என் மலர்tooltip icon

    விளையாட்டு

    புரோ ஆக்கி லீக் போட்டியில் இந்திய அணி (8 ஆட்டங்களில் விளையாடி 15 புள்ளிகள்) ஒரு இடம் முன்னேறி புள்ளி பட்டியலில் 4-வது இடத்தை பிடித்துள்ளது. பெல்ஜியம் அணி 32 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.
    பியூனஸ் அயர்ஸ்:

    கொரோனாவால் தள்ளிவைக்கப்பட்ட 2-வது புரோ ஆக்கி லீக் போட்டி மீண்டும் தொடங்கி நடந்து வருகிறது. இதில் அர்ஜென்டினா தலைநகர் பியூனஸ்அயர்சில் நேற்று முன்தினம் நடந்த லீக் ஆட்டத்தில் இந்திய அணி மறுபடியும் ஒலிம்பிக் சாம்பியன் அர்ஜென்டினாவை சந்தித்தது. இந்த ஆட்டத்தில் இந்திய அணி தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தியது. 11-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி இந்திய அணி வீரர் ஹர்மன்பிரீத் சிங் கோலடித்தார். இந்திய அணி வீரர்கள் லலித் உபாத்யாய் 25-வது நிமிடத்திலும், மன்தீப்சிங் 58-வது நிமிடத்திலும் பந்தை கோல் வளையத்துக்குள் திணித்தனர்.

    அர்ஜென்டினா அணியால் கடைசி வரை பதில் கோல் திருப்ப முடியவில்லை. முடிவில் இந்திய அணி 3-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்தி அசத்தியது. அபாரமாக செயல்பட்ட இந்திய அணியின் கோல் கீப்பர் கிருஷ்ணன் பகதூர் பதாக் ஆட்டநாயகன் விருது பெற்றார் இந்திய அணி தொடர்ந்து 2-வது முறையாக அர்ஜென்டினாவை சாய்த்தது. முந்தைய நாளில் நடந்த ஆட்டத்தில் பெனால்டி ‘ஷூட்-அவுட்’ முடிவில் இந்திய அணி 5-4 என்ற கோல் கணக்கில் வென்று இருந்தது.

    இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி (8 ஆட்டங்களில் விளையாடி 15 புள்ளிகள்) ஒரு இடம் முன்னேறி புள்ளி பட்டியலில் 4-வது இடத்தை பிடித்துள்ளது. பெல்ஜியம் அணி 32 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.
    தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 3 ஒரு நாள் மற்றும் 4 டி 20 போட்டிகளில் விளையாடி வருகிறது.
    ஜோகன்ஸ்பர்க்:

    தென்ஆப்பிரிக்கா, பாகிஸ்தான் அணிகளிடையேயான ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் பாகிஸ்தான் கைப்பற்றியது. இதையடுத்து, இரு அணிகளுக்கும் இடையிலான 20 ஓவர் போட்டிகள் நடைபெற்று வருகிறது. 4 போட்டிகளை கொண்ட 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது. 

    இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி ஜோகன்ஸ்பர்க் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. 

    அதன்படி, அந்த அணியின் தொடக்க வீரர்களாக ரிஸ்வான் மற்றும் சர்ஜூல் கான் களமிறங்கினர்.

    முதல் ஓவரின் முதல் பந்திலேயே ரிஸ்வான் ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆகி அதிர்ச்சியளித்தார். இதையடுத்து, பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் களமிறங்கினார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் சர்ஜூல் கான் 8 ரன்கள் எடுத்து வெளியேறினார். 

    அடுத்து வந்த ஹபீஸ் கேப்டன் பாபருடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 23 பந்துகளை சந்தித்த ஹபீஸ் 32 ரன்கள் குவித்து அவுட்டானார். பொறுப்புடன் ஆடிய கேப்டன் பாபர் அசாம் அதிகபட்சமாக 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த வீரர்கள் விரைவில் வெளியேறினர்.

    அரை சதமடித்த பாபர் அசாம்

    இறுதியில் பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 140 ரன்கள் எடுத்தது.

    தென்ஆப்பிரிக்கா சார்பில் ஜார்ஜ் லிண்டி, வில்லியம்ஸ் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

    இதைத்தொடர்ந்து, 141 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்ஆப்பிரிக்க அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க வீரர்களாக மாலன் மற்றும் மார்க்ரம் களமிறங்கினர். மாலன் 15 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய லூபி 12 ரன்களில் வெளியேறினார். 

