாக விளையாடி 118 ரன்கள் விளாசினார். என்றாலும் மற்ற பேட்ஸ்மேன்கள் சீரான இடைவெளியில் ஆட்டமிழக்க அயர்லாந்து 47.1 ஓவரில் 230 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. இதனால் ஆப்கானிஸ்தான் 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ரஷித் கான் 4 விக்கெட் வீழ்த்தினார். 48 ரன்களும், 4 விக்கெட்டும் வீழ்த்திய ரஷித் கான் ஆட்ட நாயகன் விருது பெற்றார். பால் ஸ்டிர்லிங் தொடர் நாயகன் விருதை வென்றார்.
ஏற்கனவே முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றிருந்ததால், இந்த வெற்றியின் மூலம் தொடரை 3-0 என ஆப்கானிஸ்தான் வென்றது.
பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டிருப்பது தனது 18 ஆண்டு கால உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம் என்று இந்திய கூடைப்பந்து வீராங்கனையான தமிழகத்தை சேர்ந்த அனிதா கூறியுள்ளார்.
சென்னை:
இந்திய கூடைப்பந்து வீராங்கனை தமிழகத்ைத ேசா்்ந்த பி.அனிதா, மத்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம ஸ்ரீ விருதுக்கு தேர்வாகியுள்ளார். இரண்டு குழந்தைகளின் தாயாரான அனிதா இந்திய பெண்கள் கூடைப்பந்து அணிக்காக 18 ஆண்டுகள் விளையாடியுள்ளார். இதில் இந்திய அணியின் கேப்டனாக 8 ஆண்டுகள் பணியாற்றி இருக்கிறார். ஆசிய கூடைப்பந்து சம்மேளன சாம்பியன்ஷிப்பில் தொடர்ந்து 9 முறை பங்கேற்ற ஒரே இந்திய வீராங்கனை என்ற சிறப்புக்கு சொந்தக்காரர் ஆவார். தேசிய கூடைப்பந்து சாம்பியன்ஷிப்பில் 30 பதக்கங்கள் கைப்பற்றி சாதனை படைத்துள்ளார். சென்னையில் வசித்து வந்தாலும் இவரது சொந்த ஊர் நெல்லை மாவட்டம் யாக்கோபுரம் ஆகும்.
பத்ம ஸ்ரீ விருது கிடைத்தது குறித்து 35 வயதான அனிதா கூறியதாவது:-
மத்திய அரசு எனக்கு பத்மஸ்ரீ விருது வழங்குவதாக அறிவித்திருப்பது ரொம்ப மகிழ்ச்சி அளிக்கிறது. எனது குடும்பத்தினரும் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளனர். இது போன்ற விருதை பெற வேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவு. அந்த கனவு இப்போது நனவாகியுள்ளது. 2012-ம் ஆண்டில் இருந்து நான் அர்ஜூனா விருதுக்கு விண்ணப்பித்து வருகிறேன். ஆனால் ஒவ்வொரு முறையும் கடைசி நேரத்தில் கிடைக்காமல் போய்விடும். அர்ஜூனா விருது பெரும்பாலும் தனிநபர் போட்டிகளில் சாதிப்பவர்களுக்கு வழங்கப்படுவதால் குழு போட்டியில் ஆடுபவர்களுக்கு வாய்ப்பு குறைவு என்று சொல்வார்கள். ஆனாலும் விருது கிடைக்கிறதோ இல்லையோ? நீ விண்ணப்பிப்பதை மட்டும் நிறுத்தக்கூடாது, தொடர்ந்து முயற்சி செய் என்று குடும்பத்தினர் ஊக்கப்படுத்துவார்கள்.
அதன் பிறகு ‘கூடைப்பந்து விளையாட்டில் நிறைய வெற்றிகளை குவித்து இருக்கிறாய். நீ ஏன் பத்மஸ்ரீ விருதுக்கு முயற்சிக்கக்கூடாது’ என்று சில நலம்விரும்பிகள் கூறினர். இதைத் தொடர்ந்து இரண்டு வருடங்களாக பத்மஸ்ரீ விருதுக்கு முயற்சித்தேன். தமிழக அரசின் பரிந்துரையோடு தற்போது இந்த விருது கிடைத்துள்ளது. கடந்த 18 ஆண்டுகால எனது உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம் இது. எனது உணர்வுகளை விவரிக்க வார்த்தைகளே இல்லை. ஒவ்வொரு முறையும் விருது கிடைக்காவிட்டாலும் தொடர்ந்து முயற்சி செய்தேன். அந்த விடா முயற்சிக்கு கடவுள் அளித்த பரிசு தான் இது.
