search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐபிஎல் ஏலம் (கோப்புப்படம்)
    X
    ஐபிஎல் ஏலம் (கோப்புப்படம்)

    ஐபிஎல் 2021 வீரர்கள் ஏலம் பிப்ரவரி 18-ந்தேதி சென்னையில் நடைபெறும் என அறிவிப்பு

    சென்னையில் பிப்ரவரி 18-ந்தேதி ஐபிஎல் 2021 சீசனுக்கான வீரர்கள் ஏலம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 2020-ம் ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மார்ச் மாதத்திற்குப் பதிலாக செப்டம்பர் மாதம் தொடங்கியது. 2021-ம் ஆண்டுக்கான சீசன் மார்ச் மாதம் இறுதியில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    நாட்கள் குறைவாக இருக்கும் நிலையில் வீரர்கள் ஏலம் நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்தது. ஆனால் வீரர்கள் ஏலம் நடைபெற்றே தீரும் என பிசிசிஐ உறுதியாக தெரிவித்தது.

    அதன்படி ஜனவரி 20-ந்தேதிக்குள் வீரர்களை தக்கவைப்பது, வெளியேற்றுவது குறித்த விவரங்களை வௌயிட வேண்டும் என ஐபிஎல் நிர்வாகம் கேட்டுக்கொண்டது. 8 அணிகளும் விவரங்களை வெளியிட்டது.

    அதன்பின் பிப்ரவரி 18-ந்தேதி வீரர்களுக்கான ஏலம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் எங்கு வைத்து நடைபெறும் என்பது அப்போது தெரிவிக்கப்படவில்லை.

    இந்த நிலையில் சென்னையில் வீரர்கள் ஏலம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×