என் மலர்tooltip icon

    விளையாட்டு

    இங்கிலாந்து அணியின் ஒவ்வொரு பேட்ஸ்மேன்களையும் அவுட் ஆக்க தனித்தனி திட்டம் வைத்துள்ளோம் என கேஎல் ராகுல் கூறியுள்ளார்.

    லார்ட்ஸ்:

    இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

    இந்தியா முதல் இன்னிங்சில் 364 ரன் குவித்து ஆல் அவுட் ஆனது. லோகேஷ் ராகுல் 129 ரன்னும், ரோகித் சர்மா 83 ரன்னும் எடுத்தனர். ஆண்டர்சன் 5 விக்கெட் வீழ்த்தினார்.

    பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து நேற்றைய 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 119 ரன் எடுத்து இருந்தது. இங்கிலாந்து 245 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது. கைவசம் 7 விக்கெட் இருக்கிறது.

    இங்கிலாந்து அணி 23 ரன் எடுப்பதற்குள் 2 விக்கெட்டை இழந்தது. தொடக்க வீரர் டாம் சிப்லியையும் (11 ரன்), ஹசீப் அமீதையும் (0 ரன்), முகமது சிராஜ் அவுட் செய்தார்.

    3-வது விக்கெட்டான ராய்பர்ன்ஸ்-கேப்டன் ஜோரூட் ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது.

    மற்றொரு தொடக்க வீரரான பர்ன்ஸ் விக்கெட்டை (49 ரன்) முகமது ‌ஷமி கைப்பற்றினார். ஜோரூட் 48 ரன்னும், பேர்ஸ்டோவ் 6 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் உள்ளனர். இன்று 3-வது நாள் ஆட்டம் நடக்கிறது.

    நேற்றைய போட்டிக்கு பிறகு சதம் அடித்த இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் லோகேஷ்ராகுல் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சதம் அடித்த பிறகு நான் நிலைத்து நின்று ஆடாமல் ரன் குவிக்க முடியாமல் போனது ஏமாற்றம் அளிக்கிறது. நல்ல நிலையில் இருந்த நான் கூடுதலாக 70 முதல் 80 ரன்கள் அடித்திருக்க வேண்டும். அதை தவற விட்டது வருத்தம் அளிக்கிறது.

    இன்றைய ஆட்டத்தில் இங்கிலாந்து அணியின் விக்கெட்டுகளை உடனடியாக கைப்பற்றுவதே எங்களது இலக்காகும். ஒவ்வொரு பேட்ஸ்மேன்களையும் அவுட் ஆக்க தனித்தனி திட்டம் வைத்துள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    இந்திய அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் ஜோரூட் 13-வது ரன்னை தொட்டபோது டெஸ்டில் அதிக ரன் எடுத்த இங்கிலாந்து வீரர்களில் 2-வது இடத்தை பிடித்தார்.

    லார்ட்ஸ்:

    இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டன் ஜோரூட். உலகின் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக திகழ்கிறார்.

    இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் ஜோரூட் முதல் இன்னிங்சில் 64 ரன்னும், 2-வது இன்னிங்சில் 109 ரன்னும் எடுத்தார்.

    தற்போது லார்ட்சில் நடைபெற்று வரும் 2-வது டெஸ்ட் போட்டியில் அவர் ஆட்டமிழக்காமல் 48 ரன் எடுத்துள்ளார்.

    ஜோரூட் 13-வது ரன்னை தொட்டபோது டெஸ்டில் அதிக ரன் எடுத்த இங்கிலாந்து வீரர்களில் 2-வது இடத்தை பிடித்தார். அவர் கிரகாம் கூச்சை முந்தினார்.

    30 வயதான ஜோரூட் 107 டெஸ்டில் 196 இன்னிங்சில் விளையாடி 8935 ரன் எடுத்துள்ளார். சராசரி 49.36 ஆகும். 21 சதமும், 51 அரை சதமும் அடித்துள்ளார். அதிகபட்சமாக 254 ரன் குவித்துள்ளார்.