இந்த விருது கிடைத்ததற்கு குடும்பத்தினர் அளித்த ஊக்கமும், ஆதரவும் தான் முக்கிய காரணம் என்று சொல்வேன். ஏனெனில் பெண்கள் விளையாட்டில் கால்பதித்து சாதிப்பது என்பது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. வெற்றிக்கனியை பறிக்க பல தடைகளை கடக்க வேண்டியது வரும். எல்லா வகையிலும் எனது குடும்பத்தினரும், பயிற்சியாளரும் பக்கபலமாக இருந்தனர். இந்த விருதை மறைந்த எனது தந்தைக்கு அர்ப்பணிக்கிறேன். இது அவரின் கனவும் தான்.
6-ம் வகுப்பில் இருந்து கூடைப்பந்து விளையாடி வருகிறேன். தற்போது ரெயில்வே அணிக்காக விளையாடுகிறேன். கூடைப்பந்து போட்டிக்காக எனது பங்களிப்பு எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். கிரிக்கெட் போன்று கூடைப்பந்து விளையாட்டையும் தொழில்முறை போட்டியாக கொண்டு வர வேண்டும். அதாவது ஐ.பி.எல். போன்று கூடைப்பந்திலும் லீக் வடிவிலான போட்டிகளை அதிக அளவில் நடத்த வேண்டும். அவ்வாறு செய்தால் நம் நாட்டில் கூடைப்பந்து விளையாட்டு இன்னும் வளர்ச்சி அடையும்.
இளம் வீராங்கனைகளுக்கு நான் சொல்ல விரும்புவது, அர்ப்பணிப்பு, விடா முயற்சியோடு அடம்பிடித்து செய்ய வேண்டும். அப்போது தான் இலக்கை அடைய முடியும். அது மட்டுமின்றி பெற்றோர் ஆதரவு மிகவும் அவசியம். என்னால் சாதிக்க முடியும் என்று பெற்றோரை சமாதானப்படுத்த வேண்டும். எனது குடும்பத்தினர் ஆதரவு இருந்ததால் தான் இன்னும் என்னால் தொடர்ந்து விளையாட முடிகிறது.
கூடைப்பந்து போட்டிக்கு பயிற்சியாளராவது, அகாடமி தொடங்கி இளம் வீராங்கனைகளுக்கு கற்றுக்கொடுப்பது எனது வருங்கால லட்சியமாகும்.
இவ்வாறு அனிதா கூறினார்.

முஷ்டாக் அலி கோப்பை கிரிக்ெகட்டில் இமாச்சலபிரதேசத்தை வீழ்த்தி தமிழக அணி அரைஇறுதிக்கு முன்னேறியது.
ஆமதாபாத்:
12-வது சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் லீக் முடிந்து கால்இறுதிசுற்று நேற்று தொடங்கியது. ஆமதாபாத்தில் உள்ள சர்தார் பட்டேல் ஸ்டேடியத்தில் நடந்த ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியன் கர்நாடகா, பஞ்சாப்புடன் மோதியது. இதில் முதலில் பேட் செய்த கர்நாடகா பஞ்சாப்பின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 17.2 ஓவர்களில் 87 ரன்னில் சுருண்டது. கேப்டன் கருண்நாயர் (12 ரன்), தேவ்தத் படிக்கல் (11 ரன்) உள்பட யாரும் ஜொலிக்கவில்லை. அதிகபட்சமாக அனிருத்தா ஜோஷி 27 ரன் எடுத்தார். பஞ்சாப் தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் சித்தார்த் கவுல் 3 விக்கெட்டும், சந்தீப் ஷர்மா, அர்ஷ்தீப் சிங், ரமன்தீப்சிங் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
தொடர்ந்து ஆடிய பஞ்சாப் அணி 12.4 ஓவர்களில் இலக்கை எட்டி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரைஇறுதிக்கு முன்னேறியது. சிம்ரன் சிங் 49 ரன்களும், கேப்டன் மன்தீப் சிங் 35 ரன்களும் விளாசி அவுட் ஆகாமல் இருந்தனர். கர்நாடகா பரிதாபமாக ெவளியேறியது.
