search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிசிசிஐ
    X
    பிசிசிஐ

    இந்தியாவுக்கு 2000 ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்குகிறது பிசிசிஐ

    இந்தியாவில் 2-வது அலையால் பாதிக்கப்படும் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் மிக இன்றியமையாததாக உள்ளதால் மற்ற நாடுகள் இந்தியாவுக்கு உதவிக்கரம் நீட்டின.
    இந்தியாவில் கொரோனா தொற்றின் 2-வது அலையின் தாக்கம் இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து மிகவும் தீவிரமாக இருந்து வருகிறது. 2-வது வாரத்திற்குப் பிறகு இந்தியாவில் தினந்தோறும் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தை தண்டியது. இதனால் ஆக்சிஜன் தட்டுப்பாடு மிக அதிக அளவில் ஏற்பட்டது.

    இதனால் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி உள்பட ஏராளமான நாடுகள் இந்தியாவிற்கு ஆக்சிஜன் தொடர்பான உபகரணங்கள் வழங்கி உதவி செய்தன. இந்த நிலையில் பிசிசிஐ 10 லிட்டர் கொள்ளவு கொண்ட 2000 ஆயிரம் ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்குகிறது.

    அடுத்த சில மாதங்களில் பசிசிஐ நாட்டின் எல்லா பகுதிகளுக்கும், தேவையிருக்கும் இடத்திற்கு இதை வழங்க இருக்கிறது. ஏற்கனவே சச்சின் தெண்டுல்கர், விராட் கோலி, ரிஷப் பண்ட், தவான், இர்பான் பதான், பாண்ட்யா சகோதரர்கள் போன்ற கிரிக்கெட் வீரர்கள் இந்தியாவிற்கு உதவியுள்ளனர்.
    Next Story
    ×