என் மலர்
விளையாட்டு
வங்காளதேசம் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டி நேற்று டாக்காவில் நடைபெற்றது.
டாஸ் வென்ற வங்காளதேசம் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, 48.1 ஓவர்களில் வங்காளதேசம் அணி 246 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
கடந்த போட்டியைப் போலவே அந்த அணியின் விக்கெட் கீப்பர் முஷ்பிகுர் ரஹிம் அபாரமாக ஆடி சதமடித்து 125 ரன்னில் ஆட்டமிழந்தார். மஹமதுல்லா 41 ரன்னும், தொடக்க ஆட்டக்காரர் லித்தன் தாஸ் 25 ரன்னும் எடுத்தனர்.
இலங்கை அணி சார்பில் துஷ்மந்தா சமீரா, லஷ்மண் சண்டகன் தலா 3 விக்கெட்டும், இசுரு உடானா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 247 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. வங்காளதேச பந்து வீச்சை தாக்குப் பிடிக்க முடியவில்லை.

இதையடுத்து, டக்வொர்த் லுயிஸ் விதிப்படி வங்காளதேசம் 103 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
வங்காளதேசம் அணி சார்பில் மெஹிதி ஹசன், முஷ்டபிசுர் ஆகியோர் தலா 3 விக்கெட்டும், ஷகிப் அல் ஹசன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
ஆட்ட நாயகன் விருது முஷ்பிகுர் ரஹிமுக்கு வழங்கப்பட்டது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை வங்காளதேசம் 2-0 என கைப்பற்றியுள்ளது.
மும்பை:
வீராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வருகிற 2-ந் தேதி இங்கிலாந்து புறப்பட்டு செல்கிறது.
இந்திய அணி இங்கிலாந்தில் 6 டெஸ்டில் விளையாடுகிறது. முதலில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் நியூசிலாந்துடன் விளையாடுகிறது. இந்த போட்டி ஜூன் 18-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை சவுத்தம்டனில் நடக்கிறது.
அதன்பிறகு இந்திய அணி இங்கிலாந்துடன் 5 டெஸ்டில் ஆடுகிறது. ஆகஸ்டு 4-ந் தேதி முதல் செப்டம்பர் 14-ந் தேதி வரை நடைபெறும்.
இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் பங்கேற்கும் இந்திய அணியை சேர்ந்த 20 வீரர்கள், மாற்று வீரர்கள், பயிற்சியாளர்கள், உதவி பயிற்சியாளர்கள் ஆகியோருக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் 14 நாட்கள் கொண்ட கொரோனா பாதுகாப்பு வளையத்தை உருவாக்கி உள்ளது.
இந்த தனிமைப்படுத்தல் காலமானது கடந்த 20-ந் தேதி தொடங்கியது. அஸ்வின், வாஷிங்டன் சுந்தர், மயங்க் அகர்வால் உள்ளிட்ட வீரர்கள் ஏற்கனவே சிறப்பு விமானம் மூலம் மும்பை சென்று கொரோனா பாதுகாப்பு வளையத்தில் இணைந்தனர்.
இந்தநிலையில் இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ஜடேஜா மும்பை சென்று அணியோடு இணைந்து கொண்டார். 3 ஆர்.டி.-பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொண்ட பிறகே இந்திய வீரர்கள் மும்பையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த வீரர்கள் வரிசையில் தற்போது ஜடேஜாவும் இணைந்து தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
வீரர்கள் பாதுகாப்பு வளையத்தில் இணைந்த பின்னர் மேலும் 3 முறை பரிசோதனை எடுக்கப்படும். இந்த வகையில் லண்டனுக்கு பயணமாகும் முன்பு இந்திய வீரர்கள் 6 முறை பரிசோதனை செய்து கொண்டதற்கான முடிவுகளை எடுத்துச் செல்வார்கள்.
இங்கிலாந்து புறப்படும் முன்பு வீரர்களுக்கு முதல் கொரோனா தடுப்பூசி டோஸ் செலுத்தப்படும். இங்கிலாந்து சென்றடைந்த பிறகும் இந்திய வீரர்கள் அங்கு தனிமையில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
லண்டன்:
14-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பாதியிலேயே ஒத்தி வைக்கப்பட்டது. வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் 29 ஆட்டங்கள் நடந்த நிலையில் போட்டி நிறுத்தப்பட்டது.
