என் மலர்
விளையாட்டு
|
| ரவுண்டு-1 |
|
தேதி | குரூப் | அணிகள் | இடம் |
அக்- 17 | பி | ஓமன்- பப்பு நியூ கினியா | ஒமன் |
அக்- 17 | பி | வங்காளதேசம்- ஸ்காட்லாந்து | ஒமன் |
அக்-18 | ஏ | அயர்லாந்து- நெதர்லாந்து | அபுதாபி |
அக்-18 | ஏ | இலங்கை- நமீபியா | அபுதாபி |
அக்-19 | பி | ஸ்காட்லாந்து- பப்பு நியூ கினியா | ஓமன் |
அக்-19 | பி | ஓமன்- வங்காளதேசம் | ஓமன் |
அக்-20 | ஏ | நமீபியா- நெதர்லாந்து | அபுதாபி |
அக்-20 | ஏ | இலங்கை- அயர்லாந்து | அபுதாபி |
அக்-21 | பி | வங்காளதேசம்- பப்பு நியூ கினியா | ஓமன் |
அக்-21 | பி | ஓமன்- ஸ்காட்லாந்து | ஓமன் |
அக்-22 | ஏ | நமீபியா- அயர்லாந்து | ஷார்ஜா |
அக்-22 | ஏ | இலங்கை- நெதர்லாந்து | ஷார்ஜா |
|
|
|
|
|
| சூப்பர் 12- குரூப்- 1 |
|
அக்- 23 |
| ஆஸ்திரேலியா- தென்ஆப்பிரிக்கா | அபுதாபி |
அக்- 23 |
| இங்கிலாந்து- வெஸ்ட் இண்டீஸ் | துபாய் |
அக்- 24 |
| ஏ1- பி2 | ஷார்ஜா |
அக்- 26 |
| தென்ஆப்பிரிக்கா- வெஸ்ட் இண்டீஸ் | துபாய் |
அக்- 27 |
| இங்கிலாந்து- பி2 | அபுதாபி |
அக்- 28 |
| ஆஸ்திரேலியா- ஏ1 | துபாய் |
அக்- 29 |
| வெஸ்ட் இண்டீஸ்- பி2 | ஷார்ஜா |
அக்-30 |
| தென்ஆப்பிரிக்கா- ஏ1 | ஷார்ஜா |
அக்-30 |
| இங்கிலாந்து- ஆஸ்திரேலியா | துபாய் |
நவ-1 |
| இங்கிலாந்து- ஏ1 | ஷார்ஜா |
நவ-2 |
| தென்ஆப்பிரிக்கா- பி2 | அபுதாபி |
நவ-4 |
| ஆஸ்திரேலியா- பி2 | துபாய் |
நவ-4 |
| வெஸ்ட் இண்டீஸ்- ஏ1 | அபுதாபி |
நவ-6 |
| ஆஸ்திரேலியா- வெஸ்ட் இண்டீஸ் | அபுதாபி |
நவ-6 |
| இங்கிலாந்து- தென்ஆப்பிரிக்கா | ஷார்ஜா |
|
|
|
|
|
| சூப்பர் 12 குரூப்- 2 |
|
அக்-24 |
| இந்தியா - பாகிஸ்தான் | துபாய் |
அக்-25 |
| ஆப்கானிஸ்தான் - பி1 | ஷார்ஜா |
அக்-26 |
| பாகிஸ்தான் - நியூசிலாந்து | ஷார்ஜா |
அக்-27 |
| பி1 - ஏ2 | அபுதாபி |
அக்-29 |
| ஆப்கானிஸ்தான்- பாகிஸ்தான் | துபாய் |
அக்-31 |
| ஆப்கானிஸ்தான்- ஏ2 | அபுதாபி |
அக்-31 |
| இந்தியா- நியூசிலாந்து | துபாய் |
நவ-2 |
| பாகிஸ்தான்- ஏ2 | அபுதாபி |
நவ-3 |
| நியூசிலாந்து- பி1 | துபாய் |
நவ-3 |
| இந்தியா- ஆப்கானிஸ்தான் | அபுதாபி |
நவ-5 |
| நியூசிலாந்து- ஏ2 | ஷார்ஜா |
நவ-5 |
| இந்தியா- பி1 | துபாய் |
நவ-7 |
| நியூசிலாந்து- ஆப்கானிஸ்தான் | அபுதாபி |
நவ-7 |
| பாகிஸ்தான்- பி1 | ஷார்ஜா |
நவ-8 |
| இந்தியா - ஏ2 | துபாய் |
|
|
|
|
நவ-10 |
| அரையிறுதி-1 |
|
நவ-11 |
| அரையிறுதி-2 |
|
நவ-14 |
| இறுதிப்போட்டி |
|
துபாய்:
ஐ.சி.சி. 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி 2007-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. தென் ஆப்பிரிக்காவில் நடந்த அந்த போட்டியில் டோனி தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் பெற்றது. இதுவரை 6 போட்டிகள் நடந்துள்ளன.