    கிரகாம் கூச் 118 டெஸ்டில் 8900 ரன் எடுத்துள்ளார். சராசரி 42.58 ஆகும். 20 சதமும், 46 அரைசதமும் அடித்துள்ளார். தனது சிறப்பான ஆட்டம் மூலம் அவரை முந்தி ஜோரூட் 2-வது இடத்திற்கு முன்னேறி உள்ளார்.

    அலஸ்டர் குக் 161 டெஸ்டில் 12,472 ரன் எடுத்து முதல் இடத்தில் உள்ளார். அவரது சராசரியை விட ஜோரூட் அதிக சராசரி வைத்துள்ளார். குக்கின் சராசரி 45.35 ஆகும். ஜோரூட் முதலில் 10 ஆயிரம் ரன்னை கடந்து, அதன்பிறகு குக்கின் சாதனையை முறியடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் உள்ளார். 

    பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்டின் முதல் இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் பிராத்வெயிட் - கேப்டன் ஹோல்டர் ஜோடி 96 ரன்கள் சேர்த்தது.
    ஜமைக்கா:

    பாகிஸ்தான், வெஸ்ட்இண்டீஸ் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஜமைக்காவில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 70.3 ஓவரில் 217 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியின் பஹாத் ஆலம் 56 ரன்னும், பஹீம் அஷ்ரப் 44 ரன்னும், பாபர் அசாம் 30 ரன்னும் எடுத்தனர்.

    வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ஹோல்டர், சீலஸ் தலா 3 விக்கெட்டும், ரோச் 2 விக்கெட்டும் எடுத்தனர்.

    இதையடுத்து, வெஸ்ட் இண்டீஸ் அணி தனது முதல் இன்னிங்சை தொடர்ந்தது. முதல் நாள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் 2 விக்கெட்டுக்கு 2 ரன்களை எடுத்திருந்தது.

    இந்நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் நடைபெற்றது. தொடக்க ஆட்டக்காரர் பிராத்வெயிட் நிதானமாக ஆடினார். மறுபுறம் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தன.

    விக்கெட் வீழ்த்திய ஹசன் அலியை பாராட்டும் சக வீரர்கள்

    100 ரன்களை எடுப்பதற்குள் வெஸ்ட் இண்டீஸ் அணி 5 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. அடுத்து இறங்கிய கேப்டன் ஹோல்டர் பிராத்வெயிட்டுடன் சேர்ந்து ரன்களை சேர்த்தார். இருவரும் அரை சதம் கடந்தனர். ஹோல்டர் 58 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    சதமடிப்பார் என எதிர்பார்த்த நிலையில், பிராத்வெயிட் 97 ரன்னில் ரன் அவுட்டானார்.

    இறுதியில், இரண்டாம் நாள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 8 விக்கெட் இழப்புக்கு 251 ரன்கள் எடுத்துள்ளது. ஜோஷ்வா சில்வா 20 ரன்னுடன் களத்தில் உள்ளார். இதன்மூலம் பாகிஸ்தான் அணியை விட 34 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

    பாகிஸ்தான் சார்பில் அப்பாஸ் 3 விக்கெட்டும், ஷஹீன் அப்ரிதி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
    இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்தியாவின் சிராஜ் சிப்லி மற்றும் ஹமீது ஆகியோரை அடுத்தடுத்த பந்துகளில் அவுட்டாக்கினார்.
    லண்டன்:
       
    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்கள் ரோகித் சர்மா, கே.எல். ராகுல் அபாரமாக விளையாட இந்தியா முதல் நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 276 ரன்கள் எடுத்திருந்தது.

    ரோகித் சர்மா 83 ரன்களில் ஆட்டமிழந்தார். கே.எல். ராகுல் 127 ரன்களுடனும், ரஹானே 1 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். 

    இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. கே.எல். ராகுல் 129 ரன்னிலும், ரஹானே 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
     
    6-வது விக்கெட்டுக்கு ரிஷப் பண்ட் உடன் ரவீந்திர ஜடேஜா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பாக விளையாடியதால் இந்தியாவின் ஸ்கோர் 300 ரன்னைத் தாண்டியது.