இரவில் நடந்த மற்றொரு கால்இறுதி ஆட்டத்தில் தமிழக அணி, இமாச்சலபிரதேசத்தை சந்தித்தது. ‘டாஸ்’ ஜெயித்த தமிழ்நாடு கேப்டன் தினேஷ் கார்த்திக் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதன்படி முதலில் பேட் செய்த இமாச்சலபிரதேச அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 135 ரன்களுக்கு கட்டுப்படுத்தப்பட்டது. கேப்டன் ரிஷி தவான் 35 ரன்களும், அபிமன்யு ராணா 28 ரன்களும் எடுத்தனர். தமிழக வேகப்பந்து வீச்சாளர் சோனு யாதவ் 4 ஓவர்களில் ஒரு மெய்டனுடன் 14 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை சாய்த்து மிரட்டினார். சந்தீப் வாரியர் 2 விக்கெட்டும், சாய் கிஷோர், முகமது தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
பின்னர் 136 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய தமிழக அணி ஒரு கட்டத்தில் ஜெகதீசன் (7 ரன்), கேப்டன் தினேஷ் கார்த்திக் (2 ரன்) உள்பட 5 முன்னணி வீரர்களின் விக்கெட்டுகளை 66 ரன்னுக்குள் இழந்து தடுமாறியது.
இதன் பின்னர் பாபா அபராஜித்தும், ஷாரூக்கானும் இணைந்து அணியை நிமிர வைத்தனர். ஷாரூக்கான் அதிரடியாக ஆடி நெருக்கடியை குறைத்தார். இறுதியில் அபராஜித் பந்தை சிக்சருக்கு விரட்டி இலக்கை எட்ட வைத்தார். தமிழக அணி 17.5 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 141 ரன்கள் சேர்த்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை சுவைத்து அரைஇறுதிக்குள் நுழைந்தது. பாபா அபராஜித் 52 ரன்களுடனும் (45 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்), ஷாரூக்கான் 40 ரன்களுடனும் (19 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்) களத்தில் இருந்தனர்.
இதே மைதானத்தில் இன்று நடக்கும் கால்இறுதி ஆட்டங்களில் அரியானா-பரோடா (பகல் 12 மணி), ராஜஸ்தான்-பீகார் (இரவு 7 மணி) அணிகள் மோதுகின்றன.

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்டில் தென் ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்சில் 220 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.
கராச்சி:
தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட் மற்றும் 3 20 ஓவர் போட்டியில் விளையாடுகிறது.
தென்ஆப்பிரிக்கா-பாகிஸ்தான் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கராச்சியில் உள்ள தேசிய ஸ்டேடியத்தில் இன்று காலை 10.30 மணிக்கு தொடங்கியது.
டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா கேப்டன் குயின்டான் டி காக் முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் டீன் எல்கர் அரை சதமடித்து 52 ரன்னில் அவுட்டானார்.
ஜார்ஜ் லிண்டே 35 ரன்னும், டூ பிளசிஸ் 23 ரன்னும் எடுத்தனர். கடைசி கட்டத்தில் ரபாடா 21 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இறுதியில், தென் ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்சில் 220 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.
பாகிஸ்தான் சார்பில் யாசிர் ஷா 3 விக்கெட்டும், ஷஹீன் அப்ரிதி, நவ்மான் அலி ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து பாகிஸ்தான் அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. அந்த அணியின் முன்னணி வீரர்களை தென் ஆப்பிரிக்க பந்து வீச்சாளர்கள் வெளியேற்றி அதிர்ச்சி அளித்தனர்.
இம்ரான் பட் 9 ரன்னிலும், அபித் அலி 4 ரன்னிலும், பாபர் அசாம் 7 ரன்னிலும், ஷஹீன் அப்ரிதி ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். இதனால் 27 ரன்களை எடுப்பதற்குள் பாகிஸ்தான் 4 விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது.
