என் மலர்
விளையாட்டு
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் துணை கேப்டன் ரோகித் சர்மா காயத்தால் விலகியதால், புதிய துணை கேப்டனாக யார் நியமிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னையை சேர்ந்த அஸ்வினுக்கு துணை கேப்டன் பதவி வழங்கப்படுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. டெஸ்ட் போட்டியில் தொடர்ந்து பங்கேற்று வரும் ஒரே சுழற்பந்து வீரர் அவர்தான். அதிக அனுபவம் வாய்ந்தவர். தென் ஆப்பிரிக்காவுக்கு பலமுறை சென்று வந்தவர். சீனியர் வீரர் என்ற அடிப்படையில் அஸ்வினுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம்.
அதே நேரத்தில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று முடிவு எடுத்தால் லோகேஷ் ராகுல் அல்லது ரிஷாப் பண்ட் ஆகியோரில் ஒருவர் நியமிக்கப்படுவார்.
இந்திய அணி வீரர்கள் மும்பையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், விராட் கோலி இன்னும் அணியுடன் இணையவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது.
முதல் டெஸ்ட் போட்டி வருகிற 26-ந்தேதி செஞ்சூரியனில் தொடங்குகிறது. 2-வது டெஸ்ட் ஜோகன்ஸ் பர்க்கிலும் (ஜனவரி 3-7), கடைசி டெஸ்ட் கேப் டவுனிலும் (ஜனவரி 11-15) நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து ஒரு நாள் போட்டிகள் ஜனவரி 19, 21 மற்றும் 23-ந் தேதிகளில் நடக்கிறது.
முன்னதாக இந்த டெஸ்ட் தொடர் வருகிற 17-ந்தேதி தொடங்க இருந்தது. ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு காரணமாக டெஸ்ட் தொடர் 9 நாட்களுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தென் ஆப்பிரிக்க டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்கள் மும்பையில் 3 நாட்களுக்கு தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.
மும்பை வந்த இந்திய வீரர்கள் விமான நிலையம் அருகே உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நாளை வரை வீரர்கள் தனிமையில் இருப்பார்கள். வருகிற 16-ந் தேதி இந்திய அணி தென் ஆப்பிரிக்கா புறப்பட்டு செல்கிறது.
ஷ்ரேயாஸ் அய்யர், ரிஷாப் பண்ட், ஜெயந்த் யாதவ் உள்ளிட்ட வீரர்கள் தனிமையில் இருக்கும் போட்டோவை வெளியிட்டுள்ளனர். ஆனால் கேப்டன் விராட் கோலி ஓட்டலுக்கு இன்னும் வந்து சேரவில்லை என்று கூறப்படுகிறது.
எல்லா ஆட்டங்களிலும் வெற்றி பெற வேண்டும் என்கிற மனஉறுதியுடன் இந்திய கிரிக்கெட் அணியை விராட்கோலி வழிநடத்தினார் என்று புதிய கேப்டன் ரோகித் சர்மா பாராட்டினார்.
மும்பை:
கடந்த நவம்பர் மாதம் முடிந்த 20 ஓவர் உலக கோப்பை போட்டியுடன் இந்திய 20 ஓவர் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விராட்கோலி விலகினார். நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டார். அத்துடன் இந்திய ஒருநாள் போட்டி அணியின் கேப்டன் பதவி விராட்கோலியிடம் இருந்து கடந்த புதன்கிழமை பறிக்கப்பட்டது. டெஸ்ட் அணியின் கேப்டனாக மட்டும் விராட்கோலி தொடருவார் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. இந்திய ஒருநாள் போட்டி அணியின் புதிய கேப்டனாக 34 வயது ரோகித் சர்மா நியமனம் செய்யப்பட்டார். அவருக்கு இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டன் பதவியும் வழங்கப்பட்டது. இந்திய ஒயிட் பால் (20 ஓவர், ஒருநாள்) கிரிக்கெட் அணிகளின் முழுநேர கேப்டனாக ரோகித் சர்மா இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி வருகிற 16-ந் தேதி முதல் தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது. இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் வருகிற 26-ந் தேதியும், 2-வது டெஸ்ட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் ஜனவரி 3-ந் தேதியும், 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கேப்டவுனில் ஜனவரி 11-ந் தேதியும் தொடங்குகிறது. ஒருநாள் போட்டிகள் முறையே ஜனவரி 19, 21 (இரண்டும் பார்ல்), 23 (கேப்டவுன்) ஆகிய தேதிகளில் நடக்கிறது. தென்ஆப்பிரிக்க ஒருநாள் தொடரில் இருந்து ஒருநாள் போட்டியின் அணியின் கேப்டன் பொறுப்பை ரோகித் சர்மா ஏற்று செயல்பட இருக்கிறார்.