    ரிஷப் பண்ட் 37 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஷமி ரன்ஏதும் எடுக்காமல் வெளியேறினார். இஷாந்த் சர்மா 8 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். பும்ரா ரன் ஏதும் எடுக்காமல் அவுட்டானார்.

    ஜடேஜா 40 ரன்னில் வெளியேற இந்தியா 126.1 ஓவரில் 364 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது.

    இங்கிலாந்து சார்பில் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஐந்து விக்கெட்டும், ஆலி ராபின்சன் மற்றும் மார்க் வுட் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரொரி பர்ன்ஸ், டொமினிக் சிப்லி ஆகியோர் களமிறங்கினர்.

    விக்கெட் வீழ்த்திய சிராஜை பாராட்டும் சக வீரர்கள்

    சிப்லி 11 ரன்கள் எடுத்த நிலையில், சிராஜிடம் அவுட்டானார். அடுத்த பந்தில் ஹசீப் ஹமீது டக் அவுட்டனார்.

    அடுத்து இறங்கிய கேப்டன் ஜோ ரூட் பர்ன்சுடன் சேர்ந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த ஜோடி 85 ரன்கள் சேர்த்தது. 
    அரை சதம் அடிப்பார் என எதிர்பார்த்த நிலையில் ரோரி பர்ன்ஸ் 49 ரன்னில் ஷமியிடம் வீழ்ந்தார்.

    இறுதியில், இரண்டாம் நாள் முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்புக்கு 119 ரன்கள் எடுத்துள்ளது. ஜோ ரூட் 48 ரன்னும், பேர்ஸ்டோவ் 6 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
    திண்டுக்கல் அணிக்கு எதிரான போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் கேப்டன் கவுசிக் காந்தி சிறப்பாக ஆடி அரை சதமடித்து அசத்தினார்.
    சென்னை:

    தமிழ்நாடு பிரிமீயர் லீக் டி20 தொடரின் 2-வது தகுதிச்சுற்று ஆட்டம் இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதின.

    டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலாவது தகுதிச்சுற்று, வெளியேற்றுதல் சுற்றில் முதலில் பேட்டிங் செய்த இரண்டு அணிகளும் 150 ரன்களுக்கு மேல் அடிக்க முடியாமல் தோல்வியைத் தழுவின.

    இதனால் இன்றைய ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 150 ரன்களுக்கு மேல் குவிக்க வேண்டும் என களம் இறங்கினர். ஆனால் சேப்பாக் சூப்பர் கிங்ஸ் அணியின் சாய் கிஷோர், அலெக்சாண்டர் விக்கெட்டுகளை மளமளவென வீழ்த்தி திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் ஆசைக்கு தடைபோட்டனர். அந்த அணியின் ஹரி நிஷாந்த் மட்டும் தாக்குப்பிடித்து 46 பந்தில் 56 ரன்கள் அடித்தார். விமல் குமார் 11 ரன்கள் சேர்த்தார். மற்ற பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்னில் வெளியேற திண்டுக்கல் டிராகன்ஸ் 20 ஓவரில் 103 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது.

    சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி சார்பில் சாய் கிஷோர் 3 விக்கெட்டும், அலெக்சாண்டர் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    அதன்பின், 104 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி முதலில் களம் இறங்கியது.  தொடக்க வீரராக களம் இறங்கிய கேப்டன் கவுசிக் காந்தி 41 பந்தில் 53 ரன்கள் எடுத்து வெற்றியை எளிதாக்கினார். ஜெகதீசன் 21 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    ராதாகிருஷ்ணன் மற்றும் சசிதேவ் ஆகியோர் ஆட்டமிழக்காமல் முறையே 16, 13 ரன்கள் அடிக்க சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 16 ஓவரில் 2 விக்கெட்டை மட்டுமே இழந்து 106 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

    இந்த வெற்றியின் மூலம் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிப்போட்டியில் திருச்சி வாரியர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
    சேப்பாக் அணியின் சாய் கிஷோர், அலெக்சாண்டர் உள்பட சுழற்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீச திண்டுக்கல் டிராகன்ஸ் 103 ரன்னில் ஆல்-அவுட் ஆனது.
    சென்னை:

    தமிழ்நாடு பிரிமீயர்லீக் டி20 தொடரின் தகுதிச்சுற்று 2-ல் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது.

