என் மலர்
விளையாட்டு
தமிழ்நாடு பிரிமீயர் லீக் இறுதிப்போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கெதிராக டாஸ் வென்று திருச்சி வாரியர்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
தமிழ்நாடு பிரிமீயர் லீக் டி20 தொடரின் இறுதிப்போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கிறது. இதில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- திருச்சி வாரியர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் திரு்சசி வாியர்ஸ் அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
இரு அணி வீரர்கள் விவரம் வருமாறு:-
சேப்பாக் சூப்பர் கில்லீஸ்
1. கவுசிக் காந்தி (கே), 2. என்.ஜெகதீசன்(கீ ), 3. ராதாகிருஷ்ணன், 4. சசிதேவ், 5. ஆர்.சதீஷ், 6. ஹரிஷ் குமார், 7. சோனு யாதவ், 8. சாய் கிஷோர், 9. எம்.சித்தார்த், 10. பி. அருண், 11. அலெக்சாண்டர்.
திருச்சி வாரியர்ஸ்
1. சந்தோஷ் ஷிவ், 2. அமித் சாத்விக், 3. நிதிஷ் ராஜகோபால், 4. முகமது அத்னன்கான், 5. ஆதித்யா கணேஷ், 6. அந்தோணி தாஸ், 7. சரவண குமார், 8. எம்.மதிவாணன், 9. பொய்யாமொழி, 10. ரஹில் ஷா (கேப்டன்), 11. சுனில் சாம்.
லார்ட்ஸ் டெஸ்டில் இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 391 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆன நிலையில், இந்தியா 2-வது இன்னிங்சில் விரைவாக 3 விக்கெட்டுகளை இழந்துள்ளது.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 364 ரன்கள் குவித்தது. இந்தியாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இங்கிலாந்து 2-வது இன்னிங்சில் சிறப்பாக விளையாடி 391 ரன்கள் விளாசியது.
இங்கிலாந்து முதல் இன்னிங்சில் ஆல்-அவுட் ஆனதும் நேற்றைய 3-வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இன்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கியது. 27 ரன்கள் பின்தங்கிய நிலையில் இந்தியா 2-வது இன்னிங்சை தொடங்கியது.
கே.எல். ராகுல், ரோகித் சர்மா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் இன்னிங்சில் சதம் அடித்த கே.எல். ராகுல் 5 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.
அடுத்து புஜாரா களம் இறங்கினார். புஜாரா நிதானமாக விளையாட, ரோகித் சர்மா அதிரடியாக விளையாட முயற்சி செய்தார். ஆனால், ஹூக் ஷாட் அடிக்க முயற்சி செய்து இடது பக்கம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ரோகித் சர்மா 36 பந்தில் 21 ரன்கள் அடித்து வெளியேறினார்.

இதனால் இந்தியா 27 ரன்கள் எடுத்த நிலையில் தொடக்க வீரர்களை இழந்தது. 3-வது விக்கெட்டுக்கு புஜாரா உடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். நம்பிக்கையுடன் இங்கிலாந்து பந்து வீச்சை எதிர்கொண்டு விளையாடினார். ஆனால், 20 ரன்கள் எடுத்த நிலையில் சாம் கர்ரன் பந்தில் வெளியேறினார். அப்போது இந்தியா 55 ரன்கள் எடுத்திருந்தது. 4-வது விக்கெட்டுக்கு புஜாரா களம் இறங்கினார்.
இந்தியா 25 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 56 ரன்கள் எடுத்திருக்கும்போது 4-வது நாள் மதிய உணவு இடைவேளை விடப்பட்டது. புஜாரா 3 ரன்னுடனும், ரஹானே 1 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
தற்போது வரை இந்தியா 29 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது.
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்டின் முதல் இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் அணி 253 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
ஜமைக்கா:
பாகிஸ்தான், வெஸ்ட்இண்டீஸ் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஜமைக்காவில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 70.3 ஓவரில் 217 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியின் பஹாத் ஆலம் 56 ரன்னும், பஹீம் அஷ்ரப் 44 ரன்னும், பாபர் அசாம் 30 ரன்னும் எடுத்தனர்.
வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ஹோல்டர், சீலஸ் தலா 3 விக்கெட்டும், ரோச் 2 விக்கெட்டும் எடுத்தனர்.
