search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாஹாவை அவுட்டாக்கிய ஷகிப் அல் ஹசனை பாராட்டும் சக வீரர்கள்
    X
    சாஹாவை அவுட்டாக்கிய ஷகிப் அல் ஹசனை பாராட்டும் சக வீரர்கள்

    சன்ரைசர்ஸ் ஐதராபாத்தை 10 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது கொல்கத்தா நைட்ரைடர்ஸ்

    சேப்பாக்கத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மணீஷ் பாண்டே கடைசி வரை போராடியும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிடம் தோற்றது.
    சென்னை:

    ஐபிஎல் 2021 சீசனின் மூன்றாவது ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.

    டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முதலில் பேட்டிங் செய்தது.

    ஷுப்மான் கில் 15 ரன்னில் ஆட்டடமிழந்தார். அடுத்து நிதிஷ் ராணா உடன் ராகுல் திரிபாதி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சன்ரைசர்ஸ் ஐதாராபாத் பந்து வீச்சை துவம்சம் செய்தது.
     
    திரிபாதி 29 பந்தில் 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அந்த்ரே ரஸல் 5 ரன்னிலும், மோர்கன் 2 ரன்னிலும் அவுட்டாகினர்.

    சிறப்பாக ஆடிய நிதிஷ் ராணா 80 ரன்னில் வெளியேறினார். கடைசி கட்டத்தில் தினேஷ் கார்த்திக் 9 பந்தில் 22 ரன்கள் அடித்தார்.

    இறுதியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் எடுத்தது. சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு 188 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

    சன்ரைசர்ஸ் ஐதராபாத் சார்பில் ரஷித் கான், முகமது நபி தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சன்ரைசர்ஸ் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக விருத்திமான் சாஹாவும், டேவிட் வார்னரும் இறங்கினர்.

    கடைசி வரை போராடிய மணீஷ் பாண்டே

    வார்னர் 3 ரன்னிலும், சாஹா 7 ரன்னிலும் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தனர். 10 ரன்னுக்குள் 2 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது ஐதராபாத்.

    அடுத்து இறங்கிய மணீஷ் பாண்டேவும், பேர்ஸ்டோவும் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தனர். இந்த ஜோடி 92 ரன்கள் சேர்த்த நிலையில் பேர்ஸ்டோவ் 55 ரன்னில் ஆட்டமிழந்தார். முகமது நபி 14 ரன்னில் வெளியேறினார். அடுத்து இறங்கிய விஜய் சங்கர் 11 ரன்னில் அவுட்டானார்.

    கடைசி 2 ஓவரில் வெற்றிக்கு 38 ரன்கள் தேவைப்பட்டது. 19வது ஓவரில் 2 சிக்சர் உள்பட 16 ரன்கள் கிடைத்தது. மணீஷ் பாண்டே அரை சதமடித்தார்.

    இறுதியில் ஐதராபாத் அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 177 ரன்கள் மட்டுமே எடுத்தது. மணீஷ் பாண்டே இறுதி வரை ஆட்டமிழக்காமல் 61 ரன்கள் எடுத்தார். இதனால் கொல்கத்தா அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
    Next Story
    ×