தென்ஆப்பிரிக்க தொடருக்கான இந்திய டெஸ்ட் அணி வீரர்கள் மும்பையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இந்திய ஒருநாள் போட்டி அணியின் புதிய கேப்டன் ரோகித் சர்மா இந்திய கிரிக்கெட் வாரிய டெலிவிஷனுக்கு அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-
கடந்த 5 ஆண்டுகளாக விராட்கோலி இந்திய கிரிக்கெட் அணியை கேப்டனாக முன்னின்று வழிநடத்திய விதத்தை மறக்க முடியாது. ஒவ்வொரு முறை களம் இறங்குகையிலும் அவர் அணி வெற்றி பெற வேண்டும் என்ற மனஉறுதியையும், அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்தி இருக்கிறார். அது ஒட்டுமொத்த அணிக்கும் அவர் கொடுக்கும் செய்தியாக இருக்கும். அவரது தலைமையின் கீழ் விளையாடியது சிறப்பானதாகும். அவரது தலைமையின் கீழ் நான் நிறைய போட்டிகளில் விளையாடி இருக்கிறேன். அவருடன் ஆடிய ஒவ்வொரு தருணத்தையும் அனுபவித்து விளையாடி இருக்கிறேன். அதனை இன்னும் தொடர்ந்து செய்வோம்.
கடைசியாக 2013-ம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. அதன் பிறகு நமது அணி ஐ.சி.சி. கோப்பையை வெல்லவில்லை. சாம்பியன்ஸ் கோப்பை போட்டிக்கு பிறகு எங்களது ஆட்டத்தில் தவறு இருப்பதாக நான் பார்க்கவில்லை. ஒரு அணியாக நாங்கள் சிறப்பாக தான் செயல்பட்டு இருக்கிறோம். இருப்பினும் கோப்பையை கைப்பற்றும் கூடுதல் முயற்சியில் இன்னும் முன்னேற்றம் காண வேண்டும் என்று நினைக்கிறேன். சவால் நிறைந்த சர்வதேச போட்டிகளில் இதுபோல் நடக்க தான் செய்யும்.
அடுத்து நிறைய உலக கோப்பை போட்டிகள் வர இருக்கின்றன. அந்த போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு கோப்பையை வெல்ல வேண்டும் என்பது தான் எங்களது குறிக்கோளாகும். கோப்பையை வெல்ல வேண்டும் என்றால் ஒரு அணியாக நாங்கள் செயல்முறைகளை சரியாக கடைபிடிக்க வேண்டியது அவசியமானதாகும். நீங்கள் சாம்பியன் பட்டத்தை வெல்ல வேண்டும் என்றால் முதலில் கவனிக்க வேண்டிய பல விஷயங்கள் உள்ளன. அதன் பின்னர் இறுதி இலக்கில் கவனம் செலுத்த வேண்டும். முதலில் ஒரு வீரராகவும், பிறகு ஒரு அணியாகவும் சிறந்து விளங்குவதில் கவனம் செலுத்த வேண்டும். சவால்கள் இருக்கும் போது அந்த கடினமான சூழ்நிலையில் இருந்து எப்படி மீண்டு வருகிறீர்கள் என்பது முக்கியமானதாகும். தொடக்கத்தில் குறைந்த ரன்னுக்குள் இரண்டு அல்லது மூன்று விக்கெட்டுகளை இழந்து கடினமான சூழ்நிலை உருவானால் அதில் இருந்து சிறப்பாக மீண்டு வருவதில் கடந்த காலங்களில் தவறி இருக்கிறோம். இதுபோன்ற விஷயங்களை மனதில் கொண்டு முன்னோக்கி செல்ல முயற்சி செய்ய வேண்டியதும் ஒரு பகுதியாகும்.