    அடுத்து வந்த கேப்டன் கிளாசன், மார்க்ரமுடன் ஜோடி சேர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 30 பந்துகளை சந்தித்த மார்க்ரம் 3 சிக்சர்கள் உள்பட 54 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

    இறுதியில் 14 ஓவரில் 4 விக்கெட்டுகள் இழந்த நிலையில் வெற்றி இலக்கான 141 ரன்களை தென்ஆப்பிரிக்கா எட்டியது. இதன்மூலம் பாகிஸ்தானை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்ஆப்பிரிக்கா அபார வெற்றிபெற்றது. கேப்டன் கிளாசன் 21 பந்துகளில் 36 ரன்கள் குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்து வெற்றிக்கு வழிவகுத்தார்.

    இந்த வெற்றியின் மூலம் 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-1 என்ற புள்ளிகள் கணக்கில் இரு அணிகளும் சம நிலையில் உள்ளன.
    ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பொறுப்புடனும் அதிரடியாகவும் ஆடி சதமடித்தும் இறுதியில், பஞ்சாப் அணி திரில் வெற்றி பெற்றது.
    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலம் மும்பை வான்கடே மைதானத்தில் ஐபிஎல் 4-வது லீக் ஆட்டம் நடைபெற்றது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

    டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேஎல் ராகுல், மயங்க் அகர்வால் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

    மயங்க் அகர்வால் 14 ரன்னில் ஆட்டமிழந்தார். கிறிஸ் கெய்ல் 28 பந்தில் 4 பவுண்டரி, 2 சிக்சருடன் 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 
    அடுத்து வந்த தீபக் ஹூடா ருத்ர தாண்டவம் ஆட 28 பந்தில் 4 பவுண்டரி, 6 சிக்சருடன் 64 ரன்கள் எடுத்து வெளியேறினார். இந்த ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 105 ரன்கள் குவித்தது. 

    அரை சதமடித்த ஹூடா

    பொறுப்புடன் ஆடிய கேஎல் ராகுல் கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். அவர் 50 பந்தில் 7 பவுண்டரி, 5 சிக்சருடன் 91 ரன்கள் விளாசினார்.
    இறுதியில், பஞ்சாப் கிங்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்கள் குவித்தது.

    ராஜஸ்தான் ராயல்ஸ் சார்பில் சேத்தன் சகாரியா 3 விக்கெட்டும், கிறிஸ் மோரிஸ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 222 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி களமிறங்கியது. பென் ஸ்டோக்சும், மனன் வோராவும் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர்.

    முதல் ஓவரின் 3வது பந்தில் பென் ஸ்டோக்ஸ் டக் அவுட்டானார். மனன் வோரா 12 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    அடுத்து இறங்கிய கேப்டன் சஞ்சு சாம்சன் பொறுப்புடன் ஆடினார். ஜோஸ் பட்லர், ஷிவம் டூபே ஓரளவு ஒத்துழைப்பு கொடுத்தனர். பட்லர் 25 ரன்னிலும், ஷிவம் டூபே 23 ரன்னிலும் வெளியேறினர். ரியான் பராக் 11 பந்தில் 3 சிக்சர், ஒரு பவுண்டரியுடன் 25 ரன்னில் அவுட்டானார்.

    ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் சஞ்சு சாம்சன் அதிரடியாக ஆடி சதமடித்து அசத்தினார். அவர் தனியாளாக போராடி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்ல முயன்றார். கடைசி ஓவரில் வெற்றிக்கு தேவையான ரன்களை எடுக்க திணறியது. 

    இறுதியில், ராஜஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 217 ரன்கள் மட்டுமே எடுத்தது. கேப்டன் சஞ்சு சாம்சன் 119 ரன்னில் கடைசி பந்தில் அவுட்டானதால் அந்த அணியின் வெற்றி பறிபோனது. இதனால் பஞ்சாப் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.
    ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் தீபக் ஹூடா 20 பந்தில் அரைசதம் விளாசினார்.
    மும்பை வான்கடே மைதானத்தில் பஞ்சாப் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.

    முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் 6 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்கள் குவித்தது. பஞ்சாப் அணியின் ரன்குவிப்பிற்கு தீபக் ஹூடாவின் அதிரடியும் முக்கிய காரணம். அவர் 20 பந்தில் ஒரு பவுண்டரி, 6 சிக்சருடன் அரைசதம் விளாசினார்.

    இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றில் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாடாத வீரர் ஒருவர், 23 பந்திற்குள் இரண்டு முறை அரைசதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

    தொடர்ந்து விளையாடிய தீபக் ஹூடா 28 பந்தில் 4 பவுண்டரி, 6 சிக்சருடன் 64 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
    கேஎல் ராகுல் 91 ரன்களும், தீபக் ஹூடா 64 ரன்களும், கிறிஸ் கெய்ல் 40 ரன்களும் விளாச, அறிக வீரர் சகாரியா 3 விக்கெட் சாய்த்தார்.
    மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் 4-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது.

    கிங்ஸ் பஞ்சாப் அணியின் கேஎல் ராகுல், மயங்க் அகர்வால் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். மயங்க் அகர்வால் 14 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து கிறிஸ் கெய்ல் களம் இறங்கினார்.

    இந்த ஜோடி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. கிறிஸ் கெய்ல் 28 பந்தில் 4 பவுண்டரி, 2 சிக்சருடன் 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    அடுத்து வந்த தீபக் ஹூடா ருத்ர தாண்டவம் ஆடினார். கேஎல் ராகுல் 30 பந்தில் அரைசதம் அடிக்க, தீபக் ஹூடா 20 பந்தில் 1 பவுண்டரி, 6 சிக்சருடன் அரைசதம் அடித்தார்.

    இந்த ஜோடி 17.3 ஓவரில் 194 ரன்கள் எடுத்திருக்கும்போது பிரிந்தது. தீபக் ஹூடா 28 பந்தில் 4 பவுண்டரி, 6 சிக்சருடன் 64 ரன்கள் எடுத்து வெளியேறினார். இந்த ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 105 ரன்கள் குவித்தது. அடுத்து வந்த பூரன் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். 

    கிறிஸ் கெய்ல்

    மறுமுனையில் கேஎல் ராகுல் கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். அவர் 50 பந்தில் 7 பவுண்டரி, 5 சிக்சருடன் 91 ரன்கள் விளாசினார்.

    கேஎல் ராகுல், தீபக் ஹூடா, கிறிஸ் கெய்ல் ஆகியோரின் அதிரடியால் பஞ்சாப் கிங்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்கள் குவித்தது.

    ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 8 பந்து வீச்சாளர்களை பயன்படுத்தியது. என்றாலும் 221 ரன்களுக்கு மேல் விட்டுக்கொடுத்துள்ளது.
    ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் 28 பந்தில் 40 ரன்கள் அடித்த கிறிஸ் கெய்ல், இரண்டு சிக்சர்கள் விளாசினார்.
    டி20 கிரிக்கெட் என்றாலே நினைவுக்கு வரும் முதல் பேட்ஸ்மேன் கிறிஸ் கெய்ல்தான். சிக்சர் வாணவேடிக்கை நிகழ்த்துவதில் சிறந்தவர்.

    இன்று மும்பை வான்கடே மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. 

    3-வது வீரராக களம் இறங்கிய கிறிஸ் கெய்ல் அதிரடியாக விளையாடினார். அவர் 28 பந்தில் 40 ரன்கள் விளாசினார். இதில் 4 பவுண்டரி, 2 சிக்சர் அடங்கும்.

    முதல் சிக்சர் அடிக்கும்போது ஐபிஎல் கிரிக்கெட்டில் 350-வது சிக்சரை பதிவு செய்தார். மொத்தமாக 351 சிக்சர்கள் அடித்துள்ளார். 2-வது இடத்தில் டி வில்லியர்ஸ், 3-வது இடத்தில் எம்எஸ் டோனி உள்ளனர்.
    நாங்கள் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்கிறோம். ஆடும் லெவன் அணியை தேர்வு செய்ய கடும் சவாலாக இருந்தது என ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார்.
    ஐபிஎல் தொடரின் 4-வது லீக் ஆட்டம் இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் பஞ்சாப் கிங்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    இந்த போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்ச சாம்சன் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.

    பஞ்சாப் கிங்ஸ் அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம் வருமாறு:-

    1. கேஎல் ராகுல், 2. மயங்க் அகர்வால், 3. கிறிஸ் கெய்ல், 4. நிக்கோலஸ் பூரன், 5. தீபக் ஹூடா, 6. ஷாருக் கான், 7. ஜை ரிச்சர்ட்சன், 8. முருகன் அஷ்வின், 9. ரிலே மெரிடித், 10. முகமது ஷமி, 11. அர்ஷ்தீப்  சிங்.

