search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேன் வில்லியம்சன்
    X
    கேன் வில்லியம்சன்

    ஐபிஎல் போட்டியில் விளையாடும் நியூசிலாந்து வீரர்கள் இங்கிருந்து இங்கிலாந்து செல்ல வாய்ப்பு

    இந்தியாவில் இருந்து வரும் விமானங்கள் தரையிறங்க நியூசிலாந்து தடைவிதித்திருப்பதால், ஐபிஎல் போட்டியில் விளையாடும் வீரர்கள் சொந்த நாடு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
    ஐபிஎல் 2021 டி20 கிரிக்கெட் சீசன் நேற்று முன்தினம் (ஏப்ரல் 9-ந்தேதி) தொடங்கியது. இந்தியாவில் ஆறு மைதானங்களில் மே 30-ந்தேதி வரை போட்டிகள் நடைபெற இருக்கின்றன.

    இந்தியாவில் 2-ம் அலை கொரோனா பாதிப்பு மிகத் தீவிரமாக உள்ளது. குறுகிய நாட்களிலேயே தினந்தோறும் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 1.5 லட்சத்தை தாண்டியுள்ளது. இதனால் இந்தியாவில் இருந்து விமானங்கள் தரையிறங்க நியூசிலாந்து தடைவிதித்துள்ளது.

    நியூசிலாந்தைச் சேர்ந்த கேன் வில்லியம்சன், டிரென்ட் போல்ட், ஜேமிசன் உள்பட டெஸ்ட் போட்டியில் விளையாடும் சுமார் 10 வீரர்கள் ஐபிஎல் கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார்கள்.

    நியூசிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து மே 25-ந்தேதி முதல் ஜூன் 14-ந்தேதி வரை இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. அதன்பின் ஜூன் 18-ந்தேதி தொடங்கும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியாவை எதிர்கொள்கிறது.

    டிரென்ட் போல்ட்

    இந்தியாவில் இருந்து நியூசிலாந்து சென்றால், அங்கு கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து குறிப்பிட்ட நாட்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். அதன்பின் இங்கிலாந்து சென்று அங்கும் தனிமைப்படுத்திக் கொண்டு அதன்பின் போட்டியில் பங்கேற்க வேண்டும். இதனால் நியூசிலாந்து வீரர்கள் சொந்த நாடு திரும்ப சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் இருந்து அப்படியே இங்கிலாந்து செல்ல வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
    Next Story
    ×