இறுதியில், முதல் நாள் ஆட்ட முடிவில் பாகிஸ்தான் அணி 4 விக்கெட்டுக்கு 33 ரன்கள் எடுத்துள்ளது.
தென் ஆப்பிரிக்கா சார்பில் ரபாடா 2 விக்கெட்டும், நூர்ஜே, கேசவ் மகாராஜ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
இந்திய பெண்கள் கூடைப்பந்து அணியின் முன்னாள் கேப்டனும், தமிழகத்தை சேர்ந்த தலைசிறந்த வீராங்கனையுமான பி.அனிதா பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வாகி இருக்கிறார்.
புதுடெல்லி:
இந்த ஆண்டுக்கான பத்ம விருது பெறுபவர்களின் பட்டியலை மத்திய அரசு நேற்று வெளியிட்டது. இதில் பத்மஸ்ரீ விருதுக்கு 7 விளையாட்டு பிரபலங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்திய பெண்கள் கூடைப்பந்து அணியின் முன்னாள் கேப்டனும், தமிழகத்தை சேர்ந்த தலைசிறந்த வீராங்கனையுமான பி.அனிதா இந்த விருதுக்கு தேர்வாகி இருக்கிறார்.
சென்னையில் வசித்து வரும் 35 வயதான அனிதா தெற்கு ரெயில்வேயில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இதேபோல் முன்னணி டேபிள் டென்னிஸ் வீராங்கனை மவுமா தாஸ், தடகள வீராங்கனை சுதாசிங், மலையேறுதல் வீராங்கனை அன்சு ஜாம்சென்யா, மல்யுத்த வீரர் வீரேந்தர் சிங், மாற்று திறனாளி வீரர் கே.ஒய். வெங்கடேஷ், பி.டி. உஷாவின் முன்னாள் பயிற்சியாளர் மாதவன் நம்பியார் ஆகியோரும் பத்மஸ்ரீ விருதை பெறுகின்றனர்.

இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியிலும் இங்கிலாந்து அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியதுடன், ஒயிட்வாஷும் செய்தது.
இலங்கை- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் காலே மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது இலங்கை. மேத்யூஸ் சதம் அடிக்க இலங்கை அணி முதல் இன்னிங்சில் 381 ரன்கள் குவித்தது. ஜேம்ஸ் ஆண்டர்சன் 6 விக்கெட் வீழ்த்தினார்.
பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து ஜோ ரூட்டின் (186) அபார பேட்டிங்கால் 344 ரன்கள் சேர்த்தது. இலங்கை அணி தரப்பில் லசித் எம்புல்டேனியா 7 விக்கெட் சாய்த்தார்.
37 ரன்கள் முன்னிலையுடன் இலங்கை 2-வது இன்னிங்சை தொடங்கியது. இங்கிலாந்தின் சுழற்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 126 ரன்னில் சுருண்டது. இங்கிலாந்து அணி தரப்பில் டாம் பெஸ், ஜேக் லீச் தலா 4 விக்கெட்டும, ஜோ ரூட் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதனால் 163 ரன்கள் மட்டுமே முன்னிலைப் பெற்று இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 164 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
164 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களம் இறங்கியது. தொடக்க வீரர் ஜேக் கிராவ்லி 13 ரன்னிலு்ம, ஜானி பேர்ஸ்டோவ் 29 ரன்களிலும், ஜோ ரூட் 11 ரன்னிலும், டான் லாரன்ஸ் 2 ரன்னிலும் வெளியேறினர்.
இதனால் இங்கிலாந்து 89 ரன்னுக்குள் நான்கு விக்கெட்டுக்களை இழந்தது. ஐந்தாவது விக்கெட்டுக்கு டாம் சிப்லியுடன் ஜோஸ் பட்லர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பாக விளையாடி அணியை வெற்றி பெறச் செய்தது. டாம் சிப்லி ஆட்டமிழக்காமல் 56 ரன்களும், ஜோஸ் பட்லர் 46 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இங்கிலாந்து 43.3 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்தது.
ஏற்கனவே முதல் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றிருந்ததால், 2-வது போட்டியிலும் வெற்றி பெற்று இலங்கையை சொந்த மண்ணிலேயே ஒயிட் வாஷ் செய்துள்ளது.
