என் மலர்tooltip icon

    விளையாட்டு

    ஷான்மார்ஷ், கோரி ஆண்டர்சன், மார்கல் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் ஐ.பி.எல். போட்டிக்கான ஏலத்தின் இறுதிப்பட்டியல் வெளியிடப்பட்டது.

    சென்னை:

    14-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஏப்ரல் முதல் மே மாதம் வரை இந்தியாவில் நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.

    இப்போட்டிக்கான வீரர்கள் ஏலம் வருகிற 18-ந் தேதி (வியாழக்கிழமை) மாலை 3 மணிக்கு சென்னையில் நடக்கிறது.

    இந்த ஏலப்பட்டியலில் 814 இந்தியர்கள், 283 வெளிநாட்டினர். ஆக மொத்தம் 1,097 வீரர்கள் பதிவு செய்து இருந்தனர். மேலும் 17 வீரர்கள் பதிவு செய்ததால் மொத்தம் எண்ணிக்கை 1,114 ஆக உயர்ந்தது.

    இந்த நிலையில் ஐ.பி.எல். போட்டிக்கான ஏலத்தின் இறுதிப்பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் 292 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

    164 இந்திய வீரர்களும், 125 வெளிநாட்டு வீரர்களும் மூன்று அசோசியேட் நாட்டு அணி வீரர்களும் ஏலம் விடப்படுகிறார்கள்.

    புதிதாக பதிவு செய்யப்பட்ட 17 பேரில் ஷான்மார்ஷ் (ஆஸ்திரேலியா), கோரி ஆண்டர்சன் (நியூசிலாந்து), மார்னே மார்கல் (தென் ஆப்பிரிக்கா) ஆகியோர் இறுதி பட்டியலில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியா வேகப்பந்து வீச்சாளர் ஜேக் வில்தர் மூத் இடம் பிடித்துள்ளார்.

    இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் தனது தடை காலம் முடிந்து போட்டிகளில் விளையாடி வருகிறார். ஆனால் அவரது பெயர் ஏலத்துக்காக இறுதிப் பட்டியலில் இடம் பெறவில்லை.

    கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் மகன் அர்ஜூன் தெண்டுல்கர் ஏலப்பட்டியலில் உள்ளார்.

    அதேபோல் இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் சையத் கிர்மானியின் மகன் சாகித் கிர்மானி இடம் பெற்று இருக்கிறார்.

    தங்களது அணிகளால் கழட்டி விடப்பட்ட மேக்ஸ் வெல், ஸ்டீவ் சுமித் (ஆஸ்திரேலியா), காலின் இங்கிராம் (தென் ஆப்பிரிக்கா), மார்க்வுட், மொய்ன்அலி, சாம் பில்லிங்ஸ், ஜேசன் ராய், பிளான் கட் (இங்கிலாந்து), சகீப்-அல்-ஹசன் (வங்காள தேசம்) மற்றும் இந்தியாவை சேர்ந்த கேதர் ஜாதவ், ஹர்பஜன் சிங் ஆகிய 11 வீரர்களுக்கு அடிப்படை விலையாக ரூ.2 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    சிறந்த அதிரடி வீரரான மேக்ஸ்வெல்லை பஞ்சாப் அணியும், ஸ்டீவ் சுமித்தை ராஜஸ்தான் அணியும் கை கழுவியது. அவர்கள் ஏலத்தில் அதிக விலைக்கு போகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அலெக்ஸ் கேரி, முஜுபுர் ரகுமான், டாம் கரண், டேவிட் மலன் உள்ளிட்ட வீரர்களுக்கு ரூ.1.5 கோடியும், விகாரி உள்ளிட்ட வீரர்களுக்கு ரூ.1 கோடியும் அடிப்படை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    இறுதிப் பட்டியலில் 292 வீரர்கள் இடம்பெற்று இருந்தாலும் இருந்தாலும், 61 வீரர்கள்தான் ஏலம் எடுக்கப்படுவார்கள். இதற்காக 8 அணிகளும் 196.6 கோடியை செலவழிக்க தயார் நிலையில் உள்ளது.