    ராஜஸ்தான்  ராயல்ஸ்

    ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம் வருமாறு:-

    1. பட்லர், 2. மனன் வோரா, 3. பென் ஸ்டோக்ஸ், 4. சஞ்சு சாம்சன், 5. ரியான் பராக், 6. ஷிவம் டுபே, 7. ராகுல் டெவாட்டியா, 8 கிறிஸ் மோரிஸ், 9. ஷ்ரேயாஸ் கோபால், 10. சேட்டன் சகாரியா, 11. முஷ்டாபிஜூர் ரஹ்மான்.
    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிராக சன்ரைசர்ஸ் ஐதராபாத் 10 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்த நிலையில், கேன் வில்லியம்சனை களம் இறக்காதது குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
    ஐபிஎல் கிரிக்கெட்டில் நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் வெளிநாட்டு வீரர்களில் பேர்ஸ்டோ, டேவிட் வார்னர், முகமது நபி, ரஷித் கான் ஆகியோர் களம் இறங்கினர்.

    கடந்த சீசனில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் ஆபத்தான நிலையில் இருந்தபோதெல்லாம் தனியொரு மனிதனாக பேட்டிங்சில் அசத்தி அணியின் வெற்றிக்கு உதவியது கேன் வில்லியம்சன்தான். அவர் கடந்த சீசனில் 11 இன்னிங்சில் 317 ரன்கள் அடித்தார்.

    தலைசிறந்த பேட்ஸ்மேனான அவருக்கு இடம் கொடுக்காதது குறித்து ரசிகர்கள் அணி நிர்வாகத்தை கடுமையாக விமர்சனம் செய்தனர்.

    இந்ந நிலையில் அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் டிரேவர் பெய்லிஸ் கேன் வில்லியம்சனை களம் இறக்காதது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

    கேன் வில்லியம்சன் குறித்து டிரேவர் பெய்லிஸ் கூறுகையில் ‘‘போட்டியில் விளையாடுவதற்கான தகுதியை பெற கேன் வில்லியம்சனுக்கு இன்னும் கொஞ்சம் நேரம் தேவை என் நாங்கள் எண்ணுகிறோம். வலைப்பயிற்சியில் கொஞ்சம் அதிகமாக பயிற்சி மேற்கொள்ள வேண்டும். இது நடந்திருந்தால் பேர்ஸ்டோவிற்குப் பதிலாக கேன் வில்லியம்சன் இடம் பிடித்திருப்பார்.

    பேர்ஸ்டோ

    ஆனால் பேர்ஸ்டோ இந்தியாவிற்கு எதிரான தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். போட்டி சென்று கொண்டிருக்கும்போது கட்டாயம் கேன் வில்லியம்சன் அணியில் இடம் பிடிப்பார்’’ என்றார்.

    பேர்ஸ்டோ நேற்றைய போட்டியில் 40 பந்தில் 55 ரன்கள் அடித்தார். இந்த போட்டியில் ஐதராபாத் அணி 10 ரன்னில் தோல்வியடைந்தது.
    ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஜாஃப்ரா ஆர்சர்> கையில் ஏற்பட்ட காயத்திற்காக அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளார்.
    ஐபிஎல் கிரிக்கெட் போட்டி கடந்த 9-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜாஃப்ரா ஆர்சர் இடம் பிடித்துள்ளார். இவர் பந்து வீச்சில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவர்.

    இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின்போது அவருக்கு முழங்கையில் காயம் ஏற்பட்டது. அதற்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளார். மேலும், மீன் தொட்டி உடைந்து கையில் கண்ணாடி துண்டு நீண்ட நாட்களாக இருந்துள்ளது. அதையும் அறுவை சிகிச்சை செய்து எடுக்கப்பட்டுள்ளது.

    இதன் காரணமாக முதல் பாதி தொடரில் அவர் பங்கேற்க வாய்ப்பில்லை. அவர் இல்லாதது அந்த அணிக்கு மிகப்பெரிய இழப்பாகவே கருதப்படுகிறது. இருந்தாலும் அவரது விசயத்தில் அவசரம் காட்டமாட்டோம் என ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ள குமார் சங்கக்கரா தெரிவித்துள்ளார்.