வெஸ்ட் இண்டீஸ் 2 முறையும் (2012, 2016), இந்தியா (2007), பாகிஸ்தான் (2009), இங்கிலாந்து (2010), இலங்கை (2014) ஆகிய அணிகள் தலா ஒரு முறையும் உலககோப்பையை வென்றுள்ளன.
7-வது 20 ஒவர் உலக கோப்பை போட்டி கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற வேண்டியது. கொரோனா பாதிப்பு காரணமாக இந்த போட்டி ரத்து செய்யப்பட்டது. அடுத்த ஆண்டு (2022) அங்கு நடக்கிறது.
7-வது 20 ஓவர் உலக கோப்பை போட்டியை இந்திய கிரிக்கெட் வாரியம் நடத்துகிறது. இந்தியாவில் இந்த போட்டியை நடத்த முதலில் திட்டமிடப்பட்டது. ஆனால் கொரோனா பாதிப்பு காரணமாக இந்த போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு மாற்றப்பட்டது.
20 ஓவர் உலக கோப்பை போட்டி அக்டோபர் 17-ந் தேதி முதல் நவம்பர் 14-ந் தேதிவரை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (துபாய், அபுதாபி, சார்ஜா) மற்றும் ஓமனில் நடக்கிறது. இதில் 16 நாடுகள் பங்கேற்கின்றன. மொத்தம் 45 போட்டிகள் நடக்கிறது.
20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. முதல் சுற்றில் (தகுதி சுற்று) 8 அணிகள் விளையாடும். இதில் இருந்து 4 அணிகள் 2-வது ரவுண்டான ‘சூப்பர் 12’ சுற்றுக்கு முன்னேறும்.
இந்தியா உள்பட 8 நாடுகள் நேரடியாக 2-வது சுற்றில் விளையாடும்.
முதல் சுற்றில் விளையாடும் 8 அணிகளும் 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. ஏ பிரிவில் இலங்கை, அயர்லாந்து, நமீபியா, நெதர்லாந்து ஆகிய நாடுகளும், பி பிரிவில் வங்காளதேசம், ஓமன், ஸ்காட்லாந்து, பப்புவா நியூகுனியா அணிகள் ஆகிய நாடுகளும் இடம்பெற்றுள்ளன.
அக்டோபர் 17-ந் தேதி ஓமனில் நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் ஓமன்- பப்புவா நியூகுனியா மோதுகின்றன. மற்றொரு போட்டியில் வங்காளதேசம்- ஸ்காட்லாந்து அணிகள் விளையாடுகின்றன.
22-ந் தேதியுடன் முதல் சுற்று ஆட்டம் முடிவடைகிறது. 2 பிரிவுகளில் இருந்தும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் 2-வது சுற்றுக்கு தகுதி பெறும்.