இதற்கு முன் இங்கிலாந்து அணி இலங்கையில் சுற்றுப் பயணம் செய்து விளையாடும்போது 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-0 எனக் கைப்பற்றியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஐசிசியின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி ஜூன் 10-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை அறிமுகப்படுத்தியது. டெஸ்ட் போட்டியில் விளையாடும் 8 முன்னணி அணிகள் 2019-ம் ஆண்டு முதல் 2021 வரை விளையாடும் டெஸ்ட் போட்டிகளின் வெற்றிகள் அடிப்படையில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டியில் சாம்பியன் கோப்பைக்காக பலப்பரீட்சை நடத்தும்.
இறுதிப் போட்டி இங்கிலந்து லண்டன் லார்ட்ஸ் மைதாத்தில் ஜூன் 10-ந்தேதி முதல் ஜூன் 14-ந்தேதி வரை நடைபெறும் என ஏற்கனவே ஐசிசி அறிவித்திருந்தது.
தற்போதைய நிலையில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் முதல் இரண்டு இடங்களை பிடித்துள்ளது. இந்தியா இங்கிலாந்தையும், ஆஸ்திரேலியா தென்ஆப்பிரிக்காவையும் எதிர்த்து விளையாட இருக்கிறது.
இந்தத் தொடருக்குப்பின் இந்தியா எப்படியும் முதல் இரண்டு இடங்களில் ஒன்றை பிடிக்கும். இந்தியாவில் ஐபிஎல் போட்டி ஏப்ரல் கடைசி வாரத்தில் தொடங்கப்பட்டு ஜூன் முதல் வாரத்தில் முடிவடைய வாய்ப்புள்ளது.
இங்கிலாந்தில் தற்போது கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகமாக இருப்பதால் கோரன்டைன் காலம் கடைபிடிக்க வேண்டும். இந்திய வீரர்கள் ஐபிஎல் தொடரை முடித்துக்கொண்டு கோரன்னைடைன் காலத்தை முடிக்க வேண்டும். ஆகையால் ஜூன் மாதம் 15-ந்தேதிக்குப்பின் இறுதிப் போட்டியை வைத்தால்தான் சரியாக இருக்கும்.
இதை கணக்கில் கொண்டு ஐசிசி, ஜூன் 18-ந்தேதி முதல் ஜூன் 22-ந்தேதிக்கு போட்டியை ஒத்திவைத்துள்ளது. ஜூன் 23-ந்தேதியை ரிசர்வ் டே-வாக அறிவித்துள்ளது.
ஆஸ்திரேலியா தொடரில் விளையாடிய வீரர்களுக்கே அனைத்து பாராட்டுக்களும், தனக்கு தேவையில்லாதது என ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-1 என வென்றது. குறிப்பாக பிரிஸ்பேனில் நடைபெற்ற 4-வது டெஸ்டில் இளம் வீரர்களின் அபார செயல்பாட்டால் இந்தியா வெற்றி பெற்றது.
முகமது சிராஜ் ஐந்து விக்கெட் வீழ்த்த ஷர்துல் தாகூர், நடராஜன், வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட் எனவும் ஷர்துல் தாகூர், வாஷிங்டன் சுந்தர், ஷுப்மான் கில், ரிஷப் பண்ட் (நாட்அவுட்) அரைசதம் என அசத்தினர்.
இளம் வீரர்கள் ஜொலிக்க 2016-ம் ஆண்டில் இருந்து 2019 வரை 19 வயதிற்கு உட்பட்ட இந்திய அணிக்கு, இந்தியா ‘ஏ’ அணிக்கு தலைமை பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட்டுதான் காரணம் என முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் விமர்சகர்கள் பாராட்டி வருகின்றனர்.
ஆனால், தான் தேவையில்லாத பாராட்டுக்களை பெற்றுக் கொண்டிருக்கிறேன் என ராகுல் டிராவிட் தன்னடக்கத்துடன் தெரிவித்துள்ளார்.
மேலும், இதுகுறித்து ராகுல் டிராவிட் கூறுகையில் ‘‘தேவையில்லாத பாராட்டுக்கள். அனைத்து மகிழ்ச்சிக்கும், புகழுக்கும் இளைய வீரர்கள் தகுதியானர்கள்’’ என்றார்.