    ஜாஃப்ரா ஆர்சர்

    இதுகுறித்து சங்கக்கரா கூறுகையில் ‘‘தொடக்க போட்டிகளில் ஜாஃப்ரா ஆர்சர் இடம் பெறாதது எங்களுக்கு மிகப்பெரிய இழப்பு. அவரை சுற்றி ஏராளமான திட்டங்கள் வைத்திருந்தோம். ஆனால், ஐபிஎல் போட்டியின் சில பகுதியில் அவர் பங்கேற்பார் என்பதை உறுதியாக நம்புகிறோம். எங்களிடம் தற்போதைக்குரிய திட்டங்கள் உள்ளன. அவரது விசயத்தில் அவசரம் காட்டமாட்டோம்’’ என்றார்.
    ஒயிட்-பால் கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக நீண்ட நாட்கள் இடம்பிடித்து விளையாடி வரும் சாஹல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் தற்போது ஃபார்ம் இழந்து தவிக்கின்றனர்.
    இந்தியாவின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர்களான அஷ்வின. ஜடேஜா ஆகியோர் மூன்று விடிவிலான கிரிக்கெட்டிலும் இந்திய அணிக்காக விளையாடி வந்தனர். அதன்பின் குல்தீப் யாதவ், சாஹல் ஆகியோர் இருவரின் இடத்தையும் பறித்துக் கொண்டனர். ஏறக்குறைய சுமார் இரண்டு வருடங்களாக இருவரும் இந்திய அணியில் இடம் பிடித்து விளையாடி வருகிறார்கள்.

    தற்போது இருவரின் பந்து வீச்சு மிகச்சிறப்பான வகையில் இல்லை. குறிப்பாக சாஹல் பந்து வீச்சு ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து தொடரின்போது எடுபடவில்லை.

    தற்போது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் சிறப்பாக செயல்படும் வீரர்களுக்கு டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம் கிடைக்க வாய்ப்புள்ளது.

    சாஹல், குல்தீப் யாதவ்

    இந்த நிலையில் சாஹல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோரைவிட அஷ்வின், ஜடேஜா சிறந்த ஆப்சனாக இருக்கும் என இங்கிலாந்து முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் மோன்டி பனேசர் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து பனேசர் கூறுகையில் ‘‘ஐபிஎல் சாஹல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோருக்கு மிகப்பெரிய விசப்பரீட்சை. இது அவர்களுக்கு மோசமான சீசனாக இருந்தால், டி20 உலகக்கோப்பைக்கான இடம் கேள்விக்குறியதாகிவிடும்.

    டி20 உலகக்கோப்பை அக்டோபர் மாதம் வரவிருக்கிறது. விராட் கோலி சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களை தேர்வு செய்ய விரும்புவார். அது யார் என்பது விசயமல்ல. சிறப்பாக விளையாட வேண்டும் என்பதைத்தான் விராட் கோலி விரும்புவார். பேட்ஸ்மேன், ஆல்-ரவுண்டர், வேகப்பந்து வீச்சாளர்கள் குறித்து அவருக்கு கவலை இல்லை. சுழற்பந்து வீச்சுதான் அவருக்கு கவலை அளிப்பதாக இருக்கும்.

    ஜடேஜா, அஷ்வின் ஆகியோர் மீண்டும் களம் இறங்குவதை நான் பொருட்படுத்தமாட்டேன். நான் விராட் கோலியாக இருந்தால், டி20 உலகக்கோப்பைக்கான அணியில் குல்தீப் யாவ், சாஹல் ஆகியோருக்குப் பதிலாக அஷ்வின்- ஜடேஜாவை தேர்வு செய்வேன்.

    மோன்டி பனேசர்

    ஏனென்றால் இருவரிடமும் அனுபவம் மற்றும் போட்டியை மாற்றும் திறன் உள்ளது. அதேபோல் இருவரும் ஆல்-ரவுண்டர் திறமை பெற்றவர்கள். அப்படி இருக்கும்போது அவர்கள் இருவரையும் ஏன் தேர்வு செய்யக்கூடாது?’’ என்றார்.
    ஐ.பி.எல். போட்டியின் 4-வது லீக் ஆட்டத்தில் சஞ்சுசாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ்- லோகேஷ் ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

    மும்பை:

    ஐ.பி.எல். போட்டியின் 4-வது லீக் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கிறது.

