என் மலர்
விளையாட்டு
மும்பை:
ஐ.பி.எல். போட்டியின் 4-வது லீக் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கிறது.
இதில் சஞ்சுசாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ்- லோகேஷ் ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
இரு அணிகளிலுமே சிறந்த அதிரடி பேட்ஸ்மேன்கள் உள்ளனர். இதனால் முதல் வெற்றியை எந்த அணி பெறப்போகிறது என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
ராஜஸ்தான் அணியில் கேப்டன் சஞ்சுசாம்சன், பென்ஸ்டோக்ஸ், பட்லர், கிறிஸ்மேரிஸ், ராகுல் திவேதியா போன்ற சிறந்த பேட்ஸ்மேன்களும், பஞ்சாப் அணியில் கேப்டன் லோகேஷ் ராகுல், மயங்க்அகர்வால், கிறிஸ்கெய்ல், நிக்கோலஸ் பூரன் போன்ற சிறந்த பேட்ஸ்மேன்களும் உள்ளனர்.
கடந்த ஐ.பி.எல். தொடரில் பஞ்சாப் அணி தொடக்க வீரர்கள் ராகுலும், அகர்வாலும் அபாரமான அதிரடியை வெளிப்படுத்தினார்கள். அதே போல் இந்த சீசனிலும் இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றைய ஆட்டத்தில் டாஸ் முக்கிய பங்கு வகிக்கும். பனித்துளி காரணமாக 2-வது பேட்டிங் செய்வதற்கு ஏற்ற வகையில் ஆடுகளம் இருப்பதாக கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரு அணிகளும் இதுவரை 21 ஆட்டத்தில் மோதி உள்ளன. இதில் ராஜஸ்தான் 12-ல், பஞ்சாப் 8-ல் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டம் டையில் முடிந்தது.
மும்பை:
உலகில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளில் அதிகளவில் வருமானம் கொட்டுவது ஐ.பி.எல். போட்டியில்தான். இதில் விளம்பரம் மற்றும் ஒளிபரப்பு மூலம் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் கோடிக்கணக்கில் வருவாயை ஈட்டுகின்றன.
கொரோனா பரவல் இருந்த போதிலும் இந்த போட்டியை கடந்த ஆண்டு கிரிக்கெட் வாரியம் ஐக்கிய அரபு எமிரேட்ஸ்சில் நடத்தி முடித்தது.
இந்த போட்டி ரத்து செய்யப்பட்டால் கிரிக்கெட் வாரியத்துக்கு ரூ.3 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படும். இதனால்தான் இந்த போட்டியை வெற்றிகரமாக நடத்தி முடித்தது. தற்போது 14-வது ஐ.பி.எல். போட்டி இந்தியாவில் நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் நேரடியாக ஒளிபரப்பு செய்யும் உரிமையை பெற்றுள்ளது. 2018-ம் ஆண்டிலிருந்து 5 ஆண்டுக்கு ஒளிபரப்பு செய்ய ரூ.16,347.5 கோடிக்கு கிரிக்கெட் வாரியத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்துக்கு ஐ.பி.எல். போட்டியை ஒளிபரப்புவதன் மூலம் ரூ.3,600 கோடி முதல் ரூ.3,800 கோடி வரை வருவாய் கிடைக்கிறது.
அந்த நிறுவனம் 10 வினாடிக்கு விளம்பர கட்டணமாக ரூ.13 லட்சம் முதல் ரூ.14 லட்சம் வரை பெறுகிறது. இது கடந்த ஆண்டு நடந்த ஐ.பி.எல். போட்டியை விட 14 முதல் 15 சதவீதம் அதிகமாகும்.
ஆண்டுக்கு ஆண்டு ஐ.பி.எல். போட்டியை பார்க்கும் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு பார்வையாளர்களின் எண்ணிக்கை 29 சதவீதம் அதிகரித்து உள்ளது.இதனால் விளம்பர கட்டணமும் உயர்த்தப்பட்டு வருகிறது.
ஐ.பி.எல். போட்டியில் மொத்தம் 60 ஆட்டங்கள் நடக்கிறது. இந்த போட்டி மூலம் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் பல்வேறு விளம்பரங்கள் வழியாக கோடிக்கணக்கில் பணத்தை சம்பாதிக்கின்றன.