தொடர்ந்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி தனது முதல் இன்னிங்சில் 253 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
பிராத்வெயிட் 97 ரன்னிலும், ஹோல்டர் 58 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
பாகிஸ்தான் சார்பில் ஷஹீன் அப்ரிதி 4 விக்கெட்டும், அப்பாஸ் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, பாகிஸ்தான் அணி இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்து ஆடியது. தொடக்க ஆட்டக்காரர் இம்ரான் பட் டக் அவுட்டானார். அபித் அலி 34 ரன்னில் ஆட்டமிழந்தார். அசார் அலி 23 ரன்னிலும், பவாத் ஆலம் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினர்.

ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் கேப்டன் பாபர் அசாம் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். அவருக்கு விக்கெட் கீப்பர் ரிஸ்வான் ஒத்துழைப்பு கொடுத்தார். இந்த ஜொடி 56 ரன்கள் சேர்த்த நிலையில், ரிஸ்வான் 30 ரன்னில் அவுட்டானார்.
தேநீர் இடைவேளைக்கு பிறகு மழை குறுக்கிட்டதால் ஆட்டம் சிறிது பாதிக்கப்பட்டது.
மூன்றாம் நாள் முடிவில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் எடுத்துள்ளது. பாபர் அசாம் 54 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். பாகிஸ்தான் இதுவரை 124 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ரோச், சீலஸ் தலா 2 விக்கெட்டும், ஹோல்டர் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்தியாவின் சிராஜ் 4 விக்கெட் வீழ்த்தினார்.
லண்டன்:
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது.
முதலில் பேட் செய்த இந்தியா முதல் இன்னிங்சில் 364 ரன்கள் குவித்தது. ரோகித் சர்மா 83 ரன்களில் ஆட்டமிழந்தார். கே.எல். ராகுல் 129 ரன்னில் அவுட்டானார். ரிஷப் பண்ட் 37 ரன்னிலும், ஜடேஜா 40 ரன்னிலும் வெளியேறினர்.
இங்கிலாந்து சார்பில் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஐந்து விக்கெட்டும், ஆலி ராபின்சன் மற்றும் மார்க் வுட் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ரோரி பர்ன்ஸ் 49 ரன்னில் ஷமியிடம் வீழ்ந்தார். பேர்ஸ்டோவ் அரை சதமடித்து 57 ரன்னில் அவுட்டானார்.

ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் கேப்டன் ஜோ ரூட் பொறுப்புடன் ஆடி சதமடித்தார்.
மூன்றாம் நாள் முடிவில் இங்கிலாந்து 391 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஜோ ரூ 180 ரன்னுடன் அவுட்டாகாமல் இருந்தார். தற்போது இங்கிலாந்து 27 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
இந்தியா சார்பில் சிராஜ் 4 விக்கெட், இஷாந்த் சர்மா 3, ஷமி 2 விக்கெட் வீழ்த்தினர்.
இந்திய அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட்டின் முதல் இன்னிங்சில் சதம் அடித்ததன் மூலம் ஜோரூட் இங்கிலாந்து அணி கேப்டனாக 11 சதங்களை அடித்துள்ளார்.
லார்ட்ஸ்:
இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடந்து வருகிறது. முதலில் பேட் செய்த இந்திய அணி 364 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இதனையடுத்து இங்கிலாந்து அணி களமிறங்கி ஆடியது 2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் 119 ரன்களுக்கு 3 விக்கெட்டை இழந்திருந்தது.
இந்நிலையில் 3-ம் நாளான இன்று இங்கிலாந்து அணி தொடர்ந்து ஆடி வருகிறது. அபாரமாக ஆடிய ஜோ ரூட் தனது 22-வது சதத்தை அடித்து அசத்தினார். அவர் இங்கிலாந்து அணி கேப்டனாக 11 சதங்களை அடித்துள்ளார். இதன் மூலம் அதிக சதங்கள் அடித்த இங்கிலாந்து வீரர்களில் ஜோரூட் 3-வது இடத்தை பிடித்தார். 33 சதங்களுடன் குக் முதல் இடத்திலும் 23 சதங்களுடன் கெவின் பிட்டர்சன் 2-வது இடத்திலும் உள்ளனர்.
ஒரு ஆண்டில் அதிக சதங்கள் அடித்த இங்கிலாந்து கேப்டனுக்கான பட்டியலில் (5) சதங்கள் அடித்து ஜோரூட் முதல் இடத்தில் உள்ளார். இதற்கு முன்பு 1990-ல் கிரஹாம் கூச் 4 சதங்கள் அடித்திருந்திருந்தார். இந்த சாதனையை ரூட் 11 வருடங்கள் கழித்து முறியடித்துள்ளார்.