    ஏற்கனவே 8 அணிகளும் 139 வீரர்களை தக்க வைத்துக் கொண்டுள்ளது. இதற்காக ரூ.483.39 கோடியை செலவழித்து உள்ளது. 

    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் செரீனா மற்றும் முகுருஜா 4-வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

    மெல்போர்ன்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் மெல்போர்ன் நகரில் நடந்து வருகிறது.

    இன்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் 23 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவான செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா)- அனஸ்தசியா பொடபோவா (ரஷியா) மோதினர்.

    இதில் செரீனா 7-6 (7-5), 6-2 என்ற செட் கணக்கில் வென்று 4-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

    14-ம் நிலை வீராங்கனையான ஸ்பெயினின் முகுருஜா 6-1, 6-1 என்ற நேர்செட் கணக்கில் ஜரினா தியாசை (கஜகஸ்தான்) தோறகடித்து 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்ற ஆட்டங்களில் சபாலென்சா (பெலாரஸ்), சு-வெய் (தைவான்) ஆகியோர் வென்றனர்.

    இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நாளை தொடங்குகிறது.

    சென்னை;

    இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

    இரு அணிகள் இடையேயான 4 டெஸ்ட் போட்டி தொடரில் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடந்த முதல் டெஸ்டில் இங்கிலாந்து 227 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் அந்த அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

    இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி சேப் பாக்கம் மைதானத்தில் நாளை (சனிக்கிழமை) தொடங்குகிறது.

    முதல் டெஸ்டில் இங்கிலாந்து வீரர்கள் ஆதிக்கம் செலுத்தினார்கள். இதனால் இந்தியா மோசமான தோல்வியை தழுவியது. இதற்கு இந்தியா 2-வது டெஸ்டில் பதிலடி கொடுக்குமா ? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.

    ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேற 2 டெஸ்டில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடி விராட் கோலி அணிக்கு இருக்கிறது. 3 வது டெஸ்ட் பகல் இரவாக நடைபெறுவதால் இந்த டெஸ்டில் வெற்றி பெறுவது அவசியமானதாகும். இங்கிலாந்தை பழி தீர்த்து தொடரை சமன் செய்யும் ஆர்வத்தில் இந்தியா உள்ளது

    சொந்த மண்ணில் 4 ஆண்டுகளுக்கு பிறகும், சென்னையில் 21 ஆண்டுகளுக்கு பிறகும் இந்திய அணி தோற்றதால் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். பேட்டிங்கும், பந்துவீச்சும் மிகவும் மோசமாக இருந்தது.

    இதனால் இந்திய அணியில் மாற்றங்கள் செய்யப்படும். முழங்காலில் ஏற்பட்ட காயத்தில் இருந்து அக்‌ஷர் படேல் குணமடைந்துள்ளார்.

    இதையடுத்து அவர் 2-வது டெஸ்ட் போட்டிக்கான தேர்வில் இடம் பெற்றுள்ளார் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் உறுதி செய்துள்ளது. முதல் டெஸ்டில் அணியில் சேர்க்கப்பட்ட ‌ஷபாஸ் நதீம், ராகுல் சாகர் ஆகியோர் திரும்ப பெறப்பட்டுள்ளனர். இதனால் நளைய டெஸ்டில் அக்‌ஷர் படேல் விளையாடுவார்.

    வாஷிங்டன் சுந்தர் விக்கெட்டுகளை கைப்பற்றாவிட்டாலும் பேட்டிங்கில் தனது திறமையை வெளிப்படுத்தினார். இதனால் அவருக்கு இன்னும் ஒரு வாய்ப்பு வழங்கப்படலாம். ஒருவேளை அவர் நீக்கப்பட்டால் குல்தீப் யாதவ் தேர்வு செய்யப்படுவார்.

    சுழற்பந்தில் அஸ்வின் ஒருவரே நேர்த்தியாக பந்து வீசுகிறார். அவர் கடந்த டெஸ்டில் 9 விக்கெட்டுகள் வீழ்த்தினார். வேகப்பந்தில் மாற்றம் இருக்காது. பும்ராவும், இஷாந்த் சர்மாவும் தொடர்ந்து இடம்பெறுவார்கள்.