    தொடக்க வீரர் விமல் குமார் 11 ரன்னில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரர் ஹரி நிஷாந்த் ஒரு பக்கம் நிலைத்து நின்று ரன்கள் சேர்க்க, மறுமுனையில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் சுழற்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் மற்ற பேட்ஸ்மேன்கள் ஒற்றையிலக்க ரன்களோடு வெளியேறிக் கொண்டிருந்தனர். இதனால் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியால் ரன்கள் குவிக்க இயலவில்லை. ஹரி நிஷாந்த் மட்டும் 46 பந்தில் 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    இதனால் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியால் 20 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 103 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. பின்னர் 104 ரன்கள் அடித்தால் இறுதிப்போட்டிக்கு முன்னேறலாம் என்ற இலக்குடன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் பேட்டிங் செய்து வருகிறது.
    கே.எல். ராகுல் அபாரமாக விளையாடி சதம் விளாச, இங்கிலாந்து நட்சத்திர பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஐந்து விக்கெட்டுகள் சாய்த்தார்.
    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்கள் ரோகித் சர்மா, கே.எல். ராகுல் அபாரமாக விளையாட இந்தியா முதல் நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 276 ரன்கள் எடுத்திருந்தது.

    ரோகித் சர்மா 83 ரன்களில் ஆட்டமிழந்தார். கே.எல். ராகுல் 127 ரன்களுடனும், ரஹானே 1 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். 

    இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. முதல் ஓவரை கே.எல். ராகுல் சந்தித்தார். ஆலி ராபின்சன் பந்து வீசினார். முதல் பந்தில் இரண்டு ரன்கள் அடித்த நிலையில், அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரில் ரஹானே ஆண்டர்சன் பந்தில் நேற்றைய 1 ரன்னிலேயே ஆட்டமிழந்து ஏமாற்றம் அடைந்தார்.

    6-வது விக்கெட்டுக்கு ரிஷாப் பண்ட் உடன் ரவீந்திர ஜடேஜா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பான விளையாடியது. இதனால் இந்தியாவின் ஸ்கோர் 300 ரன்னைத் தாண்டியது.

    இந்தியாவின் ஸ்கோர் 331 ரன்னாக இருக்கும்போது ரிஷாப் பண்ட் 37 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஷமி ரன்ஏதும் எடுக்காமல் வெளியேறினார்.

    ஜடேஜா ஒரு பக்கம் நம்பிக்கையுடன் விளையாடினார். அடுத்து இஷாந்த் சர்மா களம் இறங்கினார். 2-வது நாள் மதிய உணவு இடைவேளை வரை இந்தியா 7 விக்கெட் இழப்பிற்கு 346 ரன்கள் எடுத்திருந்தது.

    ஆண்டர்சன்

    உணவு இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கியதும் ஜடேஜா அரைசதம் நோக்கிச் சென்றார். இஷாந்த் சர்மா 8 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். அப்போது இந்தியா 8 விக்கெட் இழப்பிற்கு 362 ரன்கள் எடுத்திருந்தது. 9-வது விக்கெட்டுக்கு ஜடேஜா உடன் பும்ரா ஜோடி சேர்ந்தார். பும்ரா ரன்ஏதும் எடுக்காமல் ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்தில் வெளியேறினார்.