அணியில் உள்ள ஒவ்வொரு வீரர்களுக்கும் பொறுப்பு என்ன? அவர்களிடம் இருந்து அணி எதிர்பார்ப்பது என்ன? என்பது குறித்து தெளிவாக தகவல் தெரிவிக்க நானும், பயிற்சியாளரும் முயற்சிப்போம். வீரர்கள் தாங்கள் அணிக்கு தேர்வு செய்யப்பட்டு இருப்பதன் நோக்கத்தை உணர்ந்து செயல்பட வேண்டும். புதிய தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுடன் இணைந்து மூன்று 20 ஓவர் போட்டியில் மட்டுமே நான் பணியாற்றி இருக்கிறேன். அவருடன் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சியாகவும், அருமையாகவும் இருக்கிறது. வீரர்களை அழுத்தமின்றி மகிழ்ச்சியாக வைத்து இருப்பது முக்கியமானதாகும். அந்த மாதிரியான சுமுக சூழல் நிலவுவதை உறுதி செய்வதில் கவனம் செலுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி டாக்காவில் இன்று தொடங்குகிறது. இதன் முதலாவது லீக் ஆட்டத்தில் இந்தியா-தென்கொரியா அணிகள் மோதுகின்றன.
டாக்கா:
6-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி வங்காளதேச தலைநகர் டாக்காவில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் 22-ந் தேதி வரை நடக்கிறது.
இந்த போட்டியில் இந்தியா, தென்கொரியா, பாகிஸ்தான், ஜப்பான், வங்காளதேசம் ஆகிய 5 அணிகள் கலந்து கொள்கின்றன. கொரோனா பிரச்சினை காரணமாக கடைசி நேரத்தில் மலேசியா அணி இந்த போட்டியில் இருந்து விலகி விட்டது. ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.
தொடக்க நாளான இன்று 2 லீக் ஆட்டங்கள் நடக்கிறது. முதலாவது ஆட்டத்தில் இந்தியா-தென்கொரியா (மாலை 3.30 மணி) அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. மற்றொரு ஆட்டத்தில் ஜப்பான்-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
இந்திய அணி தனது அடுத்த லீக் ஆட்டங்களில் நாளை வங்காளதேசத்தையும், வருகிற 17-ந் தேதி பரம எதிரியான பாகிஸ்தானையும், 19-ந் தேதி ஆசிய சாம்பியன் ஜப்பானையும் சந்திக்கிறது.
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் இந்தியா 2011, 2016-ம் ஆண்டும், பாகிஸ்தான் 2012, 2013-ம் ஆண்டும் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளன. கடைசியாக 2018-ம் ஆண்டு மஸ்கட்டில் நடந்த போட்டியில் மழை காரணமாக இறுதி ஆட்டம் ரத்து செய்யப்பட்டதால் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் கூட்டாக சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.