    மெல்போர்ன் டெஸ்டில் சதம் அடித்த பிறகு ரகானே இதுவரை நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இதேபோல ரோகித் சர்மா கடந்த 3 டெஸ்டிலும் சேர்த்து 147 ரன்களே எடுத்துள்ளார். இதனால் இருவரும் சிறப்பாக ஆட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

    கேப்டன் விராட் கோலி, புஜாரா, சுப்மன்கில் , ரி‌ஷப்பண்ட் ஆகியோர் மிகப்பெரிய ஆட்டத்தை வெளிப்படுத்தினால் தான் முதல் இன்னிங்சில் அதிக அளவில் ரன்களை குவிக்க முடியும்.

    இந்த டெஸ்டிலும் டாஸ் முக்கிய பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2 வது டெஸ்டில் ஆடுகளம் மாற்றி அமைக்கப்படுகிறது.

    இங்கிலாந்து அணி பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் வலுவாக இருக்கிறது. கேப்டன் ஜோ ரூட் அந்த அணியின் பேட்டிங்கில் முதுகெலும்பாக இருக்கிறார்.

    அவர் கடந்த 3 டெஸ்டிலும் இரண்டு இரட்டை சதம் உள்பட 3 சதம் அடித்து முத்திரை பதித்து உள்ளார். முதல் டெஸ்டில் ஜோ ரூட் மொத்தம் 258 ரன்கள் குவித்தார்.அவர் தனது ஆதிக்கத்தை நீட்டித்துக் கொள்ளும் ஆர்வத்தில் உள்ளார். இந்திய பவுலர்களுக்கு அவர் தொடர்ந்து சவாலாக விளங்குவார்.

    இதுதவிர பென் ஸ்டோக்ஸ், டாம் சிப்லி ஆகியோரும் பேட்டிங்கில் நல்ல நிலையில் உள்ளனர். விக்கெட் கீப்பர் பட்லருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு உள்ளதால் பென் போக்ஸ் இடம்பெறுகிறார்.

    முன்னணி வேகப்பந்து வீரரான ஜோப்ரா ஆர்ச்சர் காயம் காரணமாக நாளைய டெஸ்டில் ஆடவில்லை. அவருக்கு பதிலாக ஸ்டூவர்ட் பிராட் அல்லது கிறிஸ் வோக்ஸ் இடம்பெறலாம். ஆண்டர்சன், டாம் பெஸ், ஜேக் லீச் ஆகியோர் பந்து வீச்சில் தாக்கத்தை ஏற்படுத்துவார்கள்.

    இரு அணிகளும் மோதிய 123 டெஸ்டில் இந்தியா 26ல், இங்கிலாந்து 48ல் வெற்றி பெற்றுள்ளன.49 டெஸ்ட் டிரா ஆனது.

    நாளைய டெஸ்ட் போட்டி காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவி‌ஷனில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் 2-வது சுற்றில் நடப்பு சாம்பியனான அமெரிக்காவின் சோபியா கெனின் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
    மெல்போர்ன்:

    ‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் நடந்து வருகிறது. இதில் 4-வது நாளான நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியனும், உலக தரவரிசையில் 4-வது இடத்தில் இருப்பவருமான அமெரிக்க வீராங்கனை சோபியா கெனின், 65-ம் நிலை வீராங்கனையான கயா கனேபியை (எஸ்தோனியா) சந்தித்தார்.

    சோபியா கெனின்

    64 நிமிடம் நடந்த இந்த ஆட்டத்தில் சோபியா கெனின் 3-6, 2-6 என்ற நேர்செட்டில் கனேபியிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். ஆஸ்திரேலிய ஓபனில் நடப்பு சாம்பியன் வீராங்கனை 3-வது சுற்றுக்கு முன்னேற முடியாமல் வெளியேறுவது கடந்த 51 ஆண்டுகளில் இது 3-வது நிகழ்வாகும். தோல்வி அடைந்த சோபியா கெனின் கண்ணீர் மல்க கூறுகையில் ‘நான் நெருக்கடியை சிறப்பாக கையாளவில்லை என்பது எனக்கு தெரியும். இதுபோன்ற அனுபவத்தை எதிர்கொண்டது கிடையாது. அத்துடன் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் முழு தகுதியுடன் இல்லை என்று நினைக்கிறேன்’ என்றார்.