ஐ.பி.எல். போட்டியில் இன்னும் 31 ஆட்டங்களை நடத்த வேண்டும். இந்த போட்டிகளை உலக கோப்பைக்கு முன்பு செப்டம்பர்-அக்டோபரில் நடத்த கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்சில் ஐ.பி.எல். எஞ்சிய ஆட்டங்களை நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே ஐ.பி.எல். எஞ்சிய ஆட்டங்களை நடத்துவதற்கேற்ற வகையில் இந்தியா-இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் போட்டி அட்டவணையில் மாற்றம் செய்யுமாறு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திடம் இந்திய கிரிக்கெட் வாரியம் கோரிக்கை விடுத்து இருந்தது.
இந்திய கிரிக்கெட் அணி 6 டெஸ்டில் விளையாடுவதற்காக வருகிற 2-ந்தேதி இங்கிலாந்து செல்கிறது. முதலில் நியூசிலாந்துடன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆடுகிறது.
அதைத்தொடர்ந்து இங்கிலாந்துடன் 5 டெஸ்டில் விளையாடுகிறது. ஆகஸ்டு 4-ந் தேதி முதல் செப்டம்பர் 14-ந் தேதி வரை டெஸ்ட் தொடர் நடைபெறுகிறது. ஆகஸ்டு 4-ல் தொடங்கும் டெஸ்டை முன்னதாக ஆரம்பிக்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது.
செப்டம்பர் 14-ந் தேதி முடிவடையும் டெஸ்ட் தொடரை செப்டம்பர் 7-க்குள் முடிக்குமாறும் கேட்டுக்கொண்டு இருந்தது.
ஆனால் இதை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. போட்டியை ஒளிபரப்பும் நிறுவனத்தால் அட்டவணையை மாற்றி அமைக்க விரும்பவில்லை. இதனால் இந்தியா-இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் போட்டி அட்டவணையில் மாற்றம் இருக்காது என்ற தகவல் வெளியாகி உள்ளது.
இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்களும் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதாக தெரியவில்லை. ஆனாலும் இது குறித்து அதிகாரப்பூர்வமாக எதுவும் அறிவிக்கப்படவில்லை.
இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் நாட்டிங்காமிலும் (ஆக 4-8), இரண்டாவது டெஸ்ட் லண்டனிலும் (ஆக 12-16), மூன்றாவது டெஸ்ட் லீட்சிலும் (ஆக25-29), நான்காவது டெஸ்ட் லண்டனிலும் (செப் 2-6), கடைசி டெஸ்ட் மான்செஸ்டரிலும் (செப்10-14) நடக்கிறது.
ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி துபாயில் நேற்று தொடங்கியது. 31-ந் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் இந்தியா, உஸ்பெகிஸ்தான், கஜகஸ்தான் உள்பட 17 நாடுகளை சேர்ந்த 150 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். தொடக்க நாளில் நடந்த ஆண்களுக்கான 65 கிலோ எடைப்பிரிவின் முதல் சுற்றில் இந்திய வீரர் முகமது ஹூசாமுதீன் 5-0 என்ற கணக்கில் கஜகஸ்தானின் 19 வயது மக்முத் சபிர்கானை வீழ்த்தி கால்இறுதிக்கு முன்னேறினார்.



புதுடெல்லி:
ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. ‘இந்தியன் பிரிமீயர் லீக்’ என்று அழைக்கப்படும் இந்த போட்டிக்கு மிகப் பெரிய வரவேற்பு இருந்தது. ஆண்டுதோறும் இந்த போட்டி இந்தியாவில் நடத்தப்பட்டு வந்தது.
ஐ.பி.எல். போட்டி வர்த்தக ரீதியில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த போட்டியின் மூலம் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு மிகப்பெரிய அளவில் வருமானம் கிடைத்தது.
கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக ஐ.பி.எல். போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாய், சார்ஜா, அபுதாபியில் செப்டம்பர் 19-ந் தேதி முதல் நவம்பர் 10-ந் தேதி வரை நடந்தது.
ஏற்கனவே பாராளுமன்ற தேர்தல் காரணமாக அங்கு ஐ.பி.எல். போட்டிகளின் ஒரு பகுதி நடத்தப்பட்டு இருந்தது.