ஜோ ரூட் சதத்தை நெருங்கும் நிலையில், பேர்ஸ்டோவ் அபாரமாக விளையாடி அரைசதம் அடித்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 364 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது. பின்னர் இங்கிலாந்து முதல் இன்னிங்சை தொடங்கியது.
நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து 3 விக்கெட் இழப்பிற்கு 119 ரன்கள் எடுத்திருந்தது. ஜோ ரூட் 48 ரன்களுடனும், பேர்ஸ்டோவ் 6 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் ஜோ ரூட் அரைசதம் அடித்தார். இந்தியாவுக்கு எதிராக தொடர்ந்து மூன்று இன்னிங்சிலும 50 ரன்களுக்கு மேல் அடித்து முத்திரை படைத்தார். மறுமுனையில் பேர்ஸ்டோவும் நிலைத்து நின்று விளையாடினார்.

இருவரின் விக்கெட்டையும் வீழ்த்த இந்திய பந்து வீச்சாளர்கள் மேற்கொண்ட முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை. இதனால் 3-வது நாள் மதிய உணவு இடைவேளை வரை ஜோ ரூட்- பேர்ஸ்டோவ் ஜோடியை இந்திய பந்து வீச்சாளர்களால் பிரிக்க முடியவில்லை. மதிய உணவு இடைவேளைக்கு சற்றுமுன் பேர்ஸ்டோவ் அரைசதம் அடித்தார்.
இங்கிலாந்து 3-வது நாள் மதிய உணவு இடைவேளை வரை 3 விக்கெட் இழப்பிற்கு 216 ரன்கள் அடித்துள்ளது. ஜோ ரூட் 89 ரன்களுடனும், பேர்ஸ்டோவ் 51 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
ஜோ ரூட் மூன்று இன்னிங்சில் தொடர்ச்சியாக 50 ரன்களுக்கு மேல் அடித்த நிலையில், ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்து வீச்சில் அசத்தி வருகிறார்.
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. நாட்டிங்காம் டிரென்ட் பிரிட்ஜியில் நடைபெற்ற முதல் டெஸ்ட் டிரா ஆனது. லார்ட்ஸ் மைதானத்தில் 2-வது டெஸ்ட் நடைபெற்று வருகிறது.
முதல் டெஸ்டில் ஜோ ரூட் இரண்டு இன்னிங்சிலும் 50 ரன்களுக்கு மேல் அடித்தார். அதேபோல் லார்ட்ஸ் டெஸ்டிலும் அரைசதம் அடித்து தொடர்ந்து விளையாடி வருகிறார். ஜேம்ஸ் ஆண்டர்சன் முதல் டெஸ்டில் நான்கு விக்கெட் வீழ்த்தினார். லார்ட்ஸ் டெஸ்டின் முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுகள் சாய்த்தார்.
ஜோ ரூட்டைத் தவிர மற்ற பேட்ஸ்மேன்கள் யாரும் சிறப்பாக விளையாடவில்லை. இதனால் ஜோ ரூட், ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகிய இருவர்தான் இந்திய தொடருக்கான இங்கிலாந்து அணி என கெவின் பீட்டர்சன் கிண்டல் செய்துள்ளார்.
‘‘தற்போது இந்தியாவுக்கு எதிராக ஜோ ரூட், ஜேம்ஸ் ஆண்டர்சன் மட்டுமே விளையாடி வருகிறார்கள். வேறு யாராவது ஒருவர் சிறப்பான ஆட்டத்திற்கு திரும்புவது அவசியம். விரைவாக திரும்புங்கள்’’ எனத் தெரிவித்துள்ளார்.
இந்திய வீராங்கனைகள் பிரணீத் கவுர், பிரியா குர்ஜார் மற்றும் ரிதுவர்ஷினி செந்தில்குமார் ஆகிய மூவரும் சிறப்பாக அம்பு எய்து உலக சாதனை படைத்தனர்.
புதுடெல்லி:
போலந்து நாட்டின் ரோக்லா நகரில் உலக இளையோர் வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெறுகினறன. இதில் மகளிருக்கான காம்பவுண்ட் கேடட் பிரிவில் இந்திய வீராங்கனைகள் பிரணீத் கவுர், பிரியா குர்ஜார் மற்றும் ரிதுவர்ஷினி செந்தில்குமார் ஆகிய மூவரும் சிறப்பாக அம்பு எய்து அசத்தினர். இறுதிச்சுற்றில் இவர்கள் 228-216 என்ற புள்ளிகள் கணக்கில் துருக்கி அணியை வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றனர்.