    மற்றொரு ஆட்டத்தில் நம்பர் ஒன் நட்சத்திரமான ஆஷ்லி பார்ட்டி (ஆஸ்திரேலியா) 6-1, 7-6 (9-7) என்ற நேர்செட்டில் வைல்டு கார்டு வாய்ப்பு பெற்ற சக நாட்டு வீராங்கனை டாரியா காவ்ரிலோவாவை வீழ்த்தி 3-வது சுற்றுக்குள் நுழைந்தார். முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான செக்குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா 7-5, 6-2 என்ற நேர்செட்டில் 40-ம் நிலை வீராங்கனையான டேனியலி காலின்சை (அமெரிக்கா) விரட்டியடித்தார்.

    மற்ற ஆட்டங்களில் பெலின்டா பென்சிக் (சுவிட்சர்லாந்து), எலினா ஸ்விடோலினா (உக்ரைன்), கோன்டாவிட் (எஸ்தோனியா), எலிசி மெர்டென்ஸ் (பெல்ஜியம்) ஆகியோர் வெற்றியை ருசித்தனர்.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் 20 கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை அறுவடை செய்தவரும், 2-வது இடத்தில் இருப்பவருமான ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் 6-1, 6-4, 6-2 என்ற நேர்செட்டில் அமெரிக்காவின் மைக்கேல் மோவை துவம்சம் செய்து 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    இந்த ஆட்டத்தின் போது பெண் ரசிகை ஒருவர் நடாலை நோக்கி நடுவிரலை உயர்த்தி ஆபாச சைகை காட்டியபடி சத்தமிட்டார். மைதான பாதுகாவலர்கள் அந்த ரசிகையை உடனடியாக வெளியேற்றினர்.

    தரவரிசையில் 6-வது இடத்தில் இருக்கும் சிட்சிபாஸ் (கிரீஸ்) 6-7 (5-7), 6-4, 6-1, 6-7 (5-7), 6-4 என்ற செட் கணக்கில் ‘வைல்டு கார்டு’ மூலம் வாய்ப்பு பெற்ற ஆஸ்திரேலியாவின் கோக்கினாகிஸ்சை போராடி சாய்த்தார். இந்த ஆட்டம் 4 மணி 32 நிமிடம் நீடித்தது.

    இதேபோல் மெட்விடேவ் (ரஷியா), பெரேட்டினி (இத்தாலி), ஆந்த்ரே ரூப்லெவ் (ரஷியா), அலெக்ஸ் டி மினார் (ஆஸ்திரேலியா), பாபி போக்னினி (இத்தாலி), கச்சனோவ் (ரஷியா) ஆகியோர் வெற்றிகரமாக 2-வது சுற்றை கடந்தனர்.

    ஆண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் திவிஜ் சரண் (இந்தியா)-இகோர் ஜிலினா (சுலோவக்கியா) இணை 1-6, 4-6 என்ற நேர்செட்டில் ஜெர்மனியின் யானிக் ஹன்மான்-கெவின் காவிட்ஸ் ஜோடியிடம் தோல்வி கண்டு வெளியேறியது.

    இதேபோல் பெண்கள் இரட்டையர் பிரிவில் அங்கிதா ரெய்னா (இந்தியா)-மிஹாலா புஜார்னிஸ்கு (ருமேனியா) ஜோடி 3-6, 0-6 என்ற நேர்செட்டில் ஆஸ்திரேலியாவின் பெலின்டா உல்காக்-ஆலிவியா காடெக்கி இணையிடம் ‘சரண்’ அடைந்தது. முதல்முறையாக கிராண்ட்ஸ்லாம் போட்டியில் கால்பதித்த அங்கிதா ரெய்னாவின் கனவு முதல் சுற்றுடன் தகர்ந்தது.
    இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் இருந்து காயம் காரணமாக ஜோப்ரா ஆர்ச்சர் விலகியுள்ளார் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
    சென்னை:

    இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் பயிற்சியின்போது ஏற்பட்ட காயம் காரணமாக இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியுள்ளார் என் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சருக்கு பயிற்சியின் போது காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவரது வலது முழங்கையில் ஊசி போடப்பட்டுள்ளதால் சென்னையில் நடைபெறும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அவர் பங்கேற்க மாட்டார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என பதிவிட்டுள்ளது.
    லாகூரில் நடபெற்ற முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் தென்ஆப்பிரிக்காவை பரபரப்பான ஆட்டத்தில் 3 ரன்னில் வீழ்த்தியது பாகிஸ்தான்.
    பாகிஸ்தான் - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி லாகூரில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் ரிஸ்வான் சதம் (104 ரன், 64 பந்து, 6 பவுட்டரி 7 சிக்சர்) விளாச 6 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் சேர்த்தது.