14-வது ஐ.பி.எல். 20 ஓவர் போட்டி இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதம் 9-ந் தேதி தொடங்கியது. சென்னை, மும்பையில் போட்டி முடிந்த நிலையில் டெல்லி, அகமதாபாத்தில் ஆட்டங்கள் நடைபெற்று கொண்டிருக்கும் போது வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து ஐ.பி.எல். போட்டி பாதியில் தள்ளி வைக்கப்பட்டது. 29 ஆட்டங்கள் முடிந்த நிலையில் பாதியில் நிறுத்தப்பட்டது. இன்னும் 31 ஆட்டங்கள் நடத்தப்பட வேண்டி உள்ளது.
எஞ்சிய ஐ.பி.எல். ஆட்டங்களை 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கு முன்பு நடத்திட வேண்டும் என்பதில் கிரிக்கெட் வாரியம் தீவிரமாக உள்ளது. உலக கோப்பை போட்டி அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெறுகிறது. இதனால் ஐ.பி.எல். எஞ்சிய ஆட்டங்களை செப்டம்பரில் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
இந்த போட்டியை ஐக்கிய அரபு எமிரேட்சில் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. இங்கிலாந்து, இலங்கை நாடுகளும் ஐ.பி.எல். எஞ்சிய ஆட்டங்களை நடத்த விருப்பம் தெரிவித்து உள்ளன.
இதற்கிடையே ஐ.பி.எல். எஞ்சிய ஆட்டத்துக்காக டெஸ்ட் தொடர் அட்டவணையை மாற்றி அமைக்குமாறு இங்கிலாந்துக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் கடிதம் மூலம் கேட்டுக்கொண்டுள்ளது.
விராட் கோலி தலைமையிலான இந்திய அணி வருகிற 2-ந் தேதி இங்கிலாந்து புறப்பட்டு செல்கிறது. இந்திய அணி முதலில் நியூசிலாந்துடன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் (ஜூன் 18 முதல் 22) விளையாடுகிறது.
அதன்பிறகு இந்திய அணி இங்கிலாந்துடன் 5 டெஸ்டில் ஆடுகிறது. ஆகஸ்டு 4 முதல் செப்டம்பர் 14 வரை இந்த டெஸ்ட் தொடர் நடைபெறும். ஐ.பி.எல். போட்டிக்காக செப்டம்பர் 7-ந் தேதிக்குள் டெஸ்ட் போட்டிகளை முடிக்குமாறு இங்கிலாந்திடம் கோரிக்கை விடப்பட்டுள்ளது.
2-வது டெஸ்ட்டுக்கும், 3-வது போட்டிக்கும் இடையே அதிக அளவு கால இடைவெளி இருப்பதால் இங்கிலாந்து போட்டி அட்டவணையை மாற்றி அமைப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே ஐ.பி.எல். எஞ்சிய ஆட்டங்களை செப்டம்பர் 15-ந் தேதி ஐக்கிய அரபு எமிரேட்சில் தொடங்க கிரிக்கெட் வாரியம் இறுதி முடிவை எடுத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
அக்டோபர் 15-ந் தேதி வரை ஒரு மாத காலத்திற்கு ஐ.பி.எல். எஞ்சிய ஆட்டங்கள் அனைத்தும் நடத்த கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டு உள்ளது. வருகிற 29-ந் தேதி நடைபெறும் இந்திய கிரிக்கெட் வாரியம் சிறப்பு பொதுக்குழுவில் இது குறித்து இறுதி முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்படும்.
ஐ.பி.எல். எஞ்சிய போட்டிகள் முடிந்த பிறகு 20 ஓவர் உலக கோப்பை நடத்தப்படுகிறது. இந்த போட்டி இந்தியாவில் நடைபெறுமா என்பது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும். கொரோனா பாதிப்பு குறைந்தால் மட்டுமே இங்கு நடத்தப்படும்.
ஒருவேளை பாதிப்பு தொடர்ந்து நீடிக்குமானால் 20 ஓவர் உலக கோப்பையை ஐக்கிய அரபு எமிரேட்சில் நடத்த கிரிக்கெட் வாரியம் ஏற்கனவே முடிவு செய்துள்ளது.






