search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரவீந்திர ஜடேஜா
    X
    ரவீந்திர ஜடேஜா

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி- இந்திய அணியோடு ஜடேஜா இணைந்தார்

    இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் பங்கேற்கும் இந்திய அணியை சேர்ந்த 20 வீரர்கள், மாற்று வீரர்கள், பயிற்சியாளர்கள், உதவி பயிற்சியாளர்கள் ஆகியோருக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் 14 நாட்கள் கொண்ட கொரோனா பாதுகாப்பு வளையத்தை உருவாக்கி உள்ளது.

    மும்பை:

    வீராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வருகிற 2-ந் தேதி இங்கிலாந்து புறப்பட்டு செல்கிறது.

    இந்திய அணி இங்கிலாந்தில் 6 டெஸ்டில் விளையாடுகிறது. முதலில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் நியூசிலாந்துடன் விளையாடுகிறது. இந்த போட்டி ஜூன் 18-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை சவுத்தம்டனில் நடக்கிறது.

    அதன்பிறகு இந்திய அணி இங்கிலாந்துடன் 5 டெஸ்டில் ஆடுகிறது. ஆகஸ்டு 4-ந் தேதி முதல் செப்டம்பர் 14-ந் தேதி வரை நடைபெறும்.

    இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் பங்கேற்கும் இந்திய அணியை சேர்ந்த 20 வீரர்கள், மாற்று வீரர்கள், பயிற்சியாளர்கள், உதவி பயிற்சியாளர்கள் ஆகியோருக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் 14 நாட்கள் கொண்ட கொரோனா பாதுகாப்பு வளையத்தை உருவாக்கி உள்ளது.

    இந்த தனிமைப்படுத்தல் காலமானது கடந்த 20-ந் தேதி தொடங்கியது. அஸ்வின், வாஷிங்டன் சுந்தர், மயங்க் அகர்வால் உள்ளிட்ட வீரர்கள் ஏற்கனவே சிறப்பு விமானம் மூலம் மும்பை சென்று கொரோனா பாதுகாப்பு வளையத்தில் இணைந்தனர்.

    இந்தநிலையில் இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ஜடேஜா மும்பை சென்று அணியோடு இணைந்து கொண்டார். 3 ஆர்.டி.-பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொண்ட பிறகே இந்திய வீரர்கள் மும்பையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த வீரர்கள் வரிசையில் தற்போது ஜடேஜாவும் இணைந்து தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

    வீரர்கள் பாதுகாப்பு வளையத்தில் இணைந்த பின்னர் மேலும் 3 முறை பரிசோதனை எடுக்கப்படும். இந்த வகையில் லண்டனுக்கு பயணமாகும் முன்பு இந்திய வீரர்கள் 6 முறை பரிசோதனை செய்து கொண்டதற்கான முடிவுகளை எடுத்துச் செல்வார்கள்.

    இங்கிலாந்து புறப்படும் முன்பு வீரர்களுக்கு முதல் கொரோனா தடுப்பூசி டோஸ் செலுத்தப்படும். இங்கிலாந்து சென்றடைந்த பிறகும் இந்திய வீரர்கள் அங்கு தனிமையில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

    Next Story
    ×