    பின்னர் 170 ரன்கள் அடித்தல் வெற்றி என்ற இலக்குடன் தென்ஆப்பிரிக்கா களம் இறங்கியது. தொடக்க வீரர்களான மாலன், ரீஸா ஹென்ரிக்ஸ் ஆகியோர் அபாரனமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். மாலன் 44 ரன்களிலும், ஹென்ரிக்ஸ் 54 ரன்களிலும் ஆட்டமிழந்தார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 6.5 ஓவரில் 53 ரன்கள் சேர்த்தது.

    அதன்பின் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். கடைசி ஓவரில் 19 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் தென்ஆப்பிரிக்கா அணியால் 15 ரன்களே அடிக்க முடிந்தது. இதனால் பாகிஸ்தான் 3 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் பாகிஸ்தான் 1-0 என முன்னிலையில் உள்ளது. 2-வது போட்டி 13-ந்தேதியும், 3-வது மற்றும் கடைசி போட்டி 14-ந்தேதியும் நடக்கிறது.
    சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளரை துவம்சம் செய்த ரிஷப் பண்ட், அவரது சிந்தனையை மாற்றும் அளவிற்கு செய்து விட்டார்.
    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் இங்கிலாந்து 227 ரன்கள் வித்தியாசதத்தில் அபார வெற்றி பெற்றது.

    முதல் இன்னிங்சில் ரிஷப் பண்ட் அதிரடியாக விளையாடினார். இடது கை சுழற்பந்து வீச்சாளர் ஜேக் லீச்சை பந்து வீச்சை கிழிகிழி என கிழித்துவிட்டார்.

    8 ஓவர்களில் 77 ரன்கள் விட்டுக்கொடுத்தார். ஆனால் 2-வது இன்னிங்சில் ஜேக் லீச் ரோகித் சர்மா, புஜாரா விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

    ரிஷப் பண்ட் இவரது பந்து வீச்சை துவம்சம் செய்தது குறித்து கூறுகையில் ‘‘8 ஓவரில் 77 ரன்கள் விட்டுக்கொடுத்த பிறகு, நான் கிரிக்கெட் விளையாட விரும்புகிறேனா, என்பது எனக்கே உறுதியாக தெரியவில்லை என் நிலையில் இருந்தேன். ஆகவே, அந்த பேரதிர்ச்சியில் இருந்து மீண்டு, அணியின் வெற்றிக்கு பங்களிப்பை கொடுத்ததால் மிகவும் பெருமை அடைகிறேன்’’ என்றார்.
    வங்காளதேச அணிக்கெதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் முதல்நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 223 ரன்கள் எடுத்துள்ளது.
    வங்காளதேசம் - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் டாக்காவில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் ஓரளவிற்கு தாக்குப்பிடித்து விளையாடினர். கிரேக் பிராத்வைட் 47 ரன்களும், ஜான் கேம்ப்பெல் 36 ரன்களும் அடித்தனர்.

    அடுத்து வந்த மோஸ்லே 7 ரன்னிலும், கைல் மேயர்ஸ் 5 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். போனர் அரைசதம் அடித்தார். அவர் முதல் நாள் ஆட்டம் முடியும் வரை ஆட்டமிழக்காமல் இருக்க வெஸ்ட் இண்டீஸ் முதல் நாள்  ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 223 ரன்கள் எடுத்துள்ளது. ஜெர்மைன் பிளாக்வுட் 28 ரன்னில் ஆட்டமிழக்க விக்கெட் கீப்பர் சில்வா 22 ரன்னுடன் களத்தில் உள்ளார்.