    ஜடேஜா 40 ரன்னில் வெளியேற இந்தியா 126.1 ஓவரில் 364 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. ஜேம்ஸ் ஆண்டர்சன் ஐந்து விக்கெட்டும், ஆலி ராபின்சன் மற்றும் மார்க் வுட் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
    டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு எதிராக சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
    சென்னை:

    டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் இன்று இரவு நடைபெறும் 2-வது தகுதிச் சுற்றில்  சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற  சேப்பாக் சூப்பர் கில்லீஸ் பீல்டிங் செய்ய முடிவு செய்துள்ளது.

    சேப்பாக் சூப்பர் கில்லீஸ்: கவுசிக் காந்தி (கே), என்.ஜெகதீசன்(கீ ), ராதாகிருஷ்ணன், சசிதேவ், ஆர்.சதீஷ், ஹரிஷ் குமார், சோனு யாதவ், சாய் கிஷோர், எம்.சித்தார்த், ஆர். அருண், அலெக்சாண்டர்.

    திண்டுக்கல் அணி வீரர்கள்;- விமல் குமார், ஹரி நிஷாந்த் (கே), மணி பாரதி (கீ), ஸ்ரீனிவாசன், விவேக், மோகித் ஹரிகரன், சுவாமிநாதன், சிலம்பரசன், குர்ஜப்னீத் சிங், சுதீஷ், விக்னேஷ்.
    கே.எல். ராகுல், ரஹானே அடுத்தடுத்து ஆட்டமிழக்க, இந்தியா 2-வது நாள் முதல் செசன் ஆட்டத்தில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 70 ரன்கள் எடுத்தது.
    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்கள் ரோகித் சர்மா, கே.எல். ராகுல் அபாரமாக விளையாட இந்தியா முதல் நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 276 ரன்கள் எடுத்திருந்தது.

    ரோகித் சர்மா 83 ரன்களில் ஆட்டமிழந்தார். கே.எல். ராகுல் 127 ரன்களுடனும், ரஹானே 1 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். 

    இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. முதல் ஓவரை கே.எல். ராகுல் சந்தித்தார். ஆலி ராபின்சன் பந்து வீசினார். முதல் பந்தில் இரண்டு ரன்கள் அடித்த நிலையில், அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரில் ரஹானே ஆண்டர்சன் பந்தில் நேற்றைய 1 ரன்னிலேயே ஆட்டமிழந்து ஏமாற்றம் அடைந்தார்.

    6-வது விக்கெட்டுக்கு ரிஷாப் பண்ட் உடன் ரவீந்திர ஜடேஜா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பான விளையாடியது. இதனால் இந்தியாவின் ஸ்கோர் 300 ரன்னைத் தாண்டியது.

    கே.எல். ராகுல்

    இந்தியாவின் ஸ்கோர் 331 ரன்னாக இருக்கும்போது ரிஷாப் பண்ட் 37 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஷமி ரன்ஏதும் எடுக்காமல் வெளியேறினார்.

    ஜடேஜா ஒரு பக்கம் நம்பிக்கையுடன் விளையாடினார். அடுத்து இஷாந்த் சர்மா களம் இறங்கினார். 2-வது நாள் மதிய உணவு இடைவேளை வரை இந்தியா 7 விக்கெட் இழப்பிற்கு 346 ரன்கள் எடுத்துள்ளது. இன்றைய முதல் செசனில் இந்தியா 70 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
    தென்ஆப்பிரிக்காவின் முன்னாள் பேட்ஸ்மேன் அஷ்வெல் பிரின்ஸ், வங்காளதேச அணியின் பேட்டிங் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
    அஷ்வெல் பிரின்ஸ் (வயது 44) தென்ஆப்பிரிக்கா அணிக்காக 66 டெஸ்ட், 52 ஒருநாள் மற்றும் ஒரேயொரு டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். டெஸ்ட் போட்டியில் 41.64 சராசரியும், ஒருநாள் போட்டியில் 35.10 சராசரியும் வைத்துள்ளார். டெஸ்ட் போட்டியில் 11 சதங்கள் அடித்துள்ளார்.

    இவரை வங்காளதேச கிரிக்கெட் போர்டு பேட்டிங் ஆலோசகராக நியமித்துள்ளது. ஆஸ்திரேலியாவில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பை வரை ஆலோசகராக செயல்படுவார்.

