என் மலர்tooltip icon

    விளையாட்டு

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் மாற்று வேகப்பந்து வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு வெற்றிகரமாக முடித்ததை நம்மால் பார்க்க முடிந்தது என இயன்சேப்பல் கூறியுள்ளார்.

    சிட்னி:

    இந்திய கிரிக்கெட் அணி கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

    முதல் டெஸ்டில் மோசமாக தோற்ற பிறகு இந்திய அணி விராட்கோலி இல்லாமல் டெஸ்ட் தொடரை வென்றது மிகவும் பாராட்டுதலுக்கு உரியது ஆகும்.

    முன்னணி வேகப்பந்து வீரர்கள் ஒவ்வொரு டெஸ்டிலும் காயம் அடைந்த போதிலும் மாற்று வேகப்பந்து வீரர்கள் களம் இறங்கி அணிக்கு வெற்றியை தேடித்தந்தனர்.

    இந்தநிலையில் இதை மையமாக வைத்து ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டனும், டெலிவி‌ஷன் வர்ணனையாளருமான இயன்சேப்பல் இந்திய வேகப்பந்துவீச்சை பாராட்டி உள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

    வேகப்பந்து வீச்சில் இந்திய அணி மிகவும் பலமாக உள்ளது. மாற்றுவீரர்கள் அணியின் வரிசையில் இடம்பெற்று உள்ளனர். கொரோனா காலத்திலும், வீரர்களுக்கு காயம் ஏற்படும் போதும் இந்திய அணிக்கு போதுமான அளவில் பயன்படுத்திக்கொள்வதற்குரிய திறமையான வேகப்பந்து வீரர்கள் இருக்கிறார்கள்.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் மாற்று வேகப்பந்து வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு வெற்றிகரமாக முடித்ததை நம்மால் பார்க்க முடிந்தது. 4 டெஸ்டிலும் வேகப்பந்து வீச்சை மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது. போட்டி அட்டவணையின் சவாலை எதிர்கொள்ளக்கூடிய வகையில் திறமையான வேகப்பந்து வீரர்களை கொண்டுள்ள ஒரு சில அணிகளில் இந்தியாவும் ஒன்று.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கொரோனா வைரஸ் காரணமாக ஐ.பி.எல். போட்டி பாதியில் தள்ளி வைக்கப்பட்டது துரதிருஷ்டவசமானது என நியூசிலாந்து வீரர் டெய்லர் கூறியுள்ளார்.

    லண்டன்:

    உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்தில் உள்ள சவுத்தம்டன் நகரில் ஜூன் 18-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை நடக்கிறது.

    இதில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி- வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. எந்த அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை கைப்பற்றப்போகிறது என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.

    இந்தநிலையில் ஐபிஎல் போட்டி பாதியில் தள்ளி வைக்கப்பட்டது இந்திய அணிக்கு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் மிக உதவியாக இருக்கும் என்று நியூசிலாந்து வீரர் ரோஸ் டெய்லர் கருத்து தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    கொரோனா வைரஸ் காரணமாக ஐ.பி.எல். போட்டி பாதியில் தள்ளி வைக்கப்பட்டது துரதிருஷ்டவசமானது. இந்த போட்டி பாதியில் ரத்து செய்யப்பட்டதால் இந்திய வீரர்களுக்கு நல்ல ஓய்வு கிடைத்துள்ளது.

    இது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இந்திய வீரர்களுக்கு உதவியாக இருக்கும்.

    உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் இறுதிப்போட்டியை பொறுத்தவரை இந்தியாவை விட நியூசிலாந்துக்கு சற்று வாய்ப்பு அதிகமாக உள்ளது. ஏனென்றால் இங்குள்ள ஆடுகளத்தில் உலக டெஸ்ட்டுக்கு முன்பு நாங்கள் 2 டெஸ்டில் இங்கிலாந்து அணியுடன் விளையாடுகிறோம்.

    இங்கிலாந்து தொடருக்காக நியூசிலாந்து வீரர்கள் இன்னும் தங்களை தயார் படுத்திக்கொள்ளவில்லை.

