என் மலர்tooltip icon

    செய்திகள்

    கெவின் பீட்டர்சன்
    X
    கெவின் பீட்டர்சன்

    இங்கிலாந்து அணி என்றாலே இவர்கள் இருவர்தான்: கெவின் பீட்டர்சன் கிண்டல்

    ஜோ ரூட் மூன்று இன்னிங்சில் தொடர்ச்சியாக 50 ரன்களுக்கு மேல் அடித்த நிலையில், ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்து வீச்சில் அசத்தி வருகிறார்.
    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. நாட்டிங்காம் டிரென்ட் பிரிட்ஜியில் நடைபெற்ற முதல் டெஸ்ட் டிரா ஆனது. லார்ட்ஸ் மைதானத்தில் 2-வது டெஸ்ட் நடைபெற்று வருகிறது.

    முதல் டெஸ்டில் ஜோ ரூட் இரண்டு இன்னிங்சிலும் 50 ரன்களுக்கு மேல் அடித்தார். அதேபோல் லார்ட்ஸ் டெஸ்டிலும் அரைசதம் அடித்து தொடர்ந்து விளையாடி வருகிறார். ஜேம்ஸ் ஆண்டர்சன் முதல் டெஸ்டில் நான்கு விக்கெட் வீழ்த்தினார். லார்ட்ஸ் டெஸ்டின் முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுகள் சாய்த்தார்.

    ஜோ ரூட்டைத் தவிர மற்ற பேட்ஸ்மேன்கள் யாரும் சிறப்பாக விளையாடவில்லை. இதனால் ஜோ ரூட், ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகிய இருவர்தான் இந்திய தொடருக்கான இங்கிலாந்து அணி என கெவின் பீட்டர்சன் கிண்டல் செய்துள்ளார்.

    ‘‘தற்போது இந்தியாவுக்கு எதிராக ஜோ ரூட், ஜேம்ஸ் ஆண்டர்சன் மட்டுமே விளையாடி வருகிறார்கள். வேறு யாராவது ஒருவர் சிறப்பான ஆட்டத்திற்கு திரும்புவது அவசியம். விரைவாக திரும்புங்கள்’’ எனத் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×