    கடந்த மாதம் வங்காளதேச அணி ஜிம்பாப்வே சென்று விளையாடும்போது வங்காளதேச அணிக்கு ஆலோசகராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    தற்போது தென்ஆப்பிரிக்காவின் உள்ளூர் அணியான மேற்கு மாகாண அணியின் பயிற்சியாளராக உள்ளார். வங்காளதேச அணிக்காக அந்த பதவியை ராஜினாமா செய்ய இருக்கிறார்.
    டி20 உலகக்கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில் இங்கிலாந்து டி20 கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் செய்து இரண்டு டி20 போட்டிகளில் விளையாடுகிறது.
    இலங்கை கிரிக்கெட் அணி 2009-ம் ஆண்டு பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் செய்து விளையாடும்போது, பயங்கரவாதிகள் வீரர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தினர். இதில் இலங்கை வீரர்கள் காயம் அடைந்தனர். இந்த சம்பவத்திற்குப் பிறகு தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற அணிகள் பாகிஸ்தான் சென்று விளையாட விரும்பவில்லை.

    மீண்டும் பாகிஸ்தான் மண்ணில் கிரிக்கெட்டை கொண்டுவர, அந்நாட்டு கிரிக்கெட் போர்டு எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தது. இறுதியாக பாகிஸ்தானில் எந்த அச்சுறுத்தலும் இல்லை என்பதை நிரூபிக்க பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரை பாகிஸ்தான் மண்ணில் நடத்தியது.

    அதன்பின் தென்ஆப்பிரிக்கா, வங்காளதேசம் போன்ற அணிகள் பாகிஸ்தான் சென்று விளையாடின. கடந்த வருடம் கொரோனா வைரஸ் காரணமாக கிரிக்கெட் போட்டிகள் நடைபெறாமல் இருந்தது.

    இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு பாதுகாப்பு வளையத்தை உருவாக்கி ஜூலையில் இருந்து கிரிக்கெட் போட்டியை நடத்த ஆரம்பித்தது. அப்போது பாகிஸ்தான் வீரர்கள் உயிரை பணயம் வைத்து இங்கிலாந்து சென்று விளையாடினார்கள். இக்கட்டான சூழ்நிலையில் நாங்கள் இங்கிலாந்து வந்து விளையாடுகிறோம். அதற்கு கைமாறாக எங்கள் நாட்டில் வந்து இங்கிலாந்து அணி விளையாட வேண்டும் என பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு கோரிக்கை வைத்தது. அதன் கோரிக்கையை இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு ஏற்றுக்கொண்டது.

    இங்கிலாந்து பெண்கள் அணி அக்டோபர் மாதம் 13-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் செய்து விளையாடுகிறது. அப்போது இங்கிலாந்து ஆண்கள் டி20 அணியும் பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இந்த போட்டிகள் அக்டோபர் 13-ந்தேதி மற்றும் 14-ந்தேதிகளில் நடக்கின்றன.

    டி20 உலகக்கோப்பை ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் அக்டோபர் 17-ந்தேதி முதல் நவம்பர் 14-ந்தேதி வரை நடக்கிறது. இதற்கு முன்னோட்டமாக இருக்கும் வகையில் இங்கிலாந்து இரண்டு போட்டிகளில் விளையாடுகிறது.
    விளையாட்டு உட்கட்டமைப்புகளை பராமரிக்க சிறப்பு நிதியளிக்கும் நடைமுறை செயல்படுத்தப்படும் என்று பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    சென்னை:

    தமிழக சட்டசபையில் இன்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.  அதில், விளையாட்டு வசதிகள் இல்லாத அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 3 கோடி ரூபாய் செலவில் சிறு விளையாட்டு அரங்கங்கள் நிறுவப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் உள்ள விளையாட்டு உட்கட்டமைப்புகளை பராமரிக்க ஒரு சிறப்பு நிதியளிக்கும் நடைமுறை செயல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    ×