இந்த போட்டியில் இந்திய அணி மன்பிரீத் சிங் தலைமையில் களம் காணுகிறது. டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்று சாதனை படைத்த இந்திய அணி அதன் பிறகு பங்கேற்கும் முதல் சர்வதேச போட்டி இது என்பதால் சிறப்பாக செயல்படும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்த போட்டி குறித்து இந்திய அணியின் கேப்டன் மன்பிரீத் சிங் கூறுகையில், ‘தென்கொரியா சிறந்த அணியாகும். இதே மைதானத்தில் 2017-ம் ஆண்டு நடந்த ஆசிய கோப்பை போட்டியின் லீக் ஆட்டத்தில் தென்கொரியாவுக்கு எதிராக நாங்கள் டிரா (1-1) கண்டோம். எனவே அவர்களுக்கு எதிரான ஆட்டத்தை மெத்தனமாக எடுத்து கொள்ளாமல் இருக்க வேண்டியது முக்கியமானதாகும். அவர்களுக்கு எதிரான போட்டியில் அடிப்படை ஆட்டத்தை சரியாக கடைபிடிக்க வேண்டும். டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு பிறகு நாங்கள் கலந்து கொள்ளும் முதல் போட்டியான இது முக்கியமான ஒன்றாகும். எங்களது அடுத்த கட்ட அட்டவணை ஆரம்பமாகிறது. இந்த சீசனை நாங்கள் நன்றாக தொடங்கினால் எங்களுடைய நம்பிக்கை அதிகரிக்கும். எங்கள் அணியினர் அனைவரும் நல்ல நிலையில் உள்ளனர். கடந்த 2 ஆண்டுகளில் மற்ற ஆசிய அணிகள் எப்படி தயாராகி இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள ஆவலாக இருக்கிறோம். இந்த போட்டி எங்களது திறமையை சோதிக்கும் நல்ல களமாக இருக்கும் என்று நினைக்கிறேன்’ என்றார்.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் 63 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.
கராச்சி:
பாகிஸ்தான் சென்று இருக்கும் வெஸ்ட்இண்டீஸ் அணி, அந்த நாட்டு அணிக்கு எதிராக மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது. வெஸ்ட்இண்டீஸ் அணியில் 3 வீரர்கள் உள்பட 4 பேர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி தனிமைப்படுத்தப்பட்டு இருக்கும் நிலையில் பாகிஸ்தான்-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி திட்டமிட்டபடி கராச்சியில் நேற்று நடந்தது.
‘டாஸ்’ ஜெயித்த வெஸ்ட்இண்டீஸ் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் ரன் எதுவும் எடுக்காமலும், பஹர் ஜமான் 10 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். இதனால் 35 ரன்னுக்குள் (4.5 ஓவர்களில்) 2 விக்கெட்டுகள் இழந்து தடுமாறிய அந்த அணியை 3-வது விக்கெட் இணையான முகமது ரிஸ்வான் (78 ரன்கள், 52 பந்துகள், 10 பவுண்டரி), ஹைதர் அலி (68 ரன்கள், 39 பந்து, 6 பவுண்டரி, 4 சிக்சர்) ஆகியோர் அடித்து ஆடி சரிவில் இருந்து மீட்டதுடன் வலுவான நிலைக்கு உயர்த்தினார்கள். 20 ஓவர்களில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட்டுக்கு 200 ரன்கள் குவித்தது. கடைசி கட்டத்தில் அதிரடி காட்டிய முகமது நவாஸ் 10 பந்துகளில் 3 பவுண்டரி, 2 சிக்சருடன் 30 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார்.
பின்னர் 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய வெஸ்ட்இண்டீஸ் அணி 19 ஓவர்களில் 137 ரன்னில் சுருண்டது. இதனால் பாகிஸ்தான் அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பாகிஸ்தான் தரப்பில் முகமது வாசிம் 4 விக்கெட்டும், ஷதப்கான் 3 விக்கெட்டும் சாய்த்தனர். இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இவ்விரு அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் போட்டி இதே மைதானத்தில் இன்று (மாலை 6.30 மணி) நடக்கிறது.
வங்காளதேசத்தில் நடந்து வரும் மகளிர் சாம்பியன்ஷிப் கால்பந்து தொடக்க போட்டியில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.
