search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முகுருஜா  -  செரீனா
    X
    முகுருஜா - செரீனா

    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: செரீனா, முகுருஜா 4-வது சுற்றுக்கு தகுதி

    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் செரீனா மற்றும் முகுருஜா 4-வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

    மெல்போர்ன்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் மெல்போர்ன் நகரில் நடந்து வருகிறது.

    இன்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் 23 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவான செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா)- அனஸ்தசியா பொடபோவா (ரஷியா) மோதினர்.

    இதில் செரீனா 7-6 (7-5), 6-2 என்ற செட் கணக்கில் வென்று 4-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

    14-ம் நிலை வீராங்கனையான ஸ்பெயினின் முகுருஜா 6-1, 6-1 என்ற நேர்செட் கணக்கில் ஜரினா தியாசை (கஜகஸ்தான்) தோறகடித்து 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்ற ஆட்டங்களில் சபாலென்சா (பெலாரஸ்), சு-வெய் (தைவான்) ஆகியோர் வென்றனர்.

    Next Story
    ×