தகுதிச் சுற்றில் இவர்கள் மூவரும் அணியாக மொத்தமுள்ள 2160 புள்ளிகளுக்கு 2067 புள்ளிகள் பெற்று புதிய உலக சாதனை படைத்தனர். இந்தப் பிரிவில் அமெரிக்க வீராங்கனைகள் 2045 புள்ளிகள் பெற்றதே முந்தைய உலக சாதனையாக இருந்தது. அந்தச் சாதனையை இந்திய வீராங்கனைகள் முறியடித்தனர்.
இளையோர் உலக சாம்பியன்ஷிப் வில்வித்தை போட்டியில் இந்திய ஆண்கள் மற்றும் கலப்பு அணிகள் தங்கம் வென்றன.
போலந்து நாட்டில் இளையோர்களுக்கான உலக சாம்பியன்ஷிப்ஸ் வில்வித்தை போட்டி நடைபெற்று வருகிறது.
ஆண்களுக்கான காம்பவுண்ட் கேடட் பிரிவில் இந்தியா இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது. இறுதிச்சுற்றில் அமெரிக்காவை 233-231 என வீழ்த்தி இந்திய அணி தங்கப்பதக்கம் வென்றது.
அதேபோல் பெண்கள் அணி துருக்கியை 228-216 என வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றது.
அதனைத் தொடர்ந்து கலப்பு அணியும் தங்கம் வென்று அசத்தியது.
லார்ட்ஸ் மைதானம் தனக்கு கூடுதல் உத்வேகத்தை கொடுக்கும் என இங்கிலாந்தின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் தெரிவித்துள்ளார்.
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா முதல்நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 276 ரன்கள் என்ற வலுவான நிலையில் இருந்தது.
நேற்றைய 2-வது நாள் ஆட்டத்தில் ஜேம்ஸ் ஆண்டர்சன் சிறப்பாக பந்து வீச இந்தியா 364 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. 88 ரன்கள் எடுப்பதற்குள் இந்தியா 7 விக்கெட்டுக்களை இழந்தது. ஆண்டர்சன் 62 ரன்கள் விட்டுக்கொடுத்து ஐந்து விக்கெட்டுகள் சாய்த்தார். இதன்மூலம் 31-வது முறையாக ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். லார்ட்ஸ் மைதானத்தில் மட்டும் ஏழு முறை ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார்.
39 வயதான ஜேம்ஸ் ஆண்டர்சன் டெஸ்ட் போட்டியில் இருந்து எப்போது விடைபெறுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் தற்போதைக்கு ஓய்வு என்ற பேச்சுக்கே இடமில்லை என ஆண்டர்சன் தெரிவித்து வருகிறார்.
லார்ட்ஸ் அவரது சொந்த மைதானமாகும். இங்கு விளையாடும்போதெல்லாம் ஆண்டர்சனுக்கு இது கடைசி போட்டியாக இருக்கும். ஆகவே, சிறப்பாக பந்து வீச வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
ஆனால், லண்டன் லார்ட்ஸில் இது கடைசி அல்ல என ஜேம்ஸ் ஆண்டர்சன் தற்போதைக்கு ஓய்வு இல்லை என்பதை சூசகமாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஜேம்ஸ் ஆண்டர்சன் கூறுகையில் ‘‘லண்டன் லார்ட்ஸ் என்றால் எனக்கு சற்று கூடுதல் சிறப்பு. எனக்கு கூடுதலாக சிறப்பான பந்து வீச்சை கொண்டுவரும். கடந்த சில போட்டிகளுக்காக நான் இங்கே வரும்போது, எனக்கு கடைசி போட்டியாக இருக்கலாம். இதனால் அவர் சிறப்பாக செயல்பட வேண்டும் என நீங்கள் நினைக்கலாம். ஆகவே, இந்த சிறந்த பந்து வீச்சை நீங்கள் விரும்புவீர்கள்.

லண்டன் லார்ட்ஸ் மைதானம் நான் அறிமுகமான இடம். நான் முதன்முறையாக ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்திய இடம். தற்போது 7 முறை ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்தியிருப்பது நம்பமுடியாதது. இதை எப்படி செய்தேன் என்பது எனக்கே தெரியவிலலை. இந்த போட்டி என்னுடைய கடைசியானது கிடையாது. லார்ட்ஸ் மைதான கவுரவ பலகையில் எனது பெயர் எழுதப்படுவது இது கடைசியாக இருக்காது என்று நம்புகிறேன்’’ என்றார்.