டாக்கா:
வங்காளதேசத்தின் டாக்கா நகரில் நடந்து வரும் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான மகளிர் சாம்பியன்ஷிப் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் இந்தியா 5-0 என்ற புள்ளி கணக்கில் இலங்கையை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.
இதில் இந்திய அணிக்காக, நீத்து லிண்டா 2 கோல்களும், சந்தோஷ், கேரன் எஸ்டிரோசியா மற்றும் பிரியங்கா தேவி ஆகியோர் தலா ஒரு கோலும் அடித்துள்ளனர். இறுதியாக தேவி அடித்த கோலானது அணியின் வெற்றியை உறுதி செய்தது.
இந்திய டெஸ்ட் அணியின் முக்கிய வீரரான ரோகித் சர்மா, தென் ஆப்பிரிக்க தொடரில் இல்லாதது அணிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.
மும்பை:
இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாட உள்ளது. இதற்காக மும்பையில் முகாமிட்டுள்ள இந்திய அணி வீரர்கள் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டன் ரோகித் சர்மா, பேட்டிங் செய்யும்போது அவருக்கு பந்து பட்டு காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஸ்கேன் செய்ய அழைத்து சென்றனர். பின்னர் ரோகித் சர்மாவுக்கு இடது தொடை தசையில் காயம் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இருந்து அவர் நீக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக பிசிசிஐ வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ‘மும்பையில் நேற்று நடந்த பயிற்சியின்போது இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டன் ரோகித் சர்மாவுக்கு இடது தொடை தசையில் காயம் ஏற்பட்டது. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார். டெஸ்ட் அணியில் ரோகித் சர்மாவுக்கு பதிலாக குஜராத் வீரர் பிரியங்க் பஞ்சால் இடம்பிடித்துள்ளார்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய டெஸ்ட் அணியின் முக்கிய வீரரான ரோகித் சர்மா, தென் ஆப்பிரிக்க தொடரில் இல்லாதது அணிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. ரோகித் சர்மாவுக்கு பதிராக 30 வயதான பிரியாங் பஞ்சால் டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். பிரியங் பஞ்சால் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் இந்திய ஏ அணியை வழிநடத்தி அதிபட்சமாக 96 ரன்களை சேர்த்தார், உள்ளூர் போட்டியில் அனுபவ வீரராக பார்க்கப்பட்ட பிரியங் பஞ்சாலுக்கு இது நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது.
காயத்தின் தன்மை மோசமாக இருப்பதாக கூறப்படுவதால் ரோகித் சர்மா, ஒருநாள் தொடரில் விளையாடுவாரா என்பது உறுதி செய்யப்படவில்லை.
இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் டிசம்பர் 26ம்தேதி தொடங்குகிறது. டிசம்பர் 26 முதல் 30 வரை செஞ்சூரியனில் முதல் டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து 2வது டெஸ்ட் ஜனவரி 3 முதல் 7 வரை ஜோகன்னஸ்பர்க்கிலும், கடைசி போட்டி ஜனவரி 11 முதல் 15 வரை கேப்டவுனிலும் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
அடிலெய்டில் வியாழக்கிழமை 2-வது டெஸ்ட் தொடங்கும் நிலையில், ஹேசில்வுட் பங்கேற்கமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் ஆஷஸ் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. பிரிஸ்பேனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியா 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
2-வது டெஸ்ட் வியாழக்கிழமை (டிசம்பர் 16-ந்தேதி) அடிலெய்டில் தொடங்குகிறது. இந்த போட்டி பகல்-இரவு ஆட்டமாக நடைபெற இருக்கிறது.
