என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐபிஎல்
    X
    ஐபிஎல்

    ஒரு பக்கம் உலகக்கோப்பை, மறுபக்கம் இங்கிலாந்து தொடர்: மத்தியில் ஐபிஎல் மீதி போட்டியை நடத்த பிசிசிஐ திட்டம்

    ஐபிஎல் போட்டியில் பங்கேற்ற வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால், போட்டிகள் உடனடியாக ரத்து செய்யப்பட்டு காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
    இந்தியாவில் டி20 உலகக்கோப்பை அக்டோபர் 18-ந்தேதி தொடங்குகிறது. 

    இந்தியா இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் ஆகஸ்ட் 4 முதல் 8-ந்தேதி வரையில் நடைபெறுகிறது.

    2-வது டெஸ்ட் ஆகஸ்ட் 12-ந்தேதி முதல் 16-ந்தேதி வரையிலும், 3-வது டெஸ்ட் 25-ந்தேதி முதல் ஆகஸ்ட் 29-ந்தேதி வரையிலும் நடக்கிறது.

    4-வது டெஸ்ட் செப்டம்ர் 2-ந்தேதி முதல் 6-ந்தேதி வரையிலும், 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் செப்டம்பர் 10-ந்தேதி முதல் செப்டம்பர் 14-ந்தேதி வரையிலும் நடக்கிறது.

    இதற்கிடையில் ஏப்ரல் 9-ந்தேதி தொடங்கிய ஐபிஎல் கிரிக்கெட் போட்டி மே 4-ந்தேதி கொரோனா தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இன்னும் 31 போட்டிகள் மீதமுள்ளது.

    இந்த போட்டியை செப்டம்பர் 15-ந்தேதி முதல் அக்டோபர் 15-ந்தேதி வரை நடத்த பிசிசிஐ ஆர்வமாக உள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று அதிகமாக இருப்பதால் ஐக்கிய அரபு அமீரகத்தில் போட்டியை நடத்த விரும்புகிறது.

    செப்டம்பர் 14-ந்தேதிதான் இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் முடிவடைகிறது. 2-வது டெஸ்ட் 12-ந்தேதி தொடங்குகிறது. 3-வது டெஸ்ட் 25-ந்தேதி தொடங்கி 29-ந்தேதி முடிவடைகிறது இரண்டு டெஸ்டும் 18 நாட்கள் இடைவெளியில் நடத்தப்படுகின்றன. 2-வது டெஸ்டுக்கும் 3-வது டெஸ்டுக்கும் இடையில் 8 நாட்கள் இடைவெளி உள்ளது.

    இந்த இடைவெளியை குறைத்தால் வீரர்கள் ஐபிஎல் போட்டிக்கு தயாராகிவிட முடியும். இதனால் இங்கிலாந்திடம் இரண்டு டெஸ்ட் போட்டிற்கான இடைவெளியை குறைக்க இந்திய கிரிக்கெட் வாரியம் கேட்க உள்ளது.

    ஐபிஎல் போட்டி அக்டோபர் 15-ந்தேதி முடிவடையும் நிலையில் டி20 உலகக்கோப்பை அக்டோபர் 18-ந்தேதி தொடங்குகிறது. இரண்டிற்கும் இடையில 3 நாட்கள்தான் இடைவெளி உள்ளது. இருந்தாலும் பிளே-ஆஃப் சுற்றில் நான்கு அணிகள்தான் விளையாடும். இதனால் மீதமுள்ள அணிகளில் விளையாடும் வீரர்கள் உலகக் கோப்பைக்கு தயாராக முடியும்.

    பிசிசிஐ

    ஐசிசி-க்கு உலகக்கோப்பைக்கான மைதானங்களை 15 நாட்களுக்கு முன் ஒப்படைக்க வேண்டும். உலகக்கோப்பையை இந்தியாவில் நடத்த ஐசிசி சம்மதம் தெரிவிக்க வேண்டும். ஒருவேளை ஐக்கிய அரபு அமீரகதத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டால், ஐபிஎல் போட்டி நடைபெற்று வருவதால் மைதானங்களை ஒதுக்குவதில் சிக்கல் ஏற்படும்.

    ஒருவேளை ஐபிஎல் ஐக்கிய அரபு அமீரகதத்திலும், டி20 உலகக்கோப்பை இந்தியாவிலும் நடத்த முடிவு செய்யப்பட்டால் எந்த பிரச்சினையும் இருக்காது. 
    Next Story
    ×