உலகக்கோப்பைக்கு ஐபிஎல் தொடரின் 2-வது பகுதி ஆட்டங்கள் சிறந்த தயார் படுத்துதல் தொடராக இருக்கும் என ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தியாவில் நடைபெற்ற ஐபிஎல் தொடர் பாதியிலேயே ரத்து செய்யப்பட்டு ஒத்திவைக்கப்பட்டது. இதனால் மீதமுள்ள போட்டிகளை 2-வது பாதியாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்தது.
அதன்படி அடுத்த மாதம் 19-ந்தேதி (செப்டம்பர்) முதல் அக்டோபர் 15-ந்தேதி வரை ஐபிஎல் போட்டி நடைபெறுகிறது. ஐபிஎல் போட்டி முடிவடைந்த இரண்டு நாட்களில், அதாவது அக்டோபர் மாதம் 17-ந்தேதி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது. நவம்பர் 14-ந்தேதி வரை நடக்கிறது.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கிரிக்கெட் போட்டிகள் அதிக அளவில் நடைபெறவில்லை. மேலும், ஆஸ்திரேலியாவின் பேட் கம்மின்ஸ், வார்னர் உள்பட முக்கிய வீரர்கள் வங்காளதேசம் உள்பட சில தொடர்களில் இருந்து விலகியுள்ளனர். இதனால் அவர்கள் தற்போது வரை சுமார் நான்கு மாதங்கள் கிரிக்கெட் விளையாடாமல் உள்ளனர்.
இந்த நிலையில் உலகக்கோப்பைக்கு முன் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடைபெற இருப்பது, உலகக்கோப்பைக்கு சிறந்த தயார் படுத்துதலாக இருக்கும் என ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டனும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் பயிற்சியாளருமான ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ரிக்கி பாண்டிங் கூறுகையில் ‘‘தற்போது வரை மூன்று நான்கு மாதங்களாக ஆஸ்திரேலிய வீரர்கள் அதிகமான கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவில்லை. அவர்களுடைய ஆட்டத்தை மீண்டும் கொண்டு வருவதற்கு உயர்தரமான கிரிக்கெட்டில் உலகின் தலைசிறந்த வீரர்களுக்கு எதிராக விளையாட வேண்டியது அவசியம்.
இதுபோன்ற சீதோஷ்ண நிலை மற்றும் வலுவான உள்ளூர் கிரிக்கெட் தொடரில் விளையாடுவது, அவர்கள் உலகக்கோப்பைக்கு தயார் ஆகுவதற்கு ஐபிஎல் தொடர் சிறந்த தயார்படுத்துதலாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை’’ என்றார்.
ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடைபெற இருக்கும் ஆண்களுக்கான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்டில் ஒவ்வொரு அணிகளும் 15 வீரர்களுடன் கலந்து கொள்ள ஐ.சி.சி. அனுமதி அளித்துள்ளது.
இந்தியாவில் ஆண்களுக்கான டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற இருந்தது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் போட்டியை நடத்த ஐ.சி.சி.- பி.சி.சி.ஐ. ஆகியவை முடிவு செய்தன. அதன்படி அக்டோபர் மாதம் 17-ந்தேதியில் இருந்து நவம்பர் 14-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது.
இதில் ஒவ்வொரு அணியும் தலா 15 வீரர்களுடன் கலந்து கொள்ள ஐ.சி.சி. அனுமதித்துள்ளது. மேலும், பயிற்சியாளர்களுடன் 8 ஸ்டாஃப்கள் கலந்து கொள்ளவும் அனுமதி அளித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று காலம் என்பதால் கூடுதல் வீரர்களுக்கு ஐ.சி.சி. அனுமதி அளித்துள்ளது.
பாதுகாப்பு வளையம் உருவாக்கப்படுவதால் முன்னெச்சரிக்கை காரணமாக கூடுதல் வீரர்களை அழைத்துச் செல்லவும் ஐ.சி.சி. அனுமதி அளித்துள்ளது. ஆனால், கூடுதல் வீரர்களுக்கான செலவுகளை அந்தந்த அணிகள்தான் ஏற்றுக்கொள்ள வேண்டும்.






