என் மலர்
விளையாட்டு
இங்கிலாந்துக்கு எதிரான இரு இன்னிங்சிலும் சேர்த்து 8 விக்கெட் வீழ்த்திய இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் 18 இடம் அதிகரித்து 38-வது இடம் பிடித்துள்ளார்.
துபாய்:
லண்டன் லார்ட்சில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதேபோல் கிங்ஸ்டனில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் வெஸ்ட்இண்டீஸ் அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றியை ருசித்தது.
இந்நிலையில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. அதன்படி பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் முதலிடத்தில் நீடிக்கிறார்.
இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் முதல் இன்னிங்சில் ஆட்டம் இழக்காமல் 180 ரன்னும், 2-வது இன்னிங்சில் 33 ரன்னும் எடுத்த இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் இரண்டு இடங்கள் ஏற்றம் கண்டு 2-வது இடத்தை பிடித்துள்ளார். சதத்தின் மூலம் 45 புள்ளிகளை கூடுதலாக சேகரித்துள்ள அவர் மொத்தம் 893 புள்ளிகளுடன் இந்த உயர்வை கண்டுள்ளார். இந்தப் போட்டி தொடரிலேயே ஜோ ரூட் நம்பர் ஒன் இடத்தை பிடிக்க வாய்ப்புள்ளது.
ஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்டீவன் சுமித், லபுஸ்சேன் ஆகியோர் முறையே ஒரு இடம் சறுக்கி 3-வது, 4-வது இடத்தை பெற்றுள்ளனர். இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி 15 புள்ளிகளை இழந்தாலும் 5-வது இடத்தில் நீடிக்கிறார். தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா 7 புள்ளிகளை அதிகரித்து 6-வது இடத்திலும், இளம் விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்ட் 10 புள்ளிகள் குறைந்து 7-வது இடத்திலும் தொடருகின்றனர்.
வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் முறையே 30, 55 ரன்களை சேர்த்த பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் 2 இடம் உயர்ந்து 8-வது இடத்தை பிடித்து இருக்கிறார். ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் 9-வது இடத்துக்கும், தென்ஆப்பிரிக்காவின் குயின்டான் டி காக் 10-வது இடத்துக்கும் சறுக்கி உள்ளனர்.
பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் கம்மின்ஸ் (ஆஸ்திரேலியா), ஆர்.அஷ்வின் (இந்தியா), டிம் சவுதி (நியூசிலாந்து), ஹேசில்வுட் (ஆஸ்திரேலியா), நீல் வாக்னெர் (நியூசிலாந்து) ஆகியோர் முதல் 5 இடங்களில் மாற்றமின்றி தொடருகின்றனர்.

இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுகள் வீழ்த்திய இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஒரு இடம் உயர்ந்து 6-வது இடத்தை பிடித்துள்ளார். காஜிசோ ரபடா (தென்ஆப்பிரிக்கா) ஒரு இடம் சரிந்து 7-வது இடத்தை பெற்றுள்ளார். இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் 8-வது இடத்தில் நீடிக்கிறார். வெஸ்ட்இண்டீஸ் வீரர் ஜாசன் ஹோல்டர் 2 இடம் முன்னேறி 9-வது இடத்தை பிடித்துள்ளார். இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா 10-வது இடத்துக்கு சரிந்துள்ளார்.
ஆல்-ரவுண்டர்கள் தரவரிசையில் ஜாசன் ஹோல்டர் (வெஸ்ட்இண்டீஸ்) முதலிடத்தில் நீடிக்கிறார். பென் ஸ்டோக்ஸ் (இங்கிலாந்து) 2-வது இடத்துக்கு உயர்ந்துள்ளார். ரவீந்திர ஜடேஜா (இந்தியா) 3-வது இடத்துக்கு சரிந்துள்ளார். ஆர்.அஷ்வின் (இந்தியா) 4-வது இடத்தில் நீடிக்கிறார்.
ரஷியாவில் நடைபெற்று வரும் உலக ஜூனியர் மல்யுத்தம் போட்டியில் இந்திய வீராங்கனை வெள்ளி பதக்கம் வென்றார். மற்ற இருவர் வெண்கலப் பதக்கம் வென்றனர்.