    இவ்வாறு அவர் கூறி உள்ளர்.

    37 வயதான ரோஸ் டெய்லர் 105 டெஸ்டில் விளையாடி 7343 ரன் எடுத்துள்ளார். அதிகபட்சமாக 290 ரன் குவித்து உள்ளார். 19 சதமும், 35 அரை சதமும் அடித்து உள்ளார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்போடு அவர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறலாம் என்று எதிர்பர்க்கப்படுகிறது.

    ஜூனியர் அளவிலான போட்டிகளில் சிறப்பாக விளையாடி கவனத்தை ஈர்த்த சங்கீதா கடந்த ஆண்டு இந்திய சீனியர் அணிக்கு அழைக்கப்பட்டார்.
    புதுடெல்லி:

    ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்தில் உள்ள பசமுடி என்ற கிராமத்தை சேர்ந்த கால்பந்து வீராங்கனை சங்கீதா சோரன். ஏழ்மையான குடும்ப பின்னணியை கொண்ட சங்கீதா 18 மற்றும் 19 வயதுக்குட்பட்டோருக்கான கால்பந்து போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடியிருக்கிறார். ஜூனியர் அளவிலான போட்டிகளில் சிறப்பாக விளையாடி கவனத்தை ஈர்த்த சங்கீதா கடந்த ஆண்டு இந்திய சீனியர் அணிக்கு அழைக்கப்பட்டார். ஆனால் அதற்குள் கொரோனா ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள் காரணமாக எதுவும் கைகூடவில்லை.

    இந்த நிலையில் வீ்ட்டில் பொருளாதார பிரச்சினை ஏற்பட்டதால் வேறு வழியின்றி மீண்டும் செங்கல் சூளைக்கு தினக்கூலியாக வேலைக்கு செல்கிறார். வேலைக்கு சென்றாலும் நேரம் கிடைக்கும் போது அருகில் உள்ள மைதானத்தில் கால்பந்து பயிற்சியில் ஈடுபடுவதை தவறவிடுவதில்லை. ஒரு சர்வதேச கால்பந்து வீராங்கனை படும் கஷ்டங்களை சுட்டிகாட்டிய பெண்கள் தேசிய ஆணைய தலைவர் ரேகா ஷர்மா அவருக்கு உதவும்படி ஜார்கண்ட் மாநில அரசுக்கும், இந்திய கால்பந்து சம்மேளனத்துக்கும் கடிதம் எழுதினார்.

    கிரண் ரிஜிஜூ


    இதற்கிடையே, இந்த விஷயங்களை கேள்விப்பட்ட மத்திய விளையாட்டுத்துறை மந்திரி கிரண் ரிஜிஜூ அவருக்கு உதவிகரம் நீட்டுகிறார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘கொரோனா காலத்தில் சங்கீதா பணமின்றி கஷ்டப்படுவது எனது கவனத்துக்கு வந்துள்ளது. எனது அலுவலகம் அவரை தொடர்பு கொண்டு பேசியுள்ளது. விரைவில் அவருக்கு நிதிஉதவி அளிக்கப்படும். விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு கவுரவமான வாழ்க்கை இருப்பதை உறுதி செய்வதே எங்களது பிரதான நோக்கம்’ என்றார்.

    ஜார்கண்ட் மாநில அரசும் அவருக்கு உதவ முன்வந்துள்ளது. சங்கீதாவுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை வழங்கப்படும் என்றும், வருங்காலத்தில் நிலையான வருமானம் கிடைக்கும் வகையில் அவரது தகுதிக்கு ஏற்ப பயிற்சியாளர் அல்லது உதவியாளர் பொறுப்பு வழங்கப்படும் என்றும் ஜார்கண்ட் முதல்-மந்திரியின் அலுவலகம் கூறியுள்ளது.
    இந்தியா, இந்தோனேஷியா, ஈரான், பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி இன்று முதல் 31-ந்தேதி வரை துபாயில் நடக்கிறது.
    துபாய்:

    இந்தியா, இந்தோனேஷியா, ஈரான், கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான், தென்கொரியா, கிர்கிஸ்தான், பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி இன்று (திங்கட்கிழமை) முதல் 31-ந்தேதி வரை துபாயில் நடக்கிறது. இந்த போட்டிக்கான இந்திய அணியில் மொத்தம் 19 வீரர், வீராங்கனைகள் அங்கம் வகிக்கிறார்கள். இதில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள நடப்பு சாம்பியனான அமித் பன்ஹால், விகாஸ் கிருஷ்ணன், ஆஷிஷ் குமார், 6 முறை உலக சாம்பியனான மூத்த வீராங்கனை மேரிகோம், சிம்ரன்ஜித் கவுர், நடப்பு சாம்பியன் பூஜா ராணி, லவ்லினா ஆகியோரும் அடங்குவர். டோக்கியோ ஒலிம்பிக்குக்கு தயாராவதற்கு இந்த போட்டி முக்கியமானதாக அமைந்துள்ளதால் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்திய ஆண்கள் அணியின் உயர்செயல்பாட்டு இயக்குனர் சான்டியாகோ நிவா கூறுகையில், ‘ஒலிம்பிக் போட்டிக்கு முன்பாக நாம் எந்த நிலையில் இருக்கிறோம், எதை சரி செய்ய வேண்டும் என்பதை அறிந்து கொள்ளும் வாய்ப்பை இந்த சாம்பியன்ஷிப் வழங்கி இருக்கிறது. அந்த வகையில் இது நமக்கு நல்லதாகும். ஒலிம்பிக்குக்கு தகுதி பெற்றவர்களும், உலக சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்றவர்களும் களம் காணுவதால் இந்த போட்டி மிகவும் கடினமாக இருக்கும் என்பதை அறிவோம். ஆனால் எங்களது அணி நிச்சயம் சிறப்பாக விளையாடி வெற்றிகளை குவிக்கும் என்று நம்புகிறோம்’ என்றார்.

    இந்த போட்டி முதலில் டெல்லியில் நடக்க இருந்தது. கொரோனா பரவலால் துபாய்க்கு மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதில் தங்கப்பதக்கம் கைப்பற்றுவோருக்கு ரூ.7¼ லட்சமும், வெள்ளிப்பதக்கம் வெல்வோருக்கு ரூ.3½ லட்சமும், வெண்கலப்பதக்கம் பெறுவோருக்கு ரூ.1¾ லட்சமும் வழங்கப்படும்.

    2019-ம் ஆண்டு தாய்லாந்தில் நடந்த ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் 2 தங்கம், 4 வெள்ளி, 7 வெண்கலம் என்று மொத்தம் 13 பதக்கம் வென்றதே இந்த போட்டியில் இ்ந்தியாவின் சிறந்த செயல்படாகும். இந்த முறை அதைவிட இந்தியா அதிக அளவில் பதக்கவேட்டை நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    இலங்கை அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.
    டாக்கா:

    வங்காளதேசம் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி நேற்று டாக்காவில் நடைபெற்றது.

    டாஸ் வென்ற வங்காளதேசம் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் வங்காளதேசம் அணி 6 விக்கெட் இழப்புக்கு 257 ரன்கள் எடுத்தது.

    அந்த அணியில் அதிகபட்சமாக விக்கெட் கீப்பர் முஷ்பிகுர் ரஹிம் 84 ரன்னும், மஹமதுல்லா 54 ரன்னும், தொடக்க ஆட்டக்காரர் தமிம் இக்பால் 52 ரன்னும் எடுத்தனர்.

    இலங்கை அணி சார்பில் தனஞ்செயா டி சில்வா 3 விக்கெட் வீழ்த்தினார்.

    84 ரன்கள் எடுத்த முஷ்பிகுர் ரஹிம்

    இதையடுத்து, 258 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. வங்காளதேச பந்து வீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் 224 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    இலங்கை அணியில் வஹிந்து ஹசரன்கா மட்டும் ஓரளவு தாக்குப்பிடித்து 60 பந்துகளில் 5 சிக்சர், 3 பவுண்டரியுடன் 74 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மற்றவர்கள் நிலைத்து நின்று ஆடவில்லை.