பிரிஸ்பேன் டெஸ்டின்போது ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஹேசில்வுட்டுக்கு இடுப்புப் பகுதியில் காயம் ஏற்பட்டது. இதனால் 4-வது நாள் ஆட்டத்தின்போது அவர் ஆறு ஓவர்கள் மட்டுமே வீசினார். இந்த நிலையில் பிரிஸ்பேன் டெஸ்டில் ஹேசில்வுட் விளையாடமாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவருக்குப் பதிலாக ஜை ரிச்சர்ட்சன் அல்லது மைக்கேல் நேசர் சேர்க்கப்பட வாய்ப்புள்ளது. பகல்- இரவு டெஸ்டில் ஹேசில்வுட் அபாரமாக செயல்பட்டுள்ளார். அவர் 32 விக்கெட்டுகள் சாய்த்துள்ளார். சராசரி 19.90 ஆகும்.
இதையும் படியுங்கள்... இந்தியாவுக்காக விளையாடும் போது அழுத்தம் அதிகம் - கேப்டன் ரோகித் சர்மா
அபு தாபி கிராண்ட்பிரீ சுற்றில் கடைசி ரவுண்டில் ஹாமில்டனை முந்தி பார்முலா ஒன் பட்டத்தை தட்டிச் சென்றார் வெர்ஸ்டாப்பன்.
பார்முலா ஒன் கார் பந்தயம் பல சுற்றுகளாக வெவ்வேறு நாடுகளில் நடைபெறும். நேற்று அபு தாபியில் கடைசி சுற்று பந்தயம் நடைபெற்றது. இதற்கு முன் நடைபெற்ற சுற்றுகள் முடிவில் மெர்சிடெஸ் வீரர் லீவிஸ் ஹாமில்டன், ரெட்புல் வீரர் வெர்ஸ்டாப்பன் சம புள்ளிகள் பெற்றிருந்தனர். இதனால் அபு தாபி கிராண்ட் பிரீயில் வெற்றி பெறுபவர் சாம்பியன் பட்டத்தை வெல்லும் நிலை இருந்தது.
போட்டி தொடங்கியதில் இருந்து இருவருடைய கார்களும் சீறிப்பாய்ந்தன. இருவரும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்காமல் வேகத்தை அதிகரித்தனர். இதனால் சமமான நிலையிலேயே இருவரும் வந்து கொண்டிருந்தனர். இருந்தாலும் இறுதிச் சுற்றில் ரெட் புல் வீரர் வெர்ஸ்டாப்பன், ஹாமில்டனை விட 2.256 வினாடிகள் முன்னதாக பந்தய தூரத்தை அடைந்து வெற்றி பெற்றார்.

இதனால் வெர்ஸ்டாப்படனுக்கு 26 புள்ளிகள் கிடைத்தன. ஹாமில்டனுக்கு 18 புள்ளிகள் கிடைத்தன. ஒட்டுமொத்தமாக 395.5 புள்ளிகள் பெற்று வெர்ஸ்டாப்பன் சாம்பியன் பட்டம் வென்றார்.
போட்டியில் கடைசி நான்கு ரவுண்டுகள் இருக்கும்போது, இருவரின் கார் விபத்திற்குள்ளானது. இந்த நேரத்தில், வெர்ஸ்டாப்பனுக்கு டயரை மாற்றும் வாய்ப்பு கிடைத்தது. இதனால்தான் வெர்ஸ்டாப்படன் வெற்றி பெற்றார் என மெர்சிடெஸ் புகார் அளித்தது. இருந்தாலும் மெர்சிடெஸ் புகார் நிராகரிக்கப்பட்டது.
இதையும் படியுங்கள்... விராட் கோலி கேப்டன் பதவி பறிப்பு: பி.சி.சி.ஐ. மீது பாகிஸ்தான் முன்னாள் வீரர் சாடல்
நான் என் வேலையில் கவனம் செலுத்துவதுதான் முக்கியம் என்று இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
இந்திய அணியின் டி20 கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி விலகிய நிலையில் ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டார். இந்த சூழலில் யாரும் எதிர்பார்க்காத வகையில் ஒருநாள் அணியின் கேப்டன் பதவியில் இருந்து கோலி மாற்றப்பட்டு கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டார். இதன்படி தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெற உள்ள ஒருநாள் தொடரில் இருந்து ரோகித் சர்மா, இந்திய அணியின் முழுநேர ஷார்டர் பார்மெட் கேப்டனாக செயல்பட உள்ளார்.