சென்னை:
14-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த 9-ந் தேதி தொடங்கியது. முதல் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்சை தோற்கடித்தது.
2-வது போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் 7 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்சை வீழ்த்தியது.
3-வது லீக் ஆட்டம் சென்னையில் நேற்று நடந்தது. இதில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின.
முதலில் விளையாடிய கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 187 ரன் குவித்தது.
தொடக்க வீரர் நிதிஷ்ரானா 56 பந்தில் 80 ரன்னும் (9 பவுண்டரி, 4 சிக்சர்), ராகுல் திரிபாதி 29 பந்தில் 53 ரன்னும் (5 பவுண்டரி, 2 சிக்சர்), திணேஷ்கார்த்திக் 9 பந்தில் 22 ரன்னும் (2 பவுண்டரி , 1 சிக்சர்) எடுத்தனர். ரஷீத்கான்,முகமது தலா 2 விக்கெட்டும், புவனேஷ்வர்குமார், தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.
பின்னர் ஆடிய ஐதராபாத் அணியால் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 177 ரன்னே எடுக்க முடிந்தது. இதனால் கொல்கத்தா அணி 10 ரன்னில் வெற்றி பெற்றது.
மனிஷ்பாண்டே அதிக பட்சமாக 44 பந்தில் 61 ரன்னும் (2 பவுண்டரி, 3 சிக்சர்), பேர்ஸ்டோவ் 40 பந்தில் 55 ரன்னும் ( 5 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தனர்.
கொல்கத்தா அணி தரப்பில் பிரதிஷ்கிருஷ்ணா 2 விக்கெட்டும், சகீப்-அல்-ஹச ன், கும்மின்ஸ் , ஆந்த்ரே ரஸல் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.
ஐ.பி.எல். போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் பெற்ற 100-வது வெற்றி இதுவாகும். 193 ஆட்டத்தில் விளையாடி அந்த அணி இந்த வெற்றியை பெற்று சாதித்தது.
நேரடியாக 99 வெற்றியையும், சூப்பர் ஓவரில் 1 வெற்றியையும் ஆக மொத்தம் 100 வெற்றிகளை பெற்றது. 93 ஆட்டத்தில் தோற்று இருந்தது.
ஐ.பி.எல். போட்டியில் 100-வது வெற்றியை பெற்ற 3-வது அணி என்ற சாதனையை கொல்கத்தா படைத்தது. மும்பை இந்தியன்ஸ் 118 ஆட்டங்களிலும், சென்னை சூப்பர் கிங்ஸ் 106 போட்டிகளிலும் வெற்றி பெற்று முறையே முதல் 2 இடங்களில் உள்ளன.
100-வது வெற்றியை பெற்ற கொல்கத்தா அணிக்கு அதன் உரிமையாளரும், பிரபல பாலிவுட் நடிகருமான ஷாருக்கான் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது டுவிட்டர் பதிவில் ‘‘ 100-வது வெற்றியை பெற்றது சிறப்பானது. இதற்காக வீரர்களுக்கு பாராட்டு தெரிவிக்கிறேன்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
கொல்கத்தா அணி 2-வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்சை சென்னையில் நாளை எதிர்கொள்கிறது.
ஐதராபாத் அணி 2-வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை 14-ந் தேதி சேப்பாக்கத்தில் சந்திக்கிறது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் களத்தில் கோபப்படமாட்டார், மிகவும் பொறுமைசாலி என்ற பெயருக்கு சொந்தக்காரர் ஆவார். தற்போது அவர் நடித்துள்ள விளம்பர படம் ஒன்றில் காரில் இருந்தபடி ஆத்திரத்தில் ஆக்ரோஷமாக கத்துவது, கிரிக்கெட் பேட்டால் கார் கண்ணாடிகளை உடைப்பது போன்ற காட்சி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இதுவரை 7 ஆட்டங்களில் ஆடியுள்ள இந்தியா 12 புள்ளிகளுடன் 5-வது இடம் வகிக்கிறது. 11 ஆட்டங்களில் விளையாடியுள்ள அர்ஜென்டினா 11 புள்ளிகளுடன் 6-வது இடத்தில் உள்ளது. இந்தியா-அர்ஜென்டினா அணிகள் இதே மைதானத்தில் மீண்டும் ஒரு முறை மோத உள்ளன.