    இதனால் வங்காளதேசம் அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அந்த அணியின் மெஹிதி ஹசன் 4 விக்கெட்டும்,  முஷ்டாபிசுர் 3 விக்கெட்டும், மொகமது சைபுதின் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    ஆட்ட நாயகன் விருது முஷ்பிகுர் ரஹிமுக்கு வழங்கப்பட்டது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் வங்காளதேசம் 1-0 என முன்னிலை வகிக்கிறது.
    ஸ்பெயினில் புகழ்பெற்ற லா லிகா கிளப் கால்பந்து தொடரில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்றன. இந்த சீசனுக்கான போட்டி நேற்றுடன் நிறைவடைந்தது.
    மாட்ரிட்:

    லா லிகா கால்பந்து போட்டியில் அத்லெடிகோ மாட்ரிட் அணி 11-வது முறையாக சாம்பியன் கோப்பையை உச்சிமுகர்ந்தது.

    ஸ்பெயினில் புகழ்பெற்ற லா லிகா கிளப் கால்பந்து தொடரில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்றன. இந்த சீசனுக்கான போட்டி நேற்றுடன் நிறைவடைந்தது. வழக்கம் போல் ஒவ்வொரு அணியும் மற்றஅணிகளுடன் தலா 2 முறை மோதின. இதில் பட்டம் வெல்வதில் அத்லெடிகோ மாட்ரிட் மற்றும் நடப்பு சாம்பியன் ரியல் மாட்ரிட் அணிகள் இடையே கடும் போட்டி நிலவியது.

    நேற்று முன்தினம் இரவு அத்லெடிகோ மாட்ரிட் அணி தனது கடைசி லீக்கில் ரியல் வல்லாடோலிட் அணியை எதிர்கொண்டது. பட்டத்தை வசப்படுத்த குறைந்தது ‘டிரா’ செய்தாலே போதும் என்ற முனைப்புடன் அத்லெடிகோ அணி ஆடியது. பந்தை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதிலும், ஷாட் அடிப்பதிலும் இரு அணிகளும் ஏறக்குறைய சரிசம பலத்துடன் ஆதிக்கம் செலுத்தின. 18-வது நிமிடத்தில் பின்கள வீரர்களை ஏமாற்றி வல்லாடோலிட் வீரர் ஆஸ்கர் பிளானோ கோல் அடித்தார். அதன் பிறகும் அந்த அணி மேலும் சில ஷாட்டுகளை உதைத்த போதிலும் அத்லெடிகோ கோல் கீப்பர் ஜன் ஓபிளாக் அவர்களின் முயற்சிகளை முறியடித்தார்.

    பிற்பாதியில் அத்லெடிகோ மாட்ரிட் வீரர்கள் தங்களது தாக்குதல் பாணியை தீவிரப்படுத்தி, வேகம் காட்டினர். அதற்கு கைமேல் பலன் கிடைத்தது. அந்த அணி வீரர் ஏஞ்சல் கோரியா 57-வது நிமிடத்தில் கோல் போட்டு ஆட்டத்தை சமனுக்கு கொண்டு வந்தார்.

    இதன் பின்னர் 67-வது நிமிடத்தில் அத்லெடிகோ மாட்ரிட் வீரர் லூயிஸ் சுவாரஸ் தனிவீரராக எதிரணியின் கோல் எல்லைக்குள் பந்துடன் முன்னேறினார். அப்போது பின்கள வீரர்கள் யாரும் இல்லாத நிலையில் கோல் கீப்பரை ஏமாற்றி லாவகமாக கோல் போட்டார். அதுவே கடைசியில் வெற்றி கோலாக அமைந்தது.