இந்த நிலையில் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள ரோகித் சர்மா முதல் முறையாக பேட்டி அளித்தார். அதில் பேசிய அவர், “இந்திய அணிக்காக விளையாடும் போது பிரஷர் (அழுத்தம்) கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். அந்த அழுத்தம் எப்போதுமே இருந்து கொண்டே இருக்கும். மக்கள் எப்போதும் நேர்மறையாகவோ அல்லது எதிர்மறையாகவோ பேசிக் கொண்டு இருப்பார்கள். ஒரு கிரிக்கெட் வீரனாக இதை சொல்கிறேன். இப்போது நான் என் வேலையில் கவனம் செலுத்துவதுதான் முக்கியம். அதைவிடுத்து மக்கள் பேசுவது குறித்து கவனிக்க வேண்டிய அவசியமில்லை. ஏனெனில் அவர்கள் பேசுவதை நம்மால் நிறுத்த முடியாது.
நான் இதைப் பற்றி பல முறை சொல்லி விட்டேன். நான் அதை சொல்லிக்கொண்டே தான் இருப்பேன், அது போல, நாங்கள் ஒரு உயர்தர போட்டியை விளையாடும்போது, அதிகமாக அழுத்தம் இருக்கும் என்பதை அணி கூட புரிந்துகொள்கிறது.
நம்மிடம் என்ன இருக்கிறது என்பதில் கவனம் செலுத்துவது முக்கியம், அதாவது, விளையாடுவதற்குச் சென்று வெற்றி பெறுவது, நீங்கள் விளையாடத் தெரிந்த வழியில் விளையாடுவது. வெளியில் நடக்கும் பேச்சுக்கள் முக்கியமற்றவை என்று நான் நினைக்கிறேன். எங்களைப் பொறுத்தவரை, நாம் என்ன நினைக்கிறோம் என்பது முக்கியம்.
x, y, z பற்றி நான் நினைப்பது முக்கியமானது, ஏனெனில் நீங்கள் வீரர்களுக்கு இடையே ஒரு வலுவான பிணைப்பை உருவாக்க விரும்புகிறீர்கள், அதுவே நாங்கள் விரும்பும் இலக்கை அடைய எங்களுக்கு உதவும். ராகுல் டிராவிட் வெளிப்படையாக அதைச் செய்ய எங்களுக்கு உதவப் போகிறார். எனவே நாங்கள் அதை எதிர்நோக்குகிறோம்” என்று அவர் தெரிவித்தார்.
48 மணி நேரம் மட்டுமே கொடுத்தது பி.சி.சி.ஐ.-யின் அதிகாரத்தை காட்டுவதாக பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் விமர்சனம் செய்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் 3 வடிவிலான போட்டிக்கும் (டெஸ்ட், ஒருநாள் போட்டி, 20 ஓவர்) விராட் கோலி கேப்டனாக இருந்தார். ஐக்கிய அரபு எமிரேட்சில் நடந்த 20 ஓவர் உலக கோப்பை போட்டி தொடங்குவதற்கு முன்பு, 20 ஓவர் போட்டிக்கான கேப்டன் பதவியிருந்து விலகுவதாக விராட் கோலி அறிவித்தார். ஆனால் உலக கோப்பையில் இந்திய அணியின் செயல்பாடு மிகவும் மோசமாக இருந்தது.
இந்த நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் ஒருநாள் போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அதிரடியாக நீக்கியது.
