என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்திய அணி
    X
    இந்திய அணி

    20 வயதிற்கு உட்பட்டோர் தடகள சாம்பியன்ஷிப்: இந்தியாவின் கலப்பு 4x400மீ ரிலே அணி வெண்கலப் பதக்கம் வென்றது

    நைஜீரியா, போலந்து அணிகள் முறையே தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்கள் வென்ற நிலையில், இந்திய அணி வெண்கலப் பதக்கம் வென்றது.
    கென்யாவின் நைரோபியில் 20 வயதிற்கு உட்பட்டோருக்கான தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது வருகிறது. இன்று கலப்பு அணி 4x400மீ ரிலே போட்டி நடைபெற்றது. இதில் இந்திய அணி பந்தய தூரத்தை 3:20.60 நேரத்தில் கடந்து வெண்கலப் பதக்கம் வென்றது.

    நைஜீரியா அணி 3:19.70 நேரத்தில் கடந்து தங்கப்பதக்கம் வென்றது. போலந்து அணி 3:19.80 நேரத்தில் கடந்து வெள்ளிப்பதக்கம் வென்றது.

    இன்று காலை நடைபெற்ற ஹீட் பிரிவில் இந்திய அணி 3:23.36 நேரத்தில் கடந்து ஒட்டுமொத்தமாக 2-வது இடம் பிடித்திருந்தது. நைஜீரியா 3:21.66 நேரத்தில் கடந்தது.

    ஏற்கனவே ஈட்டி எறிதலில் சீமா அன்டில் (2002), நவ்ஜீத் கவுர் தில்லோன் (2014) ஆகியோர் வெண்கல பதக்கமும், நீரஜ் சோப்ரா 2016-ல் தங்கப்பதக்கமும், 2018-ல் ஹீமா தாஸ் 400மீட்டர் ஓட்டத்தில் தங்கப்பதக்கமும் வென்றுள்ளனர்.
    Next Story
    ×