    விறுவிறுப்பான ஆட்டத்தின் முடிவில் அத்லெடிகோ மாட்ரிட் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வல்லாடோலிட்டை தோற்கடித்தது. இதன் மூலம் அத்லெடிகோ மாட்ரிட் அணி 26 வெற்றி, 8 டிரா, 4 தோல்வி என்று 86 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடத்தை பிடித்து கோப்பையை தட்டிச் சென்றது. கடந்த 7 ஆண்டுகளில் அந்த அணி வென்ற முதல் பட்டம் இதுவாகும். ஒட்டுமொத்தத்தில் 11-வது மகுடமாகும்.

    ரியல்மாட்ரிட் அணி 84 புள்ளிகளுடன் 2-வது இடத்தையும், லயோனல் மெஸ்சி தலைமையிலான பார்சிலோனா 79 புள்ளிகளுடன் 3-வது இடத்தையும் பிடித்தன. கடைசி லீக்கில் தோல்வியை தழுவிய வல்லாடோலிட் 31 புள்ளிகளுடன் 19-வது இடத்துக்கு தள்ளப்பட்டதுடன், அடுத்த டிவிசனில் தரம் இறக்கப்பட்டது.

    கடந்த சீசனில் பார்சிலோனா அணிக்காக விளையாடிய 34 வயதான லூயிஸ் சுவாரசை (உருகுவே) புதிய பயிற்சியாளர் ரொனால்டோ கோமன் கழற்றி விட திட்டமிட்டார். அதற்குள் சுதாரித்துக் கொண்ட சுவாரஸ் அத்லெடிகோ மாட்ரிட் கிளப்புக்கு மாறினார். நடப்பு தொடரில் மொத்தம் 21 கோல்கள் அடித்து அத்லெடிகோ அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்துள்ளார்.

    வெற்றிக்கனியை பறித்ததும் உணர்ச்சிவசப்பட்ட சுவாரஸ் கண்ணீர் விட்டார். அவர் கூறுகையில், ‘கடந்த சீசனில் உள்ள சூழல் எனக்கு மிகவும் கடினமாக இருந்தது. என்னை மிகவும் குறைத்து (பார்சிலோனா அணி) மதிப்பிட்டனர். ஆனால் இங்கு (அத்லெடிகோ) என்னை வரவேற்று, ஊக்கப்படுத்தி தொடர்ந்து வாய்ப்பு அளித்த விதம் மகிழ்ச்சி அளிக்கிறது. அணி நிர்வாகம் என் மீது வைத்த நம்பிக்கைக்கு நன்றி கடன்பட்டுள்ளேன்’ என்றார்.
    கொரோனா தொற்றின் காரணமாகவும், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை அணிகள் அதிகமான போட்டிகளில் விளையாட இருப்பதாலும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
    ஆசிய கண்டத்தில் உள்ள அணிகளுக்கு இடையில் இரண்டு வருடத்திற்கு ஒருமுறை ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடத்தப்படும். உலகக்கோப்பையை கருத்தில் இருந்து அதற்கு ஏற்றபடி டி20 அல்லது ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடத்தப்படும்.

    இந்த வருடம் டி20 தொடர் நடத்தப்பட வேண்டும். கொரோனா தொற்று காரணமாக ஆசிய அணிகளான இந்தியா, பாகிஸ்தான், இலங்கை அணிகள் கடந்த ஆண்டு போதுமான அளவிற்கு கிரிக்கெட் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது.

    இதனால் இந்த வருடம் அதிகமான போட்டிகளில் விளையாட முடிவு செய்துள்ளன. மேலும், கொரோனா தொற்றால் அடிக்கடி போட்டி அட்டவணையை மாற்றக்கூடிய நிலையும் ஏற்படுகிறது.