ரஷியாவின் உஃபாவில் உலக ஜூனியர் மல்யுத்தம் போட்டி நடைபெற்று வருகிறது. இந்திய வீராங்கனை பிபாஷா 76 எடைப்பிரிவு இறுதிப்போட்டியில் அமெரிக்காவின் கைலி ரெனீ வெல்கரை எதிர்கொண்டார். இதில் பிபாஷா தோல்வியடைந்து வெள்ளி பதக்கம் வென்றார்.
சஞ்சு அரையிறுதிறுதியில் 0-5 என பின்தங்கிய நிலையில், பின்னர் 8-5 என வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். சிம்ரன், சிடோ ஆகியோர் வெண்கலப் பதக்கம் வென்றனர்.
ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர், பேட் கம்மின்ஸ் நீண்ட நாட்களாக ஓய்வில் இருக்கும் நிலையில் உலகக்கோப்பைக்கான அணியில் இடம் பிடித்துள்ளார்.
டி20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் அதிகமாக இருப்பதை கருத்தில் கொண்டு போட்டியை நடத்த மாற்று இடமாக ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) ஏற்கனவே தேர்வு செய்து வைத்துள்ளது.
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 17-ம் தேதி முதல் நவம்பர் 14-ம் தேதி வரை நடைபெறும் என்றும், அதற்கான போட்டியை அட்டவணையையும் ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது.
அடுத்த மாதம் 10-ந்தேதிக்குள் டி20 உலகக்கோப்பையில் விளையாட இருக்கும் அணிகள், வீரர்களை பட்டியலை அறிவிக்க வேண்டும். நியூசிலாந்து அணி ஏற்கனவே வீரர்கள் பட்டியலை அறிவித்துள்ளது. இந்நிலையில் 20 ஓவர் உலகக்கோப்பைக்கான ஆஸ்திரேலிய ஆடவர் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய அணி வருமாறு:-
ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித், கிளென் மேக்ஸ்வெல், மிட்சல் மார்ஷ், மேத்யூ வேட், ஆஷ்டன் அகர், பேட் கம்மின்ஸ் (துனை கேப்டன்), மிட்சல் ஸ்டார்க், கேன் ரிச்சர்ட்சன், ஆடம் ஜம்பா, ஜோஷ் ஹசில்வுட், மார்கஸ் ஸ்டோய்னிஸ், மிட்சல் ஸ்வெப்சன், ஜோஷ் இங்லிஸ்.
டேனியல் கிறிஸ்டியன், நாதன் எல்லிஸ், டேனியல் சாம்ஸ் ஆகியோர் ரிசர்வ் வீரர்களாக இடம் பிடித்துள்ளனர்.
பரபரப்பான லார்ட்ஸ் டெஸ்டில் இந்தியா 151 ரன்னில் வெற்றி பெற்று, இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.
விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 5 டெஸ்ட் தொடரில் 2 போட்டிகள் முடிந்துள்ளன.
நாட்டிங்காமில் நடந்த முதல் டெஸ்ட் டிரா ஆனது. லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த 2-வது டெஸ்டில் இந்தியா 151 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 1-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ளது. 3-வது டெஸ்ட் போட்டி வருகிற 25-ந்தேதி லீட்ஸ் மைதானத்தில் நடக்கிறது.
லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஒரு கட்டத்தில் தோல்வி நிலையை நோக்கி சென்று கொண்டிருந்தது. ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் அதில் இருந்து மீண்டு ரன்களை குவித்தும், சிறப்பான பந்து வீச்சின் மூலமும் வெற்றியை பெற்றது.
இந்த நிலையில் 2-வது டெஸ்டில் இந்தியாவின் வெற்றி தகுதியானது என்று இங்கிலாந்து முன்னாள் கேப்டன் ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
இந்தியாவின் 2-வது இன்னிங்சில் தொடக்கத்திலேயே விக்கெட் சரிந்ததால் நெருக்கடி ஏற்பட்டது. ஆனால் பின்கள வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இந்திய வீரர்களை உசுப்பேற்றியதால் அவர்கள் அடிபட்ட புலிபோல் விளையாடினார்கள். சிறப்பாக பந்து வீசி இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை திணறடித்தார்கள். இந்த வெற்றிக்கு இந்தியா தகுதியானது.
இந்த 5 நாள் ஆட்டமும் பார்ப்பதற்கு சிறப்பாக இருந்தது. ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து அணி தனது ஆதிக்கத்தை தக்க வைத்துக்கொள்ள முடியாமல் போனது ஏமாற்றமே. இந்திய வீரர்களை அவர்கள் சீண்டியது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிட்டது.
இங்கிலாந்து அணியின் பேட்டிங் மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. இதனால் பேட்டிங் வரிசையில் கண்டிப்பாக மாற்றம் செய்ய வேண்டும். இங்கிலாந்து அணியில் ஏராளமான பிரச்சினைகள் உள்ளது. அதில் எந்த சந்தேகமும் இல்லை. இனி வரும் டெஸ்ட் போட்டி களில் மாற்றம் மிகவும் அவசியம் ஆகும்.
இவ்வாறு ஸ்டராஸ் கூறி உள்ளார்.
டி20 உலகக்கோப்பையில் இந்தியாவுக்கு எதிராக முதல் லீக் ஆட்டத்தில் மோதும் பாகிஸ்தானுக்கு நெருக்கடி அதிகம் என கவுதம் காம்பீர் தெரிவித்துள்ளார்.
20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஓமனில் நடக்கிறது. இதன் ‘சூப்பர் 12’ சுற்றில் இந்தியாவும், பாகிஸ்தானும் ஒரே பிரிவில் இடம்பெற்றுள்ளன. இரு அணிகளும் அக்டோபர் 24-ந்தேதி முதல் லீக் ஆட்டத்தில் மோதுகின்றன. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இரு அணிகளும் மோதுவதால் அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது. கடைசியாக இங்கிலாந்தில் நடந்த 50 ஓவர் உலக கோப்பையில் மோதின. இதில் இந்தியா 89 ரன்னில் வெற்றிபெற்றது.
இந்த நிலையில் 20 ஓவர் உலக கோப்பையில் இந்தியாவுடன் மோதும் பாகிஸ்தான் அணிக்கு அதிகமான நெருக்கடி உள்ளது என்று முன்னாள் தொடக்க வீரரும், பா.ஜனதா எம்.பி.யுமான கவுதம் காம்பீர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறும்போது, ‘‘தற்போதுள்ள நிலைமையில் இந்திய அணி மிகவும் பலம் பெற்று திகழ்கிறது. இதனால் பாகிஸ்தான் அணிக்கு அதிகமான நெருக்கடி உள்ளது. உலகக்கோப்பை போட்டியில் இந்தியாவிடம் பாகிஸ்தான் 5 முறை தோற்றுள்ளது. இந்த நெருக்கடியில் அந்த அணி விளையாட வேண்டிய நிலை இருக்கிறது’’ என்றார்.
நடப்பு சாம்பியனும், உலக தரவரிசையில் 6-வது இடத்தில் இருப்பவருமான ஆஸ்திரியாவின் டொமினிக் திம் அமெரிக்க ஓபன் டென்னிசில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
பாரீஸ்:
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் வருகிற 30-ந் தேதி முதல் செப்டம்பர் 12-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் இருந்து நடப்பு சாம்பியனும், உலக தரவரிசையில் 6-வது இடத்தில் இருப்பவருமான ஆஸ்திரியாவின் டொமினிக் திம் விலகுவதாக நேற்று அறிவித்தார். அத்துடன் இந்த சீசனின் எஞ்சிய போட்டிகளிலும் விளையாடப்போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.