    வங்காளதேச அணி சார்பில் அபு ஜாயத், தைஜுல் இஸ்லாம் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
    இந்தியாவுக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட இருக்கும் 16 பேர் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
    இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடர் முடிவடைந்த பின், ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதற்கான 16 பேர் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

    இங்கிலாந்து அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. மோர்கன் (கேப்டன்), 2. மொயீன் அலி, 3. ஜாஃப்ரா ஆர்சர், 4. பேர்ஸ்டோவ், 5. சாம் பில்லிங்ஸ், 6. ஜோஸ் பட்லர், 7. சாம் குர்ரான், 8.  டாம் குர்ரான், 9. கிறிஸ் ஜோர்டான், 10. லியாம் லிவிங்ஸ்டன், 11. தாவித் மலன், 12. அடில் ரஷித், 13. ஜேசன் ராய், 14. பென் ஸ்டோக்ஸ், 15. ரீஸ் டாப்லே. 16. மார்க் வுட்.
    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் நடப்பு சாம்பியனான அமெரிக்காவை சேர்ந்த சோபியா கெனின் அதிர்ச்சிகரமாக தோல்வி அடைந்தார்.

    மெல்போர்ன்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது.

    உலகின் முதல்நிலை வீராங்கனையான ஆஸ்லே பார்டி (ஆஸ்திரேலியா) 2-வது சுற்றில் சக நாட்டை சேர்ந்த கவ்ரிலோவாவை எதிர்கொண்டார். இதில் ஆஸ்லே பார்டி 6-1, 7-6 (9-7) என்ற நேர் செட் கணக்கில் வென்று 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

    மற்றொரு ஆட்டத்தில் 6-வது வரிசையில் உள்ள கரோலினா பிரிஸ்கோவா (செக் குடியரசு) 7-5, 6-2 என்ற கணக்கில் அமெரிக்காவை டேனிலி கோலின்சை வீழ்த்தினார்.

    மற்றொரு ஆட்டத்தில் கனடாவை சேர்ந்த 11-ம் நிலை வீராங்கனையான பெலிண்டா பென்சிக் 7-5, 2-6, 6-4 என்ற செட் கணக்கில் ரஷியாவை சேர்ந்த குஸ்னெட் சோவாவை தோற்கடித்தார்.

    18-வது வரிசையில் உள்ள மெர்ட்டன்ஸ் (பெல்ஜியம்) 7-6 (10-8), 6-1 என்ற கணக்கில் சீனாவை சேர்ந்த லின்ஜூவை வீழ்த்தி 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

    உலகின் 4-ம் நிலை வீராங்கனையும், நடப்பு சாம்பியனுமான சோபியா கெனின் (அமெரிக்கா) 2-வது சுற்றில் அதிர்ஷ்டம் இல்லாமல் தோற்றார்.

    அவர் எஸ்தோனியா நாட்டை சேர்ந்த கனேபியிடம், 3-6, 2-6 என்ற கணக்கில் தோற்று வெளியேறினார்.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஆந்த்ரே ரூப்லே (ரஷியா) 6-4, 6-4, 7-6, (10-8) என்ற கணக்கில் பிரேசிலை சேர்ந்த டியாகோவை வீழ்த்தி 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் பேட்டிங் ஆலோசகராக இந்திய முன்னாள் வீரர் சஞ்சய் பாங்கர் நியமிக்கப்பட்டு உள்ளார்.
    பெங்களூரு, 

    ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் பேட்டிங் ஆலோசகராக இந்திய முன்னாள் வீரர் சஞ்சய் பாங்கர் நியமிக்கப்பட்டு உள்ளார். ஏற்கனவே அந்த அணியின் பயிற்சி குழுவில் அங்கம் வகிக்கும் மைக் ஹெஸ்சன் (அணி இயக்குனர்), சைமன் கேடிச் (தலைமை பயிற்சியாளர்), ஸ்ரீதரன் ஸ்ரீராம் (பேட்டிங் மற்றும் சுழற்பந்துவீச்சு பயிற்சியாளர்), ஆடம் கிரிப்பித் (பந்து வீச்சு பயிற்சியாளர்), ஷங்கர் பாசு (உடற்தகுதி பயிற்சியாளர்) ஆகியோருடன் இணைந்து பணியாற்றுவார். 5 ஆண்டுகள் இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளராக செயல்பட்டு உள்ள 48 வயதான சஞ்சய் பாங்கர், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் தலைமை பயிற்சியாளராகவும் இருந்துள்ளார்.