தென் ஆப்பிரிக்க தொடருக்கான ஒருநாள் அணிக்கு ரோகித் சர்மா புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஏற்கனவே அவர் 20 ஓவர் போட்டிக்கு கேப்டனாக உள்ளார். ஒருநாள் போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி தானாக விலக வேண்டும் என்று கிரிக்கெட் வாரியம் விரும்பியது. இதற்காக அவருக்கு 48 மணி நேரம் கெடு விதிக்கப்பட்டது. ஆனால் அவர் விலக மறுத்ததால் நீக்கப்பட்டதாக கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.
இது தொடர்பாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் கங்குலி விளக்கம் அளித்து இருந்தார்.
அவர் கூறும்போது, ‘ஒருநாள் போட்டிக்கும், 20 ஓவர் போட்டிக்கும் தனித்தனி கேப்டன் இருப்பதை தேர்வுக் குழுவினர் விரும்பவில்லை. இதனால்தான் கோலியிடம் இருந்த ஒருநாள் கேப்டன் பதவி ரோகித் சர்மாவிடம் கொடுக்கப்பட்டது’ என்றார்.
இந்த நிலையில் விராட் கோலி விவகாரம் தொடர்பாக இந்திய கிரிக்கெட் வாரியத்தை பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் சல்மான் பட் சாடியுள்ளார். விராட் கோலிக்கு மரியாதை கொடுத்திருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக சல்மான் பட் கூறியதாவது:-
20 ஓவர் உலக கோப்பைக்கு முன்பு கோலி பதவி விலகுவதை கிரிக்கெட் வாரியம் விரும்பவில்லை. வெள்ளைநிற பந்து போட் டிக்கு (ஒருநாள் போட்டி, 20 ஓவர்) வெவ்வேறு கேப்டன் இருப்பது சரியாக இருக்காது. இதனால்தான் கோலியிடம் இருந்த ஒருநாள் கேப்டன் பொறுப்பு ரோகித் சர்மாவுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் வாரியத்தின் இந்த முடிவு சரியானதுதான்.
ஆனால் இந்த விவகாரத்தில் விராட் கோலியை கிரிக்கெட் வாரியம் நடத்திய விதம்தான் சரியில்லை. அவர் பதவி விலக 2 நாள் கெடு விதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் அதிகாரத்தை காட்டுகிறது. விராட் கோலிக்கு மரியாதை கொடுத்திருக்க வேண்டும். அவர் தனது நாட்டுக்காக என்ன செய்தார் என்பதை பார்த்து மரியாதை செய்திருக்க வேண்டும். அவர் உலகின் தலைசிறந்த வீரர்களில் ஒருவர் ஆவார்.
இவ்வாறு சல்மான் பட் கூறியுள்ளார்.
இதையும் படியுங்கள்... தென்இந்திய சினிமா பிரபலங்களை பற்றி அதிக டுவீட்: முதல் இடத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ்
பாகிஸ்தான்- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நாளை தொடங்குகிறது.
வெஸ்ட் இண்டீஸ் அணி மூன்று டி20 மற்றும் மூன்று ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக பாகிஸ்தான் சென்றுள்ளது. டி20 கிரிக்கெட் தொடர் நாளை கராச்சியில் தொடங்குகிறது.
இதற்கான வெஸ்ட் இண்டீஸ் அணி கடந்த வியாழக்கிழமை பாகிஸ்தான் சென்றடைந்தது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள், ஸ்டாஃப்கள் என அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது பயிற்சியாளர்கள் குழுவில் உள்ள ஒருவருக்கும் ராஸ்டன் சேஸ், ஷெல்டன் காட்ரெல், கைல் மேயர்ஸ் ஆகிய மூன்று வீரர்களுக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அனைவரும் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள். அறிகுறி ஏதும் இல்லை. ஓட்டல் அறையில் அறையில் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். டி20 தொடரில் அவர்கள் பங்கேற்க வாய்ப்பில்லை என வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் போர்டு தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் சென்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு வரலாறு காணாத பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.