    ஆகவே,ஆசிய கோப்பை போட்டிக்கான அட்டவணையை தயார் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக 2021-ம் ஆண்டுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் 2023-ம் ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
    நிதி நெருக்கடியால் சிக்கித் தவிக்கும் ஜிம்பாப்வே அணியால் வீரர்களுக்கு ஷூ போன்ற விளையாட்டு உபகரணங்களை வாங்கி கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
    1990 மற்றும் 2000-ங்களில் ஜிம்பாப்வே அணி சர்வதேச கிரிக்கெட்டில் மற்ற அணிகளுக்கு சவால் விடும் வகையில் திகழ்ந்தது. கேம்ப்பெல், பிளவர் சகோதரர்கள் போன்ற தலைசிறந்த வீரர்கள் இருந்தார்கள். ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை போன்ற அணிகளுக்கு எதிராக அதிர்ச்சி அளிக்கும் வகையில் விளையாடியுள்ளனர்.

    ஆனால் தற்போது ஜிம்பாப்வே அணி நலிவுற்று காணப்படுகிறது. கிரிக்கெட் போர்டும் நிதியுன்றி தவிக்கிறது. இதற்கு உதாரணமாக அந்த அணியின் ரியான் பர்ல், ஒவ்வொரு தொடருக்குப்பின்னும் விளையாடும் ஷூவை ஒட்ட வைக்கமுடியாது என ஷூவை பசையால் ஒட்டு காயவைக்கும் படத்தை டுவிட்டரில் வெளியிட்டு நாங்கள் ஸ்பான்சர்  பெற ஏதாவது வாய்ப்பு இருக்கிறதா என டுவிட்டரில் பகிர்ந்திருந்தார்.

    ஒரு சர்வதேச கிரிக்கெட் வீரருக்கு இந்த நிலையா? என அனைவரும் கவலைக்கொள்ளும் வகையில் அவரது போஸ்ட் இருந்தது. இந்த நிலையில் பூமா நிறுவனம் ஸ்பான்சர் வழங்க தயார் எனத் தெரிவித்துள்ளது.
    எனது மகளை பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் ஷா அப்ரிடி திருமணம் செய்ய இருக்கிறார் என சாஹிப் அப்ரிடி தெரிவித்துள்ளார்.
    பாகிஸ்தான் அணியின் முன்னாள அதிரடி பேட்ஸ்மேன் சாஹித் அப்ரிடி. இவரது மகளை தற்போது பாகிஸ்தான் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரான ஷாஹீன் ஷா அப்ரிடி திருமணம் செய்ய இருக்கிறார் என்ற செய்தி வெளியாகி இருந்தது.

    இந்த நிலையில் தனது மகளுக்கும், ஷாஹீன் ஷாவிற்கும் இடையில் திருமணம் நடைபெற இருக்கிறது என்பதை சாஹித் அப்ரிடி உறுதிப்படுத்தியுள்ளார்.

    மகளின் திருமணம் குறித்து சாஹித் அப்ரிடி கூறுகையில் ‘‘ஷாஹின் ஷா எனது வருங்கால மருமகன் ஆக இருக்கிறார். தற்போது எனது மகள் படிப்பில் ஆர்வம் காட்டி வருகிறார். அவர் டாக்டர் படிக்க விரும்புகிறார். மீதமுள்ள படிப்பை பாகிஸ்தானில் தொடர்வது அல்லது இங்கிலாந்தில் படிப்பது குறித்து முடிவு செய்யவில்லை.

    அவர்களுடைய நிச்சயதார்த்தம் உறுதி செய்யப்படும்வரை இருவருக்கும் தொடர்பு கிடையாது. ஷாஹீன் ஷா குடும்பத்தினர் என்னுடைய குடும்பத்தினருடன் இதுகுறித்து பேசினர். இரு குடும்பதத்தினரும் தொடர்பில் இருந்து அதன்பின் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டது. இருவரும் திருமணம் செய்ய வேண்டும் என அல்லா விரும்பினால், அது நடக்கும். ஷாஹீன் ஷா தொடர்ந்து விளையாட்டிலும், விளையாட்டிற்கு வெளியிலும் சிறப்பாக செயல்பட வேண்டு என நான் பிரார்த்திக்கிறேன்’’ என்றார்.
    ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த டி20 நட்சத்திர வீரர் ரஷித் கான் மீண்டும் பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் லாகூர் அணிக்காக விளையாட இருக்கிறார்.
    பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 கிரிக்கெட் கடந்த பிப்ரவரி 20-ந்தேதி பாகிஸ்தானில் தொடங்கியது. கொரோனா தொற்று அதிகரிக்க 14 போட்டிகள் நடைபெற்ற பின், போட்டி ரத்து செய்யப்பட்டது. மீதமுள்ள போட்டிகளில் ஜூன் 1-ந்தேதி முதல் ஜூன் 20-ந்தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கிறது.