‘சூப்பர் 12’ ஆட்டங்கள் அக்டோபர் 23-ந் தேதி தொடங்குகிறது. இதில் விளையாடும் 12 அணிகளும் 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்தியா குரூப்-2 பிரிவில் இடம்பெற்றுள்ளது. பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளும் அதில் உள்ளன.
தகுதி சுற்றில் ‘பி’ பிரிவில் முதல் இடத்தை பிடிக்கும் அணியும், ‘ஏ’ பிரிவில் 2-வது இடத்தை பிடிக்கும் அணியும் குரூப் 2 பிரிவில் இடம்பெறும்.
இன்று வெளியிட்ட போட்டி அட்டவணைப்படி இந்தியா- பாகிஸ்தான் அணிகள் அக்டோபர் 24-ந் தேதி மோதுகின்றன. இந்த ஆட்டம் துபாயில் நடக்கிறது. இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது.
இந்திய அணி 2-வது ஆட்டத்தில் நியூசிலாந்துடன் 31-ந் தேதியும், 3-வது போட்டியில் ஆப்கானிஸ்தானுடன் நவம்பர் 3-ந் தேதியும் மோதுகிறது. தகுதி சுற்று அணிகளை இந்தியா நவம்பர் 5 மற்றும் 8-ந் தேதிகளில் எதிர்கொள்கிறது.
குரூப் 1 பிரிவில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட்இன்டீஸ் ஆகிய அணிகளும் தகுதி சுற்றில் இருந்து 2 அணிகளும் (ஏ-1, பி-2) இடம்பெற்றுள்ளன.
நவம்பர் 8-ந் தேதியுடன் லீக் ஆட்டங்கள் முடிகிறது. இதன் முடிவில் 2 பிரிவில் இருந்தும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும். 10 மற்றும் 11-ந் தேதிகளில் அரை இறுதி நடைபெறுகிறது.
இறுதிப்போட்டி நவம்பர் 14-ந் தேதி துபாயில் நடக்கிறது.



சென்னை:
டி.என்.பி.எல். (தமிழ்நாடு பிரிமீயர் லீக்) 20 ஓவர் போட்டியில் திருச்சி வாரியர்சை வீழ்த்தி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 3-வது முறையாக சாம்பியன் பட்டம் பெற்றது.
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நேற்று நடந்த இறுதிப் போட்டியில் முதலில் விளையாடிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழப் புக்கு 183 ரன் குவித்தது.
தொடக்க வீரர் ஜெகதீசன் அபாரமாக ஆடி 58 பந்தில் 90 ரன் எடுத்தார். இதில் 7 பவுண்டரியும், 2 சிக்சரும் அடங்கும். கேப்டன் கவுசிக் காந்தி 19 பந்தில் 26 ரன் (2 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தார். ரஹில் ஷா, பொய்யாமொழி தலா 2 விக்கெட் கைப்பற்றினார்கள்.
பின்னர் ஆடிய திருச்சி வாரியர்ஸ் அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 175 ரன் எடுத்தது. இதனால் பரபரப்பான இந்த ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 8 ரன்னில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் பெற்றது.
சரவணக்குமார் 25 பந்தில் 45 ரன்னும் (3 பவுண்டரி, 3 சிக்சர்), அமித் சாத்விக் 16 பந்தில் 36 ரன்னும் (1 பவுண்டரி, 5 சிக்சர்) எடுத்தார். சோனு யாதவ் 2 விக்கெட்டும், ஆர்.சதீஷ், சாய்கிஷோர் அருண், அலெக்சாண்டர், ஹரிஷ் குமார் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
ஆட்டத்தின் கடைசி ஓவரில் திருச்சி அணியின் வெற்றிக்கு 13 ரன்கள் தேவை என்ற நிலையில் சாய் கிஷோர் அபாரமாக பந்துவீசி 4 ரன்களே விட்டுக்கொடுத்து சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் வெற்றிக்கு காரணமாக திகழ்ந்தார்.
சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 3-வது முறையாக டி.என்.பி.எல் கோப்பையை கைப்பற்றி உள்ளது. இதற்கு முன்பு அந்த அணி 2017 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் சாம்பியன் பட்டம் பெற்று இருந்தது.
சாம்பியன் பட்டம் பெற்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு ரூ. 50 லட்சம் பரிசு வழங்கப்பட்டது. 2-ம் இடத்தை பிடித்த திருச்சி வாரியர்ஸ் அணிக்கு ரூ. 30 லட்சம் கிடைத்தது.
உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார்.
ஆட்ட நாயகன் விருது ஜெகதீசனுக்கு கிடைத்தது. தொடர்நாயகன் விருதை திண்டுக்கல் டிராகன்ஸ் அணி கேப்டன் ஹரி நிஷாந்த் தட்டிச் சென்றார்.
புதுடெல்லி:
32-வது ஒலிம்பிக் திருவிழா ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த 23-ந்தேதி முதல் ஆகஸ்ட் 8-ந்தேதி வரை நடந்தது.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் 126 வீரர்-வீராங்கனைகள் 18 விளையாட்டுகளில் பங்கேற்றனர். இந்திய ஒலிம்பிக் வரலாற்றில் முதல் முறையாக அதிகபட்சமாக 7 பதக்கங்களை (ஒரு தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம்) வென்று சாதனை படைத்தது.
ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார். ஒலிம்பிக்கில் தடகளத்தில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்று சிறப்புமிக்க சாதனையை அவர் படைத்தார்.
பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானு, மல்யுத்த வீரர் ரவிகுமார் தகியா ஆகியோர் வெள்ளிப்பதக்கமும், பேட்மின்டன் வீராங்கனை பி.வி.சிந்து, குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினா, மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா ஆகியோர் வெண்கல பதக்கமும் பெற்றனர்.

பி.வி.சிந்து ஒலிம்பிக்கில் 2 பதக்கம் பெற்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்றார். அவர் ரியோ டி ஜெனீரோவில் நடந்த ஒலிம்பிக்கிலும் (2016) வெள்ளிப்பதக்கம் பெற்றிருந்தார்.
ஆக்கி போட்டியில் வெண்கல பதக்கம் கிடைத்தது. 41 ஆண்டுகளுக்கு பிறகு ஒலிம்பிக் ஆக்கியில் இந்தியா பதக்கம் பெற்று புதிய சாதனை படைத்தது. இதேபோல மகளிர் ஆக்கி அணியும் முதல்முறையாக அரைஇறுதி வரை தகுதி பெற்று 4-வது இடத்தை பிடித்தது.
டோக்கியோ ஒலிம்பிக்கில் சாதித்து நாடு திரும்பிய இந்திய வீரர்-வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஒலிம்பிக்கில் பங்கேற்றவர்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த தேனீர் விருந்து கொடுத்து பாராட்டினார்.
சுதந்திர தின உரையின் போது பிரதமர் நரேந்திர மோடி ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்களையும், அதில் பங்கேற்றவர்களையும் பாராட்டினார்.
இந்த நிலையில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற இந்திய வீரர்-வீராங்கனைகள் பிரதமர் நரேந்திர மோடியை இன்று காலை சந்தித்தனர்.
தனது இல்லத்தில் சந்தித்த அவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி காலை உணவு வழங்கினார். பதக்கம் வென்ற ஒவ்வொரு வீரர்- வீராங்கனைகளையும் அவர் தனித்தனியாக சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தார். ஒலிம்பிக்கில் பங்கேற்ற அனைவருக்கும் அவர் பாராட்டுக்களை தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்...தமிழகத்தில் 6 கோடி பேருக்கு தடுப்பூசி போட வேண்டியுள்ளது - சுகாதாரத்துறை செயலாளர் தகவல்