    இந்தியா-இங்கிலாந்து மோதும் 2-வது டெஸ்ட் போட்டிக்கான சென்னை சேப்பாக்கம் ஆடுகளம் சுழலுக்கு அதிகமாக ஒத்துழைக்கும் வகையில் அமைக்கப்படுகிறது.
    சென்னை:

    இந்தியாவுக்கு வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் சென்னை சேப்பாக்கத்தில் நடந்த முதலாவது டெஸ்டில் இங்கிலாந்து 227 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை தோற்கடித்து தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி இதே சேப்பாக்கத்தில் நாளை மறுதினம் (சனிக்கிழமை) தொடங்குகிறது.

    இந்த போட்டிக்கான இந்திய அணியில் நிச்சயம் ஒரு மாற்றம் இருக்கும். ஆல்-ரவுண்டரும், சுழற்பந்து வீச்சாளருமான அக் ஷர் பட்டேல் லேசான கால்முட்டி காயத்தால் அவதிப்பட்டதால் கடைசி நேரத்தில் முதலாவது டெஸ்டில் சேர்க்க முடியாமல் போனது. அவருக்கு பதிலாக இடம் பெற்ற சுழற்பந்து வீச்சாளர் ஷபாஸ் நதீம் ரன்களை வாரி வழங்கினார். எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் அவரது பந்து வீச்சு இல்லை என்று இந்திய கேப்டன் விராட் கோலி வெளிப்படையாகவே விமர்சித்தார். இதனால் இப்போது உடல்தகுதியை எட்டி பயிற்சியில் ஈடுபட்டு வரும் அக் ஷர் பட்டேல் 2-வது டெஸ்டில் களம் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வாஷிங்டன் சுந்தரும் பவுலிங்கில் அதிக ரன்களை விட்டுக்கொடுத்தாலும் முதல் இன்னிங்சில் பேட்டிங்கில் அசத்தியதால் இன்னொரு வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிகிறது. முதலாவது டெஸ்டில் ஜோப்ரா ஆர்ச்சர் வீசிய ‘ஷாட்பிட்ச்’ பந்து வீச்சில் கையில் காயமடைந்த அஸ்வினுக்கு அந்த காயம் பயப்படும்படி இல்லை என்பது தெரியவந்துள்ளது. இதனால் அணி நிர்வாகம் நிம்மதிபெருமூச்சு விட்டுள்ளது.

    முதலாவது டெஸ்டில் தொடக்கத்தில் ஆடுகளம் பேட்டிங்குக்கு சொர்க்கமாக திகழ்ந்தது. இதனால் ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த இங்கிலாந்து 578 ரன்கள் குவித்து விட்டது. கடைசி இரு நாட்களில் தான் சுழற்பந்து வீச்சு எடுபட்டது. அதற்குள் இந்திய அணியின் கதையே முடிந்து போனது.

    இந்த டெஸ்டுக்கு அருகில் உள்ள மற்றொரு ஆடுகளம் பயன்படுத்தப்படுகிறது. பந்து இன்னும் அதிகமாக சுழன்று திரும்பும் வகையில் புதிய ஆடுகளத்தின் தயாரிப்பு இருக்கும் என்று தெரிகிறது. அதாவது வரும் நாட்களில் ஆடுகளத்தில் தண்ணீர் விடுவதை நிறுத்தி விட்டால், அதன் பிறகு ஆடுகளம் வெயிலில் நன்கு காய்ந்து உலர்ந்து விடும். அவ்வாறான சூழலில் ஆடுகளத்தில் சீக்கிரமாக வெடிப்பு ஏற்பட்டு சுழற்பந்து எகிறத் தொடங்கி விடும். முதல் நாளில் இருந்தே ஓரளவு சுழற்பந்து வீச்சுக்கு ஒத்துழைத்தால் அதன் பிறகு ‘டாஸ்’ முக்கிய பங்கு வகிக்காது.

    ×