    லாகூர் குவாலண்டர்ஸ் அணி ஆப்கானிஸ்தானின் ரஷித் கானை ஒப்பந்தம் செய்திருந்தது. அதன்பின் அவருக்குப் பதிலாக வங்காளதேசத்தின் ஷாகிப் அல் ஹசனை ஒப்பந்தம் செய்தது. ஷாகிப் அல் ஹசன் தொடரில் இருந்து விலகியுள்ளார்.

    இந்த நிலையில் மீண்டும் ரஷித் கானை லாகூர் அணி ஒப்பந்தம் செய்துள்ளது. ‘‘மீண்டும் பாகிஸ்தான் சூப்பர் லீக், லாகூர் அணிக்கு திரும்புவது மகிழ்ச்சி அளிக்கிறது. முன்னதாக லாகூர் அணியுடன் சில சிறந்த ஆட்டங்களை வெளிப்படுத்தினேன். அணியும் நல்ல தொடக்கத்தை பெற்றது. அந்த உத்வேகத்துடன் விளையாடி அணிக்கு உதவுவேன் என்று நம்புகிறேன்’’ என ரஷித் கான் தெரிவித்துள்ளார்.
    ஐபிஎல் போட்டியில் பங்கேற்ற வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால், போட்டிகள் உடனடியாக ரத்து செய்யப்பட்டு காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
    இந்தியாவில் டி20 உலகக்கோப்பை அக்டோபர் 18-ந்தேதி தொடங்குகிறது. 

    இந்தியா இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் ஆகஸ்ட் 4 முதல் 8-ந்தேதி வரையில் நடைபெறுகிறது.

    2-வது டெஸ்ட் ஆகஸ்ட் 12-ந்தேதி முதல் 16-ந்தேதி வரையிலும், 3-வது டெஸ்ட் 25-ந்தேதி முதல் ஆகஸ்ட் 29-ந்தேதி வரையிலும் நடக்கிறது.

    4-வது டெஸ்ட் செப்டம்ர் 2-ந்தேதி முதல் 6-ந்தேதி வரையிலும், 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் செப்டம்பர் 10-ந்தேதி முதல் செப்டம்பர் 14-ந்தேதி வரையிலும் நடக்கிறது.

    இதற்கிடையில் ஏப்ரல் 9-ந்தேதி தொடங்கிய ஐபிஎல் கிரிக்கெட் போட்டி மே 4-ந்தேதி கொரோனா தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இன்னும் 31 போட்டிகள் மீதமுள்ளது.

    இந்த போட்டியை செப்டம்பர் 15-ந்தேதி முதல் அக்டோபர் 15-ந்தேதி வரை நடத்த பிசிசிஐ ஆர்வமாக உள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று அதிகமாக இருப்பதால் ஐக்கிய அரபு அமீரகத்தில் போட்டியை நடத்த விரும்புகிறது.

    செப்டம்பர் 14-ந்தேதிதான் இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் முடிவடைகிறது. 2-வது டெஸ்ட் 12-ந்தேதி தொடங்குகிறது. 3-வது டெஸ்ட் 25-ந்தேதி தொடங்கி 29-ந்தேதி முடிவடைகிறது இரண்டு டெஸ்டும் 18 நாட்கள் இடைவெளியில் நடத்தப்படுகின்றன. 2-வது டெஸ்டுக்கும் 3-வது டெஸ்டுக்கும் இடையில் 8 நாட்கள் இடைவெளி உள்ளது.