    இதில் சஞ்சுசாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ்- லோகேஷ் ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

    இரு அணிகளிலுமே சிறந்த அதிரடி பேட்ஸ்மேன்கள் உள்ளனர். இதனால் முதல் வெற்றியை எந்த அணி பெறப்போகிறது என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    ராஜஸ்தான் அணியில் கேப்டன் சஞ்சுசாம்சன், பென்ஸ்டோக்ஸ், பட்லர், கிறிஸ்மேரிஸ், ராகுல் திவேதியா போன்ற சிறந்த பேட்ஸ்மேன்களும், பஞ்சாப் அணியில் கேப்டன் லோகேஷ் ராகுல், மயங்க்அகர்வால், கிறிஸ்கெய்ல், நிக்கோலஸ் பூரன் போன்ற சிறந்த பேட்ஸ்மேன்களும் உள்ளனர்.

    கடந்த ஐ.பி.எல். தொடரில் பஞ்சாப் அணி தொடக்க வீரர்கள் ராகுலும், அகர்வாலும் அபாரமான அதிரடியை வெளிப்படுத்தினார்கள். அதே போல் இந்த சீசனிலும் இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    இன்றைய ஆட்டத்தில் டாஸ் முக்கிய பங்கு வகிக்கும். பனித்துளி காரணமாக 2-வது பேட்டிங் செய்வதற்கு ஏற்ற வகையில் ஆடுகளம் இருப்பதாக கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இரு அணிகளும் இதுவரை 21 ஆட்டத்தில் மோதி உள்ளன. இதில் ராஜஸ்தான் 12-ல், பஞ்சாப் 8-ல் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டம் டையில் முடிந்தது.

    ஐபிஎல் போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் 2018-ம் ஆண்டிலிருந்து 5 ஆண்டுக்கு ஒளிபரப்பு செய்ய ரூ.16,347.5 கோடிக்கு கிரிக்கெட் வாரியத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

    மும்பை:

    உலகில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளில் அதிகளவில் வருமானம் கொட்டுவது ஐ.பி.எல். போட்டியில்தான். இதில் விளம்பரம் மற்றும் ஒளிபரப்பு மூலம் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் கோடிக்கணக்கில் வருவாயை ஈட்டுகின்றன.

    கொரோனா பரவல் இருந்த போதிலும் இந்த போட்டியை கடந்த ஆண்டு கிரிக்கெட் வாரியம் ஐக்கிய அரபு எமிரேட்ஸ்சில் நடத்தி முடித்தது.

    இந்த போட்டி ரத்து செய்யப்பட்டால் கிரிக்கெட் வாரியத்துக்கு ரூ.3 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படும். இதனால்தான் இந்த போட்டியை வெற்றிகரமாக நடத்தி முடித்தது. தற்போது 14-வது ஐ.பி.எல். போட்டி இந்தியாவில் நடைபெற்று வருகிறது.

    இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் நேரடியாக ஒளிபரப்பு செய்யும் உரிமையை பெற்றுள்ளது. 2018-ம் ஆண்டிலிருந்து 5 ஆண்டுக்கு ஒளிபரப்பு செய்ய ரூ.16,347.5 கோடிக்கு கிரிக்கெட் வாரியத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

    ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்துக்கு ஐ.பி.எல். போட்டியை ஒளிபரப்புவதன் மூலம் ரூ.3,600 கோடி முதல் ரூ.3,800 கோடி வரை வருவாய் கிடைக்கிறது.

    அந்த நிறுவனம் 10 வினாடிக்கு விளம்பர கட்டணமாக ரூ.13 லட்சம் முதல் ரூ.14 லட்சம் வரை பெறுகிறது. இது கடந்த ஆண்டு நடந்த ஐ.பி.எல். போட்டியை விட 14 முதல் 15 சதவீதம் அதிகமாகும்.

    ஆண்டுக்கு ஆண்டு ஐ.பி.எல். போட்டியை பார்க்கும் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு பார்வையாளர்களின் எண்ணிக்கை 29 சதவீதம் அதிகரித்து உள்ளது.இதனால் விளம்பர கட்டணமும் உயர்த்தப்பட்டு வருகிறது.

    ஐ.பி.எல். போட்டியில் மொத்தம் 60 ஆட்டங்கள் நடக்கிறது. இந்த போட்டி மூலம் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் பல்வேறு விளம்பரங்கள் வழியாக கோடிக்கணக்கில் பணத்தை சம்பாதிக்கின்றன.

    ×