முழங்கால் காயத்துக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டியது இருப்பதால் முன்னாள் நம்பர் ஒன் வீரரான ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) இந்த போட்டியில் இருந்து விலகுவதாக சமீபத்தில் அறிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் வருகிற 30-ந் தேதி முதல் செப்டம்பர் 12-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் இருந்து நடப்பு சாம்பியனும், உலக தரவரிசையில் 6-வது இடத்தில் இருப்பவருமான ஆஸ்திரியாவின் டொமினிக் திம் விலகுவதாக நேற்று அறிவித்தார். அத்துடன் இந்த சீசனின் எஞ்சிய போட்டிகளிலும் விளையாடப்போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து 27 வயதான டொமினிக் திம் தனது டுவிட்டர் பதிவில், ‘அமெரிக்க ஓபன் மற்றும் இந்த ஆண்டுக்கான எஞ்சிய சீசனையும் நான் தவறவிடுகிறேன். அமெரிக்க ஓபன் பட்டத்தை தக்க வைக்க முடியாமல் போவது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. கடந்த ஜூன் மாதம் எனது மணிக்கட்டில் ஏற்பட்ட காயம் இன்னும் குணமடையவில்லை.
டாக்டர்களின் அறிவுறுத்தலின்படி போதிய மருத்துவ சிகிச்சை எடுத்து மீண்டும் பயிற்சியை தொடங்குகையில் வலி ஏற்பட்டதால் டாக்டர்களை சந்தித்து ஆலோசனை பெற்றேன். காயம் குணமடைய கூடுதல் காலம் ஓய்வு எடுக்க வேண்டியது அவசியம் என்று டாக்டர்கள் அறிவுறுத்தி இருப்பதால் அமெரிக்க ஓபன் போட்டியில் இருந்து விலகும் கடினமான முடிவை எடுத்தேன்’ என்று தெரிவித்துள்ளார்.
முழங்கால் காயத்துக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டியது இருப்பதால் முன்னாள் நம்பர் ஒன் வீரரான ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) இந்த போட்டியில் இருந்து விலகுவதாக சமீபத்தில் அறிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
உலக இளையோர் போட்டியில் வெற்றி பெற்றது போல் சீனியர் சாம்பியன்ஷிப் போட்டியிலும் பட்டத்தை வெல்ல ஆசைப்படுகிறேன்.
ஆலந்தூர்:
போலந்து நாட்டில் நடந்த உலக இளையோர் வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில் 52 நாடுகளில் இருந்து 500-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இதில் இந்திய அணியில் அங்கம் வகித்த கோவையை சேர்ந்த 14 வயது ரிதுவர்ஷினி தங்கப்பதக்கம் வென்றார். போலந்தில் இருந்து நாடு திரும்பிய வில்வித்தை வீரர், வீராங்கனைகளை மத்திய விளையாட்டு துறை மந்திரி அனுராக் தாக்குர் பாராட்டினார். பின்னர் டெல்லியில் இருந்து சென்னைக்கு விமானம் முலம் வந்த ரிதுவர்ஷினியை விமான நிலையத்தில் தமிழ்நாடு வில்வித்தை சங்க செயலாளரும் இந்திய வில்வித்தை பயிற்சியாளர்கள் இயக்குனருமான ஷிஹான் ஹூசைனி மற்றும் வில்வித்தை வீரர்கள் மாலை அணிவித்து உற்சாகமாக வரவேற்றனர். அப்போது ஹுசைனி செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘முதல்முறையாக உலக வில்வித்தை போட்டி போலந்து நாட்டில் நடந்தது. அந்த போட்டியில் தமிழகத்தை சேர்ந்த ரிதுவர்ஷினி உலக சாம்பியன் பட்டத்தை பெற்று இருக்கிறார். இது இந்தியாவிற்கு மட்டுமில்லாமல் தமிழகத்திற்கும் பெருமையாகும். ரிதுவர்ஷினிக்கும், அவரது பெற்றோருக்கும் பயிற்சியாளருக்கும் பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன்’ என்றார்.
தங்கப்பதக்கம் பெற்ற ரிதுவர்ஷினி பேசுகையில், ‘சர்வதேச போட்டியில் இது தான் எனது முதல் வெற்றி. என்னுடைய வெற்றிக்கு நான் மட்டுமின்றி நிறைய பேரின் உழைப்பும் காரணமாகும். உலக இளையோர் போட்டியில் வெற்றி பெற்றது போல் சீனியர் சாம்பியன்ஷிப் போட்டியிலும் பட்டத்தை வெல்ல ஆசைப்படுகிறேன். அரை இறுதிப்போட்டியில் இத்தாலியை வென்றோம். இறுதிப்போட்டியில் துருக்கியை வீழ்த்தினோம்’ என்றார்.
நைஜீரியா, போலந்து அணிகள் முறையே தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்கள் வென்ற நிலையில், இந்திய அணி வெண்கலப் பதக்கம் வென்றது.
கென்யாவின் நைரோபியில் 20 வயதிற்கு உட்பட்டோருக்கான தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது வருகிறது. இன்று கலப்பு அணி 4x400மீ ரிலே போட்டி நடைபெற்றது. இதில் இந்திய அணி பந்தய தூரத்தை 3:20.60 நேரத்தில் கடந்து வெண்கலப் பதக்கம் வென்றது.
நைஜீரியா அணி 3:19.70 நேரத்தில் கடந்து தங்கப்பதக்கம் வென்றது. போலந்து அணி 3:19.80 நேரத்தில் கடந்து வெள்ளிப்பதக்கம் வென்றது.
இன்று காலை நடைபெற்ற ஹீட் பிரிவில் இந்திய அணி 3:23.36 நேரத்தில் கடந்து ஒட்டுமொத்தமாக 2-வது இடம் பிடித்திருந்தது. நைஜீரியா 3:21.66 நேரத்தில் கடந்தது.
ஏற்கனவே ஈட்டி எறிதலில் சீமா அன்டில் (2002), நவ்ஜீத் கவுர் தில்லோன் (2014) ஆகியோர் வெண்கல பதக்கமும், நீரஜ் சோப்ரா 2016-ல் தங்கப்பதக்கமும், 2018-ல் ஹீமா தாஸ் 400மீட்டர் ஓட்டத்தில் தங்கப்பதக்கமும் வென்றுள்ளனர்.
தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவர் பதவிக்கு ராகுல் டிராவிட் மட்டுமே விண்ணப்பித்துள்ளதால், காலக்கெடுவை நீட்டித்துள்ளது பி.சி.சி.ஐ.
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக ராகுல் டிராவிட் உள்ளார். இவரது இரண்டு ஆண்டு பதவிக்காலம் முடிவடைவதையொட்டி, அப்பதவிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என பி.சி.சி.ஐ. தெரிவித்திருந்தது. அதற்கான கடைசி தேதி ஆகஸ்ட் 15-ந்தேதி எனத் தெரிவித்திருந்தது.
ஆனால் ராகுல் டிராவிட்டை தவிர்த்து மற்ற யாரும் விண்ணப்பிக்கவில்லை. இதனால் விண்ணப்பம் அனுப்புவதற்கான காலக்கெடுவை மேலும் சில நாட்களுக்கு பி.சி.சி.ஐ. நீட்டித்துள்ளது.
டி20 உலகக்கோப்பையுடன் ரவி சாஸ்திரி இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பதவியில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். அந்த பதவிக்கு ராகுல் டிராவிட் செல்ல வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இப்படியிருக்கும் நிலையில் அவர் வகித்து வரும் பதவிக்கு யாருமே விண்ணப்பம் செய்யாமல் இருக்கும் நிலையில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்தியாவுக்கு எதிரான இரண்டு டெஸ்டிலும் இங்கிலாந்து சிறப்பாக செயல்படாத நிலையில், பென் ஸ்டோக்ஸ் மீண்டும் அணிக்கு அழைக்கப்படுவாரா? என எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.
இந்தியாவுக்கு எதிரான லார்ட்ஸ் டெஸ்டில் தோல்வி அடைந்ததால் இங்கிலாந்து அணி கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது. முதல் டெஸ்டில் மிடில் வரிசை பலவீனமாக இருந்ததால் லார்ட்ஸ் டெஸ்டில் இங்கிலாந்து அணியில் ஆல்-ரவுண்டர் மொயீன் அலி சேர்க்கப்பட்டார். ஆனால் அதுவும் பலன் அளிக்கவில்லை. வருகிற 25-ந்தேதி லீட்சில் தொடங்கும் 3-வது டெஸ்டில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இங்கிலாந்து உள்ளது.