    இந்த இடைவெளியை குறைத்தால் வீரர்கள் ஐபிஎல் போட்டிக்கு தயாராகிவிட முடியும். இதனால் இங்கிலாந்திடம் இரண்டு டெஸ்ட் போட்டிற்கான இடைவெளியை குறைக்க இந்திய கிரிக்கெட் வாரியம் கேட்க உள்ளது.

    ஐபிஎல் போட்டி அக்டோபர் 15-ந்தேதி முடிவடையும் நிலையில் டி20 உலகக்கோப்பை அக்டோபர் 18-ந்தேதி தொடங்குகிறது. இரண்டிற்கும் இடையில 3 நாட்கள்தான் இடைவெளி உள்ளது. இருந்தாலும் பிளே-ஆஃப் சுற்றில் நான்கு அணிகள்தான் விளையாடும். இதனால் மீதமுள்ள அணிகளில் விளையாடும் வீரர்கள் உலகக் கோப்பைக்கு தயாராக முடியும்.

    பிசிசிஐ

    ஐசிசி-க்கு உலகக்கோப்பைக்கான மைதானங்களை 15 நாட்களுக்கு முன் ஒப்படைக்க வேண்டும். உலகக்கோப்பையை இந்தியாவில் நடத்த ஐசிசி சம்மதம் தெரிவிக்க வேண்டும். ஒருவேளை ஐக்கிய அரபு அமீரகதத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டால், ஐபிஎல் போட்டி நடைபெற்று வருவதால் மைதானங்களை ஒதுக்குவதில் சிக்கல் ஏற்படும்.

    ஒருவேளை ஐபிஎல் ஐக்கிய அரபு அமீரகதத்திலும், டி20 உலகக்கோப்பை இந்தியாவிலும் நடத்த முடிவு செய்யப்பட்டால் எந்த பிரச்சினையும் இருக்காது. 
    புதிய ஒப்பந்த விதிமுறைகளின்படி வீரர்களின் பங்களிப்பு, உடல் தகுதியின் அடிப்படையில் அவர்களுக்கு சம்பளம் வழங்கப்படும் என தெரிகிறது.

    கொழும்பு:

    இலங்கை கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் 24 வீரர்களுக்கான ஒப்பந்தத்தை அறிவித்தது.

    புதிய ஒப்பந்த விதிமுறைகளின்படி வீரர்களின் பங்களிப்பு, உடல் தகுதியின் அடிப்படையில் அவர்களுக்கு சம்பளம் வழங்கப்படும் என தெரிகிறது.

    2019 முதல் சிறப்பாக விளையாடியதற்காக 50 சதவீதமும், உடற் தகுதிக்கு 20 சதவீதமும், தலைமை பண்பு, தொழில் முறை, வருங்கால திறமை, அணிக்கான பங்களிப்பு ஆகியவற்றுக்காக 10 சதவீதமும் வழங்கப்படும் என வீரர்களுக்கு வழங்கப்பட்ட புதிய ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இந்த புதிய விதிமுறைகளுக்கு இலங்கை கிரிக்கெட் வீரர்கள் அனைவருமே எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    இதுதொடர்பாக வீரர்கள் சார்பில் வெளியிடப்பட் டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    இந்த ஒப்பந்தம் நியாய மற்றது. வெளிப்படைத்தன்மை இல்லாதது. இதில் கையெழுத்திட நாங்கள் விரும்பவில்லை. வீரர்களை துப்பாக்கி முனையில் நிறுத்த வேண்டாம்.

    புதிய விதிமுறைகளின் படி ஒவ்வொரு வீரரும் எத்தனை புள்ளிகள் சேர்த்துள்ளார்கள் என்பதை அறிவிக்க வேண்டும். மேலும் மற்ற நாட்டு கிரிக்கெட் வாரியங்களை சேர்ந்த வீரர்களின் சம்பளத்தை விடவும் எங்களுடைய சம்பளம் 3 மடங்கு குறைவாக உள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் அனைத்து வீரர்களும் ஒப்பந்தத்தில் வருகிற 3-ந் தேதிக்குள் கையெழுத்திட வேண்டும் என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டுள்ளது.

    ×