இதையும் படியுங்கள்... டி20 உலகக்கோப்பை போட்டிக்கான அட்டவணை முழு விவரம்
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து இங்கிலாந்தின் சிறந்த ஆல்-ரவுண்டரான பென் ஸ்டோக்ஸ் திடீரென விலகினார். மனரீதியாக நலம்பெற வேண்டும் என்பதால் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து காலவரையற்ற ஓய்வு எடுத்து கொண்டதாக கடந்த மாதம் இறுதியில் அறிவித்தார். அதனை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியமும் ஏற்று கொண்டது.
இதற்கிடையே பென் ஸ்டோக்ஸ் அணிக்கு திரும்புவது குறித்து இங்கிலாந்து பயிற்சியாளர் சில்வர்வுட் கூறியதாவது:-
அணிக்கு திரும்புவது தொடர்பாக பென் ஸ்டோக்ஸ்க்கு எந்த அழுத்தமும் இல்லை. அவர் தயாராக இருக்கிறார் என்பதை எனக்கு தெரியப்படுத்த அவர் என்னிடம் வருவார். அதுவரை காத்திருப்போம். அதற்கு கால வரம்பு எதுவும் இல்லை. பென் ஸ்டோக்ஸும், அவரது குடும்பத்தினரும் மீண்டு வருவதுதான் முக்கியம். அவர் மீண்டும் அணிக்கு வரும்போது வலுவாக திரும்புவார். இங்கிலாந்துக்காக அவர் மீண்டும் செயல்பட தயாராக இருக்கிறார் என்பதை நாம் அறிவோம்.
இதையும் படியுங்கள்... இங்கிலாந்து அணியில் அவர் மட்டுமே சதம் அடிக்கக்கூடியவர் - அடித்துச் சொல்லும் தெண்டுல்கர்
நான் நிச்சயமாக பென் ஸ்டோக்ஸை பதில் அளிக்க வேண்டும் என்று நிர்பந்திக்கமாட்டேன். அது சரியான விஷயமாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை.

அவரை சுற்றி நிறைய பேர் ஆதரிக்கிறார்கள். அவர் முழுவீச்சல் அணிக்கு வர தயாராக இருக்கும்போது நாங்கள் அவரை இரு கைகளாலும் வரவேற்போம். அதுவரை அவருக்கு தேவையான அனைத்து ஆதரவும் கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே 2-வது டெஸ்டில் தோள்பட்டையில் காயம் அடைந்த இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் மார்க்வுட் 3-வது டெஸ்டில் விளையாடுவது சந்தேகம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்த இங்கிலாந்து கேப்டன் ஜோரூட்டின் முடிவு சிறந்தது அல்ல என சச்சின் தெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.
லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த 2-வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தை 151 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்தது. இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோரூட் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டார். அவர் 2-வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் 180 ரன் குவித்தார்.
முன்னதாக நாட்டிங்காமில் நடந்த முதல் டெஸ்டிலும் சதம் அடித்து இருந்தார். அந்த டெஸ்டில் முதல் இன்னிங்சில் 64 ரன்னும் 2-வது இன்னிங்சில் 109 ரன்னும் எடுத்தார்.

இந்த நிலையில் இங்கிலாந்து அணியில் ஜோரூட் மட்டுமே சதம் அடிக்க கூடிய வீரராக உள்ளார் என்று கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்த இங்கிலாந்து கேப்டன் ஜோரூட்டின் முடிவு சிறந்ததல்ல. இந்திய தொடக்க வீரர்கள் திறமையாக விளையாடினார்கள்.
டாஸ் வென்ற ஜோரூட் இந்தியாவை பேட்டிங்கை செய்ய அழைத்தபோது நான் மிகவும் ஆச்சரியப்பட்டேன்.
தற்போதுள்ள இங்கிலாந்து அணி சரிவின் வரலாற்றை கொண்டிருக்கிறது. அவர்களின் பேட்ஸ்மேன்களை பார்க்கும்போது, இவர் பெரிய சதம் அடிப்பார் என்று கூறுவதற்கு ஜோரூட்டை தவிர வேறு யாரையும் நான் பார்க்கவில்லை.
கடந்த கால அணிகளில் அலஸ்டர் குக், மைக்கேல் வாகன், கெவின் பீட்டர்சன், இயன் பெல், ஜோனதன் டிராட், ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ் போன்ற வீரர்கள் இருந்தனர். அவர்கள் சதம் அடிக்கும் திறமையோடு விளையாடினார்கள். ஆனால் இப்போதுள்ள இங்கிலாந்து அணியில் எத்தனை பேர் தொடர்ந்து சதங்களை அடிக்க முடியும் என்று பார்த்தால், ஜோரூட்டை தவிர என்னால் வேறு யாரையும் கண்டுபிடிக்க முடியவில்லை. இன்று அதுதான் அவர்களின் பேட்டிங்கின் நிலை. இதுதான் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்ததற்கான காரணமாக இருக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக நாட்டிங்காமில் நடந்த முதல் டெஸ்டிலும் சதம் அடித்து இருந்தார். அந்த டெஸ்டில் முதல் இன்னிங்சில் 64 ரன்னும் 2-வது இன்னிங்சில் 109 ரன்னும் எடுத்தார்.
அவர் இதுவரை 386 ரன் (2 டெஸ்ட்) எடுத்து இருக்கிறார். மற்ற வீரர்கள் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. ஜோரூட்டையே இங்கிலாந்து அணி நம்பி இருப்பது போல் தெரிவதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்த இங்கிலாந்து கேப்டன் ஜோரூட்டின் முடிவு சிறந்ததல்ல. இந்திய தொடக்க வீரர்கள் திறமையாக விளையாடினார்கள்.
டாஸ் வென்ற ஜோரூட் இந்தியாவை பேட்டிங்கை செய்ய அழைத்தபோது நான் மிகவும் ஆச்சரியப்பட்டேன்.
தற்போதுள்ள இங்கிலாந்து அணி சரிவின் வரலாற்றை கொண்டிருக்கிறது. அவர்களின் பேட்ஸ்மேன்களை பார்க்கும்போது, இவர் பெரிய சதம் அடிப்பார் என்று கூறுவதற்கு ஜோரூட்டை தவிர வேறு யாரையும் நான் பார்க்கவில்லை.
கடந்த கால அணிகளில் அலஸ்டர் குக், மைக்கேல் வாகன், கெவின் பீட்டர்சன், இயன் பெல், ஜோனதன் டிராட், ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ் போன்ற வீரர்கள் இருந்தனர். அவர்கள் சதம் அடிக்கும் திறமையோடு விளையாடினார்கள். ஆனால் இப்போதுள்ள இங்கிலாந்து அணியில் எத்தனை பேர் தொடர்ந்து சதங்களை அடிக்க முடியும் என்று பார்த்தால், ஜோரூட்டை தவிர என்னால் வேறு யாரையும் கண்டுபிடிக்க முடியவில்லை. இன்று அதுதான் அவர்களின் பேட்டிங்கின் நிலை. இதுதான் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்ததற்கான காரணமாக இருக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்தியாவில் ஐ.பி.எல். போட்டி நடந்தபோது கொரோனா பரவல் காரணமாக ரசிகர்கள் அனுமதிக்கப்படவில்லை. ரசிகர்கள் இன்றி போட்டிகள் நடந்தன.
மும்பை:
14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடர் கடந்த ஏப்ரல் 9-ந் தேதி இந்தியாவில் தொடங்கியது. போட்டிகள் நடந்து கொண்டிருக்கும் போது சில வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.
இதையடுத்து ஐ.பி.எல். போட்டி தள்ளி வைக்கப்படுவதாக மே 2-ந் தேதி அறிவிக்கப்பட்டது. அதுவரை 29 லீக் ஆட்டங்கள் நடந்து முடிந்திருந்தன. அதன்பின் ஐ.பி.எல். போட்டியின் எஞ்சிய ஆட்டங்கள் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெறும் என்று கிரிக்கெட் வாரியம் அறிவித்தது.
வருகிற செப்டம்பர் 19-ந் தேதி முதல் அக்டோபர் 15-ந் தேதி வரை எஞ்சிய ஆட்டங்கள் நடக்கிறது.
இந்தியாவில் ஐ.பி.எல். போட்டி நடந்தபோது கொரோனா பரவல் காரணமாக ரசிகர்கள் அனுமதிக்கப்படவில்லை. ரசிகர்கள் இன்றி போட்டிகள் நடந்தன.
இதற்கிடையே ஐக்கிய அரபு எமிரேட்சில் நடக்கும் ஐ.பி.எல். போட்டியில் ரசிகர்களை அனுமதிப்பது தொடர்பாக எமிரேட்ஸ் கிரிக்கெட் வாரிய பொதுச்செயலாளர் உஸ்மானி கூறும்போது, இந்திய கிரிக்கெட் வாரியத்திடமும் ஐக்கிய அரபு எமிரேட்சிடமும் அதுபற்றி பேசுவோம் என்றார்.

அடுத்த ஆண்டு நடைபெறும் ஐ.பி.எல். போட்டியில் மேலும் இரண்டு புதிய அணிகள் சேர்க்கப்பட வாய்ப்பு உள்ளது என்றார்.
இந்த நிலையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசு ஐ.பி.எல். போட்டியில் 60 சதவீத ரசிகர்களுக்கு அனுமதி அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடர் கடந்த ஏப்ரல் 9-ந் தேதி இந்தியாவில் தொடங்கியது. போட்டிகள் நடந்து கொண்டிருக்கும் போது சில வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.
இதையடுத்து ஐ.பி.எல். போட்டி தள்ளி வைக்கப்படுவதாக மே 2-ந் தேதி அறிவிக்கப்பட்டது. அதுவரை 29 லீக் ஆட்டங்கள் நடந்து முடிந்திருந்தன. அதன்பின் ஐ.பி.எல். போட்டியின் எஞ்சிய ஆட்டங்கள் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெறும் என்று கிரிக்கெட் வாரியம் அறிவித்தது.
வருகிற செப்டம்பர் 19-ந் தேதி முதல் அக்டோபர் 15-ந் தேதி வரை எஞ்சிய ஆட்டங்கள் நடக்கிறது.
இந்தியாவில் ஐ.பி.எல். போட்டி நடந்தபோது கொரோனா பரவல் காரணமாக ரசிகர்கள் அனுமதிக்கப்படவில்லை. ரசிகர்கள் இன்றி போட்டிகள் நடந்தன.
இதற்கிடையே ஐக்கிய அரபு எமிரேட்சில் நடக்கும் ஐ.பி.எல். போட்டியில் ரசிகர்களை அனுமதிப்பது தொடர்பாக எமிரேட்ஸ் கிரிக்கெட் வாரிய பொதுச்செயலாளர் உஸ்மானி கூறும்போது, இந்திய கிரிக்கெட் வாரியத்திடமும் ஐக்கிய அரபு எமிரேட்சிடமும் அதுபற்றி பேசுவோம் என்றார்.

இதுகுறித்து இந்திய கிரிக்கெட் வாரிய பொருளாளர் அருண் துமால் கூறியதாவது:-
இந்திய கிரிக்கெட் வாரியம், ரசிகர்கள் கூட்டத்தை விரும்புகிறது. ஆனால் வீரர்கள் மற்றும் மக்களின் பாதுகாப்புதான் முக்கியம். அங்கு (ஐக்கிய அரபு எமிரேட்ஸ்) அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டதால், இந்த முறை ரசிகர்களுக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசு அனுமதி அளிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். அது அந்நாட்டு அரசின் முடிவாக இருக்கும்.
அடுத்த ஆண்டு நடைபெறும் ஐ.பி.எல். போட்டியில் மேலும் இரண்டு புதிய அணிகள் சேர்க்கப்பட வாய்ப்பு உள்ளது என்றார்.
இந்த நிலையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசு ஐ.பி.எல். போட்டியில் 60 சதவீத ரசிகர்களுக்